Log in

View Full Version : தமிழ்மன்றப் பண்பலை..



அமரன்
29-09-2012, 06:51 PM
http://i1164.photobucket.com/albums/q561/linuxdason/tmfmcopy-1.jpg (http://tamilmantram.caster.fm/)

அன்பு மன்ற சொந்தங்களே..!!

மன்றத்தின் சொத்துகளாகிய சொந்தங்களின் படைப்பாற்றலுக்கு களங்களை அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை மன்றத்துக்கு உண்டு. அமைத்துக் கொடுக்கும் களங்களை அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பு மன்ற மக்களுக்கு உண்டு.

அந்த வகையில், மன்ற மக்களுக்காக, ஒலிபரப்புக் களம் ஒன்றை அமைக்கும் முயற்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. மன்ற செயற்குழுவினதும், மன்ற நிர்வாகக் குழுவினதும் ஆலோசனைகளும் உழைப்புகளும் கொண்டு அடித்தள வேலைகள் நிறைவு பெற்று விட்டன. சோதனை ஒலிபரப்பும் ஓரளவுக்கு திருப்தியானதாக உள்ளது. இப்போது பொதுவில் சோதனை ஒலிபரப்பை அறிமுகப்படுத்தும் காலம் கனிந்துள்ளது.

ஒக்டோபர் 2 ஆம் நாள் இந்திய நேரப்படி மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை சோதனை ஒலிபரப்பை அன்பர்கள் கேட்கலாம் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

இந்தப் பண்பலையின் நோக்கம் மன்ற மணிகளால் படைக்கப்பட்டவற்றை ஒலிப்பதிவில் கொண்டுவருதலே. அதை நோக்கிய பயணத்தில் அனைவரும் ஒன்றிணைவோம் என்ற உறுதிப்பாட்டுடன் இனிதே அனைவரும் பண்பலையில் சங்கமிப்போம்.

உங்கள் ஆலோசனைகள், உதவிகள் நிச்சயம் தேவை. நீங்கள் எந்த மாதிரிப் பங்களிக்க இருக்கின்றீர்கள் என்பதுவும் முக்கியமான தேவை. உங்கள் மனவோசைகள் இங்கே எழுத்தோட்டங்களாகட்டும். எழுத்தோட்டமான மன ஓசைகள் குரலோசைகளாகட்டும்.

உங்கள் உழைப்புடன் பண்பலை உற்சாகபாகப் பாயும் என்ற நம்பிக்கை மன்றத்துக்கு உண்டு.

அன்புடன்,

நிர்வாகக் குழு

செயற்குழு

பின்னர் சேர்த்தது. 02.10.2012

ஆர்வத்துடன் கருத்துரைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..

மன்றப் பண்பலையில் அனைத்து மன்ற உறுப்பினரும் பங்காளர்கள் என்பதை பறைசாற்றும் வண்ணம் கருத்துகள் வந்திருக்கிப்பது மகிழ்வைத் தருகிறது. அதே மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் அடுத்த கட்டத்தையும் அரிவிப்பதில் மகிழ்ச்சி.

அனைத்து உறுப்பினரும் பண்பலையின் பங்காளராக இருந்தாலும், அவர்களை ஒருங்கிணைத்து, தலைமை தாங்கிப் பண்பலையை நடத்திச் செல்ல ஒரு குழு அவசியம். அந்த வகையில் சிவா.ஜி, மதி, ஆதி ஆகிய மூவரையும் இணைத்து பண்பலை ஒருங்கிணைப்புக் குழுஉருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மன்ற உறவுகளை ஒருங்கிணைத்து பண்பலையை நடத்திச்செல்லும்.

பண்பலையின் வீச்சு பிரமாண்டமானதாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாரிடத்திலும் இருக்கும். அதை நோக்கிய பயணத்தின் துவக்கமே இன்று.. எளிமையாகத் துவங்கும் பண்பலை நிதானமாக நகர்ந்து ஆழக் கால் பதித்து, நிலையெடுத்த பின்பு முழு வீச்சில் தன் பாய்ச்சலைக் காட்டும் என்பதை உறுதிபட உரைக்கலாம். அது வரை மனங்களும் மன்றமும் சோர்ந்து போகாமல் இணைந்து செயல்படுவோம்.

இனி... பண்பலைக் குழு முழுவீச்சில் தன் வேலையைத் துவங்கும்.

சோதனை ஒலிபரப்பைக் கேட்க இந்த இணைப்பை கிளிக்குங்கள்.

http://www.tamilmantram.com/fm

விரைவில் மன்றத்திலிருந்தே கேட்கும் வசதியை உருவாக்க முயல்வோம்.

நன்றி.

செயற்குழு.

A Thainis
29-09-2012, 07:07 PM
:icon_b::icon_b:நல்ல முயற்சி மனம் மகிழ்ந்து வரவேற்கிறேன், இத்தகைய மேலான பணியை மேற்கொண்ட மன்ற நிர்வாகிகளையும், செயற்குழுவையும் மனமார பாராட்டுகிறேன்.
பண்பலையில் நிச்சயம் எனது பங்களிப்பும் இருக்கும் என்பதை இங்கு பதிவுசெய்வதில் பெருமைகொள்கிறேன்.:icon_b:

மன்றமே எவ்வகை பங்களிப்பை உறுபினர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற சில ஆலோசனைகளை வரிசைபடுத்தினால் நன்று, பிறகு அதையொற்றிய கருத்துகளை எங்களால் தெளிவாக கூறமுடியும். பண்பலை பட்டொளி வீசி காற்றில் தென்றலாய் பவனிவரட்டும்.

அமரன்
29-09-2012, 07:22 PM
தைனிஸ்..உங்கள் ஈடுபாடு மகிழ்வைத் தருகிறது.நாம் எதிர்பார்ப்பவற்றைக் கொடுப்பதுதான் மன்றத்தின் பணி.. பண்பலையின் பணி.. நாம் என்ன எதிர்பார்க்கின்றோம், எப்படிப் பங்களிக்கப் போகிறோம் என்று நாம்தான் சொல்ல வேண்டும். தவிர, பாத்திரத்தைக் கொடுத்து விட்டு இதை நிரப்பினால் போதும் என்ற நிர்வாகத்தை தவிர்த்து இறைப்பதற்கு ஏற்ப பாத்திரங்களை உருவாக்குதல் என்ற நிர்வாக முறையைக் கடைப்பிடிக்கலாம் என்ற எண்ணமும் உண்டு. இந்த எண்ணம் தோன்றக் காரணம் நடைமுறை, மன்ற ஒழுங்குகளை மன்ற மக்கள் தாண்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கைத்தான்.எனவே, நீங்கள் எந்த வகையில் பங்களிக்கப் போகின்றீர்கள். எந்த மாதிரியான பண்பலையை எதிர்பார்க்கின்றீர்கள் என்று சொல்லுங்கள்.

ஆதி
30-09-2012, 09:21 AM
மக்களே, தங்களின் மேலான ஆதரவும் ஆலோசனைகக்ளும் தேவை, இப்படி யாரும் எதுவும் சொல்லாமல் போனால் என்ன செய்வது

சிவா.ஜி
30-09-2012, 09:33 AM
ஆஹா.....மன்றத்தின் அடுத்தக் கட்டப் பாய்ச்சல் பண்பலையாய் பரிமளித்திருக்கிறது. சொல்ல வார்த்தைகளில்லை. நிர்வாகத்தினருக்கு மனம்கனிந்த பாராட்டுக்கள்.

தொடர் ஒலிபரப்பாயிருக்கும் பட்சத்தில் சில நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட நேரத்துக்கு தினமும் ஒலிபரப்பலாம். கவிதை வாசித்தல், கதை சொல்லுதல்....கதைகளைத் தேர்ந்தெடுத்து அதை நாடக வடிவில் ஒலிபரப்புதல், சமையல் குறிப்புகள், சினிமா நேரம், இதயத்துக்குப் பிடித்த இசை என நிகழ்ச்ச்சிகள் இருக்கலாம். மேலும் பிழையின்றி தமிழ் பேசலாமென ஒரு நிகழ்ச்சியும் நடத்தலாம். புதிர் சொல்லி விடை கேட்கலாம்.

கதையை தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் அதை நாடகமாக்கித் தருகிறேன். குரலால் நடிக்கவும் தயார்.

கீதம்
30-09-2012, 12:08 PM
விருப்பத்தோடு வினைபடுவீர்,
உரிமையோடு குரல்கொடுப்பீர்,
உடன்பிறவா உறவுகளே,
ஒன்றுபட்டு உடன்வாரீர்!

எழுத்துளியால் நம்மை
இதுவரை செதுக்கிய மன்றம்
ஒலிச்சிலை வடிக்கவும்
உளிதனைக் கைக்கொண்டு
உற்சாகமாய் அழைக்கிறது.

பண்புடை மக்கள் நாம்,
பண்பலையிலும் சாதிப்போம்!
நம் அகத்தையும் முகத்தையும்
நல்லெழுத்தால் அறியச்செய்தோம்,
இனி, நட்பின் குரலாலும்
நம் எண்ணம் அறியச்செய்வோம்!

விரைந்துவாரீர் தோழர்காள்!
மண்ணில் ஒளிரட்டும் ஏற்றமிகு எழுத்துக்கள்!
விண்ணில் ஒலிக்கட்டும் எழுச்சிமிகு எண்ணங்கள்!

அமரன்
30-09-2012, 12:13 PM
வாங்க பாஸ்..

நேற்று இரவு கூட ஆதியும் நானும் பேசினோம்.. அண்ணன் இருந்தால் இன்னும் பலம் கூடினமாதிரி என்று.. நிச்சயம் உங்கள் உழைப்புத் தேவை..
ஆஹா.....மன்றத்தின் அடுத்தக் கட்டப் பாய்ச்சல் பண்பலையாய் பரிமளித்திருக்கிறது. சொல்ல வார்த்தைகளில்லை. நிர்வாகத்தினருக்கு மனம்கனிந்த பாராட்டுக்கள்.

தொடர் ஒலிபரப்பாயிருக்கும் பட்சத்தில் சில நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட நேரத்துக்கு தினமும் ஒலிபரப்பலாம். கவிதை வாசித்தல், கதை சொல்லுதல்....கதைகளைத் தேர்ந்தெடுத்து அதை நாடக வடிவில் ஒலிபரப்புதல், சமையல் குறிப்புகள், சினிமா நேரம், இதயத்துக்குப் பிடித்த இசை என நிகழ்ச்ச்சிகள் இருக்கலாம். மேலும் பிழையின்றி தமிழ் பேசலாமென ஒரு நிகழ்ச்சியும் நடத்தலாம். புதிர் சொல்லி விடை கேட்கலாம்.

கதையை தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் அதை நாடகமாக்கித் தருகிறேன். குரலால் நடிக்கவும் தயார்.

கலையரசி
30-09-2012, 02:19 PM
"இந்தப் பண்பலையின் நோக்கம் மன்ற மணிகளால் படைக்கப்பட்டவற்றை ஒலிப்பதிவில் கொண்டுவருதலே."

தம்பி அமரனின் தமிழ் மன்றப்பண்பலை அறிவிப்பு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. பத்தாம் ஆண்டு நிறைவில் யாரும் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து வியப்பூட்டும் அறிவிப்புகள்! இந்தளவுக்கு மன்றத்துக்காக உழைக்கும் நிர்வாகிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.


சிவாஜி சார் அருமையான யோசனைகளைக் கொடுத்திருக்கிறார். அவற்றில் பிழையின்றித் தமிழ் பேசக் கற்றுக்கொடுக்கும் யோசனை சூப்பர்! தமிழை வளர்ப்பதில் மன்றத்துக்கு முக்கிய பொறுப்பு உண்டு. புதிர் போட்டியில் அரிய தமிழ் சொற்களைச் சொல்லி அவற்றுக்கு விளக்கம் கேட்கலாம்.

இந்தப்பண்பலையின் நோக்கம் ஏற்கெனவே மன்றத்தில் படைக்கப்பட்டவற்றை ஒலி வடிவில் கொண்டு வருதல்] என்பதை அறிந்தேன். நேரங்கிடைக்கும் பட்சத்தில் மன்றத்தில் வெளியான கதை கவிதைகளைப் படித்துப் பார்த்து அவற்றில் மணியானவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நிர்வாகிகளுக்கு உதவ ஆசைப்படுகிறேன். ஒலி வடிவில் மாற்ற வேண்டிய படைப்புக்கள் பற்றி மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை சொல்ல ஒரு தனி திரியைத் துவங்கலாம்.

இக்காலக் கட்டத்தில் சிறுவர்களுக்குக் கதை சொல்ல பாட்டி தாத்தாக்கள் இல்லை. சிறுவர்க்கான நிகழ்ச்சியில் பாட்டிக் கதைகள் என நேரம் ஒதுக்கி கதை சொல்ல வேண்டும். அதற்கேற்றாற் போல் சிறுவர் கதைகள் பலவற்றை உறுப்பினர்கள் மன்றத்தில் படைக்க வேண்டும்.

கதைகளை நாடகமாக மாற்றவும் என்னால் முடிந்ததைச் செய்ய விழைகிறேன். மன்றக் கதைகளை நாடகமாக மாற்ற கதாசிரியரின் முன் அனுமதி பெற வேண்டுமா? அல்லது நமக்குப் பிடித்த கதைகளை அனுமதியின்றி நாடகமாக மாற்றலாமா என்பதைத் தம்பி அமரன் தெளிவுபடுத்தினால் நல்லது.
அக்டோபர் இரண்டாம் தேதி பண்பலையைச் செவிமடுக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்!

Keelai Naadaan
30-09-2012, 02:26 PM
மன்றத்தின் புதிய முயற்சி ஆச்சர்யத்தையும், ஆனந்தத்தையும் தருகிறது.

மன்ற நிர்வாகத்தினரின் புதிய முயற்சிகளுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்.

என்னாலும் பங்களிக்க முடியுமென்றால் இயன்றதை செய்ய விரும்புகிறேன்.

அமரன்
30-09-2012, 02:53 PM
கலையக்கா.

உடன் உழைக்க முன் வந்தமை உற்சாகம் அளிக்கிறது.


மக்கள் தருகின்ற கருத்துரைகளின் அடிப்படையில் பண்பலை வடிவம் பெறும்..

அக்டோபர் இரண்டில் அடுத்த கட்ட நகர்வை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அமரன்
30-09-2012, 02:57 PM
கீழைநாடான்..

நிச்சயம் உங்கள் பங்களிப்பு பண்பலைக்கு அவசியம். அனைத்து மன்ற உறுப்பினரும் பண்பலைக் கலைஞர்கள்தான். சோதனை ஒலிபரப்பு முடிவடைந்ததும் திட்ட வரைபு ஒன்று முன் வைக்க காலம் கனியும் என்று நம்புகிறேன். அதிரடி வளர்ச்சியாக இல்லாமல் சீரான வரைபைக் காட்டும் வளர்ச்சியாக பண்பலைப் பாதை அமையும்.

ஆதி
01-10-2012, 04:21 AM
கலை அக்கா, கீழை நாடன் மறுமொழிகள் எல்லாம் மேலும் உற்சாகத்தை தருகின்றன*

உறவுகளே, நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் நிச்சயம் தேவை, இந்த பண்பலைத் தேரை இழுத்து செல்ல ஆளுக்கொரு கை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்

பண்பலை வெளியில் உங்கள் படைப்பு மயில்கள் ஒலிக்குரல் கொண்டு ஆடட்டும்

ஆதவா
01-10-2012, 06:17 AM
அடடே... இது மிகவும் உற்சாகம் தரும் செய்தி. நிர்வாக குழுவினரின் இப்புதிய முயற்சிக்கு எனது பங்களிப்பு நிச்சயம் உண்டு.

நாங்களும் பண்பலையில் ஒரு பகுதியினர் என்ற அறிவிப்பு கவர்ச்சிகரமாக இருக்கிறது. எல்லோரும் இன்னாட்டின் மந்திரிகள் என்பது போல நாமெல்லோரும் பண்பலையில் RJ வா?

பண்பலை கேட்க ஆவலாக இருக்கிறேன்..

அனுராகவன்
01-10-2012, 06:52 AM
நண்பர்களே எனக்கும் மகிழ்ச்சியே தருகிறது...
உங்கள் அரும் முயற்ச்சிக்கு எனது பாராட்டுக்கள் அமரன் அவர்களே..
எனது பங்களிப்பும் இதில் இடம் பெறும்..
நானும் சில இடங்களில் பங்குபெறுவேன்,....

ஆதி
01-10-2012, 06:59 AM
நன்றி அச்சலா அக்கா

நிச்சயமாக தங்களின் உதவி பண்பலைக்கு தேவை

jayanth
01-10-2012, 11:33 AM
"தமிழ் மன்றப் பண்பலை" கேட்கும்பொழுதே இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே..!!!

மன்ற நிர்வாகிகள் மற்றும் செயற்குழுவினருக்கு என் மனம் கனிந்த பாராட்டுக்கள்...!!!

அமரன்
01-10-2012, 08:46 PM
ஆர்வத்துடன் கருத்துரைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..

மன்றப் பண்பலையில் அனைத்து மன்ற உறுப்பினரும் பங்காளர்கள் என்பதை பறைசாற்றும் வண்ணம் கருத்துகள் வந்திருக்கிப்பது மகிழ்வைத் தருகிறது. அதே மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் அடுத்த கட்டத்தையும் அரிவிப்பதில் மகிழ்ச்சி.

அனைத்து உறுப்பினரும் பண்பலையின் பங்காளராக இருந்தாலும், அவர்களை ஒருங்கிணைத்து, தலைமை தாங்கிப் பண்பலையை நடத்திச் செல்ல ஒரு குழு அவசியம். அந்த வகையில் சிவா.ஜி, மதி, ஆதி ஆகிய மூவரையும் இணைத்து பண்பலை ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மன்ற உறவுகளை ஒருங்கிணைத்து பண்பலையை நடத்திச்செல்லும்.

பண்பலையின் வீச்சு பிரமாண்டமானதாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாரிடத்திலும் இருக்கும். அதை நோக்கிய பயணத்தின் துவக்கமே இன்று.. எளிமையாகத் துவங்கும் பண்பலை நிதானமாக நகர்ந்து ஆழக் கால் பதித்து, நிலையெடுத்த பின்பு முழு வீச்சில் தன் பாய்ச்சலைக் காட்டும் என்பதை உறுதிபட உரைக்கலாம். அது வரை மனங்களும் மன்றமும் சோர்ந்து போகாமல் இணைந்து செயல்படுவோம்.

இனி... பண்பலைக் குழு முழுவீச்சில் தன் வேலையைத் துவங்கும்.

சோதனை ஒலிபரப்பைக் கேட்க இந்த இணைப்பை கிளிக்குங்கள்.

http://www.tamilmantram.com/fm

விரைவில் மன்றத்திலிருந்தே கேட்கும் வசதியை உருவாக்க முயல்வோம்.

நன்றி.

இன்பக்கவி
02-10-2012, 05:38 AM
மன்றத்து உறவுகள் அனைவர்க்கும் வணக்கங்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இங்கு இணைவதில் மகிழ்ச்சி...
புதிய பண்பலைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்:icon_b::icon_b::icon_b::icon_b:
என்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சி செய்கிறேன்...

நன்றிகள்..

HEMA BALAJI
02-10-2012, 09:01 AM
ஆஹா!... மிகவும் நல்ல சேதி தான். ஆதி அவர்கள் மூலம் தனி மடலில் அறிந்து இங்கு வந்தேன். உங்கள் முயற்சியில் நம் மன்றமும் படைப்புகளும் மேலும் சிறக்கவும் மிளிரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மாலைக்ககாக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆதி
02-10-2012, 12:22 PM
இன்னும் 9 நமிடத்தில் பண்பலை ஒலிக்கும், கேட்க தயாராகுங்கள் மக்களே

http://tamilmantram.caster.fm

சுகந்தப்ரீதன்
02-10-2012, 01:09 PM
ஹைய்யா.. பாட்டுகேட்டுகிட்டே பதிவிடுறது... புதுவித அனுபவமாக இருக்கிறது... இனி எப்போதும் நம்மன்ற பண்பலை ஒலிக்கும் எனது அறையில்..!!:)

பண்பலை உருவாக்கத்தில் பாடுபட்ட பாடுபடபோகிற அனைத்து அன்பர்களுக்கும் நேயர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!!

இடைவெளியின்றி ஒலிக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உங்களோடு நாங்களும்..!!:icon_b:

HEMA BALAJI
02-10-2012, 01:35 PM
நீங்க பாட்டு கேட்டுகிட்டே பதிவிடுகிறீர்களா சுபி, நான் கத கேட்டுகிட்டே பதிவிடுறேன். வாழ்த்துக்கள் பண்பலையில் பங்குபெறும் பெறப்போகும் அனைத்து உறவுகளுக்கும் என் சார்பிலும்..அட இப்போ மறுமடி பாட்டு வந்துடுச்சே... எனக்குப் பிடித்த பாடல்கள். நல்ல செலக்ஷன். நேயர் விருப்பம் உண்டா?

கலையரசி
02-10-2012, 02:02 PM
சோதனை ஒலிபரப்பே அருமையாக இருக்கின்றது. துவங்கிக் கொஞ்ச நேரங்கழித்துத் தான் கேட்கத் துவங்கினேன். கருத்துள்ள பாடல்களின் தொகுப்பு சூப்பர்!
இன்பக்கவியின் கவிதை வாசிப்பின் போது echo அடித்துச் சரியாகப் புரியவில்லை. கீதத்தின் குழந்தைக்கான கதைகள் பகுதி நன்றாக இருந்தது. குழந்தைக்கதைகள் என்று மட்டும் போட்டார்கள். யார் பேசுவது என்று போடவில்லை. குரலை வைத்துக் கீதம் தான் என அடையாளம் கண்டு கொண்டேன்.
அதுபோல இளசு அண்ணாவின் கவிதையை வாசிப்பவர் யார் என்று போடவில்லை. கவிதையும் நன்றாயிருந்தது. மன்றத்தில் அதனைத் திரும்பவும் படிக்க வேண்டும்.
வாசிப்பவரின் பெயர்களைப் போட்டால் மன்ற உறவுகளின் குரல்களைக் கேட்க உதவியாயிருக்கும் என்பது என் கருத்து. இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே என் எண்ணத்தை குறிப்பறிந்தது போல் ஆதவாவின் பேச்சு துவங்கியது ஆதவா பண்பலையின் நோக்கத்தை அருமையாக எடுத்துரைத்தார். குரலும் தெளிவாக இருந்தது.
மொத்தத்தில் பண்பலையின் சோதனை ஒலிபரப்பு அருமையாக இருக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் முக்கியமாக ஆதிக்கும் நன்றி, நன்றி, நன்றி.

ஆதி
02-10-2012, 02:12 PM
தங்களின் கருத்துங்கள் மிக்க நன்றி, இதுதான் தேவை

நீங்கள் சொன்னது போல் யார் யார் பேசுகிறார்கள் என்று அறிமுக தரத்தான் முடிவு செய்திருந்தேன்

என் ஒலிவாங்கி சரியாக இல்லை

இன்று 7 கிமி அலைந்து காலில் கொப்புளம் வந்திடு ஒலிவாங்கி கிடைக்க வில்லை, என்ன ஊரோ இது

நாளைதான் அலுவலகம் போகும் போது வாங்கனும்

இன்பகவி ஒலிகோப்பில் இறைச்சலை நீக்காமல்விட்டுவிட்டேன்

ஒலிபரப்பும் போதுதான் உணர்ந்தேன்

அடுத்த ஒலிபரப்பில் கவனித்துக் கொள்கிறேன் அக்கா

ஆதி
02-10-2012, 03:31 PM
உறவுகளே யார் யார் பண்பலை கேட்டீங்க, குறைகளை சொல்லுங்க அடுத்தடுத்த ஒலிபரப்பில் சரி செய்ய முயலலாம்

கீதம்
02-10-2012, 10:06 PM
எங்களுக்கு இரவு நேரம் என்பதால் என்னால் முழுவதுமாய்க் கேட்கமுடியவில்லை. மறு ஒளிபரப்பு எப்போது ஆதி?

அன்புரசிகன்
03-10-2012, 12:26 AM
எங்களுக்கு இரவு நேரம் என்பதால் என்னால் முழுவதுமாய்க் கேட்கமுடியவில்லை. மறு ஒளிபரப்பு எப்போது ஆதி?
அதே...

M.Jagadeesan
03-10-2012, 12:55 AM
பண்பலை சோதனை ஒலிபரப்பைக் கேட்டேன். மிகவும் அற்புதமாக உள்ளது. மன்ற மக்களின் படைப்புகளை ஒலி வடிவில் கேட்க ஆவலாக உள்ளேன். இமாலய முயற்சி வெற்றி பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

jayanth
03-10-2012, 03:40 AM
பண்பலை சோதனை ஒலிபரப்பைக் கேட்டு பரவசம் அடைந்தேன். உழைத்த உள்ளங்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

jayanth
03-10-2012, 03:46 AM
உறவுகளே யார் யார் பண்பலை கேட்டீங்க, குறைகளை சொல்லுங்க அடுத்தடுத்த ஒலிபரப்பில் சரி செய்ய முயலலாம்

குறையா...???

அன்புரசிகன்
03-10-2012, 03:55 AM
குறையா...???
ஆமாம்...

வானொலியில கேட்க்க முடியல.. :D

நாஞ்சில் த.க.ஜெய்
03-10-2012, 04:14 AM
வாழ்த்துக்கள் மன்ற உறவுகளே நமது மன்றம் இன்னுமோர் படிகல் நோக்கி பயணிக்கும் இவ்வேளை என்னில் இனம் புரியாத உணர்வு இன்று ஒலிக்கும் இசையினை கெட்டுகொண்டே பதிவிடும் இன்னாள் ஒரு பொன்னாள்..ஒவ்வொரு முறையும் நான் இணையத்தில் உலவும் போது பாட்டினை கேட்டு கொண்டு உலவுவது என் பழக்கம் ..இன்று ஒரு மாறுதல் இன்று நம் மன்ற எப் எம்..ப்ணிபளு அதிகம் இருந்ததால் நான் நேற்றைய வாய்ப்பினை இழந்து விட்டேன்..வரும் ஞாயிறு கேட்டு விடுகிறேன் .. எனக்குள் தோன்றும் சில சிந்தனைகள்
1.தலையங்கம் எனும் தலைப்பில் தினமும் ஒரு தலைப்பில் நம்முள் தோன்றும் ஒரு தலைப்பில் தொகுத்து ஒலிபரப்பலாம்..
2.விவாத மேடை எனும் தலைப்பில் தோழர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு தலைப்பில் விவாதிக்கலாம்.
3.கவிதை தொகுப்பில் ஒவ்வரும் வடிக்கும் கவிதைகளை அவரவரர் உணர்வுகளின் தொகுப்பில் கவிஞர்களே வடிக்கலாம்..
4.தொழில்நுட்பம் எனும் தொகுப்பில் கேள்வி பதில் எனும் தொகுப்பில் தோன்றும் சந்தேகங்களின் தேர்வினை அளிக்கலாம்...
5.கதைகளை சிவா.ஜி அவர்கள் கூறுவது போல் நாடகம் மூலம் ஒலிபரப்புவது இன்னும் கனம் சேர்க்கும்...

jayanth
03-10-2012, 04:45 AM
ஆமாம்...

வானொலியில கேட்க்க முடியல.. :D

இப்பொழுதெல்லாம் வானொலியில் யார் கேட்கிறார்கள்...!!!


பொறுத்திருப்போம்...காலம் வரும்...!!!

jayanth
03-10-2012, 04:48 AM
இப்பொழுது இரண்டு பாடல்கள் ஒன்றின் மேல் ஒன்று (ஒவர் லாப்) இணைந்து வருகின்றதே...!!!

கலைவேந்தன்
03-10-2012, 04:51 AM
நண்பர்களே, எனது உடல்நிலை சற்று சரிந்ததாலும் தேர்வுகள் விடைத்தாட்கள் திருத்தும் பணிகள் நெருக்கியதாலும் அதிக நேரம் மன்றத்தில் இருக்க இயலாததால் இந்த அறிவிப்பை வாசித்தும் நேற்று சோதனை ஒலிபரப்பைக் கேட்க இயலவில்லை. வரும் சனி ஞாயிறுகளில் கேட்டு எனது கருத்துகளைப் பதிகின்றேன்.

தமிழ்மன்றப்பயணத்தின் அடுத்த மைல்கல்லுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளும் நல்லாசிகளும் என்றும் உரித்தாகட்டும்..!

அன்புரசிகன்
03-10-2012, 05:07 AM
இப்பொழுது இரண்டு பாடல்கள் ஒன்றின் மேல் ஒன்று (ஒவர் லாப்) இணைந்து வருகின்றதே...!!!

காலையிலிருந்து சற்றுமுன்னர்வரை கேட்டுக்கொண்டிருந்தேன். அநேகமாக உங்களது கணினியில் இரண்டு இணையஉலாவியில் திறந்துள்ளீர்களோ தெரியவில்லை...

அலைபேசியின் மின்கலம் இப்போது 5% இல் உள்ளது.

இப்போது Offair... :(

jayanth
03-10-2012, 05:28 AM
காலையிலிருந்து சற்றுமுன்னர்வரை கேட்டுக்கொண்டிருந்தேன். அநேகமாக உங்களது கணினியில் இரண்டு இணையஉலாவியில் திறந்துள்ளீர்களோ தெரியவில்லை...

அலைபேசியின் மின்கலம் இப்போது 5% இல் உள்ளது.

இப்போது Offair... :(

இல்லை அன்பு...

ஒரு உலாவியைத்தான் திறந்து வைத்திருந்தேன்...

அடுத்தமுறை வரும்போது பார்ப்போம்...!!!

அமரன்
03-10-2012, 05:38 AM
24 மணி நேர சேவையே எமது இலக்கு..

அனைத்து மன்ற மக்கள் அனவரும் எந்த நேரமும் கேட்கும்படியாக விரைவில் ஒலிபரப்ப முயற்சிப்போம்.

alaguraj
03-10-2012, 05:42 AM
தமிழ்மன்ற பண்பலை நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்கள்..

ஆதி
03-10-2012, 07:10 AM
உறவுகளே, அலுவலகம் கிளம்பும் போது கணினியை அணைத்துவிட்டு வந்துவிட்டேன்

மன்னிக்கவும் தடுங்கலுக்கு, மீண்டும் பண்பலை மாலை 7 மணியில் இருந்து ஒலிபரப்பாகும்

ரசிகரே, அவசர அவசரமாக கிளம்பியதால் தெரிவிக்க இயலவில்லை, மன்னிக்கனும்

ஜெயந்த் ஐயா, கடைசி ஐந்து நொடிகள் மட்டுமே ஃபேட் செய்திருக்கேன், அதனால் ஒரு பாடல் முடிகிற அடுத்த நொடி அடுத்தப்பாடல் துவங்கிவிடும், மற்றபடி ஓவர்லேப் ஆக வாய்ப்பு இல்லை

துண்டு விழுவது போல் இருந்ததால் இந்த ஃபேட் ஏற்பாடு

jayanth
03-10-2012, 07:27 AM
ஜெயந்த் ஐயா, கடைசி ஐந்து நொடிகள் மட்டுமே ஃபேட் செய்திருக்கேன், அதனால் ஒரு பாடல் முடிகிற அடுத்த நொடி அடுத்தப்பாடல் துவங்கிவிடும், மற்றபடி ஓவர்லேப் ஆக வாய்ப்பு இல்லை

துண்டு விழுவது போல் இருந்ததால் இந்த ஃபேட் ஏற்பாடு


இல்லைங்க ஆதி...

ஜானி படப் பாடல் ஒலிபரப்பாகும்போதே இது தொடங்கியது....

அடுத்தடுத்த பாடல்களுடன் கூடத் தொடர்ந்தது...

ஆதி
03-10-2012, 07:29 AM
கொஞ்சம் தெளிவாக பிரச்சனையை விளக்க முடியுமா ஐயா

A Thainis
03-10-2012, 07:52 AM
நேற்று முதல் பல முறை முயன்றேன் என்னால் கேட்க முடியவில்லை, எவ்வாறு செல்ல முடியும் எதை கிளிக் செய்ய வேண்டும், என மன்றத்தார் உதவினால் நன்று.

மதி
03-10-2012, 08:16 AM
தைனிஸ்.

மன்ற முகப்பிலேயே பண்பலை என்றிருக்கும்.
இல்லையேல் www.tamilmantram.com/fm என்ற இணையதள முகவரியும் உதவும்

jayanth
03-10-2012, 08:34 AM
கொஞ்சம் தெளிவாக பிரச்சனையை விளக்க முடியுமா ஐயா


ஒரே நேரத்தில் இரண்டு பாடல்கள் ஒலித்தது. இரண்டையுமே சரியாகக் கேட்க முடியவில்லை.

இதை விட்டு எப்படி தெளிவாக விளக்குவது என்று தெரியவில்லை ஆதி...

jayashankar
03-10-2012, 03:27 PM
ஆதி!!!

அடுத்த சோதனை ஒலிபரப்பு 2 நாட்களுக்குப் பிறகு என்று வருகின்றது. அப்படியென்றால் வரும் வெள்ளியிரவு ஒளிபரப்பாகுமா அல்லது சனி ஞாயிறுகளில் ஒலிபரப்பாகுமா...!!!

ஏதாவது சொல்லணும்னா முதல்ல கேட்கணுமில்லையா....!!!

எப்படியிருந்தாலும் மும்மூர்த்திகளின் கைவண்ணத்தில் கலக்கலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை...!!!

அதிக பங்களிப்பு அளிக்க முடியா நிலையில் இருந்தாலும், என் இதயம் கனிந்த வாழ்த்துகளும் வேண்டுதல்களும் நிச்சயம் இருக்கும்...!!

அப்புறம் சிவாவின் சிம்மக் குரலை கேட்க காத்திருக்கின்றோம்!!!

என்றென்றும் அன்புடன்,

ஜெயசங்கர்

ஆதி
03-10-2012, 03:31 PM
ஜெய் அண்ணா, தற்போது ஒலிபரப்பாகிறது கேளுங்கள்

jayashankar
03-10-2012, 03:52 PM
ஆதி!!

நீங்கள் கூறிய பிறகு மீண்டும் சென்று கேட்டேன்...

மிகவும் அருமை...!!!

சிவாவின் குரல் நன்றாக பதியப்பட்டு இருக்கின்றது..!!!

கோப்பின் பெயர் மூலமே பேசுவது யார் என்று தெரியும்படி செய்திருப்பது சிறப்பு...!!

அடிக்கடி பாப்அப் வருகின்றது ஒலிப்பது எது ஒலிக்கப்போவது எது என்று. இதுவும் சிறப்பு...

நான் விஎல்சி உபயோகிக்கின்றேன்... விஎல்சியுடன் ட்யூன் இன் செய்ய லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்..!!

கதை கவிதை நாடகம் பாட்டு போன்றவற்றைக் கேட்டுக் கொண்டே வேலை செய்யலாம் இனி....!!! :)

அருமை..

பாடுபட்ட இனிய நண்பர்களுக்கும் தமிழ்மன்றத்திற்கும் என் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்...!!!

அனுராகவன்
03-10-2012, 04:15 PM
நானும் கேட்டேன்..மிக அருமையான தொடக்கம்..இன்பகவியின் குரல் கேட்டேன்..
பாட்டும் அருமை...

A Thainis
03-10-2012, 07:53 PM
தமிழ்மன்ற பண்பலை கேட்டேன், இனிமை ரசித்தேன், கவிதை ஒன்று வாசித்து அதைப் பற்றிய விமர்சனமும் கேட்டேன், அருமை, வாழ்த்துக்கள்.

ஜானகி
04-10-2012, 01:53 AM
நேற்று தான் பண்பலை ஒலிபரப்பு கேட்டேன்.

கன்னி முயற்சி என்றே தெரியவில்லை...சிறப்பாக இருக்கிறது !

தொகுப்பாளர்களுக்கு பாராட்டுக்கள் !

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !

ஆதி
04-10-2012, 06:39 AM
நன்றி ஜெய் அண்ணா, நன்றி அச்சலா அக்கா, நன்றி தைனிஸ்

நன்றிங்க அம்மா

அம்மா, தினசரி தியானம் அப்புறம் பகவத் கீதை ஒலியாக்கம் செய்து அனுப்ப இயலுமா ?

தினமும் காலையில் மங்கலகரமா ஆன்மிகத்தோடு துவங்கிடுவோம்

A Thainis
05-10-2012, 06:40 PM
நேற்றிவு தமிழ்மன்ற பண்பலையில் இனிய பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன், இளைராஜாவின் இன்னிசையில் நான் நனைந்தேன், பணபலைக்கு வாழ்த்துக்கள்.

பூமகள்
06-10-2012, 03:06 AM
ஆஹா...!! அருமை. வியக்க வைக்கும் முயற்சி.. பண்பலையைத் தாமதமாகத் தான் கேட்டேன். இசைத் தேன் வழிந்தபடி இருந்தது. மகிழ்ச்சியளிக்கிறது.

இதற்காக உழைத்த, உழைக்கும் நிர்வாகத்தவருக்கும் மன்றத்தவருக்கும் பாராட்டுகள்..:icon_b::icon_b:

சிவா அண்ணா சொன்னது போல், நம் மன்றத்து கதைகளை நாடகமாக்கினால் அதில் பங்கேற்க நானும் தயாராக உள்ளேன்.. மேலும் கவிதை, கவிச்சமர்க்களம் என பலவற்றின் சிறந்த படைப்புகளைப் பற்றி விவாதிக்கும் களமாகவும் பண்பலையில் நிகழ்ச்சியைப் பயன்படுத்தலாம்.

ஒரு சிறு வேண்டுகோள்.. கைபேசியில் நம் மன்ற பண்பலையைக் கேட்க இயன்றால் மிக நல்லது... கணினியின் முன் இருக்கும் நேரம் குறைவு.. மேலும் பயணத்தில் இருக்கையிலும் கேட்டுக் கொண்டே செல்லலாமே...!! வருங்காலத்தில் வரம் கிடைக்குமென நம்புகிறேன்.


(இரு மாத விடுப்புக்கு பின் பங்கெடுக்க முயல்கிறேன்.. பொறுத்தருளுங்கள்..)

ஆதி
06-10-2012, 01:05 PM
தோழர்களே, மன்ற பண்பலை ஒலிபரப்பாகி கொண்டிருக்கிறது, கேட்டுவிட்டு தங்களின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும்

Keelai Naadaan
07-10-2012, 08:11 AM
நேற்று தான் பண்பலையில் சில பாடல்கள் கேட்டேன்.
அனைத்தும் இனிமையான பாடல்கள். சிறப்பாக இருக்கிறது
தொகுப்பாளர்களின் குரல் புதியவர் போல தெரியவில்லை.
பங்கு கொண்ட நண்பர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Hega
07-10-2012, 09:58 AM
சூப்பர்.

அருமையான் முயற்சி. என்னால் பண்பலையை கேட்க முடியல்லை. ஒலி வடிவில் கேட்கும் படியான் சூழ்னிலை தற்பொழுது இல்லை என்பதல நிச்சயம் ஒரு நாள் அமைதலாய் அமர்ந்து கேட்கிறேன்.

தொடரட்டும் அசத்தல்கள்.

த.ஜார்ஜ்
10-10-2012, 04:18 PM
அற்புதமாய் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ஒலிபரப்பைக் கேட்டேன். திருப்தியாய் இருக்கிறது.இதமான பாடலகள் [ நான் கேட்ட நேரம் இரவு ஒன்பது மணியை கடந்து..]அந்த நேரத்தில் கேட்பதற்கு ரம்மியமான தொகுப்பு.
அறிவிப்பு செய்த சுபியின் குரலில் ஒலிபரப்பு என்பது ஒளிபரப்பு என்பதாக உச்சரிக்கப்படுவதை திருத்திக் கொள்ள முடிந்தால் நலம்.

நாஞ்சில் த.க.ஜெய்
10-10-2012, 05:38 PM
பண்பலை நிகழ்ச்சியில் மன்ற உறவுகளின் குரல்களை கேட்கும் போது இனம் புரியாத உணர்ச்சி அதை சொல்ல வார்த்தைகளில்லை.கம்பீரமான குரல் ஒன்று குழந்தைகளுக்கான குரல் ஒன்று என்று பலவகை குரல்கள் ஆனால் இடைபட்ட நேரத்தில் கேட்டதால் இன்னாரென்று அறிய முடியவில்லை..ஜார்ஜ் அவர்கள் கூறுவது போல் குரல் உச்சரிப்பில் சில பிழைகள் இருப்பதாக படுகிறது ..உச்சத்தை எட்டட்டும் இந்த பண்பலை ஒலிபரப்பு...வாழ்த்துகள்..

ஓவியன்
20-10-2012, 07:00 AM
தமிழ் மன்றத்தின் அண்மைக்கால ஆனால் மிக முக்கியமான படிக்கல்லுக்கு என் தாமதமான வாழ்த்துகள்..!!!

கலக்குங்கள் நண்பர்களே...!!! :icon_b:

veruppuvijay
20-10-2012, 12:11 PM
மெதுவா மெதுவா.. ஒரு காதல் பாட்டு.... :medium-smiley-111:

பண்பலை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இனிமையாக இருக்கிறது.

veruppuvijay
20-10-2012, 01:18 PM
நினைவோ....................... ஒரு பறவை........................
விரிக்கும் அதன் சிறகை...............................

veruppuvijay
20-10-2012, 01:27 PM
செம்ம... சாங்....

ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்.....

பூங்குழலி
20-11-2016, 01:02 PM
செம்ம... சாங்....

ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்.....அழைத்து செல்லவில்லையே..


பண்பலை வரவில்லை என்பதை தான் அப்படி கூறீனேன்.. பண்பலைக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தால் நன்றாக இருக்குமே..

Mano60
21-11-2016, 08:23 AM
பண்பலை மட்டுமின்றி மன்றமே புத்துயிர் பெறவேண்டும்.