PDA

View Full Version : காதலிக்கு



M.Jagadeesan
29-09-2012, 12:40 PM
கண்ணே ! மணியே ! கற்கண்டுப் பெட்டகமே!
பொன்னே !கொடியே ! புனையா ஓவியமே !
அன்றலர்ந்த தாமரையே ! ஆயிரம் நிலவொளியே !
என்றெல்லாம் உன்னை வர்ணித்த வார்த்தைகள்
பொய்யாகிப் போனதெண்ணி பொருமுகிறேன் பொற்கொடியே !

உனக்குக்
கோவைப்பழ இதழென்று
கொக்கரித்து நானிருந்தேன்
ஆனால் அது
சாயம் விளைவித்த
மாயமென்று நானறிந்து
காயம் மிகக் கொண்டேன்
கண்மணியே நீ அறிவாய் !

உனக்கு
ஆறடிக் கூந்தல் என்று
அதிசயித்து நானிருந்தேன்
ஆனால் அது
வேரடி பிடிக்காத
வெறுங் கூந்தல் என்றறிந்து
வேதனை மிகக் கொண்டேன்
வெந்துயரம் நான் அடைந்தேன்.


உனக்குக்
காளையரைக் கவர்ந்து இழுக்கும்
காந்தக் கண்களென
கர்வம்மிகக் கொண்டிருந்தேன்
ஆனால் அது
காண்டாக்ட் லென்ஸ் பொருத்திய
கண்களென அறிந்தபோது
கவலை மிகக்கொண்டேன்.

உன்னுடைய
அங்கமெல்லாம் மின்னும்
ஆபரணங்கள் அத்தனையும்
தங்கமென எண்ணித்
தருக்கித் திரிந்தேன் நான்.
ஆனால் அது ஆடவரைக்
கவர்வதற்கு ஆயிழை நீ அணிந்த
கவரிங் நகை என்றறிந்து
கவலை மிகக் கொண்டேன்
கர்வ பங்கம் நானடைந்தேன்.

நீயும் பொய் ; உன்நினைவும் பொய்
நீ என்மீது கொண்ட
காதலும் பொய்யென்று கலங்குகிறேன்
நீர் உள்ளளவும்; நிலம் உள்ளளவும்
வான் உள்ளளவும்; வளி உள்ளளவும்
பார் உள்ளளவும்; உன்காதல்
அழியாது நிற்கின்ற
அக்மார்க் காதலென்றால்
நான் உனைச் சந்திப்பேன்

இல்லையெனில்
மன்னிப்பாய்! இதுவே நம்
கடைசி சந்திப்பு!

ஆதவா
29-09-2012, 12:56 PM
கவிதையிலுள்ள கருவுக்கு பெரும் மறூப்பு தெரிவிக்கிறேன்.

காதலியிடம் எந்தவொரு சிறு பிழையும் இல்லை. சொல்லப்போனால் காதலனிடம்தான் பிழை இருக்கிறது. சோ, இந்த காதல் ஜெயித்தால் பாவம் காதலி பெரும் வேதனைப்படுவாள்!!!

M.Jagadeesan
29-09-2012, 01:34 PM
உண்மையான காதலுக்குப் பொய்யான புறத்தோற்றப் புனைவுகள் தேவையில்லை என்பது என்கருத்து. எனவேதான் அப்படி கவிதை அமைத்தேன்.
ஆதவா அவர்களின் கருத்துக்கு நன்றி!

A Thainis
29-09-2012, 04:35 PM
இந்த கவிதையில் காதல் ரசனமும் நகைசுவையும் ததும்ப கண்டேன் ஆனால் காதலனின் எதிர்பார்ப்போம் அதிகமென கண்டேன். இது என்ன ஒரு தலைக் காதலா?

கீதம்
30-09-2012, 01:19 AM
ஒப்பனையால், இல்லாத அழகை இருப்பதாய்க் காட்டியது பெண்ணவள் பெரும்பிழை என்றால், அழகை மையமாய் வைத்து மிகைக் காதல் கொண்டது காளையின் தவறுமன்றோ? அழகு முகத்தில் அல்ல, அகத்தில் வேண்டுமென்பதை அவளும் அவனும் ஒருசேரப் புரிந்தபின் கொள்ளும் காதலே அழகுக் காதல், அக்மார்க் காதல்.

கவிதை வரிகளில் மிகுந்திருக்கும் ரசனை வெளிப்பாட்டை ரசித்தேன். ஒரு பெண்ணிடத்தில் அழகு கண்டு மயங்கி, ஏமாறிய ஒரு ஆடவனின் உள்ளக் குமுறலை அழகாய், சுவை மிளிரக் காட்டியக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

இடுமுடியை வேரடி பிடிக்காத வெறுங்கூந்தல் என்று குறிப்பிட்ட வரிகள் நகைக்கவும் வியக்கவும் வைத்தன.

jayanth
01-10-2012, 11:50 AM
"காயமே இது பொய்யடா...
வெறும் காற்றடித்த பையடா..."
என்றுதானே சொல்ல விழைந்தீர்கள் அய்யா...!!!
என்றாலும் காதலியை இப்படித் தரவிறக்கம் செய்ய எப்படி விழைந்தீர்கள்...!!!

இனியவள்
01-10-2012, 11:30 PM
அகத்தின் அழகு
அவள் கண்களில்
மிளிரும் - புறத்தின்
அழகோ அவள்
அலங்காரத்தில் ஒளிரும்..!