PDA

View Full Version : சித்திரகுள்ளனும் மர்மயோகியும்-3



மதுரை மைந்தன்
18-09-2012, 10:09 AM
பின்னூட்டங்கள் இல்லாமல் முடங்கி கிடந்த இந்த கதையை மன்றத்தில் புறக்கணிக்கப்பட்டாலும் தொடர்வது என்று தொடர்கிறேன். கவிதைகளுக்கு மட்டுமே ஆதரவு தரும் இந்த மன்றத்தை தமிழ் கவிதை மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யலாம். இருந்தும் துணிவாக இந்த கதையை தொடர்கிறேன். சொந்த படைப்புகளுக்கு ஆதரவு இல்லை என்று அங்கலாய்ப்பவர்களாவது இந்த கதைக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்.

இந்த கதையின் முதல் இரண்டு பாகங்களை இத்திரியில் காணலாம்.
http://www.tamilmantram.com/vb/showthread.php/24603-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2?p=493204&viewfull=1#post493204



சித்திரகுள்ளனும் மர்மயோகியும் 3

http://img828.imageshack.us/img828/5805/13983f2f64623af647ec321.jpg (http://img828.imageshack.us/i/13983f2f64623af647ec321.jpg/)http://img339.imageshack.us/img339/6828/401s288009.jpg (http://img339.imageshack.us/i/401s288009.jpg/)

மேலே காணப்படும் புகைப்படங்களிலுள்ள சர்க்கஸ் கலைஞர்களை இந்த கதையில் குறிப்பிடவில்லை. ஆனால் அப்பு, மருது, சந்தியா போன்ற கதபாத்திரங்கள் இவர்களைப் போன்றவர்கள்.

பாகம் 3

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)

அப்புவும் மருதுவும் மர்ம யோகியின் ஆசிரமத்தை அடைந்தனர். மர்ம யோகியின் குடிலுக்கு வெளியே அவரை தரிசிக்க சிலர் நின்றிருந்ததால் அப்புவுக்கும் மருதுவுக்கும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. குடிலின் உள்ளே மர்ம யோகி ஒரு மான் தோலின் மீது அமர்ந்திருந்தார். அவர் எதிரே ஒருவன் பய பக்தியுடன் அமர்ந்திருந்தான்.

ஒருவன்: சாமி கும்பிடறேங்க. என் பெஞ்சாதி மங்களம்....

மர்ம யோகி: மங்களம் உண்டாகட்டும்.

ஒருவன்: மங்களம் உண்டாக மாட்டேங்கறா. எங்களுக்கு கல்யானம் ஆகி 10 வருசம் ஆயிடுச்சு. இன்னும் பிள்ளை குட்டி இல்லை. நீங்க தான் அருள் புரியணும்.

மர்ம யோகி சிரித்துக்கொண்டே: உன் மனவி கருத்தரிக்க நீ இறைவனிடம் வேண்டிக்கொள்.

ஒருவன்: அட போங்க சாமி, எங்க கஷ்டத்துக்கு பரிகாரம் சொல்லுவீங்கனு நான் உங்க ஆசிரமத்தை வலம் வந்திருக்கேன். நீங்க இப்படி சொல்றீங்க.

மர்ம யோகி சிரித்துக்கொண்டே: வலம் வர வேண்டியது நீ இல்லை. உன் மனைவியை இந்த 'சிசு தருவினி' ஒளஷதத்தை அருந்தி தினம் அரச மரத்தை வலம் வர்ச் சொல். உனக்கு மங்களம் உண்டாகும்.

ஒருவன்: ஆகட்டுங்க சாமி.

அவன் வெளியேறிய பின் சிலர் உள்ளே சென்று வந்தனர். இறுதியில் அப்புவும் மருதுவும் மர்ம யோகியின் முன்னால் சென்று கொண்டு வந்திருந்த பழங்களை சமர்ப்பித்து வணங்கினர்.

மர்ம யோகி: வாருங்கள் சிறுவர்களே. என்னை தேடி வந்ததின் நோக்கம் என்னவோ?

அப்பு: சாமி, நாங்க சிறுவர்கள் இல்லை. வாலிபர்கள். ஆனால் உருவத்தில் குள்ளமாக இருப்பதால் நாங்கள் சிறுவர்களாக காணப்படுகிறோம்.

அப்பு மர்ம யோகியிடம் தான் அனாதையாக குப்பை தொட்டியில் கிடந்ததையும் கருணையுள்ளம் படைத்த சர்க்கஸ் முதலாளி ஒருவர் அவனை எடுத்து வளர்த்து சர்க்கஸில் சேர்த்துவிட்டு வாழ்வு தந்ததை கூறினான். அந்த முதலாளி காலமான பின் அவரது புதல்வன் பாஸ்கரன் சர்க்கஸ் பொறுப்புகளை ஏற்று அவர்களை கொடுமை படுத்துவதையும் கூறினான்.

அப்பு சொன்னதை கேட்டு வருத்தமுற்ற மர்ம் யோகி: இதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

மருது: அப்புவை பாஸ்கரன் மாதிரி உயரமாகவும் வலிமையானவனாகவும் ஆக்கவேண்டும்.

மர்ம யோகி அப்புவிடம்: உன்னை வலிமையானவனாக மாற்ற முடியும். என்னுடைய 'சக்தி தருவினி' ஒளஷதத்தை அருந்தி வந்தால் நீ வலிமையாளனாக ஆக முடியும். ஆனால் உனது உயரத்தை மாற்ற இயலாது. கடவுளின் படைப்பை யாரால் மாற்ற முடியும்? கையின் 5 விரல்களும் ஒன்றாக இல்லையே. குட்டையான கட்டை விரல் தான் ஆள்காட்டி விரலைப்போலவோ மோதிர விரலைப்போலவோ நீளமாக* இல்லையே என்றால் நாம் என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு விரலுக்கும் அதன் பயன் உண்டு. நீங்கள் இருவரும் சர்க்கஸில் உங்கள் குட்டையான உயரத்தைக் கொண்டு பலரை மகிழ்விப்பதில்லையா? ஒன்றுக்கும் பயனில்லாத நெட்டயனை விட பலரும் நேசிக்கும் குள்ளனாக வாழ்வது மேல். அகத்திய முனி குள்ளராக இருந்தும் சாதிக்கவில்லையா?

மருது: சாமி, உங்களை நம்பி வந்திருக்கோம். அப்புவை பாஸ்கரன் மாதிரி உயரமானவனா மாற்றவே முடியாதா?

மர்ம யோகி சிரித்துக்கொண்டே: அப்புவை பாஸ்கரன் உயரத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றால், பாஸ்கரன் தன் கால்களை இழக்க செய்ய வேன்டியிருக்கும். காலிழந்த பாஸ்கரன் அப்புவின் உயரத்துக்கு சமமாக முடியும்.

அப்பு: அய்யோ, சாமி அப்படி செஞ்சுடாதீங்க. அப்படி செய்தால் பாஸ்கரனின் தந்தைக்கு நான் துரோகம் இழைத்தவனாவேன்.

மர்ம யோகி சற்று யோசித்து: மற்றுமோர் வழி இருக்கிறது. ஆனால் அது ஆபத்தான வழி.

தொடரும்..



*

A Thainis
18-09-2012, 12:15 PM
மூன்றாம் பாகம் வாசித்தேன் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது, நல்ல தொடர், தொடருங்கள் மதுரை மைந்தன்,

இந்த மன்றத்தில் கதைகள் பல பின்னூட்டம் பெற்றதை நான் வாசித்துள்ளேன், நிச்சயம் இக்கதை பல வாசகர்களை கவர்ந்திடும்.

மதுரை மைந்தன்
18-09-2012, 08:39 PM
மூன்றாம் பாகம் வாசித்தேன் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது, நல்ல தொடர், தொடருங்கள் மதுரை மைந்தன்,

இந்த மன்றத்தில் கதைகள் பல பின்னூட்டம் பெற்றதை நான் வாசித்துள்ளேன், நிச்சயம் இக்கதை பல வாசகர்களை கவர்ந்திடும்.

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே!

மன்றத்தில் கதைகளுக்கு பின்னூட்டங்கள் வருகின்றன. ஆனால் என்னுடைய கதைகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு இந்த கதையுமொரு உதாரணம். பின்னூட்டம் அலிப்பவர்கள் தங்களுக்குள் குழுக்கைளைஅமைத்துக் கொண்டு என் கதைக்கு நீ பின்னூட்டம் அளி உன் கதைக்கு நான் பின்னூட்டம் இடுகிறேன் என்றும் தனி மடல்களில் கதைகளுக்கு ஆதரவு தேடுவதும் மன்றத்தில் சாதாரண்மாக நிகழ்கின்றன. நீங்கள் அதற்கு மாறுபட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

அமரன்
18-09-2012, 10:30 PM
மக்கள் அனுப்பும் தனி மடல்களும், அதில் சொல்லப்படும் விசயமும் உங்களுக்குத் தெரிகிறது. நிர்வாகியாக இருந்த காலத்தில் கூட எனக்குத் தெரியாத இந்த மாதிரி விபரங்கள் உங்களுக்குத் தெரிவது ஆச்சரியம்தான்..

பின்னூட்டம் போடுங்கள் என்று கேட்பதும், போடாவிட்டால் ஆத்திரத்தில் கத்துவதும், மற்றப் படைப்புகளையும், படைப்பாளிகளையும் திட்டுவதும் உங்களுக்கு வாடிக்கையாகி விட்டது.


உங்களுக்கு ஏன் பின்னூட்டங்கள் கிடைப்பதில்லை என்பதன் உண்மைக்காரணத்தைக் கண்டறிய முயலுங்கள் ஐயா. தயவுசெய்து, கண்டதையும் கற்பனை செய்து மன்றத்தைக் குப்பைக் கூடை ஆக்காதீர்கள்.

இங்கே இருக்கும் அவதூறுகளை அகற்ற நிர்வாகத்துக்குப் பரிந்துரைக்கிறேன்.

நன்றி.

மதுரை மைந்தன்
19-09-2012, 03:03 AM
மக்கள் அனுப்பும் தனி மடல்களும், அதில் சொல்லப்படும் விசயமும் உங்களுக்குத் தெரிகிறது. நிர்வாகியாக இருந்த காலத்தில் கூட எனக்குத் தெரியாத இந்த மாதிரி விபரங்கள் உங்களுக்குத் தெரிவது ஆச்சரியம்தான்..

பின்னூட்டம் போடுங்கள் என்று கேட்பதும், போடாவிட்டால் ஆத்திரத்தில் கத்துவதும், மற்றப் படைப்புகளையும், படைப்பாளிகளையும் திட்டுவதும் உங்களுக்கு வாடிக்கையாகி விட்டது.


உங்களுக்கு ஏன் பின்னூட்டங்கள் கிடைப்பதில்லை என்பதன் உண்மைக்காரணத்தைக் கண்டறிய முயலுங்கள் ஐயா. தயவுசெய்து, கண்டதையும் கற்பனை செய்து மன்றத்தைக் குப்பைக் கூடை ஆக்காதீர்கள்.

இங்கே இருக்கும் அவதூறுகளை அகற்ற நிர்வாகத்துக்குப் பரிந்துரைக்கிறேன்.

நன்றி.

உங்களுடைய என் மீதான அவதூறுகளை வன்மையாக கண்டிக்கிறேன். படைப்பளிகளை திட்டுகிறேன் என்று என் மீது சாணி அடித்திருக்கிறீர்கள். மன்றத்தின் நடத்துனர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் மன்றத்தின் மீது வழக்கு தொடருவேன். இந்த மன்றத்தில் நீடிப்பது என் தன் மானத்திற்கு இழுக்காகும்

கலைவேந்தன்
19-09-2012, 03:56 AM
தனிமடல்களில் ஆதரவு தேடிப் பின்னூட்டம் பெறும் அளவுக்கு இங்கே எந்த படைப்பாளியும் கேவலமானவர்கள் இல்லை ஐயா. ஏன் இப்படி அடிக்கடி பொறுமை இழக்கிறீர்கள் என்பது தெரியவே இல்லை. மிக மோசமான கேவலமான குற்றச்சாட்டு உங்களுடையது. குழுக்கள் அமைத்துப் பின்னூட்டம் போடுவது என்பது அபாண்டமான அசிங்கமான குற்றச்சாட்டு ஐயா. நீங்கள் சொல்லும் இத்தகு குற்றச்சாட்டுகள் நிறைந்த தளத்தில் நான் அதை குறிப்பிட்டபோது தங்களின் ஆதரவு அங்கே இருந்ததில்லையே.. அப்படி எந்த குழுவாகவும் இயங்காமல் திறமைக்கு மதிப்பளிக்கும் இத்தளத்தில் இத்தகு குற்றச்சாட்டு தவறு அல்லவா..?

பின்னூட்டங்கள் அருகிவருகின்றன என்பதை ஏற்கிறேன். சிலர் வருகைதந்து வாசித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் பின்னூட்டம் பெறுபவர்கள் எல்லோரும் இப்படித்தான் பின்னூட்டம் பெறுகிறார்கள் என்பது போன்ற தங்கள் குற்றச்சாட்டு மிகக்கடுமையானது ஐயா.

இத்தனை வருந்தும் நீங்கள் எத்தனை கதைகளுக்கு தவறாமல் பின்னூட்டம் அளித்து ஆதரவு அளித்திருக்கிறீர்கள் என்பதை சற்றே பின்னோக்கிப் பாருங்கள். எத்தனை கவிதைகள் படைப்புகளுக்கு உங்கள் பின்னூட்டங்கள் இடம்பெற்று அலங்கரித்துள்ளன என்பதை நடுநிலையோடு யோசியுங்கள். முதலில் சமூகத்தில் அனைவரிடமும் சகஜமாகப் பழகிட முயலுங்கள். என் வயது ஐம்பது. என்றாலும் இன்றைய இளைஞர்களுக்கு இணையாக அரட்டை அடிப்பதும் அவர்களை ஊக்குவிப்பதுமாக சென்றுகொண்டிருக்கிறேன். நீங்களும் அதேபோல் தங்கள் வயது மற்றும் படைப்பாளிக்கான கர்வம் அனைத்தையும் விட்டு சகஜ நிலைக்கு வாருங்கள். அனைவரிடமும் கலகலப்பாக பழகுங்கள். நான் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவன்; எல்லோரும் என்னை வணங்கவேண்டும் வாழ்த்தவேண்டும் போற்ற வேண்டும் என்றெல்லாம் நினையாதீர்கள்.

ஜகதீசன் ஐயாவிடம் நிறைய கற்கவேண்டி இருக்கின்றது. அவருடைய வயதுக்கு சற்றும் கர்வமோ அகந்தையோ எதுவும் இன்றி நல்ல படைப்புகளை மனமுவந்து பாராட்டிச்செல்கிறார். தமது படைப்புகளுக்கு பின்னூட்டம் வந்தால் நன்றி தெரிவிக்கிறார். இல்லையெனில் அமைதியாக அடுத்த படைப்புக்குச் சென்றுவிடுகிறார். அந்த பக்குவம் நமக்கெல்லாம் வரவேண்டும் ஐயா. நானும் அவரிடம் கற்க நிறைய உள்ளது என நினைக்கிறேன்.

கீதம் மதி ஆதன் ஆதவா போன்றவர்கள் படைப்பாளர்களைக் கவனியாமல் படைப்பைக் கவனித்து தகுந்த நேரத்தில் பாராட்டி வருகிறார்களே.. அமினுதீன் ஜெயந்த் தைனிஸ் நாஞ்சில் த க ஜெய் போன்ற இன்னும் பல நண்பர்கள் தவறாமல் பின்னூட்டம் அளித்துப் பாராட்டி மகிழ்கிறார்களே.. இருக்கும் நல்லவனவற்றை எல்லாம் விடுத்து கசப்பினை ஏன் மனதில் எண்ணி அதையே இங்கும் விதைக்கப் பார்க்கவேண்டும் ஐயா..? யோசியுங்கள்.

நாம் ஒன்றும் இங்கே முதலாளிகள் அல்லர். நமது படைப்புகளை அனைவரும் போற்றிப்புகழவேண்டும் எனக்கட்டாயம் செய்தல் கூடாது. நமது படைப்புகள் தான் அனைவரையும் கவர்ந்திழுக்கவேண்டும். கவிதைத் தளம் என்ற ஒரு சொல்லை பயன் படுத்தி இருக்கிறீர்கள்.. கவிதைக்கென்றே ஓர் தளம் அமைத்து அங்கு எவரும் வரவில்லை என்றாலும் பொறுமை இழக்காமல் அனைவரது கவிதைகளையும் தொகுத்து வருகின்றேன் நான். நம்மிடம் பொறுமை அவசியம். கவிதைகள் என்றால் என்ன கேவலமானவை என்றா நினைக்கிறீர்கள்..? கவிதை ஒரு சில எழுதியுள்ள தாங்கள் கவிதை எழுதுவதன் கடினத்தை உணரவில்லையா..? கடந்த சில மாதங்களாக நான் கவிதைகள் எழுதுவதை குறைத்திருக்கிறேன், காரணம் எதையாவது எழுதவேண்டும் என்னும் எண்ணமில்லை. எழுதுவதை செவ்வன எழுதவேண்டும் என்னும் என் ஆர்வம் தான்.

வயது ஏற ஏற நம் மனது பண்படவேண்டும். என்னை மறைமுகமாகத்தாக்கிய சிலரிடம் கூட நான் பொறுமை இழக்காமல் பேசிவந்திருக்கிறேன். நீங்கள் உங்களை மதிக்கும் அனைவரையுமே ஒட்டுமொத்தமாகச் சாடி இருக்கிறீர்கள் ஐயா. நான் இத்தனை எழுதக்காரணம் கூட நீங்கள் மேலே காட்டிய அவதூறான குற்றச்சாட்டுகளைப் பொறுக்கமுடியாமல் தான் ஐயா.. பொறுமை காருங்கள். பொறுமை இல்லையெனில் கொஞ்ச நாட்கள் தள்ளி விலகி நின்று அமைதி ஆகுங்கள். மனம் சமனப்பட்டபின் வாருங்கள். எவரையும் புண்படுத்த எண்ணாதீர்கள் ஐயா. இதை உங்களிடம் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

புரிதலுக்கு நன்றி ஐயா.

நாஞ்சில் த.க.ஜெய்
19-09-2012, 11:44 AM
வணக்கம் மதுரை வேந்தன் அவர்களே..எனக்கு பிடித்தமான கதை யொன்றெண்ணி இங்கெ வந்தென் என் ஆர்வம் வீணாகிவிடவில்லை அருமை பாராட்டுக்கள் ஜயா..நான் இம்மன்றம் இணைந்தது இக்கதை வெளியாகிய பின்பு அந்நேரம் நான் ஒரு சிறுவன் பதிலிடுதல் பதிவிடுதல் என்று ஏதும் அறியாதவன் ..அப்போது நீங்கள் இங்கே கூறும் அதே தவறான எண்ணம் என்னுள்ளும் தோன்றியது..சிறிது சிறிதாக என்னை மேம்படுத்தி நான் பதிவிட்ட சிலபதிவுகள் குறிப்பாக சிலகிறுக்கல்கள் என்று துவங்கிய போது பாராட்டிய உறவுகள் என்னை மேலும் மேம்படுத்த உதவினர் என்று கூறினால் மிகையாகாது .இங்கே பின்னோட்டம் இட்டு தொடர ஆட்கள் இல்லை என்று கூறினால் தவறில்லை அவர்கள் தங்கள் படைப்பினை தவற விடுகிறார்கள் என்று கூறலாம் பின்னோட்டம் என்பது இங்கே கொடுத்தல் வாங்குதல் போல் ஆனால் ஆதரவு தேடி பின்னோட்டம் இடும் அளவிற்கு யாருடைய படைப்பும் இங்கே தரம் இழந்துவிடவில்லை (மன்னிக்க)..மன்றம் வந்த நாள் முதல் இன்று வரை ஒரு ரசிகனாக அனைவருடைய படைப்பிற்கும் என்னாலியன்ற வகையில் என் ஒத்துழைப்பை நல்கியே வந்துள்ளேன் ..பணி நிமித்தம் செல்லும் போது தவற விட்ட படைப்புகள் சில இது போன்ற அருமையான நாட்களில் இழந்து விடாமல் தொடர்ந்து வந்துள்ளேன்..இது போல் தான் பல மன்ற உறவுகளும் இதில் உலவுவது என்பது ஒரு பொழுது போக்கிற்க்காகவும் மன நிமதிக்காகவும் தான் அது போன்ற நேரங்களில் இது போன்ற வாசிப்புகள் கிடைத்தால் யாரும் இழக்க விரும்ப மாட்டார் என்பது என் எண்ணம்..நீங்கள் தொடர்ந்து வரவேண்டும் என் அவா ..இச்சிறுவன் கூறிய கருத்துக்கள் புண்படுத்தியிருப்பின் மன்னிக்க...

A Thainis
19-09-2012, 09:41 PM
ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பு பாராட்ட படவேண்டும் என்றும், குறைந்தயளவு கண்டுகொள்ள படவேண்டும் என்று நினைப்பது இயற்கையே. படைப்பு என்று வருகின்றபோது அது பிறர்க்காகதான் படைக்கபடுகிறது, அதை உலகம் கண்டும் காணமல் இருந்தால் படைப்பாளி விரக்கிதி அடைகிறார் அல்லது வேதனை படுகிறார். இவ்வாறு பல நிகழ்வுகளை நாம் பல அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் வாழ்வில் கண்டுள்ளோம். பாராட்டுக்கள், விமர்சனங்கள் நல்ல படைப்பையும், படைபாளியையும் உருவாக்குகின்ற ஆசிரியர்களாக திகழ்கின்றன. எழுத்து அறிவு, அனுபவம் அன்பு ஆகியவற்றில் ஏற்றம் தருகிறது, எதிர்பார்புகளை கடந்தும் கசப்புகளை கடந்தும், என்னால் இயன்ற எழுத்து பணியை செய்திட தமிழும் தரணியும் நம்மை கேட்கின்றன என்பதுதான் உண்மை. அத்தகைய புனிதமான பணியை நமது தமிழ் மன்ற களம் செய்திட வேண்டும் என்பது என் கனவு, ஆவல். கசப்புக்களை மறந்து, தாய் தமிழால் இணைந்து அன்பு மொழி பேசி அழகு அகிலம் நம் எழுத்தால் அமைப்போம்.