PDA

View Full Version : காத்திருப்பு...!



இனியவள்
04-10-2012, 10:42 PM
என்னைத் தீண்டும்
உந்தன் சுவாசம்
கொஞ்சம் கொஞ்சம்
காதல் பேசும்..!

என்னைத் தீண்டா
உந்தன் நேசம்
கொஞ்சம் கொஞ்சம்
என்னைக் கொல்லும்..!

வார்த்தையொன்று சொல்லி
விட்டால் - வாழ்ந்து விடுவேன்
அந்தச் சொல்லில் -
வீழ்ச்சியொன்று
தாக்குமுன்னே வந்து விடு
எந்தன் கண்ணே..!

உந்தன் கண்கள்
பேசும் வார்த்தையொன்றே
எந்தன் இதயம் வேண்டும்
வரம் அன்பே...!

காதலென்ற ஓற்றைச்
சொல்லில் பற்றுக்
கொள்ளும் காலமிது
நீயின்றி போகும் போது
வாழ்க்கையின்றி
போகுதன்பே..!

கீதம்
05-10-2012, 04:29 AM
சுவாசம் தீண்டும் தூரத்திலிருந்தும் நேசம் தீண்டா துர்பாக்கியம் ஏனோ?

மொழிபேசும் வார்த்தை வேண்டாம், விழிபேசும் வார்த்தை போதுமென்றே ஏங்கும் மனத்தின் ஏக்கம் தீரும் நாள் வருமோ?

மனம் தொட்டக் கவிதை. பாராட்டுகள் இனியவள்.

இனியவள்
17-10-2012, 04:14 PM
நன்றி கீதம்..!

நாஞ்சில் த.க.ஜெய்
19-10-2012, 02:52 PM
காதலில் காத்திருப்பதும் சுகம் தானே..காதலில் வீழ்ந்த பெண்ணின் உணர்வுகளை செதுக்கும் கவிதை அருமை இனியவள் அவர்களே..

இனியவள்
20-10-2012, 12:56 AM
நன்றி நாஞ்சில் த.க.ஜெய்..

இனியவள் போதும் அவர்களே வேண்டாமே...!

govindh
21-10-2012, 12:16 PM
காதலே சுவாசம்...
சுவாசமே காதல்...

'காத்திருப்பு' -
கவிதை இனிமை...
பாராட்டுக்கள்.

கோபாலன்
22-10-2012, 11:04 AM
உங்கள் காத்திருப்பு வீண்போகாது . நல்ல கவிதை. :)

arun
28-10-2012, 05:20 PM
காதலில் காத்திருப்பதும் சுகம் தானே ! அருமையான வரிகளுக்கு பாராட்டுக்கள்

சுகந்தப்ரீதன்
28-10-2012, 08:14 PM
நெருக்கத்தில் இருந்தும் நீளும் நெஞ்சத்து நெடுந்தூர இடைவெளியை கடக்க ஒற்றை தேவையாய் ஊசலாடுகிறது அந்த ஒருசொல் பாலம்..!!:)

கடைசி பத்தி டச்சிங்... கலக்குங்க இனியவள்..!!:icon_b: