PDA

View Full Version : இனிய போராட்டம்



இனியவள்
02-10-2012, 10:50 AM
பத்துமாதம் சுகமான*
சுமையென தன்னுள்ளம்
அன்புவுள்ளம் பெருக்கெடுக்க*
காத்திருந்தாள் அன்னையிவள்
பிஞ்சுள்ளம் முகம்காண..!

விதி வேறு கூற
அவள் விதி இதுவென
கூற அலரிவிட்டாள்
தாயிவள் - நான்
கண்ட கனவனைத்தும்
இவனைப் என்னுள்
செதுக்கி பிஞ்சுவிரல்
நான் பிடிக்க பஞ்சுப்
பாதம் இவ்வுலகை மிதிக்க
என்னிரு கண்களும்
பரவசம் கொள்ளும்
ஆனந்த நிலையே..

நானின்றி போனாலும்
இவன் பிறக்கும் வரம் ஓன்றே
எனக்கு வேண்டும் - இறைவாவென*
தாயுள்ளம் வேண்ட

கர்ப்பக் குழந்தை
பிஞ்சுக் கரம் கொண்டு
கெஞ்சிக் கேட்டது
கடவுளிடம்

என்னைப் பெற
என்னைச் சுமப்பவள்
இயற்கையெய்வதை விட
பத்து மாதம் இவள்
கருவில் தவமிருந்த
மகிழ்வோடு இவ்வுலகை
தீண்டாது உன் மடி - நான்
சேர்கிறேன் இறைவா..!

கண் திறந்தார் தாயுமானவர்
தாயும் சேயும் நலமென
மென்னகை புரிந்தார்
வைத்தியர்..

ஆனந்தம் பொங்கிடும் பரவசம்
அன்னையவள் முகத்தினில்
பொளர்ணமி நிலவொன்று
பச்சிளம் குழந்தையில்...

போராட்டம் இனிதே
நிறைவுற - கொண்டாட்டம்
ஆரம்பமாகியது இவர்கள்
வாழ்க்கையில்

சுகந்தப்ரீதன்
02-10-2012, 01:52 PM
காட்சிபதிவாய் நலமுடன் முடிந்த கற்பனை கவிதை..!!:icon_b:

ஆங்காங்கே நிலவும் எழுத்துபிழையை களையலாமே..?!:aetsch013:

இனியவள்
02-10-2012, 02:46 PM
எழுத்துப் பிழைகளுக்கு
மன்னிக்கவும்...

கலைய முனைந்தாலும்
பிழையை பிழையாய்
களையெடுப்பதால் பிழைகள்
பிள்ளை போல்
தவழ்கின்றன
அடிக்கடி...

ஆமாம் கற்பனைகள்
தானே கவிதையின்
விதைகள்...

நன்றி சுகந்

கீதம்
03-10-2012, 10:09 PM
இனிய போராட்டம் அருமையான தலைப்பு. இந்தப் போராட்டத்தில்தான் வலியும் சுகமாய் அனுபவிக்கப்படுகிறது. தாய்க்கும் சேய்க்குமான பற்று கருவறையிலிருந்தே உருவாகிறதோ? அழகுக் கவிதை. வாழ்த்துக்கள் இனியவள்.

இனியவள்
17-10-2012, 03:59 PM
நன்றி கீதம்..!

ஓரு நாவல் படிக்கையில் உதிர்த்த கவியிது.. கதையினை ஓட்டியே பிறந்ததால் அழகாய் வரையப்பட்டிருக்கது இக் கவி...!