PDA

View Full Version : விண்வெளிப் பயணத்தில் வீர்சிங்..lavanya
05-01-2004, 08:34 PM
விண்வெளிப் பயணத்தில் வீர்சிங்..

ஒரு சின்ன ஆய்வுக்காக வீர்சிங்கும்,பாண்டாசிங்கும் ஒரு ராக்கெட்டில் விண்வெளி கழகத்தால் அனுப்பப்பட்டனர். ராக்கெட் பயணம் தொடங்கி கொஞ்ச நேரத்தில் ஏதோ
கோளாறில் பூமிக்கு திரும்ப வேண்டியதாகி விட்டது.உடனே பாண்டாசிங்கும்,வீர்சிங்கும்
யோசித்து பிறகு ராக்கெட்டை கீழிறக்கும் போது வழி தெரியாமல் ஒரு காட்டில்
ராக்கெட்டை இறக்கி விட்டான் வீர்சிங்.இருவரும் காலை விடிந்த பிறகு அடுத்ததை
யோசிக்கலாம் என முடிவு செய்து அங்கேயே படுத்து விட்டனர். நள்ளிரவில் இருவருக்கும்
தண்ணீர் தாகம் எடுக்க தண்ணீர் கிடைக்காமல் ராக்கெட்டுக்கு எக்ஸ்ட்ராவாக உள்ள எரிபொருளை எடுத்து குடித்துவிட்டு படுத்துவிட்டனர்.விடிகாலையில் பாண்டாசிங்கின்
செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது..வீர்சிங்தான் பேசினான்." பாண்டாசிங்... இன்னும் நீ
காலைகடன்கள் முடிக்கவில்லையே..." பாண்டாசிங் குழப்பாமாக 'இல்லையே ஏன்...?'
என்றான்.வீர்சிங்அவசரமாக சொன்னான் 'போய்விடாதே நான் ஜப்பானில் இருக்கிறேன்'</span>

-------------
இது ஏற்கனவே வந்திருக்கறதா என தெரியவில்லை.வந்தால் எடுத்து விடவும்

<span style='color:#2400ff'>மற்றொரு முறை ஒரு ஆராய்ச்சியாளரிடம் வீர்சிங் உதவியாளராக இருந்தான். ஒரு தவளை
குறித்த ஆய்வொன்றை பேராசிரியர் அவனிடம் தந்தார். வீர்சிங் ஆர்வமாக ஒரு தவளையை
எடுத்து அதன் ஒரு காலை வெட்டிவிட்டு ஜம்ப் என்றான்.தவளை கஷ்டப்பட்டு மூன்று
கால்களை ஊன்றி ஜம்ப் செய்தது.இப்போது இரண்டாம் காலையும் வெட்டிவிட்டு ஜம்ப்
என்றான்.தவளை மிக கஷ்டப்பட்டு இரண்டு கால்களை ஊன்றி ஜம்ப் செய்தது..வீர்சிங்குக்கு
சந்தோஷத்தில் தலை கால் புரிய வில்லை. மூன்றாவது காலையும் வெட்டி விட்டு ஜம்ப்
என்றான். தவளையால் முடியவில்லை.பேசாமல் கிடந்தது.மறுபடி ஜம்ப் என்றான்..எந்த அசைவும் இல்லை.வீர்சிங் தன்னுடைய ஆய்வு நோட்டில் இப்படி எழுதினான்.

"தவளையின் மூன்று கால்களை வெட்டி விட்டால் அதற்கு காது கேட்காது"

puppy
05-01-2004, 08:36 PM
ஹாஹா..கேட்ட ஜோக் தான் நன்றி லாவ்....இரண்டாவது கரப்பான் பூச்சியில் இருந்து இப்போ தவளைக்கு போய்விட்டதா

முத்து
05-01-2004, 08:40 PM
நல்லா இருக்கு லாவண்யா அவர்களே ...
ஜப்பான் போறதுக்கு இப்படியெல்லாம் வழியிருக்கா ..
விமானச் செலவு மிச்சம் ஆகுதே ... :wink: :D

poo
05-01-2004, 08:48 PM
எனக்கு உண்மையில் முதல் ஜோக் புரியவில்லை...

புரிந்துகொள்ள முயலவில்லை.. என்பதே உண்மை... யாராச்சும் எளிமையா எனக்கு(ம்) புரியறாப்போல சொல்லிடுங்களேன்....

முத்து
05-01-2004, 08:54 PM
எனக்கு உண்மையில் முதல் ஜோக் புரியவில்லை...

புரிந்துகொள்ள முயலவில்லை.. என்பதே உண்மை... யாராச்சும் எளிமையா எனக்கு(ம்) புரியறாப்போல சொல்லிடுங்களேன்....

பூ ..
அது வேறொன்னுமில்லை ...
தண்ணிக்குப் பதிலா
ராக்கெட் எரிபொருளைக் குடிச்சதால்
காலைக்கடன் செய்யும்போது ராக்கெட் மாதிரி மேலே போய்
ஜப்பானில் இறங்கிவிட்டார் நம்ம வீர்சிங்...

mania
06-01-2004, 05:50 AM
உண்மையில் இது வீரு ராகேஷ் சர்மாவுடன் அமெரிக்க கேம்ப்பில் நடந்த சமாசாரம் . அப்போவே சொன்னார் வீரு என்னிடம். நான்தான் இதையெல்லாம் சபையிலே சொல்லி நம்ம (ஆண்பிள்ளைங்க )இன்னும் அவமானப்பட வேணாமென்னுதான்..............
இது மாதிரியெல்லாம் கூட இங்கே சொல்லலாமா லாவ்ஸ் !!!! ஹி...ஹி..ஹி....
அன்புடன்
மணியா

Nanban
06-01-2004, 06:29 AM
முதல் ஜோக்கை நானும் படித்திருந்தேன். அதைக் கொண்டு தான் குஷ் ஜோக்ஸை ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். ஆனாலும் தொடக்கம் மங்களகரமா இருக்கணும்னு இந்த மூக்கைப் பிடிச்சுட்டு படிக்கற ஜோக்கை பின்னாடி பார்த்துக்கலாம்னு ஒதுக்கி வச்சுட்டேன்.

அப்புறம் இரண்டாவது - புதுசு தான்..... நல்லாவே சிரிக்கவைக்குது......

அறிஞர்
06-01-2004, 09:32 AM
இரண்டுமே.. படித்த ஜோக்குகள்..

நம் தளத்தில்.. படிப்பதில்.... சந்தொஷமே....

விகடன்
14-04-2009, 09:59 AM
ரொக்கட் துணுக்கு அசத்தல். காலைக்கடன் முடிக்க சென்றவர் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜப்பானில் :D

-----------------
தவளையும் அதன் கேற்கும் திறனுமான பரிசோதனை பாடசாலைக்காலங்களில் கேட்டது. மறந்ததை நினைவூட்டியமைக்கும் நன்றி.