PDA

View Full Version : வங்கக் கடல்



ரௌத்திரன்
09-10-2012, 05:28 AM
மீனவர் வாழ்க்கை நாள்தோறும்-கரு
====வாட்டை விடவும் நாறுதடா!
ஏனெனக் கேட்க வக்கின்றி-சும்மா
====அரசும் சாக்கு கூறுதடா!

சொல்லிச் சொல்லி அலுத்திட்டோம்-இனி
====சொல்வ தற்கும் தெம்பில்லை!
துள்ளும் கடல்தான் கூண்டோடு-எமைக்
====கொண்டு சென்றால் வம்பில்லை!

மீனுக் கென்று வலைவிரிக்க-நடுக்
====கடலில் சென்று விழுகின்றோம்
மரணம் எமக்கு வலைவிரிக்க-கெட்ட
====விதியை எண்ணி அழுகின்றோம்!

படகு ஏறிச் செல்லுகையில்-அட
====பாடை ஏறிச் செல்வதுபோல்
குடமாய்க் கண்ணீர் வடிக்கின்றார்-எம்
====குலத்து மாதர் துடிக்கின்றார்!

எல்லை தாண்டி அடித்தாலும்-எவர்
====எம்மைக் கொன்று புதைத்தாலும்
கொள்ளை யடிப்ப தொன்றேதான்-அரசின்
====குறிக்கோ ளாக இருக்கிறது!

தேசியக் கொடியை பிடித்தபடி-எம்
====முன்னோர் நடத்திய போராட்டம்
தாலிக் கொடியைப் பிடித்தபடி-எம்
====தாய்மார் கண்ணீர் வடிப்பதற்கா?

மாநில அரசும் பார்க்கவில்லை-அட
====மத்திய அரசும் கேட்கவில்லை
நானில நீதியும் காக்கவில்லை-மனிதர்
====வரிசையில் நம்மைச் சேர்க்கவில்லை!

நாயைக் கொன்று போட்டாலும்-ஒரு
====நாதி யுண்டே கேட்பதற்கு
நாட்டு மக்கள் அழுகின்றோம்-ஒரு
====நாயும் இல்லை கேட்பதற்கு!


-----------ரௌத்திரன்

jayanth
09-10-2012, 10:08 AM
மீனவர் வாழ்க்கை அவலமாகிப்போனது...
இந்தியப் பெருங்கடலில் மட்டும் அல்ல அரபிக் கடலிலும் கூட...
அவலமாக்கியவர்களுக்கு இங்கு இரத்தினக் கம்பள வரவேற்பு...
பொறுத்திருந்து பார்ப்போம்...
...... நின்று கொல்லுமா என்று...???