PDA

View Full Version : வானம் கண்டேன் வாழ்வினை கொண்டேன்



A Thainis
24-09-2012, 04:36 PM
உயர்வானம் கண்டேன் - என்
சிந்தனையை உயர்வென கொண்டேன்
விரிவானம் கண்டேன் - எல்லோர்யிடமும்
பழகும் தோழமை கொண்டேன்
தெளிவானம் கண்டேன் - வாழ்வின்
இலக்கினை தெளிவென கொண்டேன்
இருள்வானம் கண்டேன் - துன்பமும்
இணைந்ததுதான் வாழ்கை என்ற
எதார்த்தமும் கொண்டேன்
கருமேங்களை கிழித்திடும்
ஒளிவானம் கண்டேன் - முயற்சித்தால்
வெற்றியுண்டன புதிய நம்பிக்கை கொண்டேன்
வானம் கண்டேன் - என்றும்
மகிழுந்திடும் வாழ்வினை கொண்டேன்

சுகந்தப்ரீதன்
24-09-2012, 05:41 PM
வானத்தை போல மனம் படைச்ச மன்னவனோ தைனிஸ்...:icon_b:

வைரமுத்துவின் இவ்வரிகள் நினைவில்..:)
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதிதரும்

A Thainis
24-09-2012, 06:03 PM
வைரமுத்துவின் வரிகளை இங்கு மேற்கோள்காட்டி பின்னோட்டம் தந்த சுகந்தப்ரீதனுக்கு நன்றி

கீதம்
24-09-2012, 11:57 PM
நாளொரு கோலம், பொழுதொரு வண்ணம் காட்டும் வானத்தினின்று வாழும் முறையைக் கற்றுக்கொண்ட அழகை கவிநயம் கூட்டிக் காட்டிய வரிகள் அருமை. பாராட்டுகள் தைனிஸ்.

M.Jagadeesan
25-09-2012, 01:03 AM
வானத்தைக் கொண்டு வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கிய பாங்கு பாராட்டுதற்கு உரியது!

ஜானகி
25-09-2012, 01:24 AM
வானமே எல்லை....என்பார்கள். வானத்தையே ஆசானாக்கிவிட்டீர்கள்...நன்று !

A Thainis
25-09-2012, 12:43 PM
வானத்தைப் பற்றிய இந்த கவிதைக்கு இனிய வாழ்த்துக்கள் வழங்கிய கீதம், ஜெகதீசன் மற்றும் ஜானகி அவர்களுக்கு எனது நன்றிகள்

கோபாலன்
25-09-2012, 01:21 PM
நீங்கள் கண்ட வானம் எட்டிப்பிடிக்கும் தொடுவானமாக அமைய வாழ்த்துக்கள்.... மென்மேலும் எதிர்பார்ப்புகளுடன்....:)

jayanth
25-09-2012, 02:40 PM
வானம்....உயர்வு...!!!

A Thainis
25-09-2012, 06:24 PM
நன்றி கோபாலன் மற்றும் ஜெயந்த்.

HEMA BALAJI
26-09-2012, 06:21 AM
வானத்தையும் வாழ்க்கையையும் அழகாக ஒப்புமை செய்து கவி படைத்ததுக்கு தைனிஸ்கு ஒரு பெரிய ஓ...:icon_b:

A Thainis
26-09-2012, 01:37 PM
வானத்தையும் வாழ்க்கையையும் அழகாக ஒப்புமை செய்து கவி படைத்ததுக்கு தைனிஸ்கு ஒரு பெரிய ஓ...:icon_b:

உங்கள் பின்னூட்டமும் வானம்போல் விரிந்து ஹேமா.