PDA

View Full Version : கல்கியின் காதல்



கோபாலன்
26-09-2012, 07:54 PM
முதன்முதலாக உன்னைப் பார்த்த நொடி
வறுமையில் வாடும் வனாந்திரத்திற்கு
வசந்தத்தைக் கொண்டுவரும் புதுவெள்ளமாய்
என்மனதை வாரியெடுத்து உன்னுள் கரைத்தது.

முதன்முதலாக நீ பேசிய வார்த்தைகள்
மலைபோல் மிதக்கும் பெருங்கப்பலையும்
உடைத்து வீசும் சுழற்காற்றாய்
என்னை எடுத்து உன்னுள் வீசியது.

முதன்முதலாக நீ பார்த்த பார்வைகள்
ஏழுலகம் வென்று முடிசூடியவனையும்
காலனை எதிர்த்தால் வீழ்த்தும் கொலைவாளாய்
என்னைக் கொன்று நாமாய் ஒன்றிணைத்தது.

முதன்முதலாக நீ வெளிபடுத்திய நேசம்
சாதனைமேல் சாதனை படைத்தவனையும்
பெரிதாய் சிறப்பிக்கும் மணிமகுடமாய்
உன்னைத் தூக்கி எந்தன் தலையில்வைத்தது.

முதன்முதலாக நீ என்னை ஏற்றுக்கொண்டவேளை
வானவர்களின் வருகையையும் பொருட்படுத்தாமல்
ஏழையையும் ஏற்றுக்கொள்ளும் தியாகசிகரமாய்
எந்தன் உயிரை உன்னில் கரைத்தது.:)

இனியவள்
04-10-2012, 11:12 PM
அவளைக் கண்ட
நொடி என்னுள்
பாய்ந்தது
ஆனந்த வெள்ளம்..!

பேதயவள் என்னவள்
ஆன போது
உலகமே என்னுள்
ஆனது அடக்கம்..!

உந்தன் பார்வை
என்னுள் கலக்கையில்
ஈருடல் ஓருயிர்
ஆனோமே..!

வாழ்த்துக்கள் கோபாலன்..!

கோபாலன்
06-10-2012, 12:06 PM
பின்னூட்டத்திற்கு நன்றி "இனியவள்". ஒரு சிறிய பிழை . இருடல் என்பது ஈருடல் என்று இருக்க வேண்டும். :)

இனியவள்
06-10-2012, 03:17 PM
நன்றி கோபால்.. எழுத்துப் பிழைக்கு வருதுகிறேன்..

ஆதவா
07-10-2012, 06:45 AM
கவிதை நன்று.

அவளுடைய முதல் பார்வை, வார்த்தை, நேசம் என எல்லா முதல்களிலும் பொன்னியின் செல்வன் அத்தியாயத் தலைப்புகள்.. ஜோர்!

தொடர்ந்து எழுதுங்கள்!

கோபாலன்
08-10-2012, 12:05 PM
தங்களுடைய ஊக்க வரிகளுக்கு நன்றிகள் ஆதவன் .:)

சுகந்தப்ரீதன்
08-10-2012, 06:00 PM
கல்கியையும் காதலையும் இணைத்து பதுமையை பற்றி புதுமையுடன் எழுதிய புதின கவிக்கு எமது வாழ்த்துக்கள் கோபாலரே..!!:icon_b:

அமரன்
08-10-2012, 08:27 PM
இன்னொரு காதல் கவிதை.

சொன்ன விதமும் பொன்னியின் செல்வனைக் கோர்த்த பாங்கும் ரசிக்க வைக்கிறது.

இன்னும் எழுதுங்கள் கோபாலன்.

கோபாலன்
17-10-2012, 06:54 PM
சுகந்தப்ரீதன் மற்றும் அமரன் அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் . :)

HEMA BALAJI
19-10-2012, 07:00 AM
அட! ஆமாம்!. கல்கியின் காதல் என்ற தலைப்பைப் பார்த்து என்ன சம்மந்தம் என யோசித்துக் கொண்டே படித்தேன். வித்தியாசமான முயற்சி. நன்று. வாழ்த்துக்கள் கோபாலன்.

நாஞ்சில் த.க.ஜெய்
19-10-2012, 02:44 PM
பொன்னியின் செல்வனை கருத்திற்கொண்டு கல்கியின் காதல் கவிதை ..வாழ்த்துக்கள் கோபாலன் அவர்களே...

கோபாலன்
22-10-2012, 07:21 AM
பின்னூட்டமிட்டு வாழ்த்திய ஹேமா பாலாஜி மற்றும் நாஞ்சில் த.க.ஜெய் அவர்களுக்கு நன்றிகள். :)