PDA

View Full Version : என்ன ஒரு வர்ணனை ..!!!



reena
04-09-2012, 02:36 PM
மிகையின்றி, குறையுமின்றி
அளவான அளவுடைய
அழகான கரும் போர்வை
உன் கார்கூந்தல் ...

நிலவுமகள் மண்ணிறங்கி
வருவதற்க்கு ஆசைகொண்டால்
தற்காலிகமாய் தங்குமிடம்
உன் நெற்றி ...

வானத்திர்க்கே ஒன்றுதான்
உன் முகத்திற்கு மட்டும்
இரு கருநிறவானவில்
உன் புருவங்கள் ...

மானினமே மேன்மைபெற
மிளிர்ந்திடும் தன்மையுடன்
படைக்கப்பட்ட ,கண்களின் மாதிரி
உன் கண்கள் ...

உன் மான்விழிகளை கண்டு
நாணத்தினில் தலைகீழான
ஏழாம் எண் போன்றது
உன் மூக்கு ...

கோவை பழ இனமே
கோவத்தினில் கோவப்படும்
கொஞ்சும் இருக்குவியல்களாய்
உன் இதழ்கள் ...

மன்னவனின் முன்னிலையில்
கண்ணகி உடைத்த சிலம்பினில்
சிதறிய மாணிக்க பரல்கள்
உன் பற்கள் ...

பாலுடன் தேனும் கலந்து
நன்றாய் காய்ச்சிய பாகினில்
ஊறிய இரு பண்கள்
உன் கன்னங்கள் ...

ஒன்றன்பின்வொன்றாக அழகின்
பிரதான பிரதிநிதிகளாய்
அணிவகுக்கும் அழகுகளை
அப்படியே, படித்துவைத்தால்
தமிழுக்கு தவறிய
ஆறாம் பெருங்காவியம் அவள்

மாறாக ,படிக்காமல்,
வடித்து வைத்தாலோ
ரவிவர்மனின் தூரிகைக்கு
வாய்க்காத, மிளிர்ந்திடும்
வசீகர ஓவியம் அவள் ....

கலைவேந்தன்
04-09-2012, 02:48 PM
அழகான வர்ணனை. கவிதைத்தலைப்பையே வியப்புடன் மீளவும் மொழிவதாய் அமைந்த கவிதை. பாராட்டுகள்.

jaffy
04-09-2012, 03:01 PM
//மிகையின்றி, குறையுமின்றி
அளவான அளவுடைய
அழகான கரும் போர்வை
உன் கார்கூந்தல் ...//

இதனை கண்ணதாசன் சொல்லியிருக்கார்

//நிலவுமகள் மண்ணிறங்கி
வருவதற்க்கு ஆசைகொண்டால்
தற்காலிகமாய் தங்குமிடம்
உன் நெற்றி ...//

இதனை சங்க இலக்கியத்தில் பிறைநுதல் என்று சொல்வார்கள்

//வானத்திர்க்கே ஒன்றுதான்
உன் முகத்திற்கு மட்டும்
இரு கருநிறவானவில்
உன் புருவங்கள் ...//

இதனை நம் மன்ற நண்பர்கள் கூட எழுதியிருக்கிறார்கள்

//மானினமே மேன்மைபெற
மிளிர்ந்திடும் தன்மையுடன்
படைக்கப்பட்ட ,கண்களின் மாதிரி
உன் கண்கள் ...//

கண்ணதாசன் இதையும் எழுதியிருக்கார், அவர் எழுதியன் பொருளே வேறு

//உன் மான்விழிகளை கண்டு
நாணத்தினில் தலைகீழான
ஏழாம் எண் போன்றது
உன் மூக்கு ...//

இதனை வைரமுத்துக்கால கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்

//கோவை பழ இனமே
கோவத்தினில் கோவப்படும்
கொஞ்சும் இருக்குவியல்களாய்
உன் இதழ்கள் ...
//

மீண்டும் கண்ணதாசன்

//மன்னவனின் முன்னிலையில்
கண்ணகி உடைத்த சிலம்பினில்
சிதறிய மாணிக்க பரல்கள்
உன் பற்கள் ...//

இதனை நம் மன்ற நண்பர்கள் கூட எழுதியிருக்கிறார்கள்

//பாலுடன் தேனும் கலந்து
நன்றாய் காய்ச்சிய பாகினில்
ஊறிய இரு பண்கள்
உன் கன்னங்கள் ...//

இது பொருந்தவில்லை

//ஒன்றன்பின்வொன்றாக அழகின்
பிரதான பிரதிநிதிகளாய்
அணிவகுக்கும் அழகுகளை
அப்படியே, படித்துவைத்தால்
தமிழுக்கு தவறிய
ஆறாம் பெருங்காவியம் அவள்
//

இதனை பாரதி காலத்தில் இருந்து திரும்ப திரும்ப எழுதி புதுக்கவிதை கவிஞர்கள் தேய்தார்கள்

//மாறாக ,படிக்காமல்,
வடித்து வைத்தாலோ
ரவிவர்மனின் தூரிகைக்கு
வாய்க்காத, மிளிர்ந்திடும்
வசீகர ஓவியம் அவள் .... //

இதுவும் பழையதுதான்

எல்லாமே முன்பே வாசித்தவைகள், கேட்டவைகள்

கண்ணதாசன் மான் விழி என்று சொல்லுவார், மானை போல துரு துரு வென்று அலைவன என்ற அர்த்தத்தில், அந்த வகையில் உவமை பொருந்தவில்லை

புதிதாய் முயற்சிக்கலாமே, வாழ்த்துக்கள்

kulakkottan
04-09-2012, 04:36 PM
அங்கங்கே ரசித்த அழகாய் எல்லாம் !அவள் முகத்தில் ஏற்றி விட்டுருக்கும் அழகான கவிதைகள் !

கடைசி இரு பந்திகளில் மட்டும் அவள் என்று வர்ணிப்பது! கொஞ்சம் இடிக்கிறது !நீ ->>> அவளாய் மாறியது !

தொடர்ந்து எழுதுங்கள் !

A Thainis
04-09-2012, 06:07 PM
அழகு வரிகள் கொண்டு தங்க சரிகையால் பின்னப்பட்ட மின்னிடும் இன்பக் கவிதை வாழ்த்துக்கள்.