PDA

View Full Version : விரக்தியின் விளிம்பில்...

கீதம்
25-09-2012, 09:07 AM
விரக்தியின் விளிம்பு நோக்கி விரையும்போதெல்லாம்
எனை நோக்கி வீசப்படுகிறது ஒரு பாசக்கயிறு.
விடுக்கப்படுகிறது ஒரு விநோத விளிப்பு!
மதியாமல் முன்னேறும் என் மனக்கயிற்றைக்
இழுத்துப் பிடித்துத் திணறடிக்கிறது ஒரு இறைஞ்சல்.
முரண்டும் திமிறியும் ஆக்ரோஷித்தும் ஆங்கரித்தும்
இளங்கன்றெனத் துள்ளியும் எனப் பலவாறாய் முயன்றும்
பலனற்றுத் துவண்டுவிழுமொரு பொழுதில்
கைவிரித்து தன் கட்டுப்பாடுகளைக் கழற்றிவிட்டு
கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்துக்கொண்டே
காணாமற்போகிறது வெறுமையின் கடைசித்தடமும்.

A Thainis
25-09-2012, 12:49 PM
விரக்தியின் விளிம்பு கவிதை உள்ள குமறல்களை அவற்றின் பாங்கிலே விவரித்து எழுதியது அழகு, விரக்தி படுத்தும்பாடு கொடுமை அது அந்நேரத்தில் எல்லாவிதமான உணர்வுகளையும் அள்ளி வீசும் ஆழ்மனதை அமுக்கி தொலைக்க பார்க்கும், சிறிது கவனம் இல்லையெனில் இனி நாம்யேது.

ஜானகி
25-09-2012, 01:30 PM
விரக்தியைத் துரத்தும் மந்திரம் தெரிந்தால்......பெரிய பாக்கியமே !

சுகந்தப்ரீதன்
25-09-2012, 02:30 PM
நெருக்கடிகளே நமக்கு நிறைய விசயங்களை கற்று தருகின்றன... சிலநேரம் ஞானத்தையும்.. பலநேரம் அஞ்ஞானத்தையும்..!!

விரக்தியின் விளிம்பில் நின்று விடுதலையை விரும்பும்/எதிர்நோக்கும் அந்த கணநேர மனபோராட்டங்களை உணர்த்தும் வரிகள் நன்று..!!:icon_b:

HEMA BALAJI
26-09-2012, 06:23 AM
விரக்தியையும் தொடரும் மனப்போராட்டத்தையும் மிக அழகாக வரிகளில் விரித்துள்ளீர்கள் கீதம். அருமை.

M.Jagadeesan
26-09-2012, 06:59 AM
விரக்திக்கும், பாசத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் , பாசம் வென்று விடுகிறது. பாசத்தின் முன்பு எல்லா உணர்வுகளும் தோற்றுத்தான் போகும். வித்தியாசமான சிந்தனைக்குப் பாராட்டுக்கள் கீதம்!

ந.க
30-10-2012, 07:32 AM
சொற்களினால் சூழ்ச்சி செய்து
பொழுதையும் மனதையும் போராட வைத்து
பாசம் சதி- சரி செய்து
வெறுமை விதியை விரட்டும் முடிவு பாராட்டுக்குரியது,
கவிஞர் அவர்களுக்கு கனமான பாராட்டுக்கள்.

கீதம்
30-10-2012, 08:12 AM
விரக்தியின் விளிம்பு கவிதை உள்ள குமறல்களை அவற்றின் பாங்கிலே விவரித்து எழுதியது அழகு, விரக்தி படுத்தும்பாடு கொடுமை அது அந்நேரத்தில் எல்லாவிதமான உணர்வுகளையும் அள்ளி வீசும் ஆழ்மனதை அமுக்கி தொலைக்க பார்க்கும், சிறிது கவனம் இல்லையெனில் இனி நாம்யேது.

அருமையான விமர்சனத்துக்கு நன்றி தைனிஸ்.

விரக்தியைத் துரத்தும் மந்திரம் தெரிந்தால்......பெரிய பாக்கியமே !

பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் தங்களுக்கு நன்றி ஜானகி அம்மா.

நெருக்கடிகளே நமக்கு நிறைய விசயங்களை கற்று தருகின்றன... சிலநேரம் ஞானத்தையும்.. பலநேரம் அஞ்ஞானத்தையும்..!!

விரக்தியின் விளிம்பில் நின்று விடுதலையை விரும்பும்/எதிர்நோக்கும் அந்த கணநேர மனபோராட்டங்களை உணர்த்தும் வரிகள் நன்று..!!:icon_b:

பின்னூட்டப் பாராட்டுக்கு நன்றி சுபி.

விரக்தியையும் தொடரும் மனப்போராட்டத்தையும் மிக அழகாக வரிகளில் விரித்துள்ளீர்கள் கீதம். அருமை.

ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி ஹேமா.

விரக்திக்கும், பாசத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் , பாசம் வென்று விடுகிறது. பாசத்தின் முன்பு எல்லா உணர்வுகளும் தோற்றுத்தான் போகும். வித்தியாசமான சிந்தனைக்குப் பாராட்டுக்கள் கீதம்!

தங்களுடைய பாராட்டுக்கு மிகவும் நன்றி ஐயா.

சொற்களினால் சூழ்ச்சி செய்து
பொழுதையும் மனதையும் போராட வைத்து
பாசம் சதி- சரி செய்து
வெறுமை விதியை விரட்டும் முடிவு பாராட்டுக்குரியது,
கவிஞர் அவர்களுக்கு கனமான பாராட்டுக்கள்.

தங்களுடைய ஊக்கம் நிறைப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி கண்ணப்பு அவர்களே.

நாஞ்சில் த.க.ஜெய்
05-11-2012, 05:23 PM
விரக்தியின் எல்லையினை தாண்டுமுன் இழுக்கும் பாசக்கயிறு கூறுகிறது இன்னும் உள்ளது வாழ்க்கை வாழ்வதற்கு ...வாழ்த்துக்கள் அக்கா ..

nandagopal.d
19-11-2012, 04:35 PM
வித விதமாய் விழைந்துள்ளது மனதின் நிலை
கவிதை அருமை நண்பரே