PDA

View Full Version : வாழும் ஆசான் வள்ளுவன் - வள்ளுவம்



A Thainis
05-09-2012, 06:30 AM
இருவரிகளில் - ஓர்
இலக்கிய இமயம்
அறம் பொருள் இன்பம் - என
வகுத்த வாழ்வியல் காவியம்

இவ்விகம் ஒன்றே - இங்கே
வாழ்ந்திடும் யாவரும் ஒன்றே
நீதியும் ஒன்றென என்றே போற்றிடும்
உலக பொதுமறை இதுவன்றோ

பொருள் ஈட்டி வாழ் - இல்லாருக்கு
ஈகை செய்திடுக இல்லறம் துறவறம் பொருள்படவாழ்ந்திடுக - என
உண்மைதனை சாற்றிடும் அற நூல்

கற்றலில் மானிடர் உயர்ந்திடுக - நீவிர்
கல்லாமை கயமை கலைந்திடுக
முயற்சிதனில் என்றும் வென்றிடுக - என்றே
கல்வி பாடும் திருநூல் திருக்குறள்

வான் புகழ் வள்ளுவன் வடித்தெடுத்த
தேன்தமிழ் தெவிட்டாத திரவியம் - காலம்
வாழும் வரை மாந்தருக்கு வழிகாட்டும் - என்றுமே
இப்புகழ்நூல் பூமிதனில் நின்றிடும்


உலகும் வாழும் வரை சிறந்த ஆசிரியராய் திகழ்ந்து வையகம் வாழ வழிகாட்டும் அறிஞற்கு எல்லாம் அறிஞான தெய்வ புலவன் தமிழ் புனிதன் அய்யன் திருவள்ளவர் பெயரால் நல்வழி காட்டி நன்மைதனை விதைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர் நாள் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
05-09-2012, 07:31 AM
உலகம் அறிந்து கொள்ள கல்வியெனும் ஒளி தேவையென்றறிந்து தந்தை சுட்டி காட்டி என்னுள் இருந்த திறமையினை வெளிகொணர்ந்த என் ஆசிரியருக்கு இந்த இனிய நாளில் என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் ..இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

கீதம்
05-09-2012, 10:34 AM
வாழ்வியலை அறம், பொருள், இன்பத்துள் அழகாய் கட்டம் கட்டிக் காட்டிய திருக்குறள் போற்றும் கவிதை அழகு.

வாழும் ஆசான் வள்ளுவனுக்கான கவிமாலைக்குப் பாராட்டுகள் தைனிஸ்.