PDA

View Full Version : கடவுள்!



PUTHUVAI PRABA
21-09-2012, 11:09 PM
நாற்பத்தெட்டு நாள்
விரதமிருந்து

முடி வளர்த்து
மொட்டையடித்து

பயபக்தியோடு
பொங்கல் வைத்து

நூத்தியெட்டு
தேங்காய் உடைத்து

ஆயிரத்;தெட்டு முறை
மந்திரம் சொல்லி

வடைமாலைச் சாத்தி
நெய்விளக்கு ஏத்தி

காத்துக்கிடக்கிறது
ஒரு பெருங்கூட்டம்-
கடவுளை காண்பதற்காய்!

கண்களை மூடிக்கொண்டு
கடவுளை தேடிக்கொண்டிருக்கும் மனிதா!
ஒரு நிமிடம்
காது கொடுத்துக் கேள்!

தன்னை உருக்கி
உன்னை செய்த தாய்

உன்னை செதுக்க
தன்னை சிதைத்துக்கொண்ட தந்தை

மனக்கஷ்டத்திலிருக்கும்போது
ஊக்க வார்த்தைகளால்
உயிர் பாய்ச்சும்
உற்ற துணைவி

பணக்கஷ்டத்திலிருக்கும்போது
கொடுத்து உதவும்
பக்கத்து வீட்டுக்காரன்

உரிய நேரத்தில்
ஓடிவந்து உதவி செய்யும்
உறவினன்

தோல்வி தடுக்கி விழும்போது
தோள் கொடுக்கும் தோழன்

பேருந்து பயணத்தில்
தவறி விழுந்த பணப்பையை
பத்திரமாய் திருப்பித்தந்த
பின் சீட்டுப் பெண்

அவசரவேலையாய்
நடந்து சென்று கொண்டிருக்கும்போது
"லிப்ட்" கொடுத்த
முகம் தெரியா மனிதன்

இப்படி எண்ணற்றோர்
உருவில்தான்
உலவிக்கொண்டிருக்கிறார். . .
கடவுள்
உணர்வாயா மனிதா ?
-------------------------------
புதுவைப்பிரபா

M.Jagadeesan
22-09-2012, 01:24 AM
கடவுள் கோவிலில் மட்டுமில்லை; மனித வடிவில் எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்பதை எடுத்துக்காட்டிய புதுவை பிரபாவின் கவிதை பாராட்டுக்குரியது. எதுகை, மோனைகளில் சற்றே கவனம் செலுத்தினால் , " பொன்மலர் நாற்றமுடைத்து " என்பதுபோல கவிதை மிகவும் சிறப்பாக அமைந்துவிடும். புதிய சிந்தனைக்கு புதுவை பிரபா!

jayanth
22-09-2012, 02:33 AM
எதார்த்தம்...!!!

ஆதவா
22-09-2012, 02:40 AM
எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்

மாதா,
பிதா,
குரு,
தெய்வம்.

இதற்கு இரண்டுவகையான அர்த்தம்... அதாவது தெய்வத்தைவிடவும் குருவே முதன்மையானவர், அவரைவிடவும் தந்தை, அவரைவிடவும் அம்மா..... இன்னொன்று மாதா, பிதா, குரு, ஆகிய மூவரும்

தெய்வம்...

நான் வளர்ந்த பிறகு வேறொரு அர்த்தம் எடுத்துக் கொண்டேன். எவரொருவர் உனக்கு மாதாவாய், பிதாவாய் குருவாய் இருக்கிறார்களோ அவர்கள் தெய்வம் எனப்படுகிறார்கள்.. இந்த நான்கு வரிக்

கவிதை எத்தனை ஆழமாய் மனதினுள் இறங்குகிறது பார்த்தீர்களா?

உங்கள் கவிதையும் ”தெய்வாதீனமாக” அதையேத்தான் சொல்லுகிறது. கொஞ்சம் நீட்டி நெளித்து........

பின்னூட்டத்தில் ஜெகதீசன் ஐயா ஒன்று சொன்னார். “பொன்மலர் நாற்றமுடைத்து”....!! மிக சரியானது.

இந்த கட்டங்களும் தாண்டப்படவேண்டும்!!

கோபாலன்
22-09-2012, 06:08 AM
"வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதை" அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள் ...

PUTHUVAI PRABA
22-09-2012, 07:06 AM
பின்னூட்டத்தில் என்னை ஊக்கப்படுத்திய உள்ளங்களுக்கும் கவிதை வீதியில் கற்றுக்குட்டியாக திரியும் என்னை வழிநடத்த முன்வந்திருக்கும் மூத்தோர்களுக்கும் நன்றி!நன்றி!நன்றி!!!

PUTHUVAI PRABA
22-09-2012, 07:11 AM
புதிய சிந்தனைக்கு புதுவை பிரபா!

மதிப்பிற்குரிய ஜெகதீசன் ஐயா அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி

அமரன்
22-09-2012, 10:32 PM
நுண்ணுயிரிகளிலும் கடவுள் வாழ்கிறான்..
நுண்ணுதவிகளிலும் கடவுள் காணலாம்..

கடவுளை உணர வேண்டும் என்ற முடிவு சிறப்பு.:icon_b:

கடவுளர்களுடன் நாம் வாழ்கிறோம் எனும்போதே
கடவுளாக நாமும் வாழனும் என்பதும் வருகிறதே!:icon_b:

ஆக,
கடவுளை நமக்குள் காணவேண்டும் என்று உரு மாறுகிறதே..

கட உள்ளின் அர்த்தம் பொதிக்கபட்டு வடித்த கவிதை
போதிப்பது போல் அமைந்தது பெருங்குறையில்லை..

பாராட்டுகள் பிரபா.

PUTHUVAI PRABA
23-09-2012, 12:19 AM
அன்போடு பாராட்டியிருக்கும் அமரன் அவர்களுக்கு மிக்க நன்றி