PDA

View Full Version : தொலைந்து போன தேடல்கள் .....!!!!!



manivannan samikkannu
08-10-2012, 04:29 PM
அற்பமான ஆசைகளை மனதில் வைத்து .........!!!
நுட்பமான என் வாழ்க்கையை சிதறவிட்டேன்....
காற்றை விட வேகமான என் மனதிற்கு
ஈடு கொடுக்க முடியாமல் ......!!!
சுழன்று விழுகின்றேன்...
சூறாவளி காற்றில்
அகப்பட்டவனை போல .....!!!!
நடு கடல் என்று தெரியாமல் குதித்துவிட்டு .........
கரையை தேடி என்ன பயன் ?!!!
விடிந்த பின்னும்
விடியலை நோக்கியே என் பயணம்.......
விடை தெரியாத கேள்விக்கு
விதி என்று பதில் சொல்லி..........
விடையை தேடி கொண்டிருக்கிறேன்.........!!!!
தொலைத்த இடம் தெரியாமல் ...........

கீதம்
09-10-2012, 03:40 AM
விடை தெரியாத கேள்விக்கு விதியைப் பதிலாகச் சொல்வதை மனம் ஏற்றுவிட்டிருந்தால் இன்னும் விடை தேட வேண்டிய தேவை இல்லையே... தேடும் மனத்துக்கு தேடலே சுகம் சிலபோது...

பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.