PDA

View Full Version : நெய்தல்



ஆதி
25-09-2012, 02:54 PM
உன் கதுப்பை
தோள்களில் சாய்த்திருந்தாய்

உன் கன்னம் வருடி
உச்சந்தலை மோந்த பொழுதில்
நாணம் முகத்தில் விரவ*
மேலே விரித்த விழிகளால்
எனைப்பார்த்தவாறு
நெருக்கமானாய்

பொட்டற்ற உன் நெற்றியில்
முத்தப் பொட்டிட்ட தருணத்தில்
சின்ன இதழ்கள் மெல்ல நெகிழ்ந்து
சிந்திய தாபங்களை
கைகளில் ஏந்தி
உன்னை இறுக அணைத்துக் கொண்டேன்

மீண்டும் என் தோள்களில்
சாய்ந்து
கோலவிரல்களால் என் மேல்
கோலம் போட*
உன் பூமுகம் அள்ளி
என்ன என்றேன்

தீரா காதலின்
ஏக்க உணர்வெல்லாம்
குழைந்த மென்குரலில்
"எனக்கு உன் கூட*
எப்பவும் இருக்கனும்"
என்றாய்

அந்த வார்த்தைகளில்
மேலும் ததும்பி
மீதமின்றி வழிந்துவிட்ட
என் முழுமையையும் திரட்டி
உன் இதழ் குளத்தில்
பாய்ந்து மீனானேன்
கிரங்கிய உன் விழிகளில்
நெளிய துவங்கின*
வட்ட வட்ட அலைகள்

ravikrishnan
25-09-2012, 03:19 PM
ஆதி அண்ணா!!! இந்த கவிதை இரவில் எழுதியதுதானே.உங்கள் துணைவியுடன்...

மதி
25-09-2012, 03:23 PM
ஹாஹா...

காதல் ரசம் விழியில் வழிய
மோக வயப்பட்டவன்
மூழ்கினான்
அவள் இதழ்தனில்
முத்தெடுக்க..

நல்லாருக்கு ஆதியண்ணே..

ஆதவா
25-09-2012, 03:26 PM
ஆதி அண்ணா!!! இந்த கவிதை இரவில் எழுதியதுதானே.உங்கள் துணைவியுடன்...

சொல்லவேயில்ல?? :sprachlos020:

மதி
25-09-2012, 03:28 PM
அப்போ இணைவி ஓக்கேயா ஆதவ்ஸ்.

ஆதவா
25-09-2012, 03:39 PM
அப்போ இணைவி ஓக்கேயா ஆதவ்ஸ்.

Timing....!!

ravikrishnan
25-09-2012, 03:49 PM
Timing....!!
இதலாம் சொல்ல முடியுமா....ஆதி அவர்கள்தான்பதில் சொல்லலும்...:lachen001::lachen001:

A Thainis
25-09-2012, 06:22 PM
நெய்தல் கவி இன்பம் கொட்டி கிடக்கு, காதல் ரசனை அருவியாய் பெருக்கெடுத்து கொட்டுகிறது சிறப்பு ஆதி.

கீதம்
26-09-2012, 12:02 AM
கருப்பும் வெள்ளையுமாய்
விருப்பின் உடையணிந்து
மாட்சிமை மிகு திருச்சபையில்
பரிசுத்த வேதாகமம் சாட்சியாய்
காலமெல்லாம் உடனிருப்பதாய்
கைத்தலம் பற்றி ஆமோதித்து
சுற்றிவளைத்து சுந்தரவதனந்தன்னில்
சுற்றம் மறந்து சிறுமுத்தமிட்டு
பற்றியகொடியெனப் பாரந்தாங்கி
பாவையைச் சுமந்தேகும் காளையின் களிப்பை
கவியின் வரியில் கண்டேன் நானும்.
கனவுகள் யாவும் நனவாக
களிப்போடு வாழ்த்துகிறேன் நாளும்.

HEMA BALAJI
26-09-2012, 05:56 AM
ஆதி அண்ணா!!! இந்த கவிதை இரவில் எழுதியதுதானே.உங்கள் துணைவியுடன்...

அதானே சொல்லவேயில்லையே???.. இது ரொம்ப அக்கிரமம் ஆதி.. கவிதையில் காதல் ரசம், பிழிய பிழிய சொட்டுகிறது ஆதி. நன்று.

சுகந்தப்ரீதன்
26-09-2012, 04:53 PM
நெய்தல் திணையில் நெய்த கவிதை நெகிழவைக்கிறது ஆதியண்ணே..!!:)

மற்ற திணைகளை எதிர்நோக்கி ஆவலுடன் மன்றமக்கள்..?!:fragend005:

அமரன்
26-09-2012, 08:46 PM
நெய்தல்.

பிரிவைச் சொல்ல வலிமையான பின்புலம்
நெய்தல் நிலம்..
அதுவே இங்கே கவித்தலையாக..

பிரிந்து செல்லவேண்டிய இறுதிக் கணம்,
பிரியாத வரம் வேண்டி இருக்கும் தவம்.

இரண்டுக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தில்
புரண்டோடுவதென்னவோ காதலாறுதான்..!!!

கடலின் கரையிலிருந்து நதி பிறக்கும் அற்புதம்
காதலில் மட்டுமே சாத்தியம்!!

நீங்கள் செய்யும் நெய்தல் என்றுமே அற்புதம்தான் ஆதி.

கடலிருக்கு... அலையிருக்கு..
கால் நனைக்க ஆளிருக்கு..
மீனிருக்கு.. கருவாடிருக்கு..
முத்தும் இருக்கு..

கும்பகோணத்துப்பிள்ளை
28-09-2012, 04:44 PM
அந்த வார்த்தைகளில்
மேலும் ததும்பி
மீதமின்றி வழிந்துவிட்ட
என் முழுமையையும் திரட்டி
உன் இதழ் குளத்தில்
பாய்ந்து மீனானேன்


ஆதி
உணர்வுகளோடு மோதி
வைக்கவில்லை மீதி!
இன்பத்துபாலை சேதி
கவிதைக்குள் வைத்தார் சோதி!