PDA

View Full Version : தோழி



கோபாலன்
20-09-2012, 10:15 PM
உணர்வு பகரும் வான்முல்லையே
உனக்கு நிகரும் யாருமில்லையே !
வருத்தம் விளக்க வார்த்தை இல்லையடி
துயரம் சொல்ல தூரிகை எதற்கடி !!
வசந்தமாய் வந்தாய் தோழி - எல்லா
வளமும்பெற்று வாழ்வாய் நீடூழி !!!

மதி
21-09-2012, 12:51 AM
தோழிக்கொரு சமர்ப்பணமா. வாழட்டும் தோழமை.

kulakkottan
21-09-2012, 03:52 AM
உங்கள் கவியில் அர்த்தத்துக்கும் சந்தத்துக்கும் உள்ள தோழமையும் அழகோ அழகு !தொடரட்டும் !

jayanth
21-09-2012, 04:09 AM
தோழியின் பிரிவுணர்வோடு வாழ்த்து... அருமை....

கீதம்
21-09-2012, 04:24 AM
தோழிக்கான வாழ்த்துப்பாவில் தோழமையின் நெருக்கம் புரிகிறது. கவி வரிகள் அழகு. உங்களோடு நாங்களும் வாழ்த்துகிறோம்.

A Thainis
21-09-2012, 06:29 AM
தோழி கவிதை ஒரு இனிய தோழமை.

சுகந்தப்ரீதன்
21-09-2012, 06:32 AM
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாதாம்..:)

நலம்வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்... கோபாலரின் தோழிக்கும் தோழமைக்கும்..!!:icon_b: