PDA

View Full Version : இன்றும் என்னுள்



இனியவள்
01-10-2012, 01:30 PM
உன் மரணம் தந்த அதிர்வலைகள்
இன்றும் என்னுள் நிழற்படமாய்..

அன்று என்னைத் தீண்டிய*
உன் விழிகளின் ஆழப்பார்வையின்
அர்த்தங்கள் இன்று
என்னுள் வலி தாங்கும்
படலம்...

என்னை நீ அழைத்த*
அந்த தருணம்
நான் என்னை மீண்டும்
தொலைத்த நிமிடம்

நீ இவ்வுலகில்
இல்லையெனிலும்
என்றும் என்னுள்
உயிரோட்டமாய் வாழ்கிறாய்...!

சுகந்தப்ரீதன்
01-10-2012, 03:49 PM
காலனின் கையில் கண்டுண்ட ஒரு நேசத்தின் நினைவை பிரிக்கமுடியாமல் காலமும் காலமான ஒரு உயிரோட்டமான க(வி)தை..!!

தொடர்ந்து எழுதுங்கள்.. இனியவள்..!!:)

இனியவள்
02-10-2012, 02:41 PM
தொடர்ந்து எழுத முயல்கிறேன்.. நன்றி சுகந்

நாஞ்சில் த.க.ஜெய்
03-10-2012, 09:23 AM
மரணத்தின் அதிர்வலைகள் தூண்டும் உயிரினூடான நினைவலைகள்...

கீதம்
03-10-2012, 12:33 PM
மரணத்தின் அதிர்வலைகளில் கலங்கிப்போன மனதிலும் கலங்காத திடத்தோடும், கலையாத நினைவுகளோடும் கவிபடைக்கும் வல்லமைக்கு வாழ்த்துக்கள் இனியவள்.

கலைவேந்தன்
03-10-2012, 01:24 PM
உன் மரணம் தந்த அதிர்வலைகள்
இன்றும் என்னுள் நிழற்படமாய்..

தனக்கு உரியவனின் மரணம் தன் சுய மரணம் வரை மறக்கக்கூடியதில்லை. அதிர்வலைகள் மட்டும் அல்ல. அளவில்லா சோகத்தையும் பிழிந்து தரக்கூடியது.


நீ இவ்வுலகில்
இல்லையெனிலும்
என்றும் என்னுள்
உயிரோட்டமாய் வாழ்கிறாய்...!

அதுதான் ஆழமான காதல் என்பது. நிலையில்லாமல் தவிக்கவைக்கும். வாழ்வின் அர்த்தத்தைத் தொலைக்கும். மிக வேதனை தரக்கூடியது.

சோகமிக்க அழகிய கவிதை ஒன்றைத் தந்தமைக்கு பாராட்டுகள் இனியவள்.

இனியவள்
03-10-2012, 08:37 PM
நினைவலைகள் ஓன்றே
நிலையானது - சிந்தித்து
தித்திக்க செய்து
எம் சிந்தை மயக்கி
ஏக்கமெனும் பரிசை
விரும்பாமல் அளித்து
செல்லும் விருந்தாளி..!

நன்றி நாஞ்சில் த.க ஜெய்.. அன்பான பின்னூட்டத்திற்கு..

இனியவள்
03-10-2012, 08:39 PM
நன்றி கலைவேந்தேன் அவர்களே..!

சில மரணங்களில்
பலர் வாழ்க்கை
விரும்பியும் விரும்பாமலும்
சிதைக்கப் படுகிறது
வலியெனும் ஆயுதம் கொண்டு..