PDA

View Full Version : சந்திப்பு



PUTHUVAI PRABA
20-09-2012, 06:03 PM
கண்ணே!
கடலளவு உன்னை
நேசிக்கிறேன்
காற்றோடு சேர்த்துன்னை
சுவாசிக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
உன்னிடம் பேசுவது
எப்படி என்று நான்
சிந்திக்கிறேன்

சரி...
நீ போய் கண்ணுறங்கு
கனவில் வந்துன்னை
சந்திக்கிறேன்.
-------------------------------
புதுவைப்பிரபா

A Thainis
20-09-2012, 06:09 PM
சந்திக்க அருமையான இடம் புதுவைபிரபா கவிதை அழகு, வாழ்த்துக்கள்.

PUTHUVAI PRABA
20-09-2012, 06:12 PM
நன்றி தைனிஸ் அவர்களே...

சுகந்தப்ரீதன்
21-09-2012, 06:16 AM
பிரபா... சிந்திச்சி சந்திச்சி... பின்... சந்திச்சி சிந்திச்சி...
அய்யோ... ஆளைவிடுங்க... எனக்கு தூக்கம் தூக்கமா வருது..:)

HEMA BALAJI
21-09-2012, 01:43 PM
சரிதான் பிரச்சனை இல்லாத இடமாத்தான் தேர்ந்தெடுத்து இருக்கீங்க...

ஆதவா
21-09-2012, 02:19 PM
கனவிலேயே எப்போதும் சந்தித்தால் எப்படி? நேரில் சந்திப்பதில்தானே சுவாரசியமும் சந்தோசமும் இருக்கும்?

கவிதைக்கு இன்னும் முயற்சி தேவை.
இன்னும் நன்கு முயன்றிருந்தால் கவிதை நன்றாக இருந்திருக்கும்..

தொடர்ந்து எழுதுங்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
21-09-2012, 02:42 PM
பிரச்சனை இல்லாத இடம் தான் ..இப்படியே இருந்தால் எல்லாம் கனவில் முடிந்துவிடும் ..இன்னும் மேம்படட்டும் கவிதை தொகுப்புகள்...வாழ்த்துக்கள்...

கலைவேந்தன்
21-09-2012, 04:24 PM
புதுவை பிரபா நல்ல கவிஞர். ஏன் இப்படி எழுதத்தொடங்கிவிட்டார் என்று வியக்கிறேன்.

PUTHUVAI PRABA
21-09-2012, 10:53 PM
கவிதைக்கு இன்னும் முயற்சி தேவை.
இன்னும் நன்கு முயன்றிருந்தால் கவிதை நன்றாக இருந்திருக்கும்..


புதுவை பிரபா நல்ல கவிஞர். ஏன் இப்படி எழுதத்தொடங்கிவிட்டார் என்று வியக்கிறேன்

உறவுகளின் உணர்வுகளை மதிக்கிறேன். நல்ல கவிதைகளுக்கு முயற்சிக்கிறேன். பொருத்தருள்க!