PDA

View Full Version : தமிழ்மன்றம் நடத்தும் கதைப்போட்டி 06

மதி
19-09-2012, 01:26 PM
தமிழ்மன்றம் நடத்தும் கதைப்போட்டி 06

அன்பு உறவுகளுக்கு,

தமிழ்மன்றம் தனது பத்தாவது ஆண்டில் வெற்றிநடை போடுவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. மன்ற உறவுகள் உற்சாகத்தோடு பங்குகொள்ள பல போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது கவிதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php/30136-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-23-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அடுத்தாக இதோ இப்போது கதைப்போட்டி.

மன்றத்தின் கதாசிரியர்கள் அனைவரும் வீறுகொண்டு தயாராகுங்கள். வெற்றி வாகை சூடுபவருக்கு தக்க சன்மானங்கள் வழங்கப்படும்.

விதிமுறைகள்:

1. போட்டிக்கு அனுப்பப்படும் கதைகள் "சிறுகதை"யாக இருத்தல் நலம்.
2. கதைக்காக கரு மற்றும் தலைப்பு கதாசிரியர் விருப்பத்திற்கு
3. கதைகள் வேறெங்கும் பதியப்படாததாக இருக்க வேண்டும். அப்படி இருப்பின் போட்டியிலிருந்து நீக்கப்படும்
4. கண்டிப்பாக ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்பலாம்.
5. மன்றத்தின் உறுப்பினர் மட்டுமே பங்கேற்க முடியும்.

கதை வந்து சேர வேண்டிய இறுதி நாள் - 20.10.2012

எப்போதும் போல் மன்ற உறவுகளே இப்போட்டிக்கும் நடுவர்கள். வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் வாகையாளர்களுக்கு பணப்பரிசோ அல்லது பெறுமதிமிக்க புத்தகங்களோ வழங்கப்படும்

போட்டிக்கான கதையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tmantrampottigal@gmail.com . MS-Word கோப்பாகவோ, pdf கோப்பாகவோ இணைத்து அனுப்புங்கள்.

கதைகளை அனுப்பும் போது, தமிழ்மன்றத்தின் கதைப்போட்டி 06 - (உங்கள் பெயர்) எனத் தலைப்பிட்டு அனுப்புங்கள்.

பரிசுகள்
முதற்பரிசு - இந்தியரூபாய்கள் 2500
இரண்டாம் பரிசு - இந்தியரூபாய்கள் 1500
மூன்றாம் பரிசு - இந்தியரூபாய்கள் 500

பரிசுகள் மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வில் வழங்கப்பட்டும்.

நாஞ்சில் த.க.ஜெய்
19-09-2012, 01:32 PM
ஆஹா ..களைகட்டும் மன்றம் அடுத்த போட்டி ..பிரமாதம்...தொடரட்டும் ...

கலைவேந்தன்
19-09-2012, 01:53 PM
கதைப்போட்டி அறிவிப்பு மகிழ்வைத்தருகிறது. எம்மாலும் இயலுமா என முயன்று பார்க்கிறோம். கலந்துகொள்ளவிருக்கும் அனைவருக்கும் பாராட்டுகள்..

jayanth
20-09-2012, 03:52 AM
அடுத்து ஒரு கதைப் போட்டியா...!!!
இம்முறை விடுவதில்லை...!!!
ஒரு கை பார்த்துவிடலாம்...!!!
கன்னிமுயற்ச்சியாக...ஹி...ஹி...ஹி...!!!

மதி
20-09-2012, 04:16 AM
ஜெய் வேடிக்கை மட்டும் பார்க்க கூடாது. கண்டிப்பா எழுதணும். :)

மதி
20-09-2012, 04:17 AM
ஜெயந்த் அண்ணா.. கன்னி முயற்சியோ கன்னன்முயற்சியோ, எல்லாத்துக்கும் ஒரு முதல் உண்டே. கண்டிப்பா எழுதுங்க.

jayanth
20-09-2012, 04:28 AM
ஜெயந்த் அண்ணா.. கன்னி முயற்சியோ கன்னன்முயற்சியோ, எல்லாத்துக்கும் ஒரு முதல் உண்டே. கண்டிப்பா எழுதுங்க.

கண்டிப்பாக எழுதுவேன் மதி...!!!

நாஞ்சில் த.க.ஜெய்
20-09-2012, 05:07 AM
ஜெய் வேடிக்கை மட்டும் பார்க்க கூடாது. கண்டிப்பா எழுதணும். :)

என்ன மதி இப்படி சொல்லிட்டீங்க வந்த நாள் முதல் இன்று வரை ஒரு ரசிகனாக படைப்புகளை ரசிச்சிகிட்டு இருக்கேன் ..அப்படியே வேடிக்கை பார்த்துவிட்டு ஒரு ஓட்டையும் போட்டு விட்டு நிம்மதியா இருக்கலாமுனு பார்த்தா என்னையும் பத்தவச்சுட்டீங்களே...என்னால முடியுமென்றால் நிச்சயம் எழுதுகிறேன்...

மதி
20-09-2012, 05:21 AM

இங்க எல்லோரும் வேடிக்கை பார்த்து ரசித்து பின்னூட்டம் போட்டு எழுத ஆரம்பிச்சவங்க தான். ரசிக்கும் உங்களால ரசிக்கும்படியா எழுதவும் முடியும். இப்போ ஏன் நீங்க அதுக்கு புள்ளையார்சுழி போடக்கூடாது.

கண்டிப்பா எழுதணும். இது என் ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..!

அமரன்
20-09-2012, 09:16 PM
களைகட்டட்டும் போட்டி

A Thainis
26-09-2012, 06:20 PM
கதைப் போட்டியால் எனக்கும் கதை எழுதம் ஆசை பிறந்துள்ளது, ஆனால் கதை பிறக்குமா என பார்போம்.

மதி
05-10-2012, 06:23 AM
நாட்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.

கதாசிரியர்களே.. சீக்கிரம் களத்தில் குதியுங்கள்..! கதைகளை படிக்க ஆவலாய் உள்ளோம்..!

கீதம்
10-10-2012, 09:44 AM
மன்றத்தின் கதையார்வலர்கள் அனைவரும் கதைப்போட்டிக்கு கதைகளை அனுப்பிவிட்டீர்களா? இன்னும் சிலநாட்கள்தான் உள்ளன. இதுவரை அனுப்பாதவர்கள் விரைந்து அனுப்புங்கள். புதிய, பழைய கதாசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

செல்வா
10-10-2012, 10:24 AM
கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!

சுகந்தப்ரீதன்
16-10-2012, 06:16 PM
எழுதி நீங்களே வாசிச்சிகிட்டு இருந்தா எப்படி..?!:)

இன்னும் நாலுநாள்தாங்க இருக்கு... சீக்கிரம் அனுப்புங்க.. நாலுபேரு வாசிக்கட்டும்..!!:icon_b:

M.Jagadeesan
17-10-2012, 01:01 AM
நாட்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.

கதாசிரியர்களே.. சீக்கிரம் களத்தில் குதியுங்கள்..! கதைகளை படிக்க ஆவலாய் உள்ளோம்..!

வயதான காலத்தில் எப்படி குதிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கலைவேந்தன்
17-10-2012, 02:36 AM
நான் எப்பவோ குதிச்சிட்டேன். ஆனா குதிச்சது :) போய்ச் சேர்ந்ததான்னு தகவல் வரவே இல்லை. வந்து சேர்ந்ததுன்னு ஒரு தகவல் கிடைச்சா நிம்மதியா இருக்குமுல்ல..? சில வருஷத்துக்கு முந்தி அப்படித்தான். ஒரு கவிதைப்போட்டிக்கு அனுப்பிவைச்சது போய் சேராம போட்டியில கலந்துக்க முடியாம போயிடுச்சு. போட்டிக்கு கதை கவிதை அனுப்பினவங்களுக்கு வந்து சேர்ந்ததுன்னு ஒரு பதில் அனுப்பினா ஒரு நிம்மதி இல்லையா..? நிர்வாகிங்க கவனிங்கப்பா. இல்லைன்னா மீண்டும் அனுப்பிடலாமுல்ல..?

seabird
17-10-2012, 08:26 AM
நான் இன்று தான் இந்த மன்றத்தில் ரெஜிஸ்டர் செய்தேன். கதை எழுத எனக்கு அனுமதி உள்ளதா? தயவு செய்து தெரிவியுங்கள்... MS -WORD இல் எத்தனை பக்கங்கள் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஏற்கனவே சில கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். எங்கே வெளியிடுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன். காதல் கதைகளுக்கு அனுமதி உள்ளதா தோழர்களே ?

கீதம்
17-10-2012, 09:20 AM

கதைப்போட்டியின் விதிகளுக்குட்பட்ட எந்தக் கதையையும் அனுப்பலாம். மன்றத்தின் உறுப்பினரான உங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ளும் உரிமை உண்டு. எனவே தயங்காமல் இறுதிநாளுக்குள் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு உங்கள் கதையை அனுப்பிவையுங்கள். வாழ்த்துக்கள்.

தமிழ்மன்றம் நடத்தும் கதைப்போட்டி 06

கதைப்போட்டி.

விதிமுறைகள்:

1. போட்டிக்கு அனுப்பப்படும் கதைகள் "சிறுகதை"யாக இருத்தல் நலம்.
2. கதைக்காக கரு மற்றும் தலைப்பு கதாசிரியர் விருப்பத்திற்கு
3. கதைகள் வேறெங்கும் பதியப்படாததாக இருக்க வேண்டும். அப்படி இருப்பின் போட்டியிலிருந்து நீக்கப்படும்
4. கண்டிப்பாக ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்பலாம்.
5. மன்றத்தின் உறுப்பினர் மட்டுமே பங்கேற்க முடியும்.

கதை வந்து சேர வேண்டிய இறுதி நாள் - 20.10.2012

போட்டிக்கான கதையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tmantrampottigal@gmail.com . MS-Word கோப்பாகவோ, pdf கோப்பாகவோ இணைத்து அனுப்புங்கள்.

கதைகளை அனுப்பும் போது, தமிழ்மன்றத்தின் கதைப்போட்டி 06 - (உங்கள் பெயர்) எனத் தலைப்பிட்டு அனுப்புங்கள்.

seabird
17-10-2012, 09:25 AM
கதைப்போட்டியின் விதிகளுக்குட்பட்ட எந்தக் கதையையும் அனுப்பலாம். மன்றத்தின் உறுப்பினரான உங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ளும் உரிமை உண்டு. எனவே தயங்காமல் இறுதிநாளுக்குள் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு உங்கள் கதையை அனுப்பிவையுங்கள். வாழ்த்துக்கள்.

தகவலுக்கு நன்றி!!

மதி
19-10-2012, 05:18 AM
http://images.cooltext.com/2809329.gif
http://images.cooltext.com/2809334.png

மதி
21-10-2012, 04:31 AM
ஆஹா...!!!

மன்றத்தில் இத்தனை கதாசிரியர்களா..? எதிர்பார்க்காத வண்ணம் இருபதிற்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பி திக்குமுக்காட செய்துவிட்டனர் மன்ற உறவுகள். :medium-smiley-080:

நேற்றுவரை வந்த கதைகள் பரிசீலிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் போட்டிக்கு விடப்படும். அதுவரை மன்ற உறவுகள் சற்று பொறுமை காக்க வேண்டுகிறோம். கதைகளை படிக்க உங்களுக்கு இருக்கும் அதே ஆர்வம் தான் எங்களுக்கும்.:080402cool_prv:

போட்டிக்கு கதைகளை அனுப்பிய அனைத்து உறவுகளுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் போட்டியில் வெற்றிபெற எங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். :080402gudl_prv:

நாஞ்சில் த.க.ஜெய்
21-10-2012, 06:32 PM
இருபது கதைகளா ! ஆஹா நல்ல வேட்டைதான்..சீக்கிரம் கதையை போடுங்கப்பு..ஆசையை இந்த ரசிகனால அடக்க முடியல..

மதி
22-10-2012, 01:00 AM
கொஞ்சம் பொறுக்கவும் ஜெய். கதைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சீக்கிரமே போட்டித் திரி தொடங்கப்படும்.:icon_b: