PDA

View Full Version : பயணம் + வெற்றி



இனியவள்
02-10-2012, 09:03 PM
சிறகு விரித்த
பறவையாய் காற்றைக்
கிழித்துப் பறக்கிறது
என்னைத் தாங்கிய
விமானம்...!

கலைந்தோடும் மேகங்கள்
ஒன்றோடு ஓன்று
உரசி விளையாடும்
விந்தை கண்டு
எனக்குள் ஓரு
பரவசம்..!

முதல் அனுபவம்
விண்ணைத் தொடும்
பரவசம் நாடி நரம்பெல்லாம்
பரவிடும் அதிசயம்..!

படபடக்கும் பட்டாம்பூச்சியாய்
என் இதயம் - புதிதாய்
பிறந்த பரவசம்...!

உறவுகளைப் பிரிந்த
வலி என்னுள் பிறப்பெடுக்கும்
வேளையில் - சில பல
நினைவுகளில் விடுபட்ட
நிம்மதிப் பெருமூச்சு
என்னில்..!

மண்ணை விட்டு மண்
தாண்டிய தயக்கம் என்னில்
இல்லை சிறிதும்

அடிமைச் சிறகில் விடுபட்ட
பறவையாய் பறக்கத்
துடித்தது மனது
கட்டுப்பாடு என்னும்
விலங்கு உடைபட..!

பிறந்த மண் பாசமின்றி
புகுந்த மண் பற்றுமின்றி
என்னை அலைபாய வைத்திடும்
நினைவுகளை எனக்குள்
அடக்க முயற்சிக்கிறேன்
லட்சியமெனும் குறிக்கோள்
கொண்டு..!

சிதறிய சிந்தனைகள்
வட்டத்துக்குள் ஆட்பட
புதிய வாழ்க்கை புதிய
சிந்தனை ஆட்கொள்ள
விரைந்து ஓடும் நிமிடங்களின்
பின்னால்
நானும் விரைகிறேன்
வெற்றியெனும் கோபுரத்தை
எட்டிப் பிடித்திட....!


எதையோ எழுத நினைத்து எங்கோ முடிந்த கவிதை... தவறுகள் மற்றும் பொருத்தமின்மை இருப்பின் சுட்டிக் காட்டவும்

நாஞ்சில் த.க.ஜெய்
03-10-2012, 04:37 AM
இன்று விரைந்தோடும் விரைவு வாழ்க்கையின் சாரம்சம் கவிதை..ஒவ்வொரு கவிதையும் மன்ற உறவுகளை சென்றடைவதில் தாமதம் ஏற்படின் கவிதையின் சுவையினை அறிவது கடினம்..இனியவளின் இனிய கானங்கள் என்றேதெனும் தலைப்பில் ஒரெ தொகுப்பாக பதிவிடலாமே

சுகந்தப்ரீதன்
03-10-2012, 07:19 PM
தங்களின் பயணம் விரைவில் வெற்றியின் சிகரத்தை எட்ட எமது இனிய வாழ்த்துக்கள்..!!:icon_b:

எதையோ எழுத நினைச்சு எழுதுனாலும் இக்கவிதை நன்றாகவே வந்திருக்கிறது இனியவள்.. ஏற்கனவே ஆதவா சொன்னதை இப்போது ஜெய்யும் சொல்லியிருக்கிறார்... தாங்கள் அனுமதி அளித்தால் நிர்வாகத்தினரே எல்லாதிரிகளையும் ஒருதிரிக்குள் அமைக்க உதவுவார்கள்... திரியின் தலைப்பை தாங்களே தேர்வுசெய்து கொள்ளலாம்..!!:)

A Thainis
03-10-2012, 08:01 PM
பற்றற்றவரை வெற்றி பற்றிக்கொள்ளும், இக்கவிதையில் உங்களின் பற்றற்ற உள்ளம் கண்டேன் வெற்றியும் உமக்கே என்பதையும் கண்டேன், கவிதையை போல உங்கள் இலக்கும் வசமாகட்டும்.

இனியவள்
03-10-2012, 08:30 PM
நன்றி நாஞ்சில் த.க ஜெய்..

உங்கள் வார்த்தைகள் தாங்கியுள்ள அர்த்தத்தை நான் உணர்வேன்.. ஓய்வு நேரங்கள் கிடைக்கையில் எனது அனைத்து கவிதைகளையும் ஓரு திரியில் கொண்டு வர முயல்கிறேன்...! நன்றி உங்கள் ஊக்கத்துக்கு..!

இனியவள்
03-10-2012, 08:32 PM
நன்றி சுகந் தங்களின் உள்ளார்ந்த வாழ்த்துக்கு..! ஆமாம் நேரம் கிடைக்கும் பொழுது அவ் முயற்சியை தொடர்கிறேன்..!

இனியவள்
03-10-2012, 08:33 PM
நன்றி தானிஸ்..

பற்றற்ற உள்ளத்துகுள்
பற்றிக் கொண்டிருக்கும்
வெறி வெற்றியெனும்
கனியை பறித்த பின்பே
சாந்தியடையும்..!

கீதம்
03-10-2012, 10:02 PM
அயல்மண்ணில் காலடி வைத்தபோது எனக்குள்ளும் இதுபோல் அலைபாய்ந்த நினைவுகள் ஆயிரம். அந்நினைவுகளை அப்படியே தொகுத்திருக்கிறீர்கள் கவிதை வடிவில். அதனால் கரு தடம்மாறவில்லை, கவலை வேண்டாம்.

மனந்தொட்ட கவிதைக்குப் பாராட்டுகள் இனியவள். தொடர்ந்து எழுதுங்கள்.

இனியவள்
17-10-2012, 04:02 PM
நன்றி கீதம் உங்களின் ஆக்கபூர்வமான ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கு..!