PDA

View Full Version : தொலைந்து போவதாய் ..



manivannan samikkannu
06-10-2012, 06:06 PM
என்னருகில் அவளில்லை!
ஆனால் எனக்குள் உணர்வாகிபோனாள்...........!
அவள் நினைவுகள் மட்டும்
மறையாத சூரியனாய்
தேயாத வெண்ணிலவாய்
உறையாத பனியாய்........
எனக்குள்
என்னை உலரவைக்கிறது......!
ஒரு தோழியாய்
என்னவள் கைகோர்த்து
நான் நடந்து
என் கவலை நான் சொல்லி .......
அவள் கவலை அவள் மறந்து ......
அவளுக்குள் நான் தொலைந்து போவதாய் ......
என் மார்பில் அவள் சாய
அவள் மடி நான் சாய
தாயக
மனதரையில் எனை சுமந்து கருவறையில் ....
என் உயிர் சுமந்த...........
அவள் உயிரை நான் சுமக்க வேண்டும் .....!!!!!

ஆதவா
07-10-2012, 06:31 AM
மனதரையில் எனை சுமந்து கருவறையில் ....
என் உயிர் சுமந்த...........
அவள் உயிரை நான் சுமக்க வேண்டும் ..

க்ளாஸ்... நன்றாக இருக்கிறது மணிவண்ணன்,
இருவரும் ஒருவருக்கொருவர் சுமை ஏற்றுக்கொண்டால் அது பாரமாகத் தெரியாது. காதலின் உன்னதங்களில் ஒன்று இதுதான்.. நிறையபேர் இதுதெரியாமல்தான் தத்தளிக்கிறார்கள்.

மனதில் சுமந்து, கருவில் உயிர் சுமந்த....

இப்படித் தெளிவாக இருப்பவர்கள்தான் காதலர்கள்!!!

வாழ்த்துக்கள்.

கீதம்
09-10-2012, 03:49 AM
தோழியாய், தாயாய், தாரமாய் எல்லா உருவிலும் அவளே தென்பட, அவளுள் தொலைந்துபோன உங்கள் மனம் தென்படுகிறது கவிதையுள்.

பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

HEMA BALAJI
13-10-2012, 12:51 PM
//தாயக
மனதரையில் எனை சுமந்து கருவறையில் ....
என் உயிர் சுமந்த...........
அவள் உயிரை நான் சுமக்க வேண்டும்// கலக்கல் வரிகள். வாழ்த்துக்கள் சகோ..