PDA

View Full Version : மின்மினி ஹைக்கூ...4

rema
17-09-2012, 03:07 AM
அதிகம் பயன்படுத்தப்படாத
நிலைக் கண்ணாடியாய்
நம் அகம்

ஆதி
17-09-2012, 09:17 AM
இது ஹைகூவா தெரியலை, ஆனால் இது ஒரு அழகிய விழிப்புணர்வு கவிதை

மிக ஆழமாக சொல்லபட்டிருக்கிறது

நம் முகம், நம் ரூபம் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொள்வது கண்ணாடியில்தான் இல்லையா, நம் மீது ஒட்டியிருக்கும் அழுக்கை கண்ணாடி வழி பார்த்துத்தான் சரி செய்து கொள்ள வேண்டியிருக்கும், பார்க்க முடியாத பிரதேசங்களை காட்டுவதுதான் நிலைக்கண்ணாடி

அகம் அப்படி ஒரு நிலைக்கண்ணாடியாய்தான் இருக்கிறது, ஆனால் அதனை நாம் நம் சுயத்தை பார்ப்பதே இல்லை, சுய பரிசீலனைக்கு நம்மை நாம் உட்படுத்திக் கொள்ள, நம் மீது ஒட்டிக்கிடுக்கும் அழுக்கை கறையை எச்சத்தை துடைத்துக் கொள்ள நாம் அதனை நாடுவதே இல்லை, மாறாக நிலை கண்ணாடி மீது திரை போட்டு விடுகிறோம், பயன்னிம்மைகளின் தூசி படிந்த நிலைக்கண்ணாடி மங்கலுற்று நம்மை துல்லியமற்று காட்டுகிறது, நாமும் நம்மை அழகு போலவே எண்ணி அந்த மங்குற்ற ரூபமே நமதென நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

அக சோதனை செய்ய வைத்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ரெமா

ஆதவா
17-09-2012, 11:02 AM
ஹைக்கூ?

நம் அகம் எனும் கண்ணாடிக்கு பூச்சு தேவை. அந்த பூச்சு நிகழும்பொழுது திடீரென பிரதிபலிக்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று பழமொழி உண்டு. அதன்படி முகம்தான் கண்ணாடியோ என்று தோணுகிறது சிலசமயம்..

கவிதை இன்னும் என்னவோ சொல்லவருகிறது போலிருக்கிறது என்று நினைக்கும்படியான முடிவு.. ஒருவேளை ”யாய்” ஐ எடுத்துவிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கலாம்..

மனம்
சிறுகல்லில் நொறுங்கிச்
சில்லுசில்லாய் சிதறி
அடிக்கடி உடையும் கண்ணாடி

அடிக்கடி உடைந்து போவது தெரிந்து அது அதிகம் உபயோகப்படாமல் படுத்தாமல் இருக்கிறதோ என்னவோ??

ஆதி
17-09-2012, 11:19 AM
ஆதவா, இந்த கவிதையில் இன்னொரு வெளியும் இருக்கு

பயன்படுத்த படாத என்று சொல்லியிருக்கிறார் கவிஞர்

பயன்படாத என்று சொல்லவில்லை

நாம் தான் பயன்படுத்தவில்லை, பிறர் அதனை பயன்படுத்தி ஏமாற்றிக் கொண்டிருக்கலாம்

பொய்யான உருவங்களை அதில் தெரியவைத்து இதுவே சிறப்பு, நன்மை, உண்மை என்று நம்மை நம்ப வைத்துக் கொண்டு இருக்கலாம்

காட்டும் பொய்மைகளை நம்பி நாம் ஏமார்ந்து கொண்டு இருக்கலாம்

இன்னொன்று இந்த கண்ணாடியே பொய்யானதாகவும் இருக்கலாம்

உண்மையான அகத்தை மறைத்து பொய் நிழல் காட்டும் கண்ணாடி, உடைக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது

அதனால் இந்த கண்ணாடியை உடை உன் போலி அகமுக பிம்பமும் அழியும்

ஆதவா
17-09-2012, 11:49 AM
சரிதான் ஆதி.

குறிப்பாக இன்னார்தான் என்று சொல்லாமல் ”பயன்படுத்தப்படாத” என்று சொல்லப்படுவது “நாம்” ஐயோ அலது “பிறர்”ஐயோ குறிப்பிடலாம். கவிதையில் சொல்லாத/சொல்லப்படாத வார்த்தைகள் இம்மாதிரி புரிந்துணர்வுகளின் அளவுகோலை மேலும் கீழுமாக தள்ளும். என்னைப் பொறுத்தவரையிலும் மனமெனும் கண்ணாடி இன்னொரு கண்ணாடியைப் பார்க்கிறது. அவ்வளவே. ஸ்தூல பிம்பம் என்று எதுவும் கிடையாது. கண்ணாடியும் கண்ணாடியும் பிரதிபலித்து (இதை எங்கோ கவிதையாக எழுதிய ஞாபகம்) அதனுள் கண்ணாடி, அதனுள் இன்னொரு கண்ணாடி என முடிவில்லாத இடத்திற்கே செல்கிறது.

மனம், நாம் காணுவது பொய்யா, நிழ்லா என்று யோசிப்பதற்கு யோசிக்கிறது என்று நினைக்கிறேன்.

அதனால் இந்த கண்ணாடியை உடை உன் போலி அகமுக பிம்பமும் அழியும்

முந்தைய பதிவில் அத்னால்தான் “அடிக்கடி” எனும் வார்த்தை கொடுத்திருந்தேன். கண்ணாடி உடையுமிடத்தில் இன்னொரு கண்ணாடி நிறுத்தப்படுகிறது. மின்மினியின் கவிதைப்படி, அது உபயோகமின்றி உடைந்து மட்டுமே போகிறது.

பிரதிபலிப்பு இல்லாமல் நாம் நம்மை பார்த்துக் கொள்ளமுடியுமா ஆதி? பிரதிபலிப்பு என்பது அம்மணம் தானே?

ஆதி
17-09-2012, 12:12 PM
பிரதிபளிப்பே படிமம் தானே ஆதவா

அது உண்மையன்று இல்லையா

அடிக்கடி சொல்வதுதான்

எண்டர் த டிராகன் படித்தில் வரும்

பிரேக் த இமேஜ்ஜை இங்கு பயன்படுத்த வேண்டி இருக்கிறது

சுகந்தப்ரீதன்
17-09-2012, 06:23 PM
அடேங்கப்பா... மூனுவரி கவிதைக்கு முந்நூறு விதத்துல விளக்கம் கொடுப்பாங்க போலிருக்கு ஆதியும் ஆதவனும்..!!:)

நிலையாய் இருக்கும் எதையுமே தேவைக்கு ஏற்றார்போல்தான் பயன்படுத்தமுடியும்... போற இடத்துக்கெல்லாம் தூக்கிட்டு போகமுடியாது.. ஆனா நம்ப மனம் அதாங்க அகம் அது அப்படி கிடையாது... அது ஓரிடத்தில் நிலைகொள்வதே கிடையாது... அப்புறம் எப்படி அது நிலை கண்ணாடியாக இருக்க முடியும்... சுயபரிசீலனையை பற்றி சொல்ல வந்த கவிதையையே சுயபரிசீலனை செய்ய வேண்டியிருக்கு மின்மினி..!!:D

A Thainis
17-09-2012, 06:38 PM
இக்கவிதையின் புரிதல் தெளிவற்ற கண்ணாடியாக மங்கலாக தெரிகிறது, மின்மினி அவர்களே, இந்த கண்ணாடி தெளிவாக தெரிந்து எங்களுக்கு உதவிட முன் வரவும்.

rema
20-09-2012, 04:02 PM
இது ஹைகூவா தெரியலை, ஆனால் இது ஒரு அழகிய விழிப்புணர்வு கவிதை

மிக ஆழமாக சொல்லபட்டிருக்கிறது

நம் முகம், நம் ரூபம் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொள்வது கண்ணாடியில்தான் இல்லையா, நம் மீது ஒட்டியிருக்கும் அழுக்கை கண்ணாடி வழி பார்த்துத்தான் சரி செய்து கொள்ள வேண்டியிருக்கும், பார்க்க முடியாத பிரதேசங்களை காட்டுவதுதான் நிலைக்கண்ணாடி

அகம் அப்படி ஒரு நிலைக்கண்ணாடியாய்தான் இருக்கிறது, ஆனால் அதனை நாம் நம் சுயத்தை பார்ப்பதே இல்லை, சுய பரிசீலனைக்கு நம்மை நாம் உட்படுத்திக் கொள்ள, நம் மீது ஒட்டிக்கிடுக்கும் அழுக்கை கறையை எச்சத்தை துடைத்துக் கொள்ள நாம் அதனை நாடுவதே இல்லை, மாறாக நிலை கண்ணாடி மீது திரை போட்டு விடுகிறோம், பயன்னிம்மைகளின் தூசி படிந்த நிலைக்கண்ணாடி மங்கலுற்று நம்மை துல்லியமற்று காட்டுகிறது, நாமும் நம்மை அழகு போலவே எண்ணி அந்த மங்குற்ற ரூபமே நமதென நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

அக சோதனை செய்ய வைத்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ரெமா

என் மனதை அழகுப்படுத்த அதை உள்நோக்கிப் பார்ப்பதேயில்லையே !

புற அழகையும் புறத் தூய்மையையும் மட்டும் கவனித்துக்கொள்கிறேனே ...

எப்படியிருக்குமோ திரும்பிப் பார்க்காத என் அகம் ...

அதிக அழுக்குகள் சேர்ந்திருக்குமோ...

அதனுடன் பேசி அதை நிதானப்படுத்தி அதை செம்மையாக்க , சீர் செய்ய , அழகுப்படுத்த நேரமும் மனமும் இல்லாமலேயே போகின்றது காலம்...

இப்படித் தொடங்கிய எண்ண ஓட்டத்தில் விளைந்த வரிகள் ... மிக்க நன்றி ஆதி !

rema
20-09-2012, 04:12 PM
அடேங்கப்பா... மூனுவரி கவிதைக்கு முந்நூறு விதத்துல விளக்கம் கொடுப்பாங்க போலிருக்கு ஆதியும் ஆதவனும்..!!:)

நிலையாய் இருக்கும் எதையுமே தேவைக்கு ஏற்றார்போல்தான் பயன்படுத்தமுடியும்... போற இடத்துக்கெல்லாம் தூக்கிட்டு போகமுடியாது.. ஆனா நம்ப மனம் அதாங்க அகம் அது அப்படி கிடையாது... அது ஓரிடத்தில் நிலைகொள்வதே கிடையாது... அப்புறம் எப்படி அது நிலை கண்ணாடியாக இருக்க முடியும்... சுயபரிசீலனையை பற்றி சொல்ல வந்த கவிதையையே சுயபரிசீலனை செய்ய வேண்டியிருக்கு மின்மினி..!!:D
தினமும் குளித்து முகத்தை கண்ணாடியில் பார்த்து அதை அழகுப்படுத்துகிறோம் !
ஆனால் அகத்தை கவனித்தோமானால் அதில் சேர்ந்துள்ள பொய்கள், பொறாமை , குரோதம் ஆகியவற்றைக் கண்டு சகிக்காமல் அவற்றைக் குறைத்துக்கொள்வோம் ! ஆனால் நாம் அதைச் செய்வதில்லை என்பதே கவிதையின் கரு ! மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றிகள் !

சுகந்தப்ரீதன்
21-09-2012, 06:24 AM
தினமும் குளித்து முகத்தை கண்ணாடியில் பார்த்து அதை அழகுப்படுத்துகிறோம்!நெசமாத்தான் சொல்றீங்களா... அப்ப உங்க வீட்டுக் கண்ணாடி அழகாத்தானிருக்கும்...:)

ஆதி
21-09-2012, 07:11 AM
என் மனதை அழகுப்படுத்த அதை உள்நோக்கிப் பார்ப்பதேயில்லையே !

புற அழகையும் புறத் தூய்மையையும் மட்டும் கவனித்துக்கொள்கிறேனே ...

எப்படியிருக்குமோ திரும்பிப் பார்க்காத என் அகம் ...

அதிக அழுக்குகள் சேர்ந்திருக்குமோ...

அதனுடன் பேசி அதை நிதானப்படுத்தி அதை செம்மையாக்க , சீர் செய்ய , அழகுப்படுத்த நேரமும் மனமும் இல்லாமலேயே போகின்றது காலம்...

இப்படித் தொடங்கிய எண்ண ஓட்டத்தில் விளைந்த வரிகள் ... மிக்க நன்றி ஆதி !

இதையே தான் நானும் சொல்லியிருக்கேன்

நீங்க பார்க்கவிரும்பலைனு சொல்றத நான் சுயபரிசோதனைக்கு உட்படுதல னு சொல்றேன்

கும்பகோணத்துப்பிள்ளை
30-09-2012, 08:51 PM
அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்
என் முகம்காட்டி
என் எதிரே நிலைக்கண்ணாடி!

...... குறுக்குல சால்ஒட்றிரா! கும்பகோணத்துபிள்ளியின்னு கோபிக்கவேணாம்!