PDA

View Full Version : ஏதோ நினைவுகளில் ...



vasikaran.g
19-09-2012, 11:10 AM
ஆறு ஆண்டு காலம்
எனக்கு வனவாசம் !
அதில் ஜானவசமும்
இருந்தது !
சுகவாசமும் இருந்தது !

மோசமான காலமும்
இருந்தது !
மோதிரக்கையால் குட்டுபட்ட
படலமும் நடந்தது.

ஆழமான நட்பையும்
உணர்ந்தேன்!
அடுத்து கெடுக்கும்
கெடுத்தே வயிறு வளர்க்கும்
வினோத ஜந்துக்களையும்
பார்க்க நேர்ந்தது.

சொல்பேச்சு கேட்ட,
சமயத்தில் குறைநிறைகளை
தரமகுறையாமல் எடுத்து சொன்ன ,
உறவுகளை உணர்வுகளை
பெற்று இருந்தேன்
என் குழுவில் என்பது
பேரின்பம் தானே !

மனநிறைவோடு மீண்டும்
மீண்டும் சிந்திப்போம்
என்ற உள்ளுணர்வோடு ..

பழைய நல்ல நிகழ்விகளில் இன்னும் உலா வரும் ..

வசிகரன் ...

நான் ஆறு ஆண்டுகள் பணியாற்றி சமீபத்தில் விலகிய அலுவலகத்தின் நண்பர்களையும் என்னுடைய பழைய பொதுமேலாளர் (GM ) பற்றியது இந்த கவிதை

நாஞ்சில் த.க.ஜெய்
19-09-2012, 12:14 PM
நினைவுகள் வடிக்கும் பாக்கள் அருமை..

கலைவேந்தன்
19-09-2012, 02:05 PM
நல்ல நினைவலைகளை அலசிய கவிதை. பாராட்டுகள் வசீகரன்.

மதி
19-09-2012, 02:58 PM
அழகான நினைவுகள் வசீ. நான் விலகிய சமயத்தில் இதே உணர்வுகள் எனக்கும் தோன்றியதுண்டு.

A Thainis
19-09-2012, 09:22 PM
உங்கள் நினைவுகளால் இக்கவிதை இனிமை அடைகிறது. நினைவுகள் நம்மை தட்டி எழுப்புகின்றன, புதிய உற்சாகத்தை தருகின்றன.

vasikaran.g
23-09-2012, 05:50 AM
நன்றி ஜெய் ..
கடந்த நினைவுகள்
உடைந்த பொழுதுகள்
என்றுமே நெஞ்சை விட்டு
நீங்காதவை தான்.

vasikaran.g
23-09-2012, 05:51 AM
நன்றி கலைவேந்தன் அவர்களே ..

vasikaran.g
23-09-2012, 05:53 AM
உண்மை தான் மதி . இன்பமும் துன்பமும் கலந்த கலவை அது

vasikaran.g
23-09-2012, 05:54 AM
நன்றி தேனிஸ்.