PDA

View Full Version : ணகர, னகரச் சொற்கள்



பாரதி
09-09-2012, 04:47 PM
கணகம் - ஒரு படைப்பிரிவு
கனகம் - பொன்

கணப்பு - குளிர்காயும் தீ
கனப்பு - பாரம், அழுத்தம்

கணி - கணித்தல்
கனி - பழம், சுரங்கம், சாரம்

கணம் - கூட்டம்
கனம் - பாரம்

கண்ணன் - கிருஷ்ணன்
கன்னன் - கர்ணன்

கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு இராசி

கணை - அம்பு
கனை - ஒலி, கனைத்தல்

கண் - ஓர் உறுப்பு
கன் - கல், செம்பு, உறுதி

கண்று - அம்பு
கன்று - அற்பம், இளமரம், குட்டி, கைவளை

கண்ணல் - கருதல்
கன்னல் - கரும்பு, கற்கண்டு

காண் - பார்
கான் - காடு, வனம்

காணம் - பொன், கொள்
கானம் - காடு, வனம், தேர், இசை

காணல் - பார்த்தல்
கானல் - பாலை

கிணி - கைத்தாளம்
கினி - பீடை

கிண்ணம் - வட்டில், கிண்ணி
கின்னம் - கிளை, துன்பம்

குணி - வில், ஊமை
குனி - குனிதல், வளை

குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
குனித்தல் - வளைதல்

குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
குனிப்பு - வளைப்பு, ஆடல்

கேணம் - செழிப்பு, மிகுதி
கேனம் - பைத்தியம், பித்து

கேணி - கிணறு
கேனி - பித்துப் பிடித்தவர்

கோண் - கோணல், மாறுபாடு
கோன் - அரசன்

சாணம் - சாணைக்கல், சாணி
சானம் - அம்மி, பெருங்காயம்

சுணை - கூர்மை, கரணை
சுனை - நீரூற்று

சுண்ணம் - வாசனைப்பொடி
சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்

சேணம் - மெத்தை
சேனம் - பருந்து

சேணை - அறிவு
சேனை - படை

சோணம் - பொன், சிவப்பு, தீ, சோணகிரி
சோனம் - மேகம்

சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
சோனை - மழைச்சாரல், மேகம்


நன்றி:- தினமணி, மடலாடற்குழு நண்பர் கண்ணன் நடராஜன்.

A Thainis
09-09-2012, 06:47 PM
தினமணி நாளிதழின் இந்த அழகு தமிழ் தொகுப்பினை மன்றத்தில் பகிர்ந்துக் கொண்ட பாரதி அவர்களுக்கு நன்றி.

கீதம்
10-09-2012, 12:24 AM
எழுதும்போது உண்டாகும் ஐயங்களைத் தெளிவித்ததோடு, பல புதிய வார்த்தைகளையும் அறியத் தந்த தங்கள் முயற்சிக்கு நன்றி பாரதி அவர்களே.

சுகந்தப்ரீதன்
11-09-2012, 05:00 PM
பகிர்வுக்கு மிக்க நன்றியண்ணா.. பல புதிய சொற்களையும் அர்த்தங்களையும் அறிந்து கொள்ள ஏதுவாயிருந்தது..!!:icon_b:

jayanth
12-09-2012, 03:02 AM
பகிர்விற்கு நன்றி பாரதி...