PDA

View Full Version : சர்க்கரை வியாதிக்கு ஒட்டகப்பால்: ஆய்வு முடிவு!



அமீனுதீன்
05-09-2012, 04:57 PM
சர்க்கரை வியாதியை ஒட்டகப்பால் குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. பிகானரியிலுள்ள டயபட்டிக்ஸ் அன்ட் கேர் ரிசர்ச் சென்டரில் பணியாற்றும் மருத்துவர் ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது தொடர்பான ஆய்வில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

எகிப்திலுள்ள கெய்ரோ பல்கலை கழகத்தில் 54 சர்க்கரை நோயாளிகளுக்கு நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது. இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக் கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை வியாதி நாளுக்கு நாள் குறைந்து வருவது உறுதியானது. ஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.

ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் C யும் அதிக அளவில் அடங்கியுள்ளதும் கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து வலுவாகியுள்ளது.

நன்றி: www.inneram.com (http://www.inneram.com)

M.Jagadeesan
06-09-2012, 12:24 AM
ஒட்டகப் பாலுக்கு எங்கே போவது?

கீதம்
06-09-2012, 04:29 AM
பகிர்வுக்கு நன்றி அமீனுதீன். இதைப் படித்ததும் தமிழகத்தில் ஈமு வளர்ப்புப் பண்ணை போல் ஒட்டக வளர்ப்புப் பண்ணைகள் உருவாக்க விளம்பரங்கள் அழைக்கலாம். மக்கள் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

நாஞ்சில் த.க.ஜெய்
06-09-2012, 04:48 AM
ஒட்டக பால் கறந்ததும் உறைந்து விடும் என்பார்கள் அப்படியிருக்க இங்கே அதனை மாத்திரைகளாக கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியம்...பகிர்விற்கு நன்றி அமீனுதீன் ...

கீதம்
06-09-2012, 04:50 AM
ஒட்டக பால் கரைந்ததும் உறைந்து விடும் என்பார்கள் அப்படியிருக்க இங்கே அதனை மாத்திரைகளாக கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியம்...பகிர்விற்கு நன்றி அமீனுதீன் ...

கறந்ததும் தானே உறையும் ஜெய்?

நாஞ்சில் த.க.ஜெய்
06-09-2012, 04:52 AM
எழுத்து பிழை கவனிக்கவில்லை ..சுட்டி காட்டியதற்கு நன்றி அக்கா..

A Thainis
06-09-2012, 07:10 AM
நம்மை பெரிதும் மிரட்டும் நோய்களில் சர்க்கரை மிகவும் கொடுமையாக அமைந்துள்ளது, புதிய மருந்து கண்டு பிடித்தாலும், நோய் தாக்காமல் இருக்க நமது உணவு வகைகள் கலப்பிடமின்றி வழங்கப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

அமீனுதீன்
08-09-2012, 01:20 PM
வளைகுடா நாடுகளில் Super market ல் ஒட்டக பால் தாராளமாக கிடைக்கின்றன