PDA

View Full Version : பண்பலையில் உங்கள் குரல் ஒலிக்க என்ன செய்யவேண்டும்? - விளக்கப்படங்களுடன்



கீதம்
07-10-2012, 10:44 AM
அன்பு மன்ற உறவுகளே…

அனைவரும் பண்பலையில் இடம்பெறுவது குறித்து ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் எப்படிப் பதிந்தனுப்புவது என்ற யோசனை இருக்கும். உங்கள் உதவிக்காக ஒரு சில தகவல்கள்.

எப்படிப் பதிந்து அனுப்பவேண்டும்?

உங்கள் கணினியில் audacity, lame என்னும் இரண்டு மென்பொருட்களைத் தரவிறக்கிக்கொள்ளுங்கள். இரண்டுமே இலவச மென்பொருட்கள்.

கீழுள்ள சுட்டியில் இருந்து இவற்றைத் தரவிறக்கிக் கொள்ளலாம்.

http://audacity.sourceforge.net/download/


முதலாவது ஒலிப்பதிவுக்கானது, இரண்டாவது அதை mp3 வடிவில் மாற்றுவதற்கானது. இதன் மூலம் மிகச் சுலபமாக நம் குரலைப் பதிவு செய்யமுடியும். திருத்தல் (edit) வசதியும் உண்டு.

முடிவில் அனுப்பவேண்டிய ஒலிவடிவம் mp3 ஆக இருத்தல் வேண்டும். அனுப்பவிருக்கும் ஒலிக்கோப்பின் அளவு கூடுதலாக இருந்தால் அதை compress செய்து அனுப்புங்கள். நான் இப்படிதான் செய்கிறேன்.

எப்படி பதிவுசெய்வது என்ற விளக்கப்படங்களை இப்பதிவி (http://www.tamilmantram.com/vb/showthread.php/30374-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?p=565489&viewfull=1#post565489)ல் காணலாம்

வேறு ஏதேனும் மாற்றுமுறையினைக் கையாள்வதாக இருந்தாலும் அவற்றை இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

எப்படி அனுப்புவதென்று பார்த்தோம். என்னென்ன அனுப்புவதென்றும் பார்க்கலாமா?

என்னென்னப் படைப்புகளை அனுப்பலாம்?

உங்கள் எண்ணம்போல் அனுப்பலாம். ஆனால் அவை யாவுமே மன்ற விதிகளுக்கும், பண்பலை விதிகளுக்கும் உட்பட்டவையாக இருக்கவேண்டும். இல்லையென்றால் நிராகரிக்கப்படும்.

கதை, கவிதை போன்ற உங்கள் சொந்தப் படைப்புகளை வாசித்து அனுப்பலாம். மற்றவருடையதை வாசிப்பதாயிருந்தால் அவரிடம் முன் அனுமதி வாங்கிவிட்டு செய்வது நல்லது. மேலும் வாசிக்கும் முன்பும் பின்பும் யாருடைய படைப்பு வாசிக்கப்பட்டது என்பதையும் யார் அதை வாசித்தீர்கள் என்பதையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.

மற்றுமொரு விஷயம்… படித்ததில் பிடித்தது பகுதியில் இருந்து எதையும் ஒலியாக்கம் செய்யவேண்டாம். அந்தப் பகுதி மன்றத்தில் படிப்பதற்கு மட்டுமே இருக்கட்டும். மன்ற உறவுகளின் சொந்தப் படைப்புகளுக்கே முன்னுரிமை தருவோம்.

பண்பலையில் பல பிரிவுகள் உள்ளன. உதாரணமாக கதைப்பகுதி, கவிதைப்பகுதி, விமர்சனங்கள், சிறுவருக்கான படைப்புகள், தனித்திறன், மொழிவளம் சார்ந்தவை, புதிர்கள், வேடிக்கைகள், திரைப்பாடல் சார்ந்தவை போன்றவை... ஒவ்வொரு ஒலிக்கோப்பை அனுப்பும்போதும் உங்கள் மன்றப்பயனர் பெயரோடு, அந்தப் படைப்பு எந்தப் பிரிவைச் சார்ந்தது என்றும் குறிப்பிட்டு அனுப்புங்கள். உங்கள் ஒலியாக்கம் எந்தப் பிரிவின்கீழ் வருமென்று சரியாகத் தெரியவில்லையென்றாலும் பரவாயில்லை. அனுப்பி வைங்க. பண்பலைக் குழுவினர் பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் பண்பலை என்பது நம் மன்றத்தின் விரிவாக்கமே அன்றி வேறு திசை நோக்கிய நகர்தல் அல்ல என்பதை நாம் எல்லோருமே அறிந்திருக்கவேண்டும். அதனால் மன்றத்தில் எழுத்துப் படைப்புகளுக்கும், உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கத் தவறக்கூடாது. எழுத்தாக்கத்தோடு, ஒலியாக்கத்திலும் இணைந்து மன்றத்தை இனிதாக்குவோம்.

படைப்புகளை எங்கு அனுப்பவேண்டும்?

ஒலிப்படைப்புகளை அனுப்பவேண்டிய மெயில் முகவரி: tmantramfm@gmail.com

என்ன உறவுகளே… எல்லோரும் தயாரா? விரைவில் உங்கள் குரலில் படைப்புகளை பண்பலையில் தவழவிடுங்கள்.

govindh
08-10-2012, 09:30 PM
அனைவருக்கும் வணக்கம்....வாழ்த்துக்கள்...

மன்றப் பண்பலையும்....
மங்காப் புகழ் பெற
மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

கீதம்
08-10-2012, 10:06 PM
வாங்க கோவிந்த். உங்கள் குரலும் விரைவில் பண்பலையில் ஒலிக்க வாழ்த்துக்கள்.

govindh
08-10-2012, 10:17 PM
மிக்க நன்றி கீதம் அவர்களே..
மன்றப் பண்பலையை...
கேட்டு மகிழ்கிறோம்...!
பயணம் தொடரட்டும்....
பாராட்டுக்கள்...!

ஆதி
09-10-2012, 06:58 AM
கீழுள்ள சுட்டியில் இருந்து audacity தரவிறக்கி கொள்ளலாம்


http://audacity.sourceforge.net/download/

ஜான்
09-10-2012, 07:38 AM
மன்றம் தன அடுத்த கட்டத்தில் பயணிப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது ..

வாழ்த்துகள்

தகவலுக்கு மிக்க நன்றி ஆதி

jayanth
09-10-2012, 10:15 AM
தகவலுக்கு நன்றி ஆதி...

ஆதி
09-10-2012, 11:43 AM
மக்களே, கடினப்பட்டு அக்கா விளக்கமா எழுதியிருக்காங்க, அவங்களை விட்டுவிட்டு சுட்டி கொடுத்த எனக்கு நன்றி சொல்வதா ?

என்ன கொடுமை இது!!!! :(

கீதம்
09-10-2012, 11:45 AM
விலாசம் விசாரிப்பவரிடம் இப்படியே போங்க என்று சொல்றதுக்கும், கையைப் பிடித்து அழைத்துக்கொண்டுபோய் விடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா?

அதனால் உங்களுக்கு நன்றி சொல்வதில் தவறொன்றும் இல்லை. :icon_b:

ஆதி
09-10-2012, 11:48 AM
அதுதான் காரணம் என்றால், சுட்டியையும், உங்க பதிவில் இணைத்துவிடுங்க அக்கா

கீதம்
09-10-2012, 11:51 AM
நன்றி ஆதி, இணைத்துவிடுகிறேன்.

jayanth
09-10-2012, 12:01 PM
விலாசம் விசாரிப்பவரிடம் இப்படியே போங்க என்று சொல்றதுக்கும், கையைப் பிடித்து அழைத்துக்கொண்டுபோய் விடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா?

அதனால் உங்களுக்கு நன்றி சொல்வதில் தவறொன்றும் இல்லை. :icon_b:

அது...!!!

இத்துடன் விரிவாக விளக்கிய தங்கைக்கும் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்...!!!

நாஞ்சில் த.க.ஜெய்
10-10-2012, 12:04 PM
மன்ற உறவுகளின் குரல்கள் மன்ற பண்பலையின் மூலம் திக்கெட்டும் ஒலிக்ககெட்டும் ..வாழ்த்துக்கள்..

ஆதி
10-10-2012, 12:30 PM
உங்க குரலும் தான் ஜெய்

கலையரசி
14-10-2012, 06:59 PM
அனுப்பவிருக்கும் ஒலிக்கோப்பின் அளவு கூடுதலாக இருந்தால் அதை compress செய்து அனுப்புங்கள்.

ஒலிக்கோப்பின் அளவு கூடுதல் என்றால் எவ்வளவு? எதற்கு மேலிருந்தால் கம்ப்ரஸ் செய்ய வேண்டும்> கம்ப்ரஸ் செய்வது எப்படி? என்று தெரியப் படுத்தினால் நலம்.

கீதம்
14-10-2012, 10:32 PM
அனுப்பவிருக்கும் ஒலிக்கோப்பின் அளவு கூடுதலாக இருந்தால் அதை compress செய்து அனுப்புங்கள்.

ஒலிக்கோப்பின் அளவு கூடுதல் என்றால் எவ்வளவு? எதற்கு மேலிருந்தால் கம்ப்ரஸ் செய்ய வேண்டும்> கம்ப்ரஸ் செய்வது எப்படி? என்று தெரியப் படுத்தினால் நலம்.

பொதுவாக மின்னஞ்சலில் 25 mb வரை மட்டுமே அனுப்ப இயலும். அதற்கு சற்று கூடுதலாய் இருந்தால் கம்ப்ரஸ் செய்து அனுப்பலாம்.

அனுப்பவேண்டிய ஒலிக்கோப்பில் right click செய்தால் ஒரு பெட்டி வரும். அதில் send to ----> compressed(zipped)foler என்பதைத் தேர்ந்தெடுத்து சொடுக்கினால் ஒலிக்கோப்பின் அளவு சற்று சுருக்கப்படும்.

என்னுடைய கணினி அறிவுக்கு எட்டியவரை இது ஒன்றுதான் தெரியும். இதனினும் வேறு முறைகள் இருந்தால் அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

கலையரசி
16-10-2012, 01:44 PM
சந்தேகத்தை நிவர்த்தி செய்த கீதத்துக்கு என் நன்றி.

நாஞ்சில் த.க.ஜெய்
18-10-2012, 09:56 AM
இவாறாக கம்பிரஸ் செய்யும் போது அதன் தரவுகளின் அளவு(file size) குறையாது..இது போன்ற வேலைகளுக்கு mp3 to ringtone எனும் மென்பொருள் உள்ளது..இதில் wav to mp3 mp3 to wav big mp3 to small எனும் தேர்வுகள் உள்ளன..இது 3 mb mp3 பாடலை 700 kb அள்வில் மாற்றும்.. மிகவும் உதவும் ஆனால் இது இலவச மென்பொருள் அல்ல...முயற்சித்து பார்க்க (http://download.cnet.com/MP3-to-Ringtone-Gold/3000-18505_4-10441978.html)..

பாரதி
20-10-2012, 02:14 PM
முதலில் அடாசிட்டி மற்றும் லேம் மென்பொருட்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
பின்னர் அடாசிட்டியை இயக்கவும்.

884

அதில் இருக்கும் பொத்தான்களின் பயன்களில் சில கீழ்வருமாறு:
883

அதில் File - New என்பதை தேர்ந்தெடுக்கவும்.

885

உங்கள் ஒலிவாங்கி(Mic)யை அதற்குரிய இடத்தில்(Mic port) சொருகி இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மடிக்கணினி வைத்திருப்பவர்கள் ஒலிவாங்கியின் அருகில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். படத்தில் இருப்பதைப் போல ஒலிப்பதிவை பதிவு செய்யும் பொத்தானை 886 அழுத்திய பின்னர் பேச ஆரம்பிக்கவும்.
888



நீங்கள் பேசும் போது இடையில் தற்காலிகமாக நிறுத்த விரும்பினால் கருவிப்பட்டையில் (Tool bar) இருக்கும் முதல் பொத்தானை 887 அழுத்தவும். அப்போது உங்கள் கணினித்திரை கீழ்க்கண்டவாறு காட்சி அளிக்கும்.
888

உங்களுக்கு தேவையான அவகாசத்திற்குப் பின்னர், மீண்டும் பேச்சைத் தொடர வேண்டுமெனில் அதே முதல் பொத்தானை அழுத்தி மீண்டும் பேசத் துவங்கவும்.

முழுவதும் பேசிய பின்னர் ஒலிப்பதிவை நிறுத்த வேண்டுமெனில், கருவிப்பட்டையில் இருக்கும் மூன்றாவது பொத்தானை 889 அழுத்தவும். அப்போது உங்கள் கணினித்திரை கீழ்க்கண்டவாறு காட்சி அளிக்கும்.
890


நீங்கள் ஒலிப்பதிவு செய்தது எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் கேட்க வேண்டுமென்றால் கருவிப்பட்டையில் இருக்கும் இரண்டாவது பொத்தானை அழுத்தவும். ஒலிப்பதிவு உங்களுக்கு திருப்தியாக இருக்கிறது எனில் அதை சேமிக்க File – Export என்பதை தேர்வு செய்யவும்.
891

அதன் பின்னர் வரும் திரையில் mp3 கோப்பு என்பதை தேர்வு செய்யவும்.

892

பாரதி
20-10-2012, 02:20 PM
பின்னர் அக்கோப்பினை desktop அல்லது நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தில் உங்கள் கோப்புக்கு நீங்கள் விரும்பிய பெயரைக் கொடுத்து சேமிக்கவும்.

893

அடுத்து வரும் திரையில் Artist Name, Track Title, Album Title … போன்றவற்றில் நீங்கள் விரும்பினால் வேண்டிய தகவல்களைக் கொடுத்து நிரப்பலாம். அல்லது காலியாக விடலாம். பின்னர் ok பொத்தானை அழுத்தவும்.

894

பின்னர் உங்கள் கோப்பு முன்பு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதை மீண்டும் ஒருமுறை இயக்கி கேட்டுவிட்டு சரியெனில் மன்றப்பண்பலைக்கு அனுப்பலாம்.
895

மன்றப்பண்பலைக்கு அனுப்ப tmantramfm@gmail.com என்ற முகவரியை பயன்படுத்துங்கள்.

அடாசிட்டியிலும் உதவிக்குறிப்புகள் இருக்கின்றன; அதைப்படிக்கலாம். உங்கள் வசதிக்காக அடாசிட்டியை பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள் அடங்கிய ஒரு சிறிய ஆங்கிலப்புத்தகம் (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=573) மன்ற மின்நூல்கள் பகுதியில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. விரும்புவோர் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

மஞ்சுபாஷிணி
23-10-2012, 06:17 PM
மனம் நிறைந்த அன்புநன்றிகள் கீதம் மிக அழகாய் பொறுமையாய் விளக்கியமைக்கு...

மன்றத்தின் வெற்றிப்படிகளில் பண்பலை அழகு சேர்க்கிறதுப்பா....

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் பண்பலை குழுவினருக்கு....

சுட்டிக்கொடுத்து சுட்டிக்காட்டியமைக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஆதி....

சாரிப்பா கீதம் காலங்கார்த்தால உங்களை நான் சுப்ரபாதம் பாடி எழுப்பினதற்கு....

திட்டாமயே புள்ள ரொம்ப அன்பா பேசிச்சே சிரிச்சுக்கிட்டே.... அது எனக்கு ரொம்ப பிடித்ததுப்பா....

க்ருஷ்சிவாவிடம் சொல்லி எனக்கு கால் செய்ய சொல்லுங்கப்பா கீதம்....

ஆதி நம்பரும் தொலைத்துவிட்டேன்....

அதனால் தான் கீதம் உங்களுக்கு கால் செய்தேன்பா....

நாஞ்சில் த.க.ஜெய்
23-10-2012, 06:59 PM
போன்ல என்ன விளக்கினாங்க கீதம் அக்கா அங்க விளக்குனதுக்கு இங்க நன்றி சொல்லுறீங்களா இல்ல பாராதி அவர்கள் எப்படி ஒலிகோப்பினை பதிவு செய்வது எப்படின்னு விளக்குனதுக்கா மஞ்சுபாக்ஷினி அவர்களே..

கலைவேந்தன்
24-10-2012, 04:53 AM
பண்பலை கொடுத்த மகராசன் நிர்வாகி அவர்களுக்கும் அதைத் தொடர்ந்து திறம்பட நிர்வகித்து வரும் கீதம் மற்றும் ஆதி ( இன்னும் யாரெல்லாம்னு தெரியாததால ) ஆகியோருக்கும் மிக்க நன்றி. உலகளாவில் நமது பண்பலை பரவி தமிழ்மன்றம் போலவே இணைய உலகில் தனி இடம் பெற்று விளங்க எல்லாம் வல்ல இறையோனை வணங்கி வேண்டி வாழ்த்தி அமைகிறேன்.

கலைவேந்தன்
24-10-2012, 04:57 AM
அப்புறம் எல்லாருக்கும் என் தரப்பில் நான் தரும் உத்தரவாதம் என்ன என்றால் யாருக்காவது என் படைப்புகளை ( ?) பண்பலையில் கையாள வேண்டும் என விருப்பம் இருந்தால் தயங்காமல் எனது அனுமதிக்குக் காத்திராமல் முழுமையான சுதந்தரத்துடன் பயன் படுத்திக் கொள்ளலாம். நான் இணையத்தில் இல்லையே தேடிக்கண்டுபிடித்து அனுமதி வாங்க முடியவில்லையே என்றெல்லாம் வருந்தவேண்டியதில்லை. இந்த என் பதிவையே எனது அனுமதியாக அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு பயன்படுத்தலாம் என அறிவித்துக் கொள்கிறேன்.

( அடேங்கப்பா... எம்மாம் பெரிய பில்டப்புன்னு குபுக்குன்னு சிரிக்கிறது கேட்குதுப்பா... :) )

ஆதி
24-10-2012, 05:06 AM
ஐயா, அனுமதி வழங்கியது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், உங்க குரல் பண்பலையில் ஒலிக்கனும்

கலைவேந்தன்
24-10-2012, 05:46 AM
ஐயா, அனுமதி வழங்கியது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், உங்க குரல் பண்பலையில் ஒலிக்கனும்

கண்டிப்பா ஒலிக்கும்.. இன்னைக்கு நைட் ரெகார்ட் பண்ணிடலாம். பகல்ல ஒரே இரைச்சல் இங்கே.. :)

Mano.G.
24-10-2012, 09:16 AM
audacity பதிவிறக்கம் செய்தாகிவிட்டது
ஆனல் Lame பதிவிறக்கம் செய்ய தடுமாறுகிரேன்
உதவி தேவை

ஆதி
24-10-2012, 09:44 AM
http://audacity.sourceforge.net/help/faq_i18n?s=install&i=lame-mp3

இந்த சுட்டியில் பதிவிறக்கி கொள்ளுங்க அண்ணா

Mano.G.
25-10-2012, 07:56 AM
நன்றி ஆதி,
இப்போது வேள்ளோட்டம் போய்கொண்டிருக்கிரது
கூடிய விரைவில் அனுப்பி வைக்கிரேன்

மஞ்சுபாஷிணி
27-10-2012, 01:33 PM
போன்ல என்ன விளக்கினாங்க கீதம் அக்கா அங்க விளக்குனதுக்கு இங்க நன்றி சொல்லுறீங்களா இல்ல பாராதி அவர்கள் எப்படி ஒலிகோப்பினை பதிவு செய்வது எப்படின்னு விளக்குனதுக்கா மஞ்சுபாக்ஷினி அவர்களே..

கீதம் எனக்கு கைட் பண்ணினாங்கப்பா ஜெய்....

இப்ப தான் டௌன்லோட் செய்தேன்... எல்லாமே லேட் தான் நான்....

டௌன்லோட் செய்துட்டு இதோ இங்க வந்து நன்றியும் சொல்லிட்டேன்பா ஜெய்... பாரதிக்கும், கீதத்துக்கும்....

ஜெயாஸ்தா
01-11-2012, 10:12 AM
இணைய உலகில் தமிழ் மன்றம் தனிச் சிறப்புடன் வளர்ந்து கொண்டிருப்பதற்கு இது போன்ற புதிய முயற்சிகள்தான் காரணமோ?... பண்பலைக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்....!

அன்புரசிகன்
01-11-2012, 10:50 AM
இணைய உலகில் தமிழ் மன்றம் தனிச் சிறப்புடன் வளர்ந்து கொண்டிருப்பதற்கு இது போன்ற புதிய முயற்சிகள்தான் காரணமோ?... பண்பலைக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்....!
ஊருல கடும் மழையோ.?:)

ராஜா
16-11-2012, 07:17 AM
மன்றப் பண்பலையை தற்போது கேட்டு ரசிப்போர் என்பதற்கு ஏதேனும் கணக்கு / மென்பொருள் இருக்கிறதா..?