PDA

View Full Version : ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரைகீதம்
12-09-2012, 07:34 AM
ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை

மன்ற உறவுகளுக்கு வணக்கம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் சென்ற ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் மன்றத்தின் மனங்கவர் பதிவராக சிவா.ஜி அண்ணா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நம் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்வோம்.

ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மனங்கவர் பதிவருக்கான பரிந்துரையை வரவேற்கிறோம்.

போட்டி என்றாலே வெற்றி தோல்வி பிரதானமாகிவிடுகிறது. அதனால் மனங்கவர் பதிவர் போட்டி என்பதை இனி மனங்கவர் பதிவர் தேர்தல் என்றே குறிப்பிடுவோம். இத்தேர்தல் பற்றியக் கருத்துக்களை முன்வைத்த உறுப்பினர்களின் ஆலோசனைப்படி இம்முறை விதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆலோசனை வழங்கிய உறவுகளுக்கு நன்றி.

ஒவ்வொரு காலாண்டுக்கும், அதாவது மூன்று மாதங்களுக்கொருமுறை நடைபெறும் மனங்கவர் பதிவர் வாக்களிப்பில் பெரும்பான்மை வாக்குகள் பெறும் ஒவ்வொரு பதிவருக்கும் மனங்கவர் பதிவர் என்னும் சுழல்முறைப் பதக்கம் வழங்கப்படுவதை அறிவீர்கள். அவ்வாறு ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து பதிவர்களையும் தெரிவு செய்து அந்த வருட இறுதியில் மற்றுமொரு வாக்களிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். அதில் பெரும்பான்மை பெறுபவர்க்கு அந்த வருடத்தின் நட்சத்திரம் என்ற நிரந்தரப் பதக்கம் வழங்கப்படும்.

பரிந்துரைக்கான விதிமுறைகள்;

1. ஒரு காலாண்டில் மனங்கவர் பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அதன்மூலம் நட்சத்திரப் பதிவருக்கானப் பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுகிறார். எனவே அவரை அடுத்தக் காலாண்டுகளில் பரிந்துரைப்பது அவசியமற்றதாகிறது. அதனால் அவரைத் தவிர்த்துப் பிற உறுப்பினர்களைப் பரிந்துரைப்பது நல்லது.

2. ஒருவர் ஒரு பதிவரை மட்டுமே பரிந்துரை செய்யலாம். அவர்கள் நிர்வாகத்தைச் சாராதவராக இருத்தல் அவசியம். மேலும், பரிந்துரைகள், பதிவர்களின் மீதான விருப்பு,வெறுப்பு இவற்றின் அடிப்படையில் அல்லாது, அவர்கள் இட்டப் பதிவுகளின் தரத்தின் அடிப்படையில் அமைவது வரவேற்கத்தக்கது.

3. இன்றிலிருந்து வருகிற 26 ஆம் தேதிக்குள் உங்களுடைய மனங்கவர் பதிவரை முன்மொழிந்து தேர்தலுக்கான ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

M.Jagadeesan
13-09-2012, 02:20 AM
பேராயிரம் பரவி பாரோர் ஏத்தும்
மீராவின் கண்ணனை நெஞ்சில் நிறுத்திய
கலைவேந்தன் என்னும் நற்றமிழ் குரிசிலை
மனம்கவர் பதிவராய் பரிந்துரை செய்கின்றேன்!

ஜானகி
13-09-2012, 03:38 AM
எனது தேர்வும் கலைவேந்தன் அவர்களே !

கலைவேந்தன்
13-09-2012, 03:58 AM
என்னைப்பரிந்துரைத்த ஜகதீசன் ஐயாவுக்கும் ஜானகி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

வள்ளுவர் குறளுக்கு ஓவியப்பரிமாணமும் மேவிய உபமானமும் தந்து சிறப்பிக்கும் ஜகதீசன் ஐயா அவர்களை எனது பரிந்துரையாக முன்வைக்கிறேன்.

jayanth
13-09-2012, 04:41 AM
எனது தேர்வு எங்கண்ணாத்த கலைவேந்தன்தாங்க...!!!

அமரன்
13-09-2012, 09:56 PM
ஒவ்வொரு மனங்கவர் பதிவாளர் பரிந்துரை நூல் துவங்கப்பட்டதும் அடிக்கடி வந்து பார்ப்பேன்.. பரிந்துரைக்கப்படும் நண்பர்களின் பதிவுகளைத் தேடிப்படிப்பேன். படித்த பின் எழும் எண்ணவோட்டத்தை பதிவு செய்வேன். அதனால் வாசகனான எனக்கும் பயன்.. படைப்பாளிக்கும் உற்சாகம். அந்த உற்சாகம் கொடுக்கும் உந்து விசையில் அவரிடமிருந்து படைப்புகள் வந்து விழும், இன்னும் தரமாக.. இந்த வழியில் மேம்படுத்தப்பட்ட தேர்தல் இன்னும் நல்ல பயனைத் தரும் என எதிர்பார்க்கிறேன்.

என் முன்மொழிவும் கலைவேந்தன் அவர்களே.

மதுரை மைந்தன்
14-09-2012, 11:03 PM
எனது தேர்வும் கலைவேந்தன்அவர்களே!

செல்வா
15-09-2012, 10:55 AM
எனது தெரிவும் கலையண்ணாவிற்கே.

ஆதி
15-09-2012, 11:03 AM
மீராவின் கண்ணனுகாக கலை ஐயா

ரங்கராஜன்
16-09-2012, 05:42 AM
என்ன எல்லாரும் கலைவேந்தன் ஐயாவையே சொல்றீங்க....... அப்போ அவரு இந்த விருதுக்கு தகுதியான ஆளா தான் இருப்பார்....... சோ என்னுடைய ஜாய்ஸும் அவரு தான்னு சொல்ல மனது நினைத்தாலும்............ என் தானய தலைவன், பிரச்சார பீரங்கி, எங்கள் அண்ணன், கருமை நிற கண்ணன், பேச்சிலே மன்னன், கவிக்கோ.......கோக்கறக்கோ ஆசை அஜித்தை முன்மொழிகிறேன்..... அவரை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.....

ஓகே டேக் ஓவர்......கேமிரா ஆஃப்......

A Thainis
17-09-2012, 08:54 PM
நல்ல செய்திகளை அள்ளி தரும், பண்பாளர் கலைவேந்தன் தகுதியானவரே, தெரிவு செய்திட என் ஆதரவும்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-09-2012, 09:15 PM
இத்தேர்வில் என்னில் சிலர் இருந்தாலும் ராதாவின் கண்ணன் காதல் கவிதைகள் என் மன்றத்தினை அலங்கரிக்கும் சொந்தபடைப்புகள் மூலம் வலம் வரும் அண்ணன் கலைவேந்தன் அவர்களுக்கே எனது வாக்கினை உரிததாக்குகிறேன்..வாழ்த்துக்கள் வேந்தே...

கும்பகோணத்துப்பிள்ளை
24-09-2012, 09:54 AM
ஒவ்வொரு மனங்கவர் பதிவாளர் பரிந்துரை நூல் துவங்கப்பட்டதும் அடிக்கடி வந்து பார்ப்பேன்.. பரிந்துரைக்கப்படும் நண்பர்களின் பதிவுகளைத் தேடிப்படிப்பேன். படித்த பின் எழும் எண்ணவோட்டத்தை பதிவு செய்வேன். அதனால் வாசகனான எனக்கும் பயன்.. படைப்பாளிக்கும் உற்சாகம். அந்த உற்சாகம் கொடுக்கும் உந்து விசையில் அவரிடமிருந்து படைப்புகள் வந்து விழும், இன்னும் தரமாக.. இந்த வழியில் மேம்படுத்தப்பட்ட தேர்தல் இன்னும் நல்ல பயனைத் தரும் என எதிர்பார்க்கிறேன்.

என் முன்மொழிவும் கலைவேந்தன் அவர்களே.

எனது வழிமொழிதழும் அதுவே!