PDA

View Full Version : காலம் இனி திரும்பிடுமா ............



manivannan samikkannu
08-10-2012, 04:45 PM
பச்சிளம் பாலகனாய் என் தாயின் .....
மடி உறங்கி ......!!!!!
அவள் தன் மார்பணைத்து ஊட்டிய .......
அமுதுண்டு...........!!!!!!
கவலையின்றி நான் வாழ்ந்த ...........
காலம் இனி திரும்பிடுமா ....????
என் தாயின் இடை அமர்ந்து ......
நான் பயணித்த நாட்கள் இனி கிடைத்திடுமா .....????
என் கனவை தான் மறந்து அவள் ......
கனவை நான் சுமந்து ..........!!!!!!
காலங்கள் கடந்து செல்கிறேன் .......
பல காயங்களுடன் கனவை நினைவாக்க.............

அமரன்
08-10-2012, 08:37 PM
காலம் நம்மைக் கடந்து செல்ல முன்னர் காலத்தை நம் கடந்து செல்வது எடுத்த் காரியத்தில் நாம் கொண்ட பற்றையும், உறுதியையும் காட்டுகிறது. காலத்தை நாம் கடக்கையில், ஏற்படும் காயங்களுக்குள் கதைகள் உண்டு. ஒவ்வொரு கதைக்குள்ளும் வாழ்க்கை உண்டு. கவிதை நாயகன் வாழ்கிறான். கவிதையும் என்றென்றும் வாழட்டும். வாழ்த்துகள் மணிவண்ணன்.

கீதம்
08-10-2012, 10:23 PM
அன்னையைத் தேடும் அன்பு மனத்தின் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள். காலம் கடக்குமுன்னரே கவனத்திற்கு வந்தவளுக்கும் வாழ்த்துக்கள்.

கவிதை நன்று. பாராட்டுகள் மணிவண்ணன். தொடர்ந்து எழுதுங்கள்.

ஆதவா
09-10-2012, 04:48 AM
எல்லாரும் விரும்பும் காலம் அதுதான் மணிவண்ணன்.
முற்பகல் செய்தவற்றை காதலியிடம் பிற்பகல் செய்து கொள்ளலாம்!! வாழ்க்கையை வளைத்து மீண்டும் பால்யத்தை தொட முயற்சிக்கலாம்.

தொடர்புள்ளிகளை தவிர்த்து கவிதை பதியுங்கள் - யோசனை..

jayanth
09-10-2012, 09:21 AM
இறந்த காலம் திரும்புவதென்பது நினைவால் மட்டுமே முடியும்...

கனவை நினைவாக்க வாழ்த்துக்கள்...