PDA

View Full Version : நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்....



ரௌத்திரன்
08-10-2012, 04:52 AM
ஆசை உன்மீது
====அணுவளவு குறைந்தாலும்
ஓசை இல்லாமல்-என்
====உயிர்பிரிய வேண்டுமடி!


ஒருசொட்டுக் கண்ணீர்
====உன்கண்ணில் வழிந்தாலும்
மறுசொட்டுக் கண்ணீர்-என்
====பிணத்தில்விழ வேண்டுமடி!


என்மார்பில் நீசாய
====உன்மார்பில் நான்சாய
இருநெஞ்சின் துயரங்கள்
====இடம்மாற வேண்டுமடி!


நாதமணிக் கொலுசோடு
====நடமாடும் நடமாடும்-உன்
பாதமலர் நானெடுத்து
====முத்தமிட வேண்டுமடி!


இலைக்குக் காம்பெனவே
====இளைத்திருக்கும் மெல்லிடையை
வளைத்து முப்போதும்-நான்
====விளையாட வேண்டுமடி!


மொட்டு இதழ்குடித்து
====முரலும் வண்டினைப்போல்-உன்
பட்டு இதழ்குடித்து-நான்
====பசியாற வேண்டுமடி!


என்கையில் உன்ரேகை
====உன்கையில் என்ரேகை
இடம்மாற மஞ்சத்தில்-நாம்
====இளைப்பாற வேண்டுமடி!


என்னிதயம் மோகத்தில்
====எரிகின்ற நேரத்தில்-உன்
இதழெச்சில் தனையூற்றி
====நீயணைக்க வேண்டுமடி!


கட்டி அணைத்தெடுத்துக்
====கலவி முடிக்கையில்-நாம்
தொட்டுக்கொண்ட இடமெல்லாம்
====தேனூற வேண்டுமடி!


முப்போதும் உன்மார்பில்
====முத்தமிடும் பொன்தாலி
சிலபோது சிலபோது
====நானாக வேண்டுமடி!


தாயூட்டும் ஒர்சுகம்
====தாயோடு முடியாமல்
நீயூட்டும் வேளையிலும்
====நீண்டுவர வேண்டுமடி!


கண்ணீர் வந்தாலும்
====காமம் வந்தாலும்
பெண்ணிற் பேரழகே-உன்
====முந்தானை வேண்டுமடி!


வயதாகிப் போனாலும்
====வண்ணத் திருமயிலே!-உன்
வாயூறும் எச்சிலுக்கு
====நான்வழிய வேண்டுமடி!


யார்செத்து யார்அழுக?-என்ற
====கேள்விக்கு இடம்வேண்டாம்
ஊர்அழுக ஒன்றாக-அடி
====நாம்போக வேண்டுமடி!


---------ரௌத்திரன்

கீதம்
08-10-2012, 06:42 AM
தாம்பத்யத்தின் இனிக்கும் கணங்களை அழகாய் சொல்லி வந்த கவிதையின் இறுதியில் மனம் கனக்கவைக்கும் வரிகள். பல முதிய தம்பதியினர் இப்படி ஒத்த வேளையில் உயிர் பிரிந்த சம்பவங்களைக் கேட்டிருக்கிறேன். எத்தனைக் காதல் அந்த முதிய மனங்களில் இருந்திருக்கவேண்டுமென்று நினைத்து வியந்திருக்கிறேன். அப்படியொரு காதலுணர்வை அழகாய் பறைசாற்றிய வரிகளுக்குப் பாராட்டுகள் ரௌத்திரன்.

ரௌத்திரன்
08-10-2012, 10:39 AM
மிக்க நன்றி அய்யா!

கீதம்
08-10-2012, 11:16 AM
மிக்க நன்றி அய்யா!

அய்யா இல்ல, அக்கா! :)

அன்புரசிகன்
08-10-2012, 11:37 AM
அவ்வளவாக கவிதைப்பக்கம் வாறதில்லை. அப்பப்போ வந்து படிச்சு .. அட இப்பவும் ஒன்றும் புரியவில்லை என்றுவிட்டு போய்விடுவேன்...

அதையும் மீறி ப்ச் கொட்டவைச்ச கவிதை.... வாவ்... அநேக வாலிபர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கையை - துணையை அழகாக வடித்துள்ளீர்கள்...


அதிலும்.... மிகவும் இரசித்த வரிகள்...

யார்செத்து யார்அழுக?-என்ற
====கேள்விக்கு இடம்வேண்டாம்
ஊர்அழுக ஒன்றாக-அடி
====நாம்போக வேண்டுமடி!

இதற்கு ரொம்ப குடுத்துவைச்சிருக்கவேணுமோ...


வாழ்த்துக்கள் தோழரே...

ரௌத்திரன்
08-10-2012, 11:48 AM
நன்றி மிக்க நன்றி!

ரௌத்திரன்
08-10-2012, 11:53 AM
அய்யா இல்ல, அக்கா! :)

ஓஹோஹோ!

மன்னிக்கணும் அக்கா
எனக்குத் தெரியாது.

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி என் அன்புக்குரிய
அக்கா அவர்களே!

----------ரௌத்திரன்