PDA

View Full Version : பண்பலை ஒலிபரப்பு நேரங்கள்.



அமரன்
07-10-2012, 09:03 AM
அன்பு நெஞ்சங்களே..!


மன்றத்தின் பண்பலை தன் சோதனை ஒலிபரப்பை நிகழ்த்திக்கொண்டிருப்பதை அனைவரும் அறிவீர்கள். அதைக் கேட்டு விட்டு நீங்கள் கொடுக்கும் கருத்துகள் உத்வேகத்தைத் தருகின்றன.


ஏற்கனவே சொன்னபடி, தீபாவளி முதல் தன் உத்தியோகபூர்வ ஒலிபரப்பை பண்பலை தொடங்குகிறது. முதற்கட்டமாக மூன்று மணிநேரம் முக்கியமான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். அதாவது மன்றப் படைப்புகளும் மன்ற மக்கள் குரலும் இடம்பெறும் நேரம்.


இந்த மூன்று மணி நேர நிகழ்ச்சி மீண்டும் ஒரு தடவை மீள் ஒலிபரப்பாக அன்றோ, அல்லது மறு நாளோ ஒலிபரப்பாகும். ஆக மொத்தம் ஆறு மணி நேரம்.. அந்த ஆறு மணி நேரம் மன்றத்தார் அனைவரும் கேட்கக்கூடிய நேரமாக இருக்க வேண்டும். எனவே கீழே கொடுக்கப்பட்ட நேர அட்டவணையில் உங்களுக்குத் தோதான நேரத்தைத் தெரிவு செய்து சொல்லுங்கள். வாக்களித்துச் சொன்னாலும் சரிதான்.

காலை 7 முதல் 10 மணிவரை ஒலிபரப்பும் 3 முதல் 6 மணி வரை மறு ஒலிபரப்பு என்று ஒரு தெரிவும்,


காலை 11 மணியிலிருந்து மாலை 2 மணி வரை ஒலிபரப்பும் இரவு 7 மணி முதல் இரவு பத்து மணி வரை மறு ஒலிபரப்பு என்று இன்னொரு தெரிவும்


காலை 7 மணி முதல் 10 மணி வரை ஒலிபரப்பும், முன்னிரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மறு ஒலிபரப்பு என்ற மூன்றாவது தெரிவும் உண்டு.



நன்றி.

ஜான்
09-10-2012, 07:36 AM
இங்கே கொடுக்கப்பட்டது இந்திய நேரம்தானே

ஆதி
09-10-2012, 07:37 AM
இங்கே கொடுக்கப்பட்டது இந்திய நேரம்தானே

ஆமாம் ஜான் அண்ணா

jayanth
09-10-2012, 10:13 AM
காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை ஒலிபரப்பானால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா...

(இது பேராசைதான்...!!!)

ஆதி
09-10-2012, 10:23 AM
அன்பின் ஜெயந்த், பண்பலை 24 மணி நேரமும் ஒலிக்கும்

இப்பொழுது ஓட்டெடுப்புக்கு விடப்பட்டிருக்கும் நேரங்களில், நம் மன்ற மக்களால் நிகழ்ச்சிகள் வழங்க்கப்படும்

உதராணமாக, நாடகம், கதை சொல்லுதல், கவிதை வாசித்தல் இப்படி

மற்ற நேரங்களிலும் பண்பலை ஒலிக்கும் பாடல் மற்றும் இன்ன பிறவற்றால்

jayanth
09-10-2012, 11:41 AM
ஓ அப்படியா...!!! வாக்கெடுப்பு நேரம் நமக்கே... நமக்காய்... நன்றி...!!!

ஆதி
09-10-2012, 11:57 AM
ஓ அப்படியா...!!! வாக்கெடுப்பு நேரம் நமக்கே... நமக்காய்... நன்றி...!!!

நம்ம நேரத்தில் நாம் எல்லோரும் தான் பங்கெடுக்கனும், உங்க பங்களிப்பு எப்படி செய்ய போறீங்க ???????

jayanth
09-10-2012, 12:07 PM
நம்ம நேரத்தில் நாம் எல்லோரும் தான் பங்கெடுக்கனும், உங்க பங்களிப்பு எப்படி செய்ய போறீங்க ???????


மொதல்லே எங்கிட்டெ உள்ள 1947 கணிணிய மாத்தணும். அப்புறமா முழு மூச்சுடன் .....

நாஞ்சில் த.க.ஜெய்
09-10-2012, 12:50 PM
மன்ற உறவுகளின் குரல்களை வெளிக்கொணரும் சிறந்ததோர் முயற்சி...இந்த முயற்சியில் எனக்குள் தோன்றும் சில சிந்தனைகள் தினமும் இது போன்று நிகழும் நிகழ்ச்சிகளின் போது நிகழ்ச்சிகள் பலரை சென்றடைய இது போன்ற நேரங்கள் தவிர ஒரு தினம் வேலை பணிப்பளுவினால் உறவுகளின் குரல்களை கேட்க்கவியலாமல் செல்வதற்க்கு வாய்ப்புகள் பல..ஞாயிறு போன்ற ஒரு விடுமுறை தினத்தில் இது போன்ற மன்ற உறவுகளின் குரல்களை மறு ஒலிபரப்பு செய்யலாம்..

veruppuvijay
09-10-2012, 01:04 PM
மொதல்லே எங்கிட்டெ உள்ள 1947 கணிணிய மாத்தணும். அப்புறமா முழு மூச்சுடன் .....

இத்தனை கணிணிகள் வைத்திருக்கிறீர்களா??? அம்மாடியோவ்

jayanth
09-10-2012, 01:26 PM
இத்தனை கணிணிகள் வைத்திருக்கிறீர்களா??? அம்மாடியோவ்

கணிணி என்றல்லவா எழுதியுள்ளேன்...
கணிணிகள் அல்லவே...

(சும்மா விளையாட்டுக்கு...!!!)

A Thainis
09-10-2012, 06:45 PM
வாக்களித்தேன் மன்றம் சிறக்கட்டும்.

மயூ
18-10-2012, 05:04 AM
காலையில் அலுவலகம் செல்லும் போதும் மாலை வீடு வந்த பின்னரும் கேட்க பொருத்தமான நேரத்தைத் தெரிவு செய்துள்ளேன் :)

அனுராகவன்
28-10-2012, 05:18 AM
நானும் வாக்களித்தேன்..
மன்றத்தில் உள்ள அனைவரும் பங்குபெற்றால் இன்னும் நல்ல இருக்கும்..
அனைவரின் குரலும் ஒலிக்கட்டும்...

arun
31-10-2012, 04:24 PM
நானும் வாக்களித்தேன் ! ஆனால் எனக்கான நேரத்தை இப்போதைக்கு சொல்ல முடியவில்லை ! ..