PDA

View Full Version : உடையாத என் நெஞ்சம்....!!!!



manivannan samikkannu
06-10-2012, 06:07 PM
இதயங்கள் இடம் மாற
அவள்
உயிர் எனைத்தேட .....!!!!
உளிபட்டு உடையாத என் நெஞ்சம் ......
அவள் கருவிழிப்பட்டு உடைந்தது என்ன ??....
இடம் விட்டு இடம் மாற துடிக்கும் .........
ஈருயிர்கள்
இவள்
கரம் பட்டு கரைந்தது என்ன ??......
இதழோடு இதழ் வைத்து நான் கொடுத்த முத்தம்
என் கண்களின் உறக்கம் கெடுத்தது என்ன ??....
குளிர்காற்று பட்டும் சிலிர்க்காத
என் தேகம்.....
அவள் விடும்
அனல் காற்றுப்பட்டு சிலிர்த்தது என்ன ??....
தேய்கின்ற தேனிலவு இவள் என்று தெரிந்தும் ..
என் மனம் துடிப்பது என்ன ??.......
அவள் அழகை கவிபாட நான் நினைக்கும் போது.....
என் இதழ்கள் இணை பிரிய மறுப்பது என்ன ??..

jayanth
07-10-2012, 02:59 AM
கவிதை நன்றாக இருக்கின்றது...
"தேய்கின்ற தேனிலவு இவள்" என்பதுதான் கொஞ்சம் இடிக்கின்றது...

கீதம்
07-10-2012, 04:20 AM
என்ன என்ன என்று நிறைக்கும் வினாக்கள்! எண்ண எண்ண இனிக்கும் விடைகள்! காதலின் வெளிப்பாடாய் அமைத்த கவி அழகு. பாராட்டுகள் மணிவண்ணன்.

ஆதவா
07-10-2012, 06:26 AM
காதலோட வலிமைன்னு சொல்லுவாங்களே. அது இதுதானே?

காதல், இருக்கிற உலகத்தையே மாற்றிவிடும். உங்க கவிதையில சொல்லப்படுற உலகம் போல... இவனை மிக மென்மையாகவெ மாற்றிவிட்டது போலும். காதலியைப் பார்க்கும்பொழுதெல்லாம் காதலன் நுரையால் செய்த சிலை (நன்றி வைரமுத்து) மாதிரி ஆகிவிடுகிறான் இல்லையா... விழிபட்டு உடைதலும், கரம்பட்டு கரைதலும் காற்றுபட்டு சிலிர்த்தலும்.... காதலின் பித்துக்குளி விளையாட்ட்டுக்கள்.

கவிதை நல்லாயிருக்கு.. இன்னும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

manivannan samikkannu
08-10-2012, 04:27 PM
nandri nanbare............

சுகந்தப்ரீதன்
08-10-2012, 05:29 PM
உரைநடையில் உரைத்த கவிக்கு உரியபதில் உடனே கிடைக்க எமது வாழ்த்துக்கள் மணிவண்ணன் அவர்களே..!!


nandri nanbare............

நண்பரே... தமிழ்மன்ற விதிமுறைகளை (http://www.tamilmantram.com/vb/showthread.php/11843-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D) படித்துவிட்டு தங்களை பற்றிய அறிமுகத்தை (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/38-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95) இங்கே தந்துவிட்டு தொடருமாறு தங்களை அன்போடு கேட்டுகொள்கிறோம்..!!

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பதை இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF) சென்று தெரிந்துகொள்ளுங்கள்..!!

அமரன்
08-10-2012, 08:31 PM
முதலில் உங்களை வரவேற்கிறேன் மணிவண்ணன்..

காதலில் தவழும் குழந்தையெனக் கவிதை கவர்கிறது.

மாற்றங்களைக் கொடுப்பது காதலின் கட்டாயப் பணி என்பதை மீண்டும் உணர்த்தும் கவிதை.

பாராட்டுகள்.