PDA

View Full Version : உனக்காகவென்று ஒரு கவிதை!

கும்பகோணத்துப்பிள்ளை
26-09-2012, 08:08 PM
உனக்காகவென்று ஒரு
கவிதையெழுத துடித்தேன்!
என் காதருகே வந்து என்னங்க!... எனறாய்
உன் உமிழ்நீரில் என் உயிர் மெய்யெல்லாம் உருமாறிபோயின!
உயிர் ஒட்டி உணர்வு மீண்டபொழுது…. மறுபடியும்
உனக்காகவென்று ஒரு
கவிதையெழுத துடித்தேன்!
என் தலை குழல்களினுடே தவழ்ந்த உன் விரல்களுக்கிடையே
தமிழ் நுால்களில் திருடிய வார்தைகலெல்லாம் தடுமாறிபோயின!
இன்னமும் உனக்கே உனக்கென்று
ஒரு கவிதையெழத துடிக்கிறேன்!

அமரன்
26-09-2012, 08:36 PM
நீங்கள்
கவிதை எழுதத் துடிக்கின்றீர்கள்,
கவிதை ஒன்று
உங்களை எழுதத் துடிப்பதை அறியாமல்..

எது எப்படியோ..
நீங்கள் எழுதத் துடிக்கும் கவிதையும் அழகுதான்.
"நீங்கள்" எழுதி முடித்த கவிதையும் அழகுதான்.

பாராட்டுகள் கும்பக்கோணத்தம்பி.

கும்பகோணத்துப்பிள்ளை
27-09-2012, 03:16 AM

என் உயிர் ஒட்டி உறவாடி
அவள் எடுத்த முத்துகள் மூன்று!
மயக்கம் மாறாமல் கேட்டேன்... மறுபடியும் மணந்துகொள்வோமாடீ மனைவியே!
தயங்காமல் சொன்னாள்... ஈராறு அகவைகள் போகட்டும் அறுபதிலே பார்க்கலாமென்றே!

jayanth
27-09-2012, 09:21 AM
எழுதிய கவிதை அருமை...!!!

எழுதத் துடித்த கவிதையை முடித்தீர்களா...???

jayanth
27-09-2012, 09:23 AM
என் உயிர் ஒட்டி உறவாடி
அவள் எடுத்த முத்துகள் மூன்று!
மயக்கம் மாறாமல் கேட்டேன்... மறுபடியும் மணந்துகொள்வோமாடீ மனைவியே!
தயங்காமல் சொன்னாள்... ஈராறு அகவைகள் போகட்டும் அறுபதிலே பார்க்கலாமென்றே!

இதுவும் அருமை...!!!

ravikrishnan
27-09-2012, 01:32 PM
வாழ்த்துகள்!!இன்னும் முயற்சிக்கவும், கவிதை அருமை,பாராட்டுகள்...

சுகந்தப்ரீதன்
27-09-2012, 01:36 PM
உனக்காக எல்லாம் உனக்காக...

அந்யோன்யமான காதல்/லின் கவிதை...:)

வாழ்த்துக்கள் கும்பகோணத்தாரே..!!:icon_b:

A Thainis
27-09-2012, 01:47 PM
உனக்கென்று ஒரு கவிதை உயிராய் துடித்து, உள்ளம் மகிழ்ந்தது வாசிப்பில் மலர்ந்தது.

கீதம்
27-09-2012, 01:52 PM
கவிதையைப் பற்றி ஒரு கவிதை எழுத விரும்பி எழுதியிருக்கும் கவிதை அருமை. அறுபதிலும் மாறாக்காதல் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அனுபவிக்கும் கவிதையுணர்வை வடித்திடவோ வார்த்தைகளில்லை. கவியும் கவிப்பின்னணியும் ரசனையான அழகு. பாராட்டுகள் கும்பகோணத்துப்பிள்ளை.

கும்பகோணத்துப்பிள்ளை
30-09-2012, 01:35 AM
வாய்விட்டு பாராட்டி
வலையிலிட்ட கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும்
என் மனமார்ந்த நன்றி!

கும்பகோணத்துப்பிள்ளை
04-12-2012, 03:23 PM
அத்தாணி மண்டபத்தில் அரசியென நீயிருந்திருந்தால் பெண்னே!
முத்தாரம்போல அந்தாதி கவிதைகள் ஓராயிரமேனும் உதிர்த்திருப்பேன் பெண்னே!
அத்தானின் இதயத்தில் நீயிருந்ததால் கண்ணே!
முத்தாக ஒரு கவிதையேனும் முழுதாக படைத்ததில்லை கண்ணே!
ஏகாந்தமாய் நானிருக்கும் பொழுதினிலே
எத்தணையோ வார்த்தைகள் என்னுள் எழுந்து வந்தபோதிலும்
அத்தணையும் அர்த்தமற்று விழுந்ததடி உன் கண்பார்வை கண்டபின்னே!
தட்டுத்தடுமாறி தமிழ்மண்றத்தில் தடவியெடுத்த வார்த்தைகூட
ஒட்டிக்கொண்டதடி மேலணன்னத்தில் உன்ஒரு தலையசைப்பில்!
நின்றேன் இருந்தேன் கிடந்தேன் நடந்தேன் உன் நினைப்பினிலே
இன்றும் வென்றேனில்லை வார்தைகூட்டி உணக்காகவென்று ஒரு கவிதை எழுதிட
இன்னமும் உனக்கே உனக்கென்று ஒரு கவிதையெழத துடிக்கிறேன்!

HEMA BALAJI
28-12-2012, 06:11 AM
கவிதைகள் அருமை.. ரசனையோடு படிக்கத் தந்தமைக்கு நன்றி.

கும்பகோணத்துப்பிள்ளை
29-12-2012, 04:59 PM
கவிதைகள் அருமை.. ரசனையோடு படிக்கத் தந்தமைக்கு நன்றி.

பாராட்டுக்கு நன்றி!

கலைவேந்தன்
30-12-2012, 01:05 AM
என் தலை குழல்களினுடே தவழ்ந்த உன் விரல்களுக்கிடையே
தமிழ் நுால்களில் திருடிய வார்தைகளெல்லாம் தடுமாறிபோயின!
இன்னமும் உனக்கே உனக்கென்று
ஒரு கவிதையெழத துடிக்கிறேன்!

இந்த வரிகளில் உங்கள் இணையின் பால் நீங்கள் கொண்ட காதலையும் அவர் உங்கள்மேல் கொண்டிருக்கும் பாசத்தையும் ஒருங்கே காட்டி நிற்கின்றன. மிகவும் லயித்தபின் எழுதப்பட்ட வரிகளாக இவை மின்னுகின்றன.

அத்தாணி மண்டபத்தில் அரசியென நீயிருந்திருந்தால் பெண்னே!
முத்தாரம்போல அந்தாதி கவிதைகள் ஓராயிரமேனும் உதிர்த்திருப்பேன் பெண்னே!
அத்தானின் இதயத்தில் நீயிருந்ததால் கண்ணே!
முத்தாக ஒரு கவிதையேனும் முழுதாக படைத்ததில்லை கண்ணே!

அத்தாணி மண்டபத்தில் அரசியாய் இருப்பதினும்
அத்தானுன் மனத்தவத்தில் ஆழ்ந்திருக்க விழைந்திடுவேன்
முத்தாக ஓர்கவிதை முடித்திருக்க விலையெனினும்
முத்தமொன்றில் உனைமுகர்ந்து முழுமையாய் வாழ்ந்திடுவேன்..!!

- இப்படித்தான் உங்கள் துணைவியாரின் கவிதை இருந்திருக்கும் பிள்ளை..!

அருமையான கவிதைகள் எழுதுகிறீர்கள் நண்பரே.. இது நாள் வரை என் பணிச்சூழலிலும் பணிப்பளுவிலும் உங்கள் கவிதைகளை ருசிக்காமல் இருந்ததை எண்ணி வருந்துகிறேன். வாழ்த்துகள். மேலும் மேலும் எழுதுங்கள் நண்பரே..

கும்பகோணத்துப்பிள்ளை
30-12-2012, 01:16 AM
இந்த வரிகளில் உங்கள் இணையின் பால் நீங்கள் கொண்ட காதலையும் அவர் உங்கள்மேல் கொண்டிருக்கும் பாசத்தையும் ஒருங்கே காட்டி நிற்கின்றன. மிகவும் லயித்தபின் எழுதப்பட்ட வரிகளாக இவை மின்னுகின்றன.

அத்தாணி மண்டபத்தில் அரசியாய் இருப்பதினும்
அத்தானுன் மனத்தவத்தில் ஆழ்ந்திருக்க விழைந்திடுவேன்
முத்தாக ஓர்கவிதை முடித்திருக்க விலையெனினும்
முத்தமொன்றில் உனைமுகர்ந்து முழுமையாய் வாழ்ந்திடுவேன்..!!

- இப்படித்தான் உங்கள் துணைவியாரின் கவிதை இருந்திருக்கும் பிள்ளை..!

அருமையான கவிதைகள் எழுதுகிறீர்கள் நண்பரே.. இது நாள் வரை என் பணிச்சூழலிலும் பணிப்பளுவிலும் உங்கள் கவிதைகளை ருசிக்காமல் இருந்ததை எண்ணி வருந்துகிறேன். வாழ்த்துகள். மேலும் மேலும் எழுதுங்கள் நண்பரே..

தங்கள் வரிகளால் உளம் மகிழும் பேறுபெற்றேன்! அன்பான நன்றி