PDA

View Full Version : புது கவிஞன்



கோபாலன்
17-09-2012, 08:33 PM
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நான் கோபாலன்(கோபாலகிருஷ்ணன்).
நானும் கவிதை எழுதும் முயற்சியில் நெடு நாட்களாக முயன்று வருகின்றேன். என்னைப் பற்றி கூறுவதென்றால் ,

நான் ஒரு பெரிய பேச்சாளன் அல்லன்
ஆனால், பிழையில்லாமல் பேசுவேன் ?
நான் ஒரு நல்ல கவிஞன் அல்லன்
ஆனால், நல்ல கவிதை எழுதவேண்டுமென்று நெடுநேரம் யோசிப்பவன்?!.

பிழையிருந்தால், திருத்தவும்.

சிறு வயதினில் அம்மாவை பிரிந்து பெரியம்மா வீட்டில் தங்கி படித்தபோது , அம்மாவின் அன்புக்காக ஏங்கியதின் எழுத்து வடிவம்தான் இது.

தாயின் பிரிவு

சிறுவயதினில் , நேரம் சரியில்லை என்று
சேராமல் பிரித்தார்கள்
உன்னையும் என்னையும்

நல்ல சாப்பாடு உகந்த உபசரிப்பு
எல்லாம் கிடைத்தும் இறங்கவில்லை
உன்முகம் இதயத்தினின்று

நள்ளிரவில் உன் ஞாபகம்
யார்யாரையோ நீயென்று கண்டு
பிதற்றியிருக்கிறேன் நீதானென்று

ஏதொரு நாளில் நீ வருவாய்
ஏனென்று கேட்டு இதம் படைப்பாய்
உறங்கிப்போவேன் உன்மடியில்

இதுபோல் தொடராத என நினைக்கையில்
மறுநாள் சென்றிருப்பாய் ஊருக்கு
உன் நினைவில் நானிருப்பேன் பாரமாய் பாருக்கு

கோடை விடுமுறையில் கொண்டாட்டம்தான்
தம்பியும் தங்கையும் உடனிருப்பதில்
உறங்கித்தான் போவேன் உற்சாகமாய்

ஆனால் அவர்களுடைய விடுமுறைக்கு
என்னைவிட்டு வேறூர் செல்வதில்
மருங்கித்தான் சாவேன் கொடும்சோகமாய்

விடுமுறை முடிந்து திரும்ப வேண்டும் ஊருக்கு
மீண்டும் வருவேன் சீக்கிரமென்று
மகிழ்ச்சியில் செல்வேன் பேருக்கு

அம்மா ,
உன்னுடனே எப்போதும் இருக்கமாட்டேனா?

என்னுடைய கவிதை முயற்சிகள்

1. நட்பிலக்கணம்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/23990-)

2. நட்பு.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/24018-)

3. பிரிவு.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27475-)

4. உயிரினில் மெல்ல.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27965-)

5. குறுங்கவிதைகள்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27971-)

6. நண்பனின் பிரிவு.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27972-)

7. செய்வினை.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27974-)

8. நீர்க்குமிழி.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27975-)

9. இறைவன். (http://www.tamilmantram.com/vb/showthread.php/30249-)

10. தோழி.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/30250-)

11. யார் நீ.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/30259-)

12. கல்கியின் காதல்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/30295-)

13. காலச்சக்கரம்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/30411-)

அமரன்
17-09-2012, 09:09 PM
புதுக்கவிஞனின் அறிமுகமும் தாய்வணக்கமும் அருமை..

கோபாலன்..

மன்றத்தில் நீங்கள் பதிந்த கவிதைகளின் சுட்டிகளை இங்கே இணைத்தால், உங்கள் கவிதைகளைத் தேடிப்படிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். அதற்காகவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய சுட்டிகளின் படியல் நீண்டு செல்ல என் வாழ்த்து.

A Thainis
18-09-2012, 04:04 PM
புது கவிஞனின் புது பதிவு அருமை, வாழ்த்துக்கள் தொடருங்கள் கோபாலன்.

சுகந்தப்ரீதன்
18-09-2012, 04:09 PM
புது கவிஞருக்கு எமது வாழ்த்துக்களும் வரவேற்புகளும்..!!:)

சிறுபிராயத்தில் பெற்றோரை பிரிந்து விடுதியிலோ அல்லது உறவினர் வீட்டிலோ தங்கநேரும் குழந்தைகளின் ஏக்கத்தை, இத்தனை காலம் கழித்தும் முழுமையாய் அந்த உணர்வின் ஆழத்தை எழுத்தில் வெளிக்கொணர்ந்த விதத்திலேயே உங்களின் ஆர்வமும் முயற்சியும் அப்பட்டமாய் வெளிபட்டிருக்கிறது..!! தொடர்ந்து எழுதுங்கள் கோபாலரே..!!:icon_b:

கோபாலன்
18-09-2012, 07:07 PM
தங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி.. பிழையிருந்தால் சுட்டிக்காட்டி திருத்தவும்..:)

கலைவேந்தன்
19-09-2012, 04:08 AM
கவிஞர் கோபாலருக்கு வணக்கம். தங்களின் படைப்புகளை நான் இதுவரை பார்வையிடவில்லை. விரைவில் அனைத்தையும் வாசித்து எனது கருத்துகளைப் பகிர்கிறேன், தங்கள் படைப்புகளைத் தொடர்ந்து தாருங்கள்.

கீதம்
19-09-2012, 04:31 AM
அறியா வயதில் அன்னையைப் பிரிந்த வலியை உணர்த்தும் வரிகள். இருந்தும் இல்லாமல் போன தாய்மைக்கான பரிதவிப்பை அதே உணர்வுடன் வெளிப்படுத்தும் கவிதைக்குப் பாராட்டுகள். விரைவில் தங்களது மற்றப் படைப்புகளையும் படித்துக் கருத்திடுவேன். மன்றத்தில் தங்கள் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க வாழ்த்துக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
19-09-2012, 10:46 AM
பிரிவின் வலியினை உணர்ந்து வடிக்கும் கண்ணீர் துளி..தொடருங்கள் தோழரெ..