PDA

View Full Version : பூனை குட்டியானது



சுகந்தப்ரீதன்
24-09-2012, 06:38 PM
தொல்லையாய் நினைத்து
வீட்டிலிருந்த பூனையை
கோணியில் திணித்து
யாருக்கும் தெரியாமல்
ஊரின் எல்லையில் விட்டுவிட்டு
வீடு திரும்பிய வேளையில்
ஏதேச்சையாய் வீட்டுக்குள் வந்திருந்த
பூனைக்குட்டியை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு
செல்லமகள் செப்புகிறாள் மழலை மொழியில்....
”நம்பபூனை குட்டியாயிடுச்சிப்பா”

கீதம்
24-09-2012, 11:23 PM
குழந்தையின் பார்வையில் பூனை, குட்டியாகலாம். ஆனால் மனிதன் என்றுமே மனத்தளவிலும் குழந்தையாகிவிட முடியாது போலும். இல்லையென்றால் நம்ப பூனை என்று உரிமையோடு தன் குழந்தை கொஞ்சி விளையாடும் பூனையை தொல்லை என்று நினைத்துத் துரத்த மனம் இடந்தந்திருக்குமா?

அழகான நிகழ்வும் நிலையும். பாராட்டுகள் சுபி.

M.Jagadeesan
25-09-2012, 01:43 AM
நம் வீட்டில் ஒவ்வொருவரும், பூனையோ அல்லது நாயோ வளர்க்கவேண்டும். பிற உயிர்களை நேசிக்கின்ற மனப்பாங்கு குழைதைகளிடம் வளர அது உதவி செய்யும். கவிதையின் கரு மிகவும் நன்று!

சுகந்தப்ரீதன்
25-09-2012, 01:56 PM
குழந்தையின் பார்வையில் பூனை, குட்டியாகலாம். ஆனால் மனிதன் என்றுமே மனத்தளவிலும் குழந்தையாகிவிட முடியாது போலும். இல்லையென்றால் நம்ப பூனை என்று உரிமையோடு தன் குழந்தை கொஞ்சி விளையாடும் பூனையை தொல்லை என்று நினைத்துத் துரத்த மனம் இடந்தந்திருக்குமா?
அழகான நிகழ்வும் நிலையும். பாராட்டுகள் சுபி. ஒரு வரிமாற்றம் கவிதையின் வீச்சை எந்தளவுக்கு வேறுபடுத்திக் காட்டும் என்பதை கவிதையின் நாடிபிடித்த நளினத்தில் எமக்கு புலப்படுத்திய தங்களின் பின்னூட்ட ஆக்கத்திற்க்கு மிக்க நன்றியக்கா..!! இக்கவிதையில் நான்காம் வரி இரண்டாம் வரியாகும்போது இன்னொரு பரிமாணம் முழுமையாக வெளிப்படுவதை உணர முடிகிறது..!!

தொல்லையாய் நினைத்து
யாருக்கும் தெரியாமல்
வீட்டிலிருந்த பூனையை
கோணியில் திணித்து
ஊரின் எல்லையில் விட்டுவிட்டு
வீடு திரும்பிய வேளையில்
ஏதேச்சையாய் வீட்டுக்குள் வந்திருந்த
பூனைக்குட்டியை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு
செல்லமகள் செப்புகிறாள் மழலை மொழியில்....
”நம்பபூனை குட்டியாயிடுச்சிப்பா”


நம் வீட்டில் ஒவ்வொருவரும், பூனையோ அல்லது நாயோ வளர்க்கவேண்டும். பிற உயிர்களை நேசிக்கின்ற மனப்பாங்கு குழைதைகளிடம் வளர அது உதவி செய்யும். கவிதையின் கரு மிகவும் நன்று! மிகச்சரியான கருத்து ஐயா... முன்பு வீடுகளில் இயல்பாக இருந்த இவ்வளர்ப்புமுறை இப்போது அருகிபோய்விட்டது... அன்றாடம் தினசரிகளில் அதிகரித்துவரும் மாணவபருவ வன்முறை செய்திகளை காணுகையில் தங்களின்கூற்று முற்றிலும் ஏற்றுக்கொள்ளதக்க ஒன்றாக உள்ளது..!! பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா..!!

HEMA BALAJI
26-09-2012, 06:27 AM
தொல்லையாய் நினைத்து
வீட்டிலிருந்த பூனையை
கோணியில் திணித்து
யாருக்கும் தெரியாமல்
ஊரின் எல்லையில் விட்டுவிட்டு
வீடு திரும்பிய வேளையில்
ஏதேச்சையாய் வீட்டுக்குள் வந்திருந்த
பூனைக்குட்டியை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு
செல்லமகள் செப்புகிறாள் மழலை மொழியில்....
”நம்பபூனை குட்டியாயிடுச்சிப்பா”

அச்சோ!!! ச்சோ ச்வீட் என்று படித்தவுடனேயே மனதில் தோன்றவைத்த வரிகள். மிக அடர்ந்த மறைபொருள் தரும் மிக லேசான கவிதை. வாழ்த்துக்கள் சுபி.

A Thainis
26-09-2012, 01:11 PM
பெரியவர்கள் அறிவுபூர்வமாக செயல்படுகிறார்கள், ஆனால் பிள்ளைகளோ இதயபூர்வமாக செயல்படுகிறார்கள். நம் அன்பு தேவையை பொருத்து செயல்படுகிறது ஆனால் பிள்ளைகளின் அன்போ தேவையை கடந்து செயல்படுகிறது. குழந்தைகள் பாசம் கள்ளம் கபடமற்றது என்பதை இந்த கவிதை மிக சிறப்பாக தெளிவுபடுத்தி உள்ளது வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்.

aasaiajiith
30-09-2012, 12:24 PM
அடடா !
குட்டியானது பூனை மட்டும் அல்ல
நெகிழ்வினால் என் மனதும் ...

வாழ்த்துக்கள் !!

ந.க
13-11-2012, 04:38 PM
குழந்தை மனது பாரதி சொன்ன பூனைப் பாட்டைப் போல் - பேதம் அறியாதது. அழகாய், ஒரு சிறு துளியில் பெரும் கடலைச் சுவைப்பது போல், முழு உடலையும் பரிசோதிக்க எடுக்கப்பட்ட ஆய்வுக்குட்பட்ட இரத்தத்துளி போல்- 'நம்ம பூனை... நேசிக்கும் சிறுமனதை-அதன் பரிசுத்த மனதைச் சொன்ன பெரிய எண்ணப் பதிவு.

மஞ்சுபாஷிணி
13-11-2012, 06:42 PM
குழந்தையும் தெய்வமும் ஒன்று....

குழந்தையின் மனம் எத்தனை மனிதநேயத்துடன் இருக்கிறது....

மனிதன் கற்கவேண்டும் நிறைய நல்லவைகளை குழந்தையிடமிருந்து....

அருமையான கருத்து அமைந்த கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் சுகந்தப்ரீதன்...

செல்வா
14-11-2012, 09:52 AM
சட்டென்று ஒரு கலாப்ரியா ரேஞ்ச் கவிதை...
ஆழமான கருத்தைக் கொண்ட மிக மிக லேசானகவிதை..

அருமை சுபி.

கலைவேந்தன்
14-11-2012, 01:47 PM
சுனா பீனா கானா பினா பதிவுகள்தான் தருவாருன்னு நம்ம்ம்பி ஏமாந்துட்டேனே.. :)

இவ்வளவு கனமான கவிதையையும் கொடுப்பாருன்னு யாரும் சொல்லாம போயிட்டாகளே... :)


உண்மையில் இந்த கவிதையை வாசித்ததும் சட்டென்று என் மனதில் தோன்றிய ஒன்று என்ன என்றால் செல்ல நாய்க்குட்டி ஒன்று வளர்க்கவேண்டும் என என் குழந்தைகள் சிறுவயதில் அடம்பிடித்தபோது அவர்களை என்ன எல்லாமோ சொல்லி சமாளித்த நினைவுகள் தான்..

உண்மையில் உயிர்களிடத்து அன்பு வேணும்னு சொன்ன வள்ளலாரின் கருத்துகளைப் பின்பற்றுவது குழந்தைகள் தான். நாம் தான் பொருளாதார சமூக மற்றும் இன்னும் பலவிதமான சிக்கல்களை குழப்பிக்கொண்டு அவற்றைத் தடுத்து வருகிறோம்..

கவிதையில் வந்த குழந்தை எத்தனை இன்னொசண்ட்டாக தொலைந்து போன பூனையின் இழப்பை அனுசரிக்கிறது என்பதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் ஒன்று உள்ளது.

நாம் நமதென எண்னி இருந்த ஒன்றை இழந்து நிற்கும்போது அதனுள் நின்று வருந்தி நம்மை இழந்துவிடாமல் நம் மனதை நிறைமனதாக்கிக் கொண்டு வாழ்க்கையின் நிதர்சனத்தை அணுகவேண்டும் என்பதை அந்த குழந்தை எளிதாகக் கற்றுக்கொடுத்துவிட்டதே..

சிந்திக்க வைக்கும் அருமையான கவிதையை வழங்கியமைக்கு மனமுவந்த பாராட்டுகள் சுகந்திப்பிரியன்..

சுகந்தப்ரீதன்
15-11-2012, 01:25 PM
பின்னூட்டமிட்ட அன்பு உறவுகள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..!!:)


சிந்திக்க வைக்கும் அருமையான கவிதையை வழங்கியமைக்கு மனமுவந்த பாராட்டுகள் சுகந்திப்பிரியன்..வேந்தரே... ஏனிந்த கொலைவெறி..:) (இதுக்கு சுனா பீனாவே பரவாயில்லை..)