PDA

View Full Version : காலச்சக்கரம்



கோபாலன்
11-10-2012, 05:18 PM
இந்த காலச்சக்கரம்
இப்படியே நின்றுவிடக்கூடாதா?
எப்போதும் பாசத்தோடு அம்மா
கண்டிப்போடும் ஆதரவோடும் அப்பா
தகவல் பரிமாற்றத்தோடு தங்கை
தகிடுதத்தங்களோடு குறும்பாய் தம்பி
பக்கம்வரும்போதெல்லாம் கதைகூறும் பாட்டி
பார்க்கும்போதே பரவசத்தோடு தாத்தா
அவ்வப்போது வந்துபோகும் சொந்தங்கள்
ஆனந்தமாய் அரவணைக்கும் நண்பர்கள்
எல்லாம் கிடைத்துக்கொண்டே இருக்கும்
இந்த காலச்சக்கரம் இப்படியே நின்றுவிட்டால்?
எங்கிருந்தோ ஒரு குரல்
இப்படி நானும் உன் பாட்டியும் நினைத்திருந்தால்?
எனக்குப் புரிந்தது
காலச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கட்டும்...:)

ந.க
26-10-2012, 10:35 AM
பாட்டன் பார்வை பரவசப் பார்வை,
அந்த
பார்வையின் கதிர்ப்பு
பழுதில்லா மனசின்
பாசப் பொதி ,
அது
காலப் பொறியின் அச்சு..
அது
மையப் புள்ளியப்பா..
அந்தப்
பரவசப் பார்வை
தொடரும் தொடக்கத்தின் தொடர்பு..

எங்கள்
காலச் சக்கரம் சிக்காமல் செல்ல
உயிர் இழைக்கும்
உறவுகளின் நீட்சி.......
....
வாழ்க......நன்றி.......

ஜானகி
26-10-2012, 11:08 AM
வித்து மரமாவதும், மரம் வித்தாவதும்.......தவிர்க்கமுடியாத...தேவையான ....மாறாத சுழற்சி தான்....
நன்று !

சுகந்தப்ரீதன்
26-10-2012, 07:14 PM
பொதுவாக மனிதர்களுக்கு..
சில கணங்கள் யுகங்களாய் நீண்டுவிடாதா என்று ஏங்கம் தோன்றுவதும்..
சிலதருணங்கள் கணங்களாய் கடந்துவிடாதா என்று வருந்தம் தோன்றுவதும் வழக்கமான ஒன்றுதான்..
ஆனால் இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான் என்பது மட்டும் அவ்வளவு எளிதில் புரிவதேயில்லை.. உங்களுக்கு புரிந்துவிட்டது போலும்.!!:)

நல்லதொரு கவிக்கரு... வாழ்த்துக்கள் கோபாலரே..!!:icon_b:

கோபாலன்
26-10-2012, 09:05 PM
காலச்சக்கரம் நிக்காமல் சுழல வாழ்த்திய கண்ணப்பு அவர்களுக்கும்,
உலகத்தின் உயிர்சுழற்சியை உணர்த்திட்ட ஜானகி அவர்களுக்கும்,
இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை என்ற கவிக்கருவை முத்தாய்ப்பாக எடுத்துரைத்த சுகந்தப்ரீதன் அவர்களுக்கும்
என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.:)

jayanth
28-10-2012, 03:27 AM
இந்த காலச்சக்கரம்
இப்படியே நின்றுவிடக்கூடாதா?
எப்போதும் பாசத்தோடு அம்மா
கண்டிப்போடும் ஆதரவோடும் அப்பா
தகவல் பரிமாற்றத்தோடு தங்கை
தகிடுதத்தங்களோடு குறும்பாய் தம்பி
பக்கம்வரும்போதெல்லாம் கதைகூறும் பாட்டி
பார்க்கும்போதே பரவசத்தோடு தாத்தா
அவ்வப்போது வந்துபோகும் சொந்தங்கள்
ஆனந்தமாய் அரவணைக்கும் நண்பர்கள்
எல்லாம் கிடைத்துக்கொண்டே இருக்கும்
இந்த காலச்சக்கரம் இப்படியே நின்றுவிட்டால்?
எங்கிருந்தோ ஒரு குரல்
இப்படி நானும் உன் பாட்டியும் நினைத்திருந்தால்?
எனக்குப் புரிந்தது
காலச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கட்டும்...:)

இன்றுதான் அனுபவித்து படித்தேன்...
ஆனாலும் உங்களுக்கு பேராசைதான் கோபாலன்...
அனுபவிக்கும் வாழ்க்கையின் பிரதிபலிப்பு...
நன்றாக இருக்கின்றது கவிதை...