PDA

View Full Version : யார் நீ

கோபாலன்
22-09-2012, 07:31 AM
யார் நீ

எல்லோரையும் முதலில் பார்க்கும்போது
வித்தியாசமாய் உணர்வேன் - ஆனால்
உன்னைப் பார்க்கையில் தோன்றவில்லை
நீ புதியவன் என்று !
எல்லோரிடமும் முதலில் பேசும்போது
தயக்கமாய் உணர்வேன் - ஆனால்
உன்னிடம் பேசும்போது தோன்றவில்லை
உன் பேச்சு புதிதென்று !!
எல்லோரையம் முதலில் பிரியும்போது
வருந்தி நோவேன் - ஆனால்
உன்னைப் பிரியும்போது தோன்றியது
நான் உயிருடன் இல்லையென்று !!!

சோம்பேறி

இறைவன் தான் எவ்வளவு சோம்பேறி
வரங்கள் கேட்குமுன்னே
வாரி வழங்கிவிட்டான் நண்பர்களாய் !

மழை

என்னவளின் கதிரில்
சூரியக்காதலனைக் காக்க
தான்கறுத்து தன்மேனி
கழுவுகிறாள் மேகக்காதலி !

vasikaran.g
23-09-2012, 06:00 AM
மூணும் நல்லா இருக்கு ..

A Thainis
23-09-2012, 08:37 AM
யார் நீ? உங்கள் உயிரானவளோ? கவிதையில் தெளிவு.

ஆதவா
23-09-2012, 09:43 AM
யார் நீ.

வருத்தம்தான்... மரணம் நினைவின் வலியை, வருத்தத்தைக் கூடத் தராமல் போகிறதோ??? சிந்திக்கிறேன் கோபாலன்!

சோம்பேறி

இதற்கு எதற்கு சோம்பேறி என்று தலைப்பு வைத்தீர்கள் என்று தெரியவில்லையே? வரங்களான நண்பர்களை முன்கூட்டியே இறைவன் கொடுத்துவிட்டால் ”முந்திரிக்கொட்டை” என்றுகூட தலைப்பு தந்திருக்கலாம். (முந்திரிக்கொட்டை மாதிரி முந்தாதேன்னு ஒரு பழமொழி இருக்கு)

மழை

சூரியன் - காதலன்
மேகம் - காதலி

என்னவளின் கதிர் - ? அது யாருங்க??

கற்பனை நன்றாக இருக்கிறது. ஆனால் குழப்பமாக கவிதை அமைந்துவிட்டது.

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்...

கோபாலன்
23-09-2012, 12:05 PM
மூணும் நல்லா இருக்கு ..

நன்றி வசிகரன்

யார் நீ? உங்கள் உயிரானவளோ? கவிதையில் தெளிவு.

பின்னூட்டத்திற்கு நன்றி தைனுஸ்... எல்லா நண்பர்களும் உயிரானவர்கள் தானே ....

யார் நீ.

வருத்தம்தான்... மரணம் நினைவின் வலியை, வருத்தத்தைக் கூடத் தராமல் போகிறதோ??? சிந்திக்கிறேன் கோபாலன்!

சோம்பேறி

இதற்கு எதற்கு சோம்பேறி என்று தலைப்பு வைத்தீர்கள் என்று தெரியவில்லையே? வரங்களான நண்பர்களை முன்கூட்டியே இறைவன் கொடுத்துவிட்டால் ”முந்திரிக்கொட்டை” என்றுகூட தலைப்பு தந்திருக்கலாம். (முந்திரிக்கொட்டை மாதிரி முந்தாதேன்னு ஒரு பழமொழி இருக்கு)

மழை

சூரியன் - காதலன்
மேகம் - காதலி

என்னவளின் கதிர் - ? அது யாருங்க??

கற்பனை நன்றாக இருக்கிறது. ஆனால் குழப்பமாக கவிதை அமைந்துவிட்டது.

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்...

நாம் பின்னே வரங்கள் கேட்போம்... அப்போது கொடுக்கவேண்டியிருக்கும் என்ற சோம்பேறித்தனத்தை காட்ட முயன்றேன்... ஏனெனில் நான் ஒரு சோம்பேறி...
முந்திரிக்கொட்டை என்பதே பொருத்தமானது

என்னவள் - என் காதலி ... என்னவளின் முகத்தில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிரில் சூரியன் கறுத்துவிடாமல் இருக்க அவனுடைய காதலி செய்யும் முயற்சியாக அது எழுதப்பட்டது... குழப்பம் இனிமேல் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறேன்... ஊக்கத்திற்கு நன்றிகள் பல...:)

கீதம்
23-09-2012, 11:33 PM
சோம்பேறிக்கடவுளை மிகவும் ரசித்தேன். தவஞ்செய்யும் காலம்வரைக் காத்திருக்க இயலாத கடவுள் நிச்சயம் சோம்பேறிதான். பசியில்லாத நேரத்தில், பரிமாறப்படும் உணவு அறுசுவை விருந்தென்றாலும் அதன் அருமை தெரியாமலேயே போய்விடுவது போல், தவமின்றிக் கிடைக்கும் வரங்களின் அருமையும் புரிந்துகொள்ளப்படாமலேயே போய்விடுகின்றன. நட்பின் அருமை புரியாமல் போய்விட்டால் வாழ்தல் அர்த்தமிழந்துவிடும். எனவே சோம்பேறிக் கடவுளின் செயல் கண்டிக்கத் தக்கதே... :)

காதலி கறுத்துவிடக்கூடாதென்று காதலன் குடைபிடிக்கும் காலம் போய், சூரியக்காதலனுக்குக் குடைபிடித்துக் கறுக்கும் மேகக்காதலி நல்ல ரசனை.

வாழ்த்துக்கள் கோபாலன். தொடர்ந்து எழுதுங்கள்.

ஆதவா
24-09-2012, 05:24 AM
நன்றி வசிகரன்

பின்னூட்டத்திற்கு நன்றி தைனுஸ்... எல்லா நண்பர்களும் உயிரானவர்கள் தானே ....

நாம் பின்னே வரங்கள் கேட்போம்... அப்போது கொடுக்கவேண்டியிருக்கும் என்ற சோம்பேறித்தனத்தை காட்ட முயன்றேன்... ஏனெனில் நான் ஒரு சோம்பேறி...
முந்திரிக்கொட்டை என்பதே பொருத்தமானது

என்னவள் - என் காதலி ... என்னவளின் முகத்தில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிரில் சூரியன் கறுத்துவிடாமல் இருக்க அவனுடைய காதலி செய்யும் முயற்சியாக அது எழுதப்பட்டது... குழப்பம் இனிமேல் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறேன்... ஊக்கத்திற்கு நன்றிகள் பல...:)

நீங்கள் எப்பொழுது விமர்சனங்களைத் தாங்கிப் பழக கற்றூக் கொண்டீர்களோ, அப்போதே நல்ல நிலைக்கு வருவீர்கள்.. இது அடிக்கடி நம் மன்ற பெரியவர்கள் சொல்வது...

நீங்கள் நன்றாக வருவீர்கள் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது

வாழ்த்துக்கள்

நாஞ்சில் த.க.ஜெய்
24-09-2012, 01:04 PM
யார் நீ என்று என்னில் தேடுகிறேன் என்னை இன்றும் பதிலில்லை..கவிதை நடை இன்னும் மேம்பட்டால் நன்றாக இருக்கும்...

அவசர உலகில் சோம்பேறி கடவுளின் படைப்பு அவசியந்தான்..கவிதை நன்று..

மேக காதலியின் கண்ணில் துளிர்த்ததோ இந்த மழை...கவிதை நன்று..

கோபாலன்
24-09-2012, 03:29 PM
யார் நீ என்று என்னில் தேடுகிறேன் என்னை இன்றும் பதிலில்லை..கவிதை நடை இன்னும் மேம்பட்டால் நன்றாக இருக்கும்...

அவசர உலகில் சோம்பேறி கடவுளின் படைப்பு அவசியந்தான்..கவிதை நன்று..

மேக காதலியின் கண்ணில் துளிர்த்ததோ இந்த மழை...கவிதை நன்று..

கவிதை நடையை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறேன்.
பின்னூட்டத்திற்கு நன்றிகள்

வாழ்த்திய ஆதவா அவர்களுக்கும், கீதம் அவர்களுக்கும் நன்றிகள் :):)

HEMA BALAJI
29-09-2012, 01:37 PM
மூன்றுமுமே நன்றாக இருந்தது. அதிலும் மேகம் கவிதை வித்தியாசம். வாழ்த்துக்கள்.

ந.க
29-10-2012, 10:26 PM
மேகமான காதலிக்கு(சூரியனுக்கு) தன்னை கொடுக்கிறாள் , கம்பராமாயணத்தில் ஒரு காட்சி சடாயுவைச் சிறகால் போர்த்து....
இங்கே அருமையான கற்பனை,
என் காதலி கதிர்க்கிறாள்
அவள் சூரியனைச் சுட்டெரிக்கும் பார்வையினள்,

அதோ சூரியனைக் காக்கவென திரள்கிறது மேகக் கூட்டம்,
என் காதலி சுட்டெரிப்பவள்-

சூரியா உன் காதலியோ
கருப்பாகி
தன் மேனி கருக்கி( கார் மேகம்)
தருகிறாள் தன்னை உன்னைக் காக்க...

சூரியா விண்ணில் சுடர் உனக்கு
மண்ணில் உன்னைச் சுடும் சுடர் எனக்கு.....

நீ மறைந்து போ முகிலில்..
நான் அந்த இருளில் மறைந்து போகின்றேன்
அவளில்.........

நீண்டு கொண்டே போகும் .........அருமை...........