PDA

View Full Version : அடடே ..! பகுதி -1



vasikaran.g
02-10-2012, 06:54 AM
நிலா அபகரிப்பு வழக்கு !
சூரியமன்றதில்
அமாவாசையன்று ...

நில மகளுக்கும்
விவசாயிக்கும்
விவாகரத்து !
அடுக்குமாடி குடியிருப்பு
கட்டி முடிப்பு ..

பருவமழைக்காக
சிறப்பு வேண்டுதல் !
தலையை மழித்துக்கொண்ட
மரங்கள் ..
இலையுதிர்காலம் தொடக்கம்...

aasaiajiith
02-10-2012, 07:19 AM
அடடே !
வா வா வசீகரா !
வசீகரிக்கும் வரிகள் !


தொடர்ந்து எழுதவும்!

இனியவள்
02-10-2012, 11:11 AM
வேண்டுதல் அதிகமாகி
வெள்ளப் பெருக்கெடுக்காத வரை
நன்று,...

அழகிய கவி வரிகள்
அழகாய் மனதை
கொள்ளை கொள்கின்றன...

வாழ்த்துக்கள் வசீகரன்

சிவா.ஜி
02-10-2012, 11:43 AM
பிரமாதம் வசீகரா. வசீகரிக்கும் வரிகள். ரொம்ப நல்லாருக்கு. தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
02-10-2012, 02:18 PM
அடடே... இந்த பகுதி நல்லாயிருக்கும்போல இருக்கே..!!:)

தொடர்ந்து எழுத எமது வாழ்த்துக்கள் வசீகரன்..!!:icon_b:

vasikaran.g
07-10-2012, 06:46 AM
நன்றி ஆசைஅஜித்.

vasikaran.g
07-10-2012, 06:47 AM
நன்றி இனியவள் ..தண்ணியே இல்ல ,இதுல வெள்ளபெருக்கு எங்க வருது ..

vasikaran.g
07-10-2012, 06:47 AM
நன்றி சிவாஜி

vasikaran.g
07-10-2012, 06:48 AM
நன்றி சுங்கதிப்ரீதன்

ஆதவா
07-10-2012, 07:00 AM
மூன்று கவிதைகளும் அருமையா வந்திருக்குங்க வசீகரன்.

நிலா அபகரிப்பு வழக்கு !
சூரியமன்றதில்
அமாவாசையன்று ...


சூரியனே ஒளித்துவைத்துக் கொண்டு என்ன் நாடகம் இது???!!!

நில மகளுக்கும்
விவசாயிக்கும்
விவாகரத்து !
அடுக்குமாடி குடியிருப்பு
கட்டி முடிப்பு ..

விவாகரத்திற்குப் பின் என்னவொரு தற்கொலை!! இது செத்துத் தொலையாத கொலை.

பருவமழைக்காக
சிறப்பு வேண்டுதல் !
தலையை மழித்துக்கொண்ட
மரங்கள் ..
இலையுதிர்காலம் தொடக்கம்...


ஹாஹா.... நல்ல கற்பனை.



இவையனைத்துமே வித்தியாசமாக இருந்தது. சில ஹைக்கூவுக்கு நெருக்கமாகவும் இருந்தது. கொஞ்சம் வடிவம் மாற்றி உள்ளர்த்தம் சரிசெய்தால் ஹைக்கூவேதான்.
தொடருங்கள் வசீ... உங்கள் கவிதை வசீகரிக்கின்றன..

ஆதவா
07-10-2012, 07:09 AM
நன்றி சுங்கதிப்ரீதன்

அடடே!!! :)

கீதம்
08-10-2012, 06:58 AM
அடடே கவிதைகள் ஒவ்வொன்றும் அட, அடடா, அடஅடஅடா... போடவைத்தன.

கடைசிக் கவிதையை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் வசீகரன்.

கோபாலன்
08-10-2012, 11:59 AM
அடடடடே! கவிதைகள் பிரமாதமாக இருந்தன. :)

vasikaran.g
13-10-2012, 12:28 PM
நன்றிங்க ஆதவா .!

vasikaran.g
13-10-2012, 12:29 PM
நன்றிங்க கீதம் ..

vasikaran.g
13-10-2012, 12:29 PM
நன்றிங்க கோபாலன்.

HEMA BALAJI
13-10-2012, 12:46 PM
அடடா!!! என்ன ஒரு கற்பனை காலத்துக்கேற்ப. சூப்பர். அதிலும் மூன்றாவது மிக அருமை.

nellai tamilan
13-10-2012, 02:55 PM
அடடே..... ஆச்சிரியக்குறி..!

எல்லோருக்கும் பிடித்தது போல் என்னை அந்த மூன்றாவது கவிதை மிகவும் கவர்ந்தது.

"தலைக்கு மொட்டையடித்துக்கொண்ட மரங்கள்"

அழகான கற்பனை வாழ்த்துக்கள் இது போல பலமடங்கு தொடர...

ஆதி
14-10-2012, 12:35 AM
மூன்று கவிதைகளும் நல்ல அவந்திருக்கு வசீகரன்

சூரியனுக்கு அம்மா'வா(வ)சை என்பதும் ஏனோ நினைவுக்கு வருகிறது

விவசாயிகள் விவாகரத்து செய்யவில்லை, கருக்கொலை செய்கிறார்கள்

மொட்டை அடித்துக் கொண்ட மரங்கள் நல்ல கற்பனை

மழைக்கணவன் தழுவ, புது இலைத்துணி உடுத்தும் மரம்

வாழ்த்துக்கள் வசீகரன்

தலைப்பை மட்டும் வேறுவிதமாய் மாற்றலாம் வசீகரன்

jayanth
14-10-2012, 04:07 AM
கவிதைகள் அனைத்தும் பிடித்திருந்தது...
அதிலும் மூன்றாவது மிகவும் பிடித்திருந்தது...
பாராட்டுக்கள் வசீ...!!!

கும்பகோணத்துப்பிள்ளை
16-10-2012, 08:56 PM
அடடா! அத்தனையும்
பளிச்! படார்! படீர்!
ஜமாய்ச்சுட்டேள் போங்கோ!

ஆமண்னா! அடுத்த சரவெடியெப்போ பத்தவெப்பேள்!

seabird
17-10-2012, 09:02 AM
வசீகரமான வரிகள்!!

vasikaran.g
01-11-2012, 09:53 AM
நன்றிங்க ஹேமா ..

vasikaran.g
01-11-2012, 09:54 AM
நன்றிங்க நெல்லை தமிழன் ..

vasikaran.g
01-11-2012, 09:56 AM
நன்றிங்க ஆதி.. சற்று வித்யாசமான் கருத்து என்பதால் சற்று வித்யாசமான தலைப்பை தேர்வு செய்தேன் ..

vasikaran.g
01-11-2012, 09:57 AM
நன்றிங்க ஜெயந்த் ..

vasikaran.g
01-11-2012, 09:58 AM
நன்றிங்கண்ணா ..இன்னும் நிறைய இருக்கு ஜமாயசுபுடுலாம் ..