PDA

View Full Version : வெளிச்சத்தில்...

HEMA BALAJI
22-09-2012, 06:54 AM
http://4.bp.blogspot.com/-vLKP2vIMb1A/T93si6PBI7I/AAAAAAAAAtY/Md6Hwvn61sA/s1600/drm.jpg

ஒவ்வொரு இரவிலும்
இமைகள் சேரும் நேரங்களில்
உனைப்பற்றிய நிறைய நினைவுகள்
மெல்லிய இறகுகளாய்
என் கனவுகளை வருடிச் செல்லும்

என் வருகைக்காக பேனா முனை கடித்து
நீ காத்திருக்கும் தருணங்களும்
கண்டவுடன் பின்னிக் கொள்ளும்
உன் விரல்களின் அழுத்தங்களும்
வார்த்தைகள் உதிர்த்துவிட்டு
உதடுகள் பேசிய பாஷைகளும்
பிரிகையில் உன் கண்களில்
கண்ட தவிப்புகளும்

அத்தனையும் ஸ்பஷ்டமாக
இமைகள் மூடிய என் கனவின்
இருட்டுகளில் இமைக்க மறந்து
கண்டு களித்தேன்

எத்தனை எத்தனித்தும் கடைசிவரை
வெளிச்சத்தில் கண்ட உன் முகம் மட்டும்
நினைவுகளில் பதியவே இல்லை

கோபாலன்
22-09-2012, 07:37 AM
http://4.bp.blogspot.com/-vLKP2vIMb1A/T93si6PBI7I/AAAAAAAAAtY/Md6Hwvn61sA/s1600/drm.jpg

எத்தனை எத்தனித்தும் கடைசிவரை
வெளிச்சத்தில் கண்ட உன் முகம் மட்டும்
நினைவுகளில் பதியவே இல்லை

உங்கள் கவிதை என் நினைவுகளில் நன்றாகவே பதிந்துவிட்டது ... நல்ல கவிதை

ஸ்பஷ்டமாக என்பதற்கு எனக்கு பொருள் விளங்கவில்லை. வார்த்தையின் அர்த்தம் கூறினால் தெரிந்துகொள்வேன்.

HEMA BALAJI
22-09-2012, 07:42 AM
பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன்... ஸ்பஷ்டமாக என்றால் தெளிவாக என்று பொருள். இங்கே மிகத் தெளிவாக எனும் அர்த்தத்தில் இவ் வடமொழி வார்த்தையை பிரயோகித்துவிட்டேன். எழுதும் போது இதை உபயோகப் படுத்திவிட்டதில் மீண்டும் மாற்றவில்லை.

கீதம்
23-09-2012, 11:47 PM
அகஞ்சார்ந்த அவ(ள)னது செய்கைகளால் பின்னிய வலையில்

ஆத்மார்த்தமாய் சிக்கிக்கொண்டது அவ(ள)னது மனம்.

இனி முகஞ்சார்ந்து வாழும் முனைப்புகள் எதற்கு?

அழகிய கவிதை. பாராட்டுகள் ஹேமா.

கும்பகோணத்துப்பிள்ளை
24-09-2012, 07:04 AM
“அத்தனையும் ஸ்பஷ்டமாக
இமைகள் மூடிய என் கனவின்
இருட்டுகளில் இமைக்க மறந்து
கண்டு களித்தேன்”

ஆகா! பாராட்டுகள்

அனுபவங்களை அசை போடும்போதுதான்
ஆயிரம் அர்த்தங்கள் பெருகும்
இக்கணம் அனுபவங்களை,
என் எதிர்கால ஞாபகங்களை
சேகரித்துகொண்டிருக்கின்றேன்
அப்புறம் அசைபோடுவதற்கென்றே!

கும்பகோணத்துப்பிள்ளை
24-09-2012, 07:06 AM
பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன்... ஸ்பஷ்டமாக என்றால் தெளிவாக என்று பொருள். இங்கே மிகத் தெளிவாக எனும் அர்த்தத்தில் இவ் வடமொழி வார்த்தையை பிரயோகித்துவிட்டேன். எழுதும் போது இதை உபயோகப் படுத்திவிட்டதில் மீண்டும் மாற்றவில்லை.

பிரயோகித்துவிட்டேன்!?

HEMA BALAJI
24-09-2012, 09:08 AM
அகஞ்சார்ந்த அவ(ள)னது செய்கைகளால் பின்னிய வலையில்

ஆத்மார்த்தமாய் சிக்கிக்கொண்டது அவ(ள)னது மனம்.

இனி முகஞ்சார்ந்து வாழும் முனைப்புகள் எதற்கு?

அழகிய கவிதை. பாராட்டுகள் ஹேமா.

நன்றி கீதம்..

HEMA BALAJI
24-09-2012, 09:09 AM
“அத்தனையும் ஸ்பஷ்டமாக
இமைகள் மூடிய என் கனவின்
இருட்டுகளில் இமைக்க மறந்து
கண்டு களித்தேன்”

ஆகா! பாராட்டுகள்

அனுபவங்களை அசை போடும்போதுதான்
ஆயிரம் அர்த்தங்கள் பெருகும்
இக்கணம் அனுபவங்களை,
என் எதிர்கால ஞாபகங்களை
சேகரித்துகொண்டிருக்கின்றேன்
அப்புறம் அசைபோடுவதற்கென்றே!

நன்றி பிள்ளை...

HEMA BALAJI
24-09-2012, 09:12 AM
பிரயோகித்துவிட்டேன்!?

:fragend005:

சுகந்தப்ரீதன்
24-09-2012, 06:15 PM
கறுப்பு வெள்ளை
நினைவுகளில்
வண்ணக் கனவுகள்
வர்ணமிழந்து போகின்றன..!!:)

வெளிச்சம் பரவட்டும்.. உள்ளும் புறமும்..:icon_b:

A Thainis
24-09-2012, 06:17 PM
அழகு கவிதை இனிய சொற்கள் வாழ்த்துக்கள் ஹேமா

HEMA BALAJI
26-09-2012, 06:16 AM
கறுப்பு வெள்ளை
நினைவுகளில்
வண்ணக் கனவுகள்
வர்ணமிழந்து போகின்றன..!!:)

வெளிச்சம் பரவட்டும்.. உள்ளும் புறமும்..:icon_b:

நன்றி சுகந்தப்ரீதன்.

HEMA BALAJI
26-09-2012, 06:17 AM
அழகு கவிதை இனிய சொற்கள் வாழ்த்துக்கள் ஹேமா
வாழ்த்துக்களுக்கு நன்றி தைனிஸ்.