PDA

View Full Version : குங்குமப் பூ சிவப்பழகு தருமா?



அமீனுதீன்
26-09-2012, 06:12 PM
குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாயிருக்கலாம் எனும் நம்பிக்கை பலரிடமுள்ளது. இது உண்மைதானா?

"குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் கொடுக்காது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.

மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும். கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்."எனக் குங்குமப் பூவின் பயன்பாட்டைக் கூறியவர் தொடர்ந்து சருமப் பராமரிப்புத் தொடர்பிலும் சில தகவல்களைக் குறிப்புக்களாகத் தந்தார்.

" நமது சருமத்தின் ஆரோக்கியத்துக்கு அதிகம் தேவைப் படுவது வைட்டமின் சி தான். வைட்டமின் சி கலந்த உணவு வகைகளை தினம் சாப்பிட்டு வந்தாலே சருமம் நல்ல பொலிவடையும். வெயிலில் சென்றாலும் சருமத்துக்கு பாதிப்பு ஏற்படாது. நெல்லிக்காய், தக்காளி, எலுமிச்சை, சாத்துகொடி, கொய்யா இவைகளில் வைட்டமின் சி அதிகம் உள்ளது".

மேலும் சில குறிப்புக்கள்:

சருமப் பொலிவுக்கு நெல்லிக்காய் பச்சடி மிகவும் நல்லது. உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்க்க கூடியது. ஒரு நாளைக்கு 500 மில்லி கிராம் நெல்லிக்காய் உடலில் சேரவேண்டும்.

முதல் நாள் இரவு சுமார் மூன்று பாதாம் பருப்பை ஊறவைத்து விட்டு, மறுநாள் காலை தோலுடன் மென்று சாப்பிட்டாலும் சருமம் பளிச் என்று இருக்கும்.

சருமப் பொலிவுக்கு நெல்லி, கொய்யா, எலுமிச்சை, தக்காளி, வெள்ளரிக்காய், கேரட், இளநீர் இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

நன்றி: சித்த மருத்துவர் அரவிந்த் ரங்கன், (4 தமிழ்மீடியா)

கீதம்
27-09-2012, 07:55 AM
குங்குமப்பூவால் குழந்தை நிறமாகப் பிறக்கும் என்பது தவறான நம்பிக்கை என்று முன்பே அறிந்துள்ளேன். அறியாதவரும் அறிய ஒரு நல்ல வாய்ப்பு. சருமப் பொலிவுக்கான கூடுதல் தகவல்களுக்கும் நன்றி அமீனுதீன்.

jayanth
27-09-2012, 08:42 AM
தகவல்களுக்கு நன்றி அமீனுதீன்...!!!

ravikrishnan
27-09-2012, 10:21 AM
தகவல் அருமை, நன்றி அமீனுதீன்.

A Thainis
04-10-2012, 03:51 PM
நல்ல தகவல், குங்குமபூ சிவப்பழகை தர வாய்ப்பு இல்லை ஆனால் சருமத்தை பளபளப்பாக இருக்க செய்யும், ரெத்தொட்டம் சீராக அமையும்.

Priya Kaneshalingam
03-11-2012, 06:23 PM
தகவல்களுக்கு நன்றி