PDA

View Full Version : நினைவுகள்



இனியவள்
02-10-2012, 11:24 AM
உன் நினைவுகளை
தொலைக்க என்னைப்
புதைத்துக் கொள்கிறேன்
கவியெனும் சோலையில்

பூவாய் கவி மலர்கையில்
நறுமணமாய் உன் நினைவுகள்
என் சுவாசம் தீண்டிச் செல்கையில்
செயலற்றுப் போகிறேன் நான்..!

சுகந்தப்ரீதன்
02-10-2012, 02:13 PM
நேசத்தின் நெடி நறுமணமாய் நாசி துளைத்ததில்
மூர்ச்சையுற்று போனதோ காதலித்த மனம்..?!:)

ஆமாம்... கவியின் முதல் வரி என்ன சொல்ல வருகிறது...
உன்னையும் நினைவுகளையுமென்றா..?! இல்லை
உன் நினைவுகளையென்றா..?! புரியாமதான் கேட்கிறேனுங்கோ இனியவள்..!!

இனியவள்
02-10-2012, 02:35 PM
உன் நினைவுகளை சுகந்.. என் தட்டச்சு வேகத்தில் எழுத்துக்கள் அங்காங்கே இடம் மாறிப் போகின்றன

கீதம்
09-10-2012, 03:51 AM
பூக்களைப் பொத்தி வைக்கலாம். நறுமணத்தைப் பொத்தி வைக்க முடியுமா?

கவிதைப்பூவின் வாசம் வாசக மனத்தையும் வருடிச் செல்கிறது.

பாராட்டுகள் இனியவள்.

A Thainis
10-10-2012, 01:42 PM
நினைவுகளை தொலைக்க கவி பாட இயலுமோ, நினைவுகள் நிழலாய் தொடரவே நினைவுகளில் வாழவே வழி வகுக்கும்.

நாஞ்சில் த.க.ஜெய்
10-10-2012, 03:01 PM
நினைக்க மறப்பது மறப்பதற்கா இல்லை மறந்து நினைப்பதற்கா?...

ரௌத்திரன்
12-10-2012, 10:51 AM
நல்லாத்தான்யா இருக்கு----------ரெளத்திரன்

HEMA BALAJI
13-10-2012, 12:49 PM
கவிதை அழகு!!!...:nature-smiley-003:

இனியவள்
17-10-2012, 03:46 PM
நன்றி கீதம்

நன்றி தைனிஸ்

நன்றி ரொளத்திரன்

நன்றி ஹேமா பாலாஜீ

நன்றி த.க.ஜெய்..

உன்னை நினைவை
மறக்க நினைத்து
மறப்பதையே மறந்து
நினைத்துக்கொண்டிருக்கிறேன்

இக் குழப்பமான கவி போலவே நினைவுகளை மறக்க நினைப்பதும்