PDA

View Full Version : கலையாமல் கலைக்கும் கலை - காந்தியும் தோற்றுப்போனார்.



கலைவேந்தன்
28-09-2012, 02:55 AM
கலையாமல் கலைக்கும் கலை - தமிழ்மன்றக் கவிதைப்போட்டியில் இரண்டாமிடம் பெற்ற எனது கவிதை

http://www.mazhalaigal.com/images/issues/mgl0808/im0808-16_gandhi.jpg


கலையாமல்கலைக்கும்கலை.


ஆயிரம் பேருக்கு பிரியாணிப்பொட்டலமும்

ஆளுக்கு முன்னூறு ரூபாயும்..

ஐநூறு அடியாட்களும்

கொண்ட மாநாடுகள்..

மேடைகளில் வீர வசனங்கள்.

கோஷமிட சிறப்பான முன்னூறுபேர்

கூட்டம் சேர்க்க முன்னாள் நடிகைகள்

தலைமட்டும் பெரிதாக வால் போஸ்டர்கள்

கடை வசூல் செய்ய அடியாட்கள்

பதினெட்டு அடி உயர கட் அவுட்டுகள்

வழியெங்கும் கொடிக்கம்பங்கள்

வாழ்க ஒழிக ( தான் வாழ்க எதிரி ஒழிக) கோஷங்கள்

வழியெங்கும் தண்ணீர்ப்பந்தல்

அடிக்கடி தீக்குளிப்பு அறிவிப்புகள்

தேர்தல் நேரத்தில் தாராளமாய்த்’தண்ணீர்’..

முந்தின இரவு வெற்றிலை பாக்குடன்

ஐந்நூறு ரூபாய் நோட்டுகள்

கள்ள ஓட்டு போட கையாட்கள்

ஓட்டுப்பெட்டிகளைக் கைப்பற்றும் கிண்ணரர்கள்

இவை எதுவும் இல்லாததால்

மீண்டும் பிறந்துவந்த

மஹாத்மா காந்தி

தேர்தலில் தோற்றுப்போனார்..!

A Thainis
28-09-2012, 06:25 AM
கவி மன்றத்தில் கலையாமல் கலைக்கும் கண் என்ற தலைப்பில் கலக்கி வாகை சூடிய கலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆதவா
28-09-2012, 07:04 AM
கவி மன்றத்தில் கலையாமல் கலைக்கும் கண் என்ற தலைப்பில் கலக்கி வாகை சூடிய கலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தைனீஸ்... வாழ்த்துக்களை அங்கெ தெரிவித்துவிட்டு இங்கே விமர்சனம் போடலாமே... - ஒரு சின்ன வேண்டுகோள்.

கீதம்
28-09-2012, 08:07 AM
இன்றைய மோசமான அரசியல் சூழலில் தேசப்பிதாவும் தேர்தலில் தோற்றுப்போவாரென்னும் உண்மையை எடுத்துரைத்தக் கவிதை.

அரசியல்வாதிகளுக்கு நீதி, உண்மை, நேர்மை இவற்றைவிடவும் பணம், அதிகாரம், செல்வாக்கு இவையே ஆட்சியில் அமரப் போதுமானவையாய் உள்ளன.

தப்பித் தவறி நேர்மையாளர்கள் பதவிக்கு வந்தாலும் அவர்களும் விரைவில் விலைபேசப்பட்டுவிடுகிறார்கள். இந்நிலையில் கவிதையின் கரு முழுவதுமாய் ஆமோதிப்புக்குரியதே...

தலைப்புக்கும் கவிதைக்குமான பிணைப்பு எதுவென்று புரியாவிட்டாலும் கலையின் கவிதை மனம் கலைக்கும் கலையில் வெற்றி பெற்றுவிட்டது. பாராட்டுகள் கலைவேந்தன்.

Keelai Naadaan
29-09-2012, 01:24 PM
இன்றைய அரசியல் சூழ்நிலைஇயல்பான வரிகளில்....
நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

HEMA BALAJI
29-09-2012, 01:40 PM
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று காந்தி நொந்து கொண்டு போய்விடுவாரோ?!.. கவிதை நன்று கலை அண்ணா. பரிசுக்கும் வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
29-09-2012, 03:11 PM
தேர்தலில் காமராஜரைத் தோற்கடித்தார்கள் நம் மக்கள்; எனவே தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காந்திஜி தோற்பது அதிசயமல்ல! ஆனால் கொடுக்கப்பட்ட தலைப்பிலிருந்து கவிதை விலகி இருப்பதாகவே கருதுகிறேன். இரண்டாம் பரிசு வென்றமைக்காகப் பாராட்டுகிறேன்.

சுகந்தப்ரீதன்
01-10-2012, 03:01 PM
அறவழிவிட்டு புறவழி போகும் சமகால அரசியலை யதார்த்தத்துடன் கவிதையில் படம்பிடித்தவிதம் பாராட்டுக்குரியது..!!:)

வாழ்த்துக்கள் கலையண்ணா... பரிசுக்கும் படைப்புக்கும்..!!:icon_b:

கலைவேந்தன்
31-10-2012, 04:05 AM
பாராட்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...!

ந.க
01-11-2012, 03:00 PM
தேசப் பிதாவைத் தோற்கவைத்த
தேர்தல் நடை முறைகளைத்த்
தொகுத்த கவிப் பாங்கு மிக சிறப்பு- மனமார்ந்த வாழ்த்துக்கள்..

அனுராகவன்
16-11-2012, 03:09 PM
அருமை நண்பா....
மனமார்ந்த வாழ்த்துக்கள்..

nandagopal.d
19-11-2012, 04:42 PM
அருமையான பதிவு நண்பரே

கலைவேந்தன்
08-12-2012, 01:59 AM
ந கண்ணப்பு அச்சலா மற்றும் நந்தகோபால் ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி.