PDA

View Full Version : செ(சொல்)லரித்த பக்கங்கள்



kulakkottan
04-10-2012, 04:18 PM
செல்லரித்து போன பக்கங்கள் அதை -அன்று
சொல்லாமல் இதயத்தில் அழுத்தி இருந்தேன்

உன் சேதி சொன்ன காற்று -இன்று
உயிர் குடைந்து அதையும் வாசித்ததே

தொலை தூரம் போன நினைவூர்ந்தை-சொல்லியனுப்பி
தொந்தரவாய் என்மீது மோத செய்வதேனோ

மீண்டிருக்கையில் என் நரம்பு கொண்டு -இசை
மீட்டி கொள்ள ஆசையோ கொன்று போனவளே

நிலவில்லா இரவென்றாலும் ஓளி தெரிந்தது
நீளும் கனவுகளில் கூட உன்னை மறந்த போது

மீண்டும் செல்லரிக்க சொல்லெடுக்காதே
மீறிய கனத்தால் நின்று விடும்
என் இதயம் ஒற்றை கணத்தில் !

இனியவள்
04-10-2012, 10:33 PM
செல்லரித்த பக்கங்களின்
சொல்லாத பல
பக்கங்களை தீண்டலில்
உயிர்ப்பித்துக் கொண்டதோ
தென்றல் காற்று...?

மீட்க முடியா மீட்சியில்
மாட்டிக் கொண்ட
பக்கங்கள் ஓவ்வொன்றும்
மீண்டும் செல்லரிக்கும் முன்
உன் காதல்தனை
சொல்லிவிடு - என்
இதயம் மீண்டும்
உயிர்ப் பெறும்..!

அழகிய கவிகள் ஆழ உற்று நோக்கையில் புரிகிறது காதலின் ஆழம்.. வாழ்த்துகள் குலக் கோட்டன்..!

கீதம்
05-10-2012, 04:47 AM
எட்டாக்கனியது அன்று. சீச்சீ இந்தப் பழம் புளிக்குமென்றே நினைத்து மறந்திருந்தது மனம்.

காலக்காற்றிலாடி கிளை தழைந்து கண்முன் வேடிக்கை காட்டுகிறது மரம்.

கொள்வதா? தள்ளுவதா? குழப்பத்தில் எழுகிறது கவிதை.

விளைவென்னவென்பதை சொல்லவேண்டியது காலத்தின் கடமையன்றோ?

இனியவள் சொல்வதுபோல் ஆழமான எண்ண அலைகளை உள்ளடக்கிய கவிதை. பாராட்டுகள் குளக்கோட்டன்.

A Thainis
05-10-2012, 06:23 PM
உன் சேதி சொன்ன காற்று -இன்று
உயிர் குடைந்து அதையும் வாசித்ததே

!

அருமை குலகோட்டன், உங்கள் கவிதையின் அமைப்பு மிகவும் சிறப்பு, குறிப்பாக இந்த வரிகள் அழகு.