PDA

View Full Version : கண்கள் பனிக்க விடைபெற்ற சாதனை நாயகன் - ஸ்டீவ் வாஹ்!!!poo
06-01-2004, 01:36 PM
நாம் இப்போது பார்க்கப்போவது...மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல... மிகச்சிறந்த மனிதரும்கூட......


1985-ஆம் ஆண்டு தனது 20-வது வயதில்...மெல்லிய தேகத்தோடு
சிட்னி அரங்கில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்
அறிமுகம்..

அன்று ஜாம்பாவான்கள் மத்தியில் அஞ்சா நெஞ்சனாய் நெஞ்சை
நிமிர்த்தியவர்..

இன்று எல்லோர் நெஞ்சிலும் இடம் பிடித்து இமயமாய் உயர்ந்தவர்..


செல்லமாய் "ஸ்டீவ்" என அழைக்கப்படும் "ஸ்டீவன் வாஹ்.."

ஆஸி அணியின் புகழ் இன்று உச்சத்தில் நிற்பதற்கு ஏணிப்படிகளாய் நின்றவர்...

மூன்றாம்தர வீரராய் உள்ளே வந்தவர்...1999-ஆம் ஆண்டு முதல்தர
வீரராய்...தலைமைப் பதவியை ஏற்றார்...

அதே ஆண்டில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் தனி நபராய்
போராடி ஆஸியை இறுதிக்கு இட்டுச்சென்று கோப்பையை தட்டிவந்த தங்கம்...

அதுமுதலாய் தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வென்று சாதனை
படைத்த சிங்கம்..

முதல் டெஸ்டில் இருந்த வேகமும் விவேகமும்... 168-வது போட்டியான இறுதி டெஸ்டிலும் இருந்ததை எவராலும் மறுக்க முடியாது...

சத்தான பல சாதனைகளை படைத்த சரித்தர நாயகன்...

தலைமையேற்ற 57 டெஸ்ட் போட்டிகளில் 41 வெற்றிகளை படைத்து
வரலாற்று ஏடுகளில் வாசம் செய்பவர் (9-தோல்வி, 7-டிரா)

இவர் எல்லோரது ஆசிகளுக்கும் சொந்தக்காரர்...அதிக சதங்கள்
எடுத்த ஆஸிக்காரர்... (32-சதங்கள்)

அதிசய வீரர் ஆலன் பார்டருக்கு அடுத்ததாய் அதிக ரன்கள் அள்ளிய துள்ளல் வீரர்..(10,927)

ஒருதினப் போட்டியிலும் உயர்ந்து நின்றவர்... (325 போட்டிகளில் 7,569 ரன்கள்..)

ஒரு தொடரில் அடைந்த தோல்வியால் துரத்தப்பட்டு .. ஏராள ரசிகர்கள் துயரப்பட்டு.... வேதனையில் மூழ்க..
ரணங்கள்.. சாதாரணங்களென... சாதனைகளை கிடைத்த களத்தில்... (டெஸ்ட் போட்டிகளில்) தளராமல் தொடர்ந்த தன்னம்பிக்கை மனிதர்...

இந்தியாவிற்கு எதிராய் தொடங்கிய இவரது கிரிக்கெட் சகாப்தம்...
இந்தியாவிற்கு எதிராகவே முடிந்தது...

இன்று விடைசொல்ல..., களத்தில் வலம்வந்த இவரை தரையில்
கால்படவிடாமல் மற்ற வீரர்கள் மாறிமாறி தோள்களில்
சுமந்துசென்றதை கண்டு கண்கள் பனித்தன....

http://specials.rediff.com/cricket/2004/jan/06cric7.jpg

அந்த நாட்டின் பிரதமர் ஜான் ஹோவார்ட் முதல்... மைதானத்தில்
மழைத்தண்ணீர் பிழியும் தொழிலாளிவரை அரங்கில் எழுந்து நின்று
கரகோஷத்தோடு விழி நனைத்து வழியனுப்பிவைத்த விதம்.....அடடா..

மனைவி-மகள்கள்-மகன்... இவர்களை வாரியணைத்து வாஞ்சையாய்
முத்தமிட்டு மார்போடு அணைத்தபடி அரங்கைவிட்டு வெளியேறிய
காட்சி நெஞ்சத்திரையில் நெகிழ்ச்சியாய் நிற்கிறது...

http://specials.rediff.com/cricket/2004/jan/06cric8.jpg

இவரைக்கண்டு நெஞ்சுருக இன்னொரு காரணமுண்டு.....

இந்தியரால் அதிகம் நேசிக்கப்படும் ஒரே ஆஸிக்காரரான
இவர்...மனிதநேயத்தில் மாணிக்கம்...

கோல்கட்டாவின் புறநகர் பகுதியில் "உதயன்" என்ற அமைப்பை
ஆதவற்ற பெண் குழந்தைகளுக்கு நடத்திவரும் உன்னத மனிதர்...இவர்....

தனது வருமானத்தில் பெரும்பகுதியை இதற்காக செலவிடும் இவரின்
எதிர்கால ஆசை..

"இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக மிகப்பெரிய
பள்ளியொன்றை தொடங்க வேண்டும்" என்பதே!!!...

Nanban
06-01-2004, 02:21 PM
இவரின் மனித நேய முகம் தான் எனக்குப் பிடித்திருக்கிறது...... கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்திய நட்சத்திரங்கள், தொடர்ந்து பணம் தரும் தொழில்களிலே குறியாக முதலீடு செய்து, மேலும் பணபுழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள முனைந்து, தங்கள் கவனம் சிதறும் பொழுது, இந்த நல்லெண்ண மனிதரைப் பிடிக்காதவர் யாரிருக்க முடியும்?

பூவிற்கு நன்றி....... நல்லதொரு பதிப்பை வெளியிட்டதற்கு......

aren
06-01-2004, 02:24 PM
அருமையான் பதிவு பூ அவர்களே. நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் முத்தானது.

நிலா
06-01-2004, 03:35 PM
அருமையான பதிப்பு!
சாதனை மனிதரின் மனம் அறியப்பெற்றிருந்தாலும் சாதனையோடு கேட்கும் போது நம் மனங்களில் அவரின் மதிப்பு கூடிக்கொண்டே போவது உண்மை!

நன்றி பூ!

பாரதி
06-01-2004, 03:48 PM
மிக நல்ல பதிவு பூ... ஒவ்வொரு மனிதரிடத்திலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றாவது இருக்கும். அதில் வாஹ்..வும் விலக்கல்ல...

மன்மதன்
07-01-2004, 02:29 PM
பூ ..கோல்கட்டாவின் புறநகர் பகுதியில் "உதயன்" என்ற அமைப்பை
ஆதவற்ற பெண் குழந்தைகளுக்கு நடத்திவரும் உன்னத மனிதர்...இவர்....
அருமையான பதிப்பு பூ ....

இதே மாதிரி சென்னையிலும் , மும்பையிலும் ஒரு அனாதை இல்லத்தை நடத்திகிறாராமே உண்மையா??

puppy
07-01-2004, 03:47 PM
உண்மை இல்லை மன்மதன்....

முத்து
07-01-2004, 04:14 PM
ஸ்டீவ் வாஹ் - க்கு இப்படி இன்னொரு பக்கமா .. ?
அடடா .. இன்றைக்குத்தான் தெரிய வந்தது ..
நன்றி பூ ...

gankrish
08-01-2004, 06:04 AM
பூ நல்ல பதிப்பு. இதில் உங்கள் உழைப்பு தெரிகிறது. ஆஸ்தேரேலியா ஒரு நல்ல காப்டன் + ஒரு நல்ல batsmanஐ இழந்துள்ளது.

அலை...
08-01-2004, 06:07 AM
பூ...அருமையான தகவல்கள். மறக்க முடியாத ஜெண்டில் மேன் ஸ்டீவ் என்பது உண்மைதான்..

அன்பு

அலை...

puppy
08-01-2004, 06:23 AM
அவருடைய மறுபக்கம் வேண்டுமானால் ஜெண்டில் மேன் என்று ஒத்துகொள்வேன் அலை..ஆனால் கிரிக்கெட்டில் கண்டிப்பாக இல்லை அலை....

mania
08-01-2004, 08:29 AM
பூ , நானும் இவரை மிக உயர்வாகத்தான் மதித்து இருந்தேன். ஆனால் கொஞ்ச மாததிற்கு முன் சச்சின் பால் டேம்பரிங் கேஸில் அனாவசியமாக தலையை நுழைத்து தேவையில்லாத ஒரு கமெண்ட்டை அடித்ததிலிருந்து என் எண்ணத்தில் கொஞ்சம் குறைவாகத்தான் மதிப்பிடப்படுகிறார்
அன்புடன்
மணியா.

சேரன்கயல்
08-01-2004, 02:55 PM
என்ன இருந்தாலும் தலை...
மனிதர் மேட்ச் முடிந்த பிறகு கிடைத்த அந்த கைத்தட்டும், 10டுல்கரின் வார்த்தைகளில் தெரிந்த மரியாதையின் வெளிப்பாடும்...ஒரு நிமிடம் கண்கள் பனிக்கத் தான் செய்தன...
அழகா பின்னியிருக்கீங்க பூ...வாவ் பற்றிய வாவ் திரட்டை...

poo
08-01-2004, 03:12 PM
என்ன இருந்தாலும் தலை...
மனிதர் மேட்ச் முடிந்த பிறகு கிடைத்த அந்த கைத்தட்டும், 10டுல்கரின் வார்த்தைகளில் தெரிந்த மரியாதையின் வெளிப்பாடும்...ஒரு நிமிடம் கண்கள் பனிக்கத் தான் செய்தன...
...

மிகச்சரியாக சொன்னீர்கள் சேரன்...


அந்த நிமிடங்களில் நானும் கண்களை நனைத்தேன்.. அதனால்தான் இந்த பதிவை பதித்தேன்...

mania
09-01-2004, 06:02 AM
நான் அதை பார்க்கவில்லை. ஒருவேளை பார்த்திருந்தால் நானும் உங்களை போல் நினைத்திருப்பேனோ ??!!
அன்புடன்
மணியா

அலை...
25-01-2004, 04:47 PM
அவருடைய மறுபக்கம் வேண்டுமானால் ஜெண்டில் மேன் என்று ஒத்துகொள்வேன் அலை..ஆனால் கிரிக்கெட்டில் கண்டிப்பாக இல்லை அலை....

விவ். ரிச்சர்ட்ஸ் அல்லது வால்ஷ் அளவுக்கு இல்லைதான். போரிலும் காதலிலும் எதுவும் நியாயம் என்பார்கள்...கிரிக்கெட்டை போராக நினைத்தவர் ஸ்டீவ்.

அலை...
25-01-2004, 04:51 PM
விளையாட்டிலும்...சமூக சேவையிலும் சிறந்த பனி ஆற்றியமைக்காக, இந்த ஆண்டின் மிகச் சிறந்த ஆஸ்ட்ரேலிய குடிமகன் விருது ஸ்டீவ் வாவ்க்கு கிடைத்துள்ளது..வாழ்த்துகள்.

பரஞ்சோதி
25-01-2004, 05:16 PM
கிரிக்கெட்-ஆல் பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்த்தார்,

சமுக சேவையால் பிடித்த நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

ஸ்டீவ் மிகவும் அருமையான மனிதர், போராடும் குணம் கொண்டவர், அவரை குருவான நினைப்பவர்களுக்கு, வாழ்க்கையிலும், விளையாட்டிலும் இல்லை - தோல்வி.