PDA

View Full Version : அரும்பும் பொழுது



கீதம்
09-10-2012, 12:15 PM
அன்பு உறவுகளே…

பண்பலையில் ஒலிபரப்பாக இருக்கும் அரும்பும் பொழுது என்னும் சிறுவர் நிகழ்ச்சிக்கான உங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. சிறுவர் நிகழ்ச்சிக்கு நாம் என்ன அனுப்புவது என்று யோசிக்காதீர்கள். அனுப்புவதற்கு நிறைய உள்ளன. மாதிரிக்கு சில…


* உங்களது சிறுவயது அனுபவங்கள், உங்களுக்குத் தெரிந்த சிறுவர் கதைகள், பள்ளிப் பிள்ளைகளுக்கானப் பொது அறிவுத் தகவல்கள், பாடத் தொடர்பான கட்டுரைகள், பேச்சுகள் போன்றவை….

*உங்கள் வீட்டுக் குழந்தைகள் பாடும் பாட்டுகள், சொல்லும் கதைகள், மழலைப் பேச்சுகள் போன்றவை….

*வீட்டுப் பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சொல்லும் நீதிக் கதைகள், அந்தக் கால நிகழ்வுகள், வேடிக்கை சம்பவங்கள் போன்றவை…

*விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் போன்றவை…


விரைவில் ஒலியாக்கங்களை அனுப்புங்கள்…. உங்களோடு உங்கள் குழந்தைகள் குரலும் பண்பலையில் ஒலிப்பதைக் கேட்டு மகிழ்வடையுங்கள்..

அனுராகவன்
28-10-2012, 05:24 AM
ஆகா!! நானும் அனுப்புக்கிறேன்..