PDA

View Full Version : ஒரு மொக்க கத.தீபா
04-09-2012, 07:56 AM
ஒரு கல்யாண விருந்துக்குப் போயிருந்தேன், பழைய நண்பர்களையெல்லாம் பார்த்து பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சநேரம் கழிச்சி சாப்பிட மாடிக்கு அழைத்தார்கள். அந்த நேரத்தில் ஒரு சிறு உரையாடல். ஒரு தற்பெருமை பதிவுதான். பொருத்துக்கொள்ள்ங்கள்.

நான், “ஏய், நீ vegஆ non vegஆ என்று கேட்டேன். :wub:

ஒருத்தி சொன்னாள் ”நான் வெஜ்”

“நான் வெஜ்ஜா? அப்படின்னா நாம தனியா போய்டலாம்”

“இல்லடி.. நான் வெஜ்ஜு”

“சரிடி. அதான் சொல்லிட்டல்ல? nonvegனு”

“அய்யோ, இவளுக்கு எப்படி புரியவைக்கிறது? நானூ.... வெஜ்ஜு..”

“நான்வெஜ்ஜுங்கிறத ஏன் இப்படி இழுத்து சொல்ற?”

இன்னொருத்தி வந்தாள்... “ஹேய்.. இரு... நான் கேக்கிறன்,.. non non veg. இப்ப சொல்லுடி”

"ஓ!! நீ non veg ஆ? ”

”அய்யோ...” :medium-smiley-100:

இன்னொருத்தி வந்தாள்.. “ இவகிட்ட இப்ப நான் பேசறன்பாரு. “ நாங்கள்லாம் அசைவம்” இப்ப என்ன பண்ணுவ?”

“நீங்க அசைஞ்சாலும் சரி அசையாட்டாலும் சரி, vegஆ non vegஆ?"

”அட ராமா... ஏன் இந்தமாதிரி பண்ணாடைங்களோடல்லாம் என்னை கூட்டு சேர வைக்கிற?”

“வெஜ்ஜிலதான் கூட்டு வைப்பாங்க”

“ஹீ..... கழுத்தை நெருச்சி கொன்னுருவேண்டி... மொதல்ல மொக்கய நிருத்து”

“non vegலதான் கோழியோட கழுத்தை நெரிப்பாங்க.. அப்ப நீ non vegஆ?”

“நாங்க சைவம்டி” - விடறதாயில்ல. :Christo_pancho:

“அப்ப எப்படி nonveg சாப்பிடுவ? சைவமாருங்க சாப்பிடமாட்டாங்களே..”

“ஹீஹு.....’” பல்லை நெருவிட்டு குதிரை மாதிரி கனச்சா.

“ஏய்.. அப்பறம் என்னதான் சொல்றதாம்?” கோவம் கொண்டை மேல ஏறிடுச்சு :sauer028:

“மக்குகளா... வெஜ் ஒன்லின்னு சொல்லிட்டு போகவேண்டியதுதானே?” - இது இன்னொருத்தி.

“ஆமால்ல..” :medium-smiley-088:


நான் nonveg சாப்பிட்டுட்டு வெஜ் சாப்பிட்டிருந்த நண்பர்கள் பக்கம் வந்தேன்.

“ஹேய், வெஜ்ஜில ஏன் கூட்டு வைக்கிறாங்க தெரியுமா?” என்றேன்.

“:violent-smiley-010:ஓடிப்போயிரு.. இல்லாட்டி இந்த கரண்டியிலயே அடிச்சு கொன்னுடுவேன்” என்றாள்... பாவம்.

நம்ம தமிழ்புலமையை கொண்டாடறதுக்கு தமிழ்நாட்டுல ஆளுங்களே இல்லையா?:medium-smiley-045:

-தீபா.

மதி
04-09-2012, 07:58 AM
கொல்லாமவிட்டாய்ங்கன்னு சந்தோஷப்படுங்க.

தீபா
04-09-2012, 08:02 AM
கொல்லாமவிட்டாய்ங்கன்னு சந்தோஷப்படுங்க.

இந்தமாதிரி இன்னும் செல மொக்கய்ங்க இருக்கு. அப்பப்ப நூலிழையில தப்பிச்சிடுவேன்.

கீதம்
04-09-2012, 08:03 AM
ஆஹா... உங்க பதிவு படித்து இருபது வருடம் முன்னால் போய்விட்டேன். என்னைப் பெண்பார்க்க வந்தபோது நம்ம கலையரசி அக்கா என்னைக் கேட்டாங்க, 'உனக்கு என்வி பிடிக்குமா, கீதா?' கொஞ்சநேரம் திருதிருவென விழித்தேன். envy எப்படிப் பிடிக்கும்? அப்புறம்தான் புரிந்தது Non veg என்பதைத்தான் அப்படிக் கேட்கிறார்கள் என்று. ஒருவழியாய்ப் புரிந்துகொண்டு பதிலளித்தேன். அந்த நிகழ்வு நினைவுக்கு வந்துபோகிறது.

aren
04-09-2012, 08:17 AM
உங்களை எப்படி வெளியே விட்டார்கள். அப்பா, செம்ம மொக்கையா இருக்கீங்க. மொக்கை மகாராணி என்ற பட்டம் கொடுக்கலாம்.

jayanth
04-09-2012, 08:37 AM
சூப்பர் மொக்கைங்க...!!!

அமீனுதீன்
04-09-2012, 09:50 AM
எப்பாஆஆஆ, படிக்கும் போதெ கண்ணெ கட்டுதே.

த.ஜார்ஜ்
04-09-2012, 09:53 AM
இப்படிதான் சில மேதாவிகளை உலகம் கண்டுகொல்வதே இல்லை.

A Thainis
04-09-2012, 11:50 AM
தீபா உங்க கதைதான் மொக்க ஆனா உங்க தலைப்பு சூப்பர், போங்க நல்ல கலாய்ச்சிடிங்க.

தீபா
04-09-2012, 12:28 PM
ஆஹா... உங்க பதிவு படித்து இருபது வருடம் முன்னால் போய்விட்டேன். என்னைப் பெண்பார்க்க வந்தபோது நம்ம கலையரசி அக்கா என்னைக் கேட்டாங்க, 'உனக்கு என்வி பிடிக்குமா, கீதா?' கொஞ்சநேரம் திருதிருவென விழித்தேன். envy எப்படிப் பிடிக்கும்? அப்புறம்தான் புரிந்தது Non veg என்பதைத்தான் அப்படிக் கேட்கிறார்கள் என்று. ஒருவழியாய்ப் புரிந்துகொண்டு பதிலளித்தேன். அந்த நிகழ்வு நினைவுக்கு வந்துபோகிறது.

இருபதுவருடம் முன்னால் போனீங்கன்னா அறுபது வயது ஆயிடுமே?? (நீங்களே சிக்கிட்டீங்க்ளா?) :lachen001:
என்வின்னதும் நீங்க நோவி, ஒன்லி நான்வி ந்னு சொன்னீங்கலா? :confused:


உங்களை எப்படி வெளியே விட்டார்கள். அப்பா, செம்ம மொக்கையா இருக்கீங்க. மொக்கை மகாராணி என்ற பட்டம் கொடுக்கலாம்.

ஒருநாள் உங்க வீட்டுக்கு வந்து செம மொக்க போடறேன் பாருங்கன்னா, அப்பத்தெரியும் இந்த தீபா யாருன்னு. :wuerg019::wuerg019:


சூப்பர் மொக்கைங்க...!!!

தாங்ஸுங்க :icon_b:


எப்பாஆஆஆ, படிக்கும் போதெ கண்ணெ கட்டுதே.

கண்ணை கட்டுச்சுன்னா அவிழ்த்துட்டு பாருங்க.... :aetsch013:


இப்படிதான் சில மேதாவிகளை உலகம் கண்டுகொல்வதே இல்லை.

காணாமகொல்றதுங்கறது இதுதானா? :mad:


தீபா உங்க கதைதான் மொக்க ஆனா உங்க தலைப்பு சூப்பர், போங்க நல்ல கலாய்ச்சிடிங்க.

இது நாக்கல்தானே? :icon_cool1: நன்றிங்க தாய்னீஸ் (இதுக்கு என்னங்க அர்த்தம்?:icon_hmm:)

கீதம்
04-09-2012, 12:44 PM
இருபதுவருடம் முன்னால் போனீங்கன்னா அறுபது வயது ஆயிடுமே?? (நீங்களே சிக்கிட்டீங்க்ளா?) :lachen001:

நீங்க கணக்குல புலிதான். ஒத்துக்கறேன். கி.மு. அப்படின்னு சொன்னால் கி.பி. கணக்கில் எடுத்துக்கொள்வீர்களோ?


என்வின்னதும் நீங்க நோவி, ஒன்லி நான்வி ந்னு சொன்னீங்கலா? :confused:

அப்படியெல்லாம் எடக்கு மடக்கா பேசியிருந்தா, துணிந்து என்னைத் தன் தம்பி மனைவியாய்த் தேர்ந்தெடுத்திருப்பாங்களா?

தீபா
04-09-2012, 01:19 PM
நீங்க கணக்குல புலிதான். ஒத்துக்கறேன். கி.மு. அப்படின்னு சொன்னால் கி.பி. கணக்கில் எடுத்துக்கொள்வீர்களோ?நாங்க எப்பவுமே ADயும் BCயும் தான் உபயோகப்படுத்துவோம்.........

கலைவேந்தன்
04-09-2012, 01:46 PM
கோயமுத்தூர் குசும்புன்றது இதானா..? யப்பா.. தாங்க முடியல.. ஆனாலும் ரசிக்கும்படி இருந்திருச்சு. தாங்ஸுங்க..

( இப்படி எல்லாம் deepa யோசிக்கிறதாலதான் Deepa அப்படின்னு பேரு வைச்சாய்ங்களோ..? )

kulakkottan
04-09-2012, 04:28 PM
வடிவேலின் வட்ட செயலாரல் போஸ்ட் ஐ நிரப்ப தீபா தயார் ஆகிடீங்க போல?

நாஞ்சில் த.க.ஜெய்
05-09-2012, 06:22 AM
கோயமுத்தூர் குசும்பு அருமை ..இப்பாடி மற்றவங்கள தீய காய்ச்சிரதனாலாதான் "தீ"பா ன்னு பேரு வச்சுருக்கிறாங்க போல ...

சுகந்தப்ரீதன்
05-09-2012, 02:07 PM
நம்ம தமிழ்புலமையை கொண்டாடறதுக்கு தமிழ்நாட்டுல ஆளுங்களே இல்லையா?:medium-smiley-045:

-தீபா.அட நீங்க வேற... தீபா மாதிரி தீவிர தீவட்டிகள் இருக்குறவரைக்கும் மொக்க கட்சியின் முன்னேற்றத்தை தமிழ்நாட்டுல யாரும் தடுத்துநிறுத்த முடியாது நுல ஊர்ல பேசிக்கிறாங்க..:lachen001::lachen001::lachen001:

sarcharan
15-09-2012, 07:14 AM
குழந்தைக்கு எங்க மொட்டை அடிச்சாங்க... தலையிலதான்

சுஜா
18-09-2012, 12:25 PM
சூப்பர்ங்க..

arun
17-10-2012, 02:52 PM
மொக்கைகள் சம்பந்தபட்டவர்களுக்கு மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கும் கண்டிப்பாக அருகில் ஏதேனும் க்ரூப் இருந்தால் கடுப்பாகி இருப்பார்கள் ! ..