PDA

View Full Version : நீங்கள் கேட்டவை - முடிவுக்குப் பின்மதி
03-09-2012, 11:41 AM
பரபரப்பாக கணினி முன் வந்தமர்ந்தான் அவன். கணினியில் சாட் விண்டோ ஒளிர்ந்தது. 'வந்துவிட்டாள் என்னவள்'. மனம் பரபரத்தது. இரண்டு மாதமாக இப்படித் தான். அவளுடன் சாட் செய்வதே அவன் பொழுதுபோக்கு. வேலை நேரத்திலும் சரி, வீட்டுக்கு வந்தாலும் சரி. எந்நேரமும் அவளுடன் சாட்டிங் தான்.

இரண்டு மாதத்திற்கு முன் ஒரு நாள் அவனுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. 'எங்கே இருக்கிறாய்? இன்னும் கோவமா?'. ஒரு பெண்ணின் பெயர். யாரென்று தெரியவில்லை. ஆவல் உந்த பதிலனுப்பினான். 'நீங்க யார்?". நிமிஷத்தில் பதில் வந்தது. 'மன்னிக்கவும் எழுத்துப்பிழை. என் தோழிக்கு அனுப்புவதற்கு பதிலாக உங்களுக்கு வந்துவிட்டது'. பரவாயில்லை என்று விட்டுவிட்டான். இரண்டு நாள் கழித்து நேரம் ஒழியா ஒரு வேளையில் மடலனுப்பினான்.

'தோழியின் கோவம் தீர்ந்ததா?'.

இரண்டு மணிநேரத்தில் பதில் வந்தது. 'ஓ. தீர்ந்தது. எங்களுக்குள் சின்ன பிரச்சனை. இப்போது சரியாகிவிட்டது'. அத்துடன் சிரிக்கும் ஒரு ஸ்மைலியும் அனுப்பினாள். உள்ளுக்குள்குள் ஆவல்.

'யாராயிருக்கும் அவள்'. மெயிலுடன் இணைந்த சாட்டில் தேடினான். செய்தியும் அனுப்பினான். பதில் வந்தது. அன்று முதல் ஆரம்பித்தது அவளுடன் இந்த நட்பு. இணைய நட்பு.

ஆரம்பம் முதலே சின்ன சந்தேகம் இருந்தது. இது பெண் தானா? அவள் வார்த்தைகள் பெண் பேசுவதைப்போலவே இருந்தது. ஆயினும் நம்பமுடியவில்லை. புகைப்படத்தை அனுப்ப சொன்னான். அவள் மறுத்துவிட்டாள்.

'தெரியாதவரிடம் புகைப்படம் தரவியலாதென்றாள்'.

நாளாக நாளாக நட்பு இறுகியது. அன்றாடம் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள தொடங்கினான். அவளும் அதே போல். கல்லூரியில் படித்தது, ஆசிரியர்களுடன் பேசியது, சினிமாவிற்கு சென்றது என. அவளின் சொந்த விவரங்களைத் தவிர அனைத்தையும் பகிர்ந்துகொண்டாள். சிறிது நாள் கழித்து கேட்டான்.

'உன்னுடன் வாய்ஸ் சாட்டிங்காவது செய்யலாமா?' மறுப்பேதும் இல்லை. அன்று இரவு பேச முடிவுசெய்தனர். குரல் கம்மிவிடக்கூடாது என்று பனங்கல்கண்டு பாலெல்லாம் குடித்தான். இரவுவேளையும் வந்தது. வாய்ஸ் சாட்டுக்கு முன் மைக் சரியாக வேலை செய்கிறதா என்று சோதனை செய்தான். படபடக்கும் இதயத்துடன் புது நபரின் குரலைக்கேட்கப்போகும் ஆவல். நடுங்கும் விரலுடன் மைக்கை ஆன் செய்தான். மறுமுனையில் சிறிதே பதட்டமான ஒரு இனிய பெண்குரல்.

"ஹலோ.."

வெண்ணெய் போல வழுக்கிச் சென்ற குரலில் இவனும் விழுந்தான். ஆயிரம் முறை பயிற்சி செய்திருந்த வார்த்தைகள் வரவில்லை.

"ஹலோ". குரல் நடுக்கம் நன்றாக உணர முடிந்தது. சிறிது சிறிதாக படபடப்பு குறைந்து பேச ஆரம்பித்தான். அன்றிரவே அந்த குரல் மீது காதல் கொண்டான்.

காதல் வந்தாலே காகம் கூட குயில் போல பாட முயலும் போது இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?

அதனால் அந்த விபரீதமும் வந்தது...

கீதம்
03-09-2012, 12:08 PM
விபரீத விளையாட்டுதான் போலும். தொடரும் விபரீதம் என்னவென்று அறியும் ஆவலில் காத்திருக்கிறேன்.

மதி
03-09-2012, 12:09 PM
தொடரும் விபரீதங்கள் என்னவென்று எனக்கே தெரியல.. :)

A Thainis
03-09-2012, 12:14 PM
"காதல் வந்தாலே காகம் கூட குயில் போல பாட முயலும் போது இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?"

அழகு அழகு வர்ணனை, வாழ்த்துக்கள் மதி, காத்திருக்கிறோம் ஆவலுடன் என்ன அந்த விபரீதம்.

மதி
03-09-2012, 12:38 PM
நன்றி தைனிஸ்.

தீபா
03-09-2012, 01:01 PM
தலைப்பே பல அர்த்தம் சொல்லும் போலிருக்கே...

நல்லாயிருக்குங்க மதி. வழக்கமான காதல் கதை என்றாலும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்குது. ட்விஸ்ட் வைக்க்றீங்க.
விபரீதம் என்னன்னு தெரின்ச்ஜுக்க ஆவலா இருக்கேன்.

தீபா.

மதி
03-09-2012, 01:06 PM
நன்றி தீபா. தொடருங்கள். வித்தியாசமான கதையானு எனக்கு தெரியாது.

மதி
03-09-2012, 01:38 PM
பாகம் 2:

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவர்கள் சாட்டிங் தொடர்ந்தது. அவளுக்கும் தன் மீது விருப்பு இருப்பதை அறிந்து கொண்டான். தன் காதலை என்றேனும் வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கினான். அவனுக்கேற்றார் போல் விதியும் தன் இஷ்டம் போல் சதி செய்தது. நாள் முழுக்க அந்த குரல் நினைவிலேயே காலம் தள்ளலானான்.

அவனுக்கு சரியாக தெரியவில்லை. அது சித்ராவின் குரலா, சுசீலாவின் குரலா அல்லது ஜானகியின் குரலா என்று. எல்லாம் கலந்த கலவைப் போன்றிருந்தது அக்குரல். நாளடைவில் குரலுக்காக மனம் ஏங்கியது. முதல் முறை பேசியபின் அவள் பேசவில்லை. மறுபடி வாய்ஸ் சாட்டிங்கு வற்புறுத்தலானான். அவளும் சிறிது சிணுங்கலுக்குப்பின் ஒத்துக் கொண்டாள்.

நேரமும் வந்தது. இம்முறை அவனுக்கு தைரியமும் அதிகமாயிற்று.

"ஹலோ.." வழமையான வெண்ணெய் குரல். தன் நா உலர்ந்து போவதையுணர்ந்தான்.

"ஹலோ.. எப்படி இருக்கீங்க?" மறுமுனையும் சின்னதாய் சிரிப்பு. கேட்கும் போதே அவ்வளவு அழகாய் தோன்றியது. 'நேரில் அவள் சிரிப்பதை பார்க்க வேண்டும். முத்துப்பற்கள் தெரிய சிரிப்பாளா.. இல்லை அவை பொக்கிஷங்களென யாவருக்கும் காணக்கிடைக்காமல் நகைப்பாளா?'. பார்க்க வேண்டும் என்ற ஆவல் இன்னும் உந்தியது.

"ஏன் சிரிக்கறீங்க?"

"ஹலோ சொல்லி பதில் சொல்ல இவ்ளோ நேரமா?". நெருக்கமாய் உணர்ந்தான்.

"அப்படி இல்லே. உங்க குரல கேட்டுக்கிட்டே இருக்கணும் போலிருந்தது அதான்."

"அப்போ என் குரல ரெக்கார்ட் பண்ணி அனுப்பறேன். கேட்டுக்கிட்டே இருங்க." அவள் கேலி புரிந்தது. மனம் கூண்டில் சிக்கிய கிளி போல சின்னாபின்னப்பட்டது. 'பேச்சிலேயே கொல்கிறாளே'

"அது வந்து..."

"ஏங்க. டைப் பண்ணும் போது மட்டும் சகஜமா பேசறீங்க. இப்போ பேசும் போது அநியாயத்துக்கும் கூச்சப்படுறீங்க". தன்னிலை உணர்ந்தான். வியர்த்துக் கொட்டியது.

"அதுவா. நான் பெண்கள்கிட்ட அதிகமா பேசியது கிடையாது. அதுவும் முகம் தெரியாத பொண்ணுக்கிட்ட முதல் தடவையா உங்ககிட்ட தான்."

"ஓ.. நான் யாருன்னே தெரியாமல் நிறைய பேர்கிட்ட பேசிருக்கேன்."

அந்த மற்றவர்கள் மீது அவனுக்கு கொலைவெறி வந்தது. ஆனாலும் என்ன செய்ய.

"அப்படி எத்தன பேர தெரியும்?"

"சும்மா.. ஹாய் பை.. அவ்ளோ தான். அதிகபட்சமா ஒரு தடவை ரெண்டு தடவ பேசிருப்பேன். நல்லா வழிவானுங்க. டாட்டா காமிச்சிடுவேன்"

'அப்போ நான்னு'. கேட்கத் தோன்றியது.

"என்னை பத்தி என்ன நினைக்கறீங்க?"

"நான் சாட் பண்ணினதிலேயே நீங்க ரொம்ப ஸ்வீட். கண்ணியமா பேசறீங்க. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு."

வானத்துல மேல மேல பறந்து போற மாதிரி தோன்றிற்று. முடிவேயில்லா வானவெளியில் பறந்துகொண்டே இருந்தான். ஆகாயபிம்பங்கள் கரைய கரைய முடிவிலியாய் இருக்கும் வானின் முடிவு தேடி பறந்து கொண்டே இருந்தான். அவளின் குரல் மறுபடியும் அவனை நினைவுக்கு கொண்டு வந்தது.

"இருக்கீங்களா..?"

"இருக்கேன்.. இருக்கேன்.."

அப்புறம் தொடர்ந்தது சம்பாஷணை. முடிக்கும் போது அதிகாலை மணி மூன்று. மூன்று மணி நேரமே தூக்கம். ஆயினும் எழுந்த
போது புத்தம் புதிதாய் பூத்த ரோஜா பூவிதழ் மாதிரி மனமும் உடலும் புத்துணர்ச்சியோடிருந்தது. அவளின் மீதான காதல் முன்னிலும் அதிகமானதாய் தோன்றியது. பார்க்கும் எதுவுமே அழகாய் தோன்றுகிறது. காதல் பற்றி கவிஞர்கள் பாடியது உண்மை தான் போலும்.

அன்றைய நாள் முடிவில் முடிவெடுத்திருந்தான். அடுத்த முறை பேசும் போது தன் காதலை தெரிவிப்பதென்று. அதற்கு நாளும் குறித்தான்.

அந்த நாளில்....

kulakkottan
03-09-2012, 03:05 PM
பரபரப்பாய் இருக்குது !அடுத்த பகுதியை எதிர்பாக்கிறேன் !

மதி
03-09-2012, 03:39 PM
நன்றி குளக்கோட்டன்.

A Thainis
03-09-2012, 07:38 PM
நீங்கள் கேட்டவை பாகம் 2 , பரவசம், அழகு வார்த்தைககளை அள்ளி தெளித்து சாட்டிங்கை சாப்டாக்கி இருக்கிறார் மதி, தொடரட்டும் நீங்கள் கேட்டவை நாங்களும் கேட்கிறோம்.

மதி
04-09-2012, 12:29 AM
தன்னை நன்றாக தயார்படுத்திக்கொண்டிருந்தான் அவன். கண்ணாடிமுன் பல தடவை நின்று பேசிப்பார்த்தான். தன் குரலை பதிவு செய்து திரும்ப திரும்ப கேட்டுப்பார்த்தான். எந்நெந்த இடத்தில் இன்னும் மென்மை சேர்க்கணுமோ அதையும் சேர்த்தான்.

அன்றிரவு அவள் வந்தாள். வழக்கமான ஹலோக்கள்.

இதயம் படபடக்க காதல் சொல்ல நேரம் பார்த்திருந்தான்.

"ஹே.. இவ்வளவு தூரம் பேசி புரிஞ்சப்பின்னும் இன்னும் முக காட்டவில்லையே?" துணிந்து கேட்டுவிட்டான்.

"என்னை முழுமையா புரிந்தவரா நீங்கள்?" ஒரு எள்ளல் தெரிந்தது அவள் தொனியில். உண்மையில் பெண்மையை முழுவும் அறிந்தவர் யாருலர்.

"அப்படி இல்லே. இவ்ளோ நெருங்கிட்டோம். இன்னும் முகத்த காட்டாமலேயே ஏன்?"

"சில சமயங்கள் முகம்கூட தடையாயிடும் நல்ல் நட்புக்கு"

"அப்படி இல்லே. முகம் ஒரு அடையாளம். குரலுக்கு ஒரு உருவம் பொருத்திப் பார்க்கறது. உன் குரலுக்கு எத்தனையோ ஹீரோயின்களின் முகம் ஒட்டிப்பார்க்கிறேன். எதுவுமே ஒட்டவில்லை."

"அடடே. கவித்துவமால்லாம் பேச ஆரம்பிச்சிட்டீர்."

நேரம் நெருங்கிவிட்டது.

"மனசுக்கு பிடித்தவர்களுடன் பேசினால் அதெல்லாம் தானா வருது. அப்படி தான் நீயும்."

"என்ன பேச்சு மாறுது போல" சந்தேகம் நிறைந்தது அவள் தொனியில். இருந்தாலும் பைத்தியமாய் இருப்பதைக்காட்டிலும் கேட்டுவிடலாம்.

"உண்மை தான். பித்தன் போலாகிறேன் உன்குரலில். ஏனோ தெரியல. நாம பகிர்ந்துக்கிட்ட விஷயங்கள், எல்லாமே எதையோ நோக்கி செலுத்தற மாதிரி இருக்கு. ஒரு வேளை இது காதல் தானானு தெரியல. உனக்கு ஏதாச்சும் இந்த மாதிரி தோணுதா?"

சப்பைக்கட்டுகட்டி காதலை தெரிவித்துவிட்டமாதிரி உணர்ந்தான். தயார் செய்தது என்னவோ நடந்தது என்னவோ.

மறுமுனையில் மவுனம். சற்றுநேரம் கழித்து செருமும் சத்தம்.

"உங்களுக்கு ஏன் இப்படி தோன்றியதுனு தெரியல. ஆனா நான் நீங்க நினைக்கற மாதிரியில்ல"

"வேற எந்த மாதிரி?" கொஞ்சம் கொஞ்சமாய் சுயசிந்தனைகளை இழக்க ஆரம்பித்தான்.

"நான் பேசறது மாதிரி இல்லே. கொஞ்சம் அடாவடி பொண்ணு."

"எங்கேயும் எப்போதும் அஞ்சலி மாதிரியா?"

"இல்லே மை சாஸி கேர்ள் கதாநாயகி மாதிரி. நினைச்சா நினைச்சது கிடைக்கணும். அதுவுமில்லாம எனக்குனு சில கனவுகள் இருக்கு என் காதலைப் பத்தி. அதெல்லாம் பூர்த்தி ஆகுமானு தெரியல"

அவளுக்காக இமயமலை உச்சிக்கு தலைகீழாகவே நடந்து செல்ல தயாராய் இருந்தான். மனசுக்குள் பதட்டம் அதிகமானது. வேறு யாரையும் காதலிக்கிறாளோ.

"எதுவானாலும் பரவாயில்ல. சொல். செய்கிறேன்."

"அதுக்கு முன்னாடி. எனக்கு ஏற்கனவெ இரண்டு காதலர்கள் இருந்தனர். ஆனாலும் அந்த உறவு நீடிக்கல. அவர்களாவே பிரிஞ்சு போயினர். அதான் காதல் என்றாலே வேப்பங்காய் போல இருக்கு."

"கடைசிவரை இப்படியேவா இருக்கப் போகிறாய். எப்படிப்பட்ட காதலன் வேண்டுமென்று எதிர்பார்க்கிறாய். இருக்க முயல்கிறேன்".

அவள் முகம் பார்க்கும் எண்ணம் மீறி தன் காதலை அவள் ஏற்றுக்கொள்ளணும் என்று பைத்தியக்கார எண்ணம் விசுவரூபமெடுத்தது. பெருமூச்சுவிட்டபடி அவள் தொடர்ந்தாள்.

"எனக்கு தமிழ்ன்னா ரொம்ப பிடிக்கும். அதிலும் கவிதைன்னா ரொம்பவே பிடிக்கும். என் காதலர் கவிதை எழுத தெரிந்தவரா இருக்கணும். கவிதை தெரிந்தவர் காதல் தெரிந்தவர்". மனம் திக்கென்றது.

"அப்புறம்.?"

"ரொம்ப பொறுமைசாலியா இருக்கணும். எனக்கு முன்கோபம் அதிகம். அதையெல்லாம் தாங்கும் மனத்திடம் வேண்டும். ஏதாவது சந்தர்ப்பத்தில் என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கணும். உங்களுக்கு பொறுமை அதிகமென்று எனக்குத் தெரியணும்".

ரொம்பவும் குழப்புகிறாளே.

"அதனால நீங்கள் கவிதை எழுதணும். அதுவும் எனக்கான கவிதை ஊர் முழுக்க படிக்கப்படணும். ஏன் உலகம் முழுக்க. இணையத்துல எழுதணும். காதலிக்காக என்னவெல்லாம் செய்கிறாய் பார்னு எல்லோரும் சொல்லணும். இதுக்கு இடையில் என்ன நடந்தாலும் கோபப்படக்கூடாது. எங்கெல்லாம் எழுதறீங்கன்னு சொல்லுங்க அங்கெல்லாம் வந்து படிப்பேன். என் மனதின் அடி ஆழத்தைத் தொடற மாதிரி என்று கவிதை எழுதறீங்களோ, அன்று உங்க காதலை ஏற்கிறேன். புகைப்படம் என்ன நேரிலேயே வருகிறேன்"

மனம் ஆனந்தக்கூத்தாடியது. காதலில் ஜெயிக்கவும் வழி சொல்லிவிட்டாள். ஆனாலும் நெருடல். கவிதை. அது மட்டும் இடித்தது.

தமிழ் படித்துள்ளானன்றி கவிதைகள் பரிட்சயமில்லை. இவளோ நிறைடய படித்திருக்கிறாள் போலும் திருடவும் முடியாது. காதல் அவனை அந்த விபரீத முடிவு எடுக்க வைத்தது. கவிதை எழுத ஆரம்பித்தான்.

விபரீதங்கள் ஆரம்பம்.

கீதம்
04-09-2012, 01:33 AM
ஆஹா... இதைவிட விபரீதம் வேறென்ன இருக்கமுடியும்? கவிதைகள் பற்றி அறியாதவன், கவிதை எழுதப்போகிறான். அதுவும் காதலியைக் கவரும் நோக்கோடு. அவளுக்காக இமயமலை உச்சிக்கே தலையால் நடந்துபோகும் மனத்திடம் உள்ளவனுக்கு கவிதை எழுதுவதெல்லாம் எம்மாத்திரம்? ஆனால் உள்ள(து)ம் தொலையாமல் இருக்க வேண்டுமே. காதல் கைவசப்படுமா? அறிய ஆவல்.

மதி
04-09-2012, 01:47 AM
நன்றி கீதாக்கா. காதல் கைகூடுமானு எனக்கு தெரியல.

ஆதவா
04-09-2012, 06:00 AM
பரபரப்பான அடுத்த கட்டம்... கொரிய நாயகியின் பெரிய கோரிக்கைன்னு உபதலைப்பு கொடுத்திருக்கலாமோ?
ஆக, காதலிக்காக கவிதைங்கற ஆயுதத்தை எடுக்கப் போறான்??? அடுத்து... அடுத்து....

மதி
04-09-2012, 06:09 AM
அந்த நாள் முதல் காதலியே அவன் கண்முன் தோன்றினாள். பார்க்கும் எதிலும் உருவமில்லா அவள் குரலே உருவமாய் தெரிந்தது. இவளாய் இருப்பாளோ அவளாய் இருப்பாளோ என பார்க்கும் பெண்களிடமெல்லாம் அவளைத் தேடினான். அவள் இயற்பெயர் என்னவாயிருக்கும். வித்யா, சித்ரா.. இல்லை இன்னும் நவநாகரிகமாக சாரா, நோரா இப்படி ஏதாச்சும். வேலையை மறந்தான். தன்னிலை மறந்தான். ஏனைய நண்பர்களை மறந்தான்.


கவிதை எழுதணும். எப்படி தொடங்குவது என தெரியவில்லை. நண்பர்களுடனும் தற்சமயம் தொடர்பில்லை. யாரைக் கேட்பது. மறுபடி இணையத்தை நாடினான். தமிழில் கடினப்பட்டு தான் தேர்வில் தேறியிருந்தான். இருந்தாலும் விடாப்பிடியாக தமிழைக் கற்க ஆர்வம் கொண்டான். கற்கும் ஆர்வமாக இல்லாமல் கவரும் ஆர்வமாக இருந்ததே பிழையாயிற்று. பார்த்திலெல்லாம் நுனிப்புல் மேய்ந்தான். கண்ணதாசன் படிக்கும் போதே வைரமுத்துவிடம் பாய்ந்தான். இடையிடையே திரைப்படப்பாடல்கள் வேறு. கவிதையின் உருவம் இப்படித் தான் இருக்குமென்று அவன் மனதில் ஒரு எண்ணம் ஆழமாய் வேரூன்றியது. வார்த்தை ஜாலங்களும் எண்ணத்தை வண்ணத்தை தெறித்தலுமே கவிதை என கொண்டான். நல் வழிகாட்டி இல்லாதது ஒன்றே குறை. நீட்டியும் முழக்கியும் ஒரே வார்த்தையினை திரும்பத் திரும்ப பயன்படுத்தும் வித்தையே கவிதைமுழக்கம் என தப்பர்த்தம் கொண்டான். இணையத்தில் பரவலாய் விரவிக்கிடக்கும் பக்கங்களும் அவனுக்கு தெம்பூட்டின. எது எழுதினாலும் கவிதை என. ஆரம்பித்தது இனி தமிழுக்கு சோதனை.


இணையத்தின் பல தளங்களுக்கும் சென்றான். தன் பெயரை பதிந்தான். அவளிடமும் சொன்னான். அவளை நினைத்து என்னெல்லாம் தோன்றிற்றோ அதெல்லாம் எழுத ஆரம்பித்தான். முதலில் அவன் வார்த்தைகளை மடக்கி எழுத பார்த்தான். சொற்றொடரை வெட்டி வெட்டி எழுதினான். பல இடங்களிலும் படித்த கவிதைகளின் சாயல் இருப்பதாய் தோன்றியது. மனதில் மகிழ்ச்சி வெள்ளம்.


'சரஸ்வதி என்னுள் வந்துவிட்டாள். கவிதை உலகம் இனி என் படைப்புகளுக்கு கெஞ்சும்.'


மனத்தினில் ஏனோ இறுமாப்பு தோன்றியது. அவளால் தான் இத்தனையும் தன்னால் சாதிக்க முடிந்தது என தோன்றியது. எழுத எழுத தன்னை மிஞ்ச யாருமிலர் என்றே நம்ப ஆரம்பித்தான். ஓவ்வொரு முறை அவளைப்பற்றிய கவிதை பதிக்கும் போதும் அவளிடம் சொல்வான். அவள்
அங்கே வந்து படிப்பாள். 'என்ன பெயரில் வருவாள் என்பது அவனுக்கு புரியாத புதிராய் இருந்தது. இணையத்தில் பல தளங்களிலும் அவள் இருக்கிறாள்.'


ஒருமுறை சாட்டிங்கில் கேட்டே விட்டான்.


"நான் எழுதும் கவிதைகளை படிக்கிறாயா?"


"ஓ. படிக்கிறேனே. உன் ஓவ்வொரு கவிதையையும்."


"என்ன பெயரில் வருகிறாய்?"


"அது மட்டும் சொல்ல முடியாது. ஒன்று மட்டும் சொல்வேன். பெண் பெயரில் தான் வருவேன். கவலை வேண்டா".


"இத்தனை கவிதைகளிலும் ஒன்று கூட உன்னை பாதிக்கவில்லையா? எப்போது உன் திருமுகம் காட்டுவாய்?"


கலகலவென நகைத்தாள்.


"இன்னும் காலம் ஆகவில்லை. சற்றே பொறு. உன் கவிதைகள் நல்லா இருக்கிறது. ஆனால் உருக்குவதாய் இல்லை. நீ உருகி அது என்னையும் உருக்குவதாய் இருக்க வேண்டும்."


புரிந்தும் புரியாதது போல் இருந்தது. இரண்டு விஷயங்கள் புரிந்தது. பெண் பெயரில் வருகிறாள். உருவதாய் கவிதை எழுத வேண்டும். எழுதுகிறேன் காதலியே. உன்னையும் உருக்குவேன். அன்றுமுதல் யாரெல்லா பெண் பெயரில் வருகிறார்களோ அவரெல்லாம் அவளாய் இருப்பார்களோ என சந்தேகம் கொண்டான். கருத்திட்டுவிட்டால் அவளே தான் என நம்ப ஆரம்பித்தான். ஒன்றில்லாமல் பல பெண்பெயர்கள் வந்ததால் அதிகமாய் குழம்பினான். குழப்பத்திற்கே பெருங்குழப்பம் வந்தால் என்னாகுமோ அந்நிலையில் அவன்.


'அவளுக்கு பிடித்த மாதிரி கவிதை எழுதணும். அவளைப்பார்க்கணும். அவ்வளவு தான்.' உருகி உருகி எழுத ஆரம்பித்ததன் விளைவு தமிழ் அவனிடம் உருக ஆரம்பித்தது. எதுகைகளும் மோனைகளும் என கட்டவிழ்த்துவிட்டான் தன் வார்த்தைகளை. கண்டு கேட்டு உண்டுயர்த்த
அனைத்து சொற்களும் தமிழென நம்பி பதிவிட்டான். ஐயகோ அதனால் வந்ததே வினை.


அவள் அவனிடம் எதிர்பார்த்த படி பொறுமைசாலியாக இருக்கும் நிலைக்கு தள்ளப்படும் படி அந்த செயல் நிகழ்ந்தது.

அது...

செல்வா
04-09-2012, 06:10 AM
"கவிதையாலே எழுதி காதலிக்கணும்னா கண்ணதாசனையும் வைரமுத்துவையும் தவிர யாரும் காதலிக்க முடியாது" திருமலை பட வசனம் தான் ஞாபகம் வந்துச்சு.

பார்க்கலாம் நம்ம கதைநாயகன் கவிதை நாயகனாகிறாரா நு

தொடர்ந்து எழுதுங்கள் மதி.

மதி
04-09-2012, 06:15 AM
நன்றி செல்வா மற்றும் ஆதவா. நான் எழுதியதிலேயே வேகவேகமாக எழுதிய கதை இது தான். :D

ஆதி
04-09-2012, 07:04 AM
தொடருங்க மதி, அந்த விபரீத கவிதைகளையும் எழுதினா மகிழ்வேன்

தீபா
04-09-2012, 07:08 AM
இணையத்தில் எழுதச் சென்றவன் தமிழ்மன்றத்திலயும் பதிந்திருப்பானோ?? (சும்மா சும்மா) :rolleyes:

அவனோட கவிதை ஏதாவது ஒண்ணு சாம்பிலுக்கு கொடுங்க மதி சார்.:eek:
பிறகு, அவ்னோட பேர் என்னன்னு சொல்லலையே? அவளுக்கு பேரை நாந்தான் வெப்பஏன்

1. மீனாச்சி
2. மேனாகா
3. மோனாலிசா

- தீபா. :)

தீபா
04-09-2012, 07:10 AM
தொடருங்க மதில், அந்த விபரீத கவிதைகளையும் எழுதினா மகிழ்வேன்

என்னாவொரு கோ இன்ஸிடன்ஸ்! :sprachlos020:

மதி
04-09-2012, 07:30 AM
நன்றி ஆதன் மற்றும் தீபா. வில்லங்கத்த விலை குடுத்து வாங்கணும்ங்கறீங்க. ஆனாலும் "கவிதை"கள் கதையோட்டத்திற்கு தடையாய் இருக்கலாம்.. :D

கீதம்
04-09-2012, 07:56 AM
இணையத்தில் எழுதச் சென்றவன் தமிழ்மன்றத்திலயும் பதிந்திருப்பானோ?? (சும்மா சும்மா) :rolleyes:

அவனோட கவிதை ஏதாவது ஒண்ணு சாம்பிலுக்கு கொடுங்க மதி சார்.:eek:
பிறகு, அவ்னோட பேர் என்னன்னு சொல்லலையே? அவளுக்கு பேரை நாந்தான் வெப்பஏன்

1. மீனாச்சி
2. மேனாகா
3. மோனாலிசா

- தீபா. :)


இதில் கடைசி பெயர் ரொம்ப நல்லாயிருக்கு. :) ஒருவேளை...

கீதம்
04-09-2012, 07:57 AM
நன்றி செல்வா மற்றும் ஆதவா. நான் எழுதியதிலேயே வேகவேகமாக எழுதிய கதை இது தான். :D

இதை நான் சொல்ல நினைத்து வந்தேன். நீங்களே சொல்லிட்டீங்க... விறுவிறுப்பாய்ப் போகும் கதைக்குப் பாராட்டுகள் மதி.

மதி
04-09-2012, 07:59 AM
என்னக்கா ஒருவேளை..?

கீதம்
04-09-2012, 08:01 AM
ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்லை....யூ கன்டினியூ...

த.ஜார்ஜ்
04-09-2012, 09:47 AM
கதை செம விறுவிறு...... அடுத்து என்னதான் நடந்திருக்கும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது. தொடருங்கள்.

மதி
04-09-2012, 12:00 PM
தனக்குத் தெரிந்த தமிழில் அர்த்தங்களும் அனர்த்தங்களும் நிறைந்த கவிதைக்கிறுக்கல்களைப் பதிக்கையிலே யார் கண் பட்டதோ தெரியவில்லை. விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. எப்போதும் அவனுக்கு அதிககோபம் வராது. ஆயினும் காதலின் பிடியில் சிக்கியவனுக்கு மனமும் அறிவும் மரத்தது போலிருந்தது. அவளின் நினைவாக எழுதும் கவிதைகள் கண்டவர் கண்பட்டு சின்னாபின்னாமாவதை அவன் விரும்பவில்லை.

இப்படி தான் ஒரு நாள் அவளை நினைத்து மனம் உருகி எழுதினான்.


"மணியே
தனியே
இனியே வா
என் கனியே

முன்பனியே
உன்
விரல்நுனியே
என்னை
விட்டுவிட்டான்
சனியே"

தான் எழுதியதிலேயே ஆகச்சிறந்த கவிதையென இதைக் கொண்டான். எப்படியும் அவள் வருவாள் இதை படிப்பாள் இன்முகம் காட்டுவாளென எதிர்பார்த்து ஏங்கி நின்றான்.

அப்போது தானா அவன் வரவேண்டும். எல்லாம் தெரிந்த கவிஞன் போலும். என்னைவிடவா?! வரிக்கு வரி அர்த்தம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். நான் எழுதிய கவிதை புரியவில்லையாம். இவர்களெல்லாம் கவிஞர்கள் என்று ஏன் வெளியே சொல்லிக் கொண்டு திரிகிறார்களோ? இத்தனை எளிதான கவிதையே புரியவில்லை. பின் சங்க இலக்கியம் எங்கே புரிய போகின்றது. பதில் எழுதினான். '

'காதலியே கண்ணின் மணி போன்றவளே, கனி போல இனிமையானவளே, உன் சுற்றத்தாரை விட்டு என்னுடன் பேச தனியே வா. முன்பனிக்காலை பொழுதில் என்னருகில் நீ இருக்கையில் உன் விரல்நுனியில் ஸ்பரிசம் படும் போது என்னை இதுவரை ஆட்கொண்டிருந்த ஏழரைநாட்டு சனியும் விட்டுவிட்டான். இனி எனக்கு நல்ல காலம் தான். நீ என்னருகில் இருக்கும்வரையில்'

புரியாத மனிதர்கள். எதற்கு புரியவைக்க வேண்டும்? அவளுக்கு மட்டும் புரிந்தால் போதும். இவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை. ஆனால் ஏனோ தெரியவில்லை. அவர்கள் மறுபடியும் விமர்சனம் செய்தனர்.

'காதலியை சனியுடன் ஒப்பிட்ட மாதிரி அல்லவா இருக்கிறது'

அதீத கோபம் வந்தது. தன் கவிதைகளை விமர்சித்ததாலா இல்லை காதலி அந்த விமர்சனங்களையெல்லாம் படித்துவிட்டு தன் கவிதை பிடிக்கவில்லை என சொல்லிவிடுவாளா?.கோபம் இருமடங்காகியது. வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாய் யார் இவர்கள். காதலைப்பற்றி என்ன தெரியும்? இல்லை காதலியைப் பற்றி என்ன தெரியும்? முகம் காணாமல் காத்திருப்பதன் வலி புரியுமா? மனதில் இதுவரை கேட்ட கெட்ட வார்த்தையெல்லாம் உதித்தது. நாகரிகம் கருதி தவிர்த்தான்.

சும்மாவா சொன்னார்கள் விதி வலியது. அவள் அவன் கவிதைகளை படித்தாள். அதிலும் அதற்கு வந்த விமர்சனங்களை இன்னும் படித்தாள். அவனுடன் பேசுகையில்

"உன் கவிதையைப் படித்தேன். ஆனாலும் தெரியவில்லை. ஏனோ ஈர்க்கவில்லை"

நொறுங்கிப் போனான். ரொம்பவே கஷ்டப்பட்டு எழுதியிருந்தான் அந்த கவிதையை. இதுவும் பிடிக்கவில்லை என்கிறாளே. அவர்கள் மேல் கோபம் கோபமாக வந்தது.

"ஏன் பிடிக்கலை?"

"அங்கே எழுதியிருந்தார்களே படிக்கவில்லை. சில இடங்கள் இடறுதென்று. என்று உன் கவிதையை படிக்கும் ஒருவர் விடாமல் பாராட்டி அதிசயிக்கிறார்களோ, என்று எனக்குள்றுன் கவிதை மூலம் பூகம்பத்தை ஏற்படுத்துகிறாயோ அன்று உனைக்காண வருகிறேன்"

முடிந்தது. இனி எத்தனை கவிதை எழுத. அதிலும் அவர்கள் விமர்சனம் என்னும் பேரில் என் கவிதையை சின்னாபின்னமாக்கி வருகிறார்கள். அவர்களை விடக்கூடாது. மனத்தில் ஆத்திரத்தின் அரங்கேற்றம். காதல் போதையின் தள்ளாட்டம். மனதில் தோன்றியதையெல்லாம் கவிதையாய் கிறுக்க ஆரம்பித்தான். அவர்களுடனான போராட்டம் தொடர்ந்தது. தன் கவிதையில் பிழை என்பதை ஒப்ப மனமில்லை. அதிலும் அவர்கள் வாயை எங்கனம் மூடுவது. அதற்கு அவர்கள் வெளியேறினால் தான் உண்டு. சூசகமாக தாக்கி எழுத ஆரம்பித்தான்.

படித்த அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை. அடுத்த முறை அழைக்கையில் சொன்னாள்.

"நீ என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?"

"உனக்கான கவிதைகள். ஏன்?"

"நீ எனக்காக எழுதுவதைக்காட்டிலும் அவர்களுக்காக எழுதுவது போலுள்ளது. என்மீது இன்னும் காதல் உண்டா?"

"சந்தேகமென்ன? உயிர்பிரிந்தாலும் என்காதல் இருக்கும்"

"அப்போ அவர்களே ஒத்துக்கொள்ளும் படி கவிதை எழுத ஏன் தாமதம்? இதில் நம் காதலும் நானும் சிக்கித் தவிப்பது உனக்கு தெரியவில்லையா என்ன?"

மனம் பொறிந்தது. அவர்களால் தான்.

"அது சரி, அவர்களை தாக்கி வேறு எழுதுகிறாய். உன் பொறுமை அவ்வளவு தானா?"

பொறிக்குள் சிக்கிய எலியாய் உணர்ந்தான். இப்போது என்ன தான் செய்வது? இதற்கு முடிவு தான் என்ன? பொறுமை காக்க வேண்டுமானால் அவர்களை எப்படி சமாளிப்பது?


யோசித்து யோசித்து தலைவலித்தது. முகம் தெரியா காதலியும் அவர்களும் அவனை சித்ரவதை செய்தனர். கண் இருண்டது. தலைசுற்றியது. தலையைப்பிடித்து அலறினான். கண்திறந்து பார்த்தாலும் இருட்டாய் இருந்தது. அவன் எதுவுமே புரியாத தெரியாத ஒரு வெளியில் அவன் தூக்கியெறியப்பட்டான்.

(அடுத்த பகுதியுடன் முடியும்)

தீபா
04-09-2012, 12:21 PM
நல்லா போகுதுங்க மதி. கவிதையும் அதற்கு விளக்கமும் நன்றி. அந்த காதலிக்கு அப்படி என்னதான் கவிதைமேல் அவ்வளவு ஆர்வம். பாவம் இந்த காதலன். எழுதத் தெரியாமல் எப்படி எழுதுவானாம்?

அடுத்தபாகம் எதிர்நோக்கி.

Deepa

கீதம்
04-09-2012, 12:47 PM
சனி விட்டதுன்னு நினைத்தால் இன்னும் விடலை போலிருக்கே...

கவிதையும் அதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கமும் ஆஹா.... மதி, நீங்க எங்கேயோ போயிட்டீங்க.

அடுத்து என்ன? ஆவலுடன்...

மதி
04-09-2012, 12:55 PM
நன்றி ஜார்ஜ் அண்ணா, தீபா அக்கா மற்றும் கீதா அக்கா..

கீதாக்கா.. நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல. என்பேச்ச நானே கேக்கமாட்டேனு. ரெக்கார்ட் ப்ரேக்கா இன்றிரவே இக்கதையை முடித்துவிடுவேன். எனக்கு சுத்திப் போடுங்கோ :D

கலைவேந்தன்
04-09-2012, 02:42 PM
இதுவரையிலான பகுதிகளை வாசித்துவிட்டேன். மிக பரபரப்பாகச் செல்லும் அதே நேரத்தில் இணையத்தில் இன்று கவிதைகள் என்னும் பெயரில் தமிழைக் கொலை செய்யும் பலரைப்பார்த்தது போலொரு உணர்வும் மிகுந்தது.

இணையம் வந்த நாளில் இருந்து தமிழுக்கு நல்லவை பல நடந்திருந்தாலும் மிக மோசமான ஒரு விளைவு என்ன என்றால் கவிதை என்னும் பெயரில் அசட்டுத்தனமாய்க் கிறுக்குவதுதான். அதிலும் ஃபேஸ்புக் போன்ற சமூகத்தளங்களில் பார்த்தால் தமிழையே வெறுத்துவிடும் நிலைமை. இதில் கவிஞர்/ புல்லுருவிக்கவிஞர் / நாய்க்குடைக்கவிஞர் / தீச்சடைக்கவிஞர்/ கைக்கூ கவிஞர் என்னும் அடைமொழிகள் வேறு. தமிழுக்கு வந்த சோதனை தான் இது.

நிற்க.

இந்த இணையக்கவிகள் இப்படி கறையான் புற்றுக்களாய்ப்பரவியதன் நோக்கம் என்ன காரணம் என்ன என்று தலையைப் பிய்த்துக்கொண்டு நான் தவித்த வேளையில் எனக்கு சட்டென்று உதித்தது தான் இப்போது மதி சொல்லும் இக்கதையின் கரு. ஆம். இப்படி இணையத் தீப்பந்தங்களில் விழுந்து உயிரை விடும் இந்த இளைஞர் விட்டில் பூச்சிகள் தான் இப்போது இணையக்கவிதைகள் சந்தைக்கத்திரிக்காய்களாய் மலிவடைந்ததற்குக் காரணம்.

தெளிவான நடையில் துல்லிய நீரோட்டமாய் இக்கால இளைஞர்களின் இந்த இழிநிலைப்போக்கினைக் குறிக்கும் அருமையான கதைத்தொடருக்கு வாழ்த்துகள் மதி.

இறுதிப்பகுதியையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். தொடருங்கள்.

மதி
04-09-2012, 03:38 PM
கதையை படித்தமைக்கு நன்றி வேந்தரே. நீங்கள் சொல்லும் அளவிற்கு இக்கதை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆயினும் நம் மன்ற நண்பர் ஒருவருடன் தொலைப்பேசிக்கொண்டிருந்த போது தோன்றியதிது. அங்கங்கே பிட்டுகள் சேர்த்து ஓட்டியிருக்கேன்.

இறுதிப்பகுதி விரைவில்

kulakkottan
04-09-2012, 04:08 PM
இணையம் வந்த நாளில் இருந்து தமிழுக்கு நல்லவை பல நடந்திருந்தாலும் மிக மோசமான ஒரு விளைவு என்ன என்றால் கவிதை என்னும் பெயரில் அசட்டுத்தனமாய்க் கிறுக்குவதுதான். அதிலும் ஃபேஸ்புக் போன்ற சமூகத்தளங்களில் பார்த்தால் தமிழையே வெறுத்துவிடும் நிலைமை. இதில் கவிஞர்/ புல்லுருவிக்கவிஞர் / நாய்க்குடைக்கவிஞர் / தீச்சடைக்கவிஞர்/ கைக்கூ கவிஞர் என்னும் அடைமொழிகள் வேறு. தமிழுக்கு வந்த சோதனை தான் இது.

நிற்க.

இந்த இணையக்கவிகள் இப்படி கறையான் புற்றுக்களாய்ப்பரவியதன் நோக்கம் என்ன காரணம் என்ன என்று தலையைப் பிய்த்துக்கொண்டு நான் தவித்த வேளையில் எனக்கு சட்டென்று உதித்தது தான் இப்போது மதி சொல்லும் இக்கதையின் கரு. ஆம். இப்படி இணையத் தீப்பந்தங்களில் விழுந்து உயிரை விடும் இந்த இளைஞர் விட்டில் பூச்சிகள் தான் இப்போது இணையக்கவிதைகள் சந்தைக்கத்திரிக்காய்களாய் மலிவடைந்ததற்குக் காரணம்.

சமூக இணையதளங்களில் கவிதை என்ற பெயரில் கிறுக்கல் கூடியதட்க்கு காரணம் காதல் என்று கூற முடியாது,
காதலின் பாதிப்பால் எழுதுபவர்கள் கவிதை ஒன்று வலியின் விம்பமாய் இருக்கும்,
அல்லது சந்தோசத்தின் சிறகடிப்பை ரசிக்கும் படி தான் இருக்கும்,


கிறுக்கல்களுக்கு காரணம் ஹைக்கூ ,நவீன கவிதை என்னும் கலாசாரம் தவறான போக்கை சந்தித்தமையே !

kulakkottan
04-09-2012, 04:10 PM
இப்படி அநியாயத்துக்கு கதையை அடுத்த அத்தியாயத்தோடு முடிகிரீர்களே? கொஞ்சம் இன்னும் ரெண்டு மூன்று பாகம் எழுதலாமே ?

மதி
04-09-2012, 04:13 PM
குளக்கோட்டன்..
இந்த கதை இத்தனை பாகம் வந்ததே ஆச்சர்யம். அதிலும் இரண்டே நாளில் இவ்வளவு எழுதியது மற்றுமொரு சாதனை. :) நான் எழுத நினைத்தது இவ்வளவு தான். மற்றும் இது ஒரு பொழுதுபோக்கு கதையேயன்றி எந்த கருத்தையும் கொண்டதல்ல.

பின்னூட்டத்திற்கு நன்றி

மதி
04-09-2012, 04:52 PM
படித்து முடித்ததும் அந்த கோப்பை மூடினார் அவர். பெரிய வார இதழ் ஆசிரியர்.

"ம்ம். சொல்லுங்க மதி. என்ன பண்றீங்க?"

எதிரில் பவ்யமாய் நான். என்னருகில் அவரின் நெருங்கிய நண்பர். இவரின் மூலமாக தான் ஆசிரியரை சந்திக்க முடிந்தது. நாங்கள் இருந்தது வேளச்சேரி பைபாஸ் ரோட்டில் இருந்த காஃபி டேயில். அந்த வெயிலில் குளிரூட்டப்பட்ட அறை இதமாய் இருந்தது. ஆனாலும் எனக்கு வியர்த்தது.

'கடவுளே நல்லபடியாக முடியவேண்டுமே'

"நான் ஒரு எம்.என்.சில வேலை பாக்குறேன். இந்த கத..." இழுத்தேன்.

"நல்ல வேலை தானே பாக்குறீங்க." சிரித்தார். இவர் கேட்ட கேள்விக்கே பதில் சொல்ல மாட்டேங்கறாரே?

"ஆமா சார். நல்ல வேலை தான். இத பத்தி என்ன சார் நெனக்கிறீங்க?" எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் அமைதியாக உட்கார்ந்திருந்தார். காஃபி லத்தே சூடே இல்லாமல் இருந்தது.

"உங்களுக்கு கத எழுத வருது. ஆனாலும் நிறைய புரியல. இவன் எதுக்கு அவள பாக்கணும்னு துடிக்கிறான். அவ சொன்னத அப்படியே கேக்குறான்."

"காதல் சார். அது தான் அவன அப்படி பாடாபடுத்துது. ஏன் அது புரியற மாதிரி இல்லியா?"

"ம்ஹூம். அவ்ளோ இம்ரஸிவா இல்லே." மனம் உதற ஆரம்பித்தது.

"மிஸ்டர். மதி ஃப்ராங்க்கா சொல்லணும்னா என் நண்பர் வற்புறுத்தி தான் இங்கேயே வந்தேன். எனக்கு க்ளோஸ் ப்ரண்ட். ஆனாலும் என் பிசினஸில் தலையிட மாட்டார். பட் எனக்கு உங்க கதை அவ்வளவா புடிபடல். இத எப்படி எங்க மேகஜின்ல பப்ளிஷ் பண்றது. இத டச்சப் பண்ணனும்னா நானே ஒரு கதை எழுதணும்." அழுத்தம் திருத்தமாக சொன்னார் அவர். எனக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. என்னை கூட்டி வந்தவரை பார்த்தேன். பரிதாபமாக என்னை பார்த்தார்.

"எந்த இடத்துல பிரச்சனைன்னு சொன்னீங்கன்னா சரி பண்ணிடறேன் சார்"

அவர் முகம் மாற ஆரம்பித்தது. "தன்மையா சொன்னா புரிஞ்சிக்க மாட்டீங்களா. நீங்க வெறுமனே அவன் அவள்னு எழுதறீங்க. படிக்கற ஆடியன்ஸுக்கு பேர் இருந்தா தான் அதுக்கு ஒரு முகம் வச்சு பாப்பாங்க. அதுவுமில்லாம பழைய படம் மாதிரி பாக்காமலேயே காதல் வேற. எப்பவோ காதல் கோட்டை எடுத்துட்டான். நடுவுல அவ கவித பிடிக்கும்னாளாம். இவன் தமிழ் படிச்சனாம்.

இப்பல்லாம் யார் தமிழ் படிக்கறா. எல்லாரும் கான்வென்ட்ல படிக்கறாங்க. அதுவுமில்லாம இதுல ஜனரஞ்சகமா வார்த்தைகளே கம்மியா இருக்கு. மாத்த ஆரம்பிச்சா உயிர் போயிடும். கவிதை..ல்லாம் ஒரு கம்மியான செக்ட் மக்கள் மட்டும் தான் படிக்கறாங்க. இந்த மாதிரி கரு அவங்களுக்கு வேணா புடிக்கலாம். இது கோடிக்கணக்கான காப்பி விக்கற மேகஜின். உங்க கதையால எங்களுக்கு ஆட்ஸ் வரணும்ல"

வியாபாரம் பேச ஆரம்பித்துவிட்டார் அவர். மனம் சுக்குநூறாய் உடைய ஆரம்பித்திருந்தது.

"சரி.. தெரியாம தான் கேக்கறேன். எதுக்கு நீங்கள் கேட்டவைன்னு பேர் வச்சீங்க?"

"அது வந்து.. மக்களை ஈர்க்கற தலைப்புன்னு"

"சுத்த தமிழ்ல இருந்தா எவன் சார் படிப்பான்? காஃபிடே கப்பில்ஸ், டெல்லியில் பேஷன்ஷோ.. இப்படி இருந்தா தலைப்ப பாக்கறவன் உள்ள வந்து படிப்பான். தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமேயில்லை. அதுவுமில்லாம கடைசியில என்ன எழவு முடிவுன்னே தெரியல. அவன் ஏதோ வெளியில் போறான். அது இதுனு இருக்கு. காதல் கதையில ஒன்னு அவங்க சேரணும். இல்லே பிரியணும். இது என்ன ரெண்டுங்கெட்டானா நிக்குது. அவனுக்கு உண்மையிலேயே பைத்தியம் புடிச்சிடுச்சா என்ன?"

"இல்லே சார். அது அவன் தலை வெடிக்கற மாதிரி இருக்கு. அப்புறம் தெளிஞ்சு நல்ல கவித எழுதி அவள பாக்கறானா இல்லே காதல்ல தோக்கறானான்னு படிக்கறவங்க விருப்பத்திற்கே விட்டுவிட்டேன்."

"புல்ஷிட்.." என் கதைக்கான மொத்தவிமர்சனமும் அந்த ஒத்த வார்த்தையில் அடங்கியிருந்தது. என்னை கூட்டி வந்தவரை பார்த்தேன். அடிபட்ட தெருநாயை பார்ப்பது போலிருந்தது பரிதாபமாக இருந்தது அவர் பார்வை. ஏதும் செய்ய வழியின்றி இருந்தார். ஆசிரியர் அவரிடம் திரும்பி,

"நீங்க கூப்பிட்டீங்கன்னு தான் வந்தேன். சாரி. ப்ரண்ட்ஷிப் வேற தொழில் வேற. இனிமே இந்த மாதிரி விஷயங்கள என்கரேஜ் பண்ணாதீங்க."

பின் என்னிடம் திரும்பி,
"மதி. கதை எழுத முயற்சி பண்றீங்க. ஆனா இன்னும் முயற்சி வேணும். ஹார்ஷா பேசறேனு தப்பா நெனக்காதீங்க. ஆஃப்டரால் இது பிஸினஸ். அடுத்து ஏதாச்சும் எழுதனீங்கன்னா சுருக்கம் மட்டும் என் மெயில் ஐடிக்கு அனுப்புங்க. நல்லா இருந்தா கூப்பிட்டு அனுப்பறேன்."

பிஸினஸ்கார்டை கொடுத்தார். 'இது எனக்காக அல்ல. அவர் நண்பருக்காக என நல்லாவே புரிந்தது.' தலையாட்டிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன். மனம் முழுக்க விரவிக் கிடந்த சோர்வு. அவள் சொன்னது இன்னமும் காதில் கேட்டுக் கொண்டிருந்தது.

"கண்டிப்பா நீங்க பெரிய ஆளா வருவீங்க. வரணும். ஒரு நல்ல கதாசிரியரா ஏதாச்சும் புத்தகத்துல உங்க கதையெல்லாம் பிரசுரமாகணும். என்னிக்கு பிரசுரமாகுதோ அன்னிக்கு நான் உங்களை பாக்க நேரிலே வருவேன். அதுவரை இப்படி தான் நம் பேச்செல்லாம்". தெளிவாய் சொல்லிவிட்டாள். மாட்டிக்கொண்டது நான் தான். நன்றாக கதை எழுதத் தெரியுமென்று வீண்ஜம்பத்தால் வந்த வினை. அவளுக்காக தான் கதையின் தலைப்பையும் 'நீ கேட்டது' என பொருள்படும்படி "நீங்கள் கேட்டவை"னு வைத்திருந்தேன்.

'இனி எப்போது பிரசுரமாகி எப்போது பார்ப்பது. அவள் உண்மையான பேர் கூட தெரியாதே.'

வீட்டிற்குள் நுழைந்ததும் பரபரப்பாக கணினி முன் வந்தமர்ந்தேன் நான். மதி. கணினியில் சாட் விண்டோ ஒளிர்ந்தது. :)


(பி.கு : உண்மையிலேயே அதிசயம் தான். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கதை எழுதுகிறேன். இரண்டே நாளில் முடித்துவிட்டேன். அதுவும் தொடர்கதை. சிறுகதையாய் ஆரம்பித்தது. தொடராகிவிட்டது. பின் தொடர்ந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி)


முற்றும்

A Thainis
04-09-2012, 06:12 PM
ஓ! கவிதை எழுதுவது விபரீதமோ, இது தெரியாம போச்சே, ஆனால் உங்கள் கதை சிறப்பு என உங்கள் எழுத்து சொன்னது மதி, கதை முடிந்தாலும், இது போன்ற கதைகள் தொடரட்டும்.

கீதம்
05-09-2012, 12:27 AM
செம கலக்கல். முடித்தவிதம் எதிர்பார்க்கவே இல்லை. ஆரம்பத்திலேயே இப்படிதான் முடிக்கவேண்டுமென்று நினைத்து ஆரம்பித்தீர்களா? இல்லை கதை போகிற போக்கில் இப்படி முடித்தால் நல்லாயிருக்குமென்று தோன்றி முடித்தீர்களா? எப்படியிருந்தாலும் அருமையான திருப்பம். பாராட்டுகள் மதி. இதே சூட்டோடு அதையும் முடிச்சிடுங்க. :)

மதி
05-09-2012, 12:29 AM
நன்றி தைனிஸ். உங்கள் பாராட்டுக்கு நன்றி.

மதி
05-09-2012, 12:33 AM
செம கலக்கல். முடித்தவிதம் எதிர்பார்க்கவே இல்லை. ஆரம்பத்திலேயே இப்படிதான் முடிக்கவேண்டுமென்று நினைத்து ஆரம்பித்தீர்களா? இல்லை கதை போகிற போக்கில் இப்படி முடித்தால் நல்லாயிருக்குமென்று தோன்றி முடித்தீர்களா? எப்படியிருந்தாலும் அருமையான திருப்பம். பாராட்டுகள் மதி. இதே சூட்டோடு அதையும் முடிச்சிடுங்க. :)

நன்றிக்கா. சொன்ன மாதிரி சிறுகதையா ஆரம்பிச்சேன். ஆனா இழுத்துக்கிட்டே போனதால் பிச்சு பிச்சு போட்டேன். :) அந்த கதைக்கு என்ன முடிவு சொன்னாலும் எடுபடாதுனு மட்டும் தெரியும். அதனால முடிவு பத்தி யோசிக்காம தான் எழுதினேன். இப்படி முடித்தால் என்னனு தோன்றியது. சுயவிமர்சனமாகவும் ஆகட்டும். ஆரம்பித்த வரிகளிலேயே முடித்த மாதிரி இருக்கட்டுமென்று.

நீண்ட நாள் கழித்து எழுதறோமேனு சின்னதாய் பயம் கூட இருந்தது. இப்போ தெளிந்துவிட்டது. அப்புறம் அது :). முடிக்கலாம்.

ஜானகி
05-09-2012, 02:04 AM
நீங்கள் எழுதிய வேகத்திலேயே மூச்சுவிடாமல் எல்லா பாகங்களையும் படித்தேன்.
வித்தியாசமாக நன்றாக இருக்கிறது.
இதே உற்சாகத்தில் தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள் !

மதி
05-09-2012, 02:52 AM
நன்றி ஜானகியம்மா. இதே உற்சாகத்தோடு தான் எழுதணும்னு நினைக்கிறேன்.

இந்த கதை முடிவுக்குப் பின்னும் இருக்கிறது. :)

கலைவேந்தன்
05-09-2012, 03:18 AM
எதிர்பார்த்ததை விட அருமையாக முடித்ததுடன் கிளைமேக்ஸ் அடுத்து ஆண்ட்டி க்ளைமேக்ஸ் எல்லாம் வைத்து அசத்திட்டீங்க மதி. பாராட்டுகள். இதே போல இன்னும் கவிதைகள் தொடர வாழ்த்துகள்.

jayanth
05-09-2012, 03:23 AM
மதி... கதையை படித்த பொழுது உண்மைச் சம்பவம் ஒன்றைப் படித்த உணர்வு. முற்றியது இன்னும் முடியவில்லை என்று வேறு சொல்லியிருக்கின்றீர்கள்.

எதிர்பார்ப்புகளுடன்...

மதி
05-09-2012, 03:36 AM
நன்றி கலைவேந்தன் மற்றும் ஜெயந்த்.

நாஞ்சில் த.க.ஜெய்
05-09-2012, 07:14 AM
முடிவின்றி தேடலில் மதி அவர்கள் ..என்று நிறைவேறுமோ என்ற தேடலுடன் முடிந்த கதை அருமை ....

மதி
05-09-2012, 07:49 AM
நன்றி ஜெய்.

மதி
05-09-2012, 10:52 AM
"A short film by Rajesh" வெள்ளை எழுத்துக்கள் திரையில் மங்கலாய் மறைய அந்த அரங்கம் வண்ணவண்ண விளக்குகளால் உயிர்பெற்றது. மேடையில் நின்றிருந்த எனக்கு சற்றே கண்கள் கூசியது. இக்குறும்படத்தின் இயக்குநர். அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கத்தில் கைதட்டல்கள். பிரபல தொலைக்காட்சியின் குறும்பட இயக்குநருக்கான போட்டி அது. நேரடி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. உலகமே இதை பார்த்துக்கொண்டிக்கும்.

"சொல்லுங்க ராஜேஷ். உங்க படத்துக்கு நீங்கள் கேட்டவைனு பேர் வச்சிருக்கீங்க. உங்கள நாங்க கேட்டமா?" என் நிலைமை புரியாமல் அந்த பெண் தொகுப்பாளர் மொக்கை போட்டுக்கொண்டிருந்தார். சிரித்து வைத்தேன். அவர் கேள்விக்கு பதிலளிப்பது தற்சமயம் முக்கியமில்லை.

"ஓக்கே. கூச்சப்படுறீங்க. நம்ம ஜட்ஜஸ்கிட்ட கேப்போம். உங்க படத்த பத்தி. அதுக்கு முன்னாடி நீங்க எவ்ளோ நம்பிக்கையா இருக்கீங்க?"

"நம்பிக்கை இருக்கு." சொல்லி வைத்தேன்.

"சரி. நாம இப்போ இயக்குநர் திலகத்திடம் கேட்போம். சொல்லுங்க சார்"

திரையுலகின் முன்னணி இயக்குநர் பேச ஆரம்பித்தார்.

"ராஜேஷ். எனக்கு ஒரு சந்தேகம். இது என்ன ஜானர்?"

"லவ் பேஸ்டு டிராமா"

"லவ்னு சொல்றீங்க. ஆனா கடைசி வரைக்கும் எந்த பொண்ணையுமே காட்டல. படத்துல முக்கால்வாசி நேரம் ஹீரோ சாட் பண்றதுலேயே போகுது. படத்துல எனக்கு புடிச்ச சில பாஸிட்டிவ் பாயிண்ட்ஸ்.

ரொம்ப கம்மியான ஆட்கள். இன்டெர்நெட்டில் எப்படியெல்லாம் சிக்கி இருக்காங்கனு சொல்ற மாதிரி. அப்புறம் லைட்டிங். லொகேஷன்னு பாத்தீங்கன்னா ஒரு ரூம், அப்புறம் அந்த காஃபி ஷாப். குறிப்பா சொல்லணும்னா அந்த ஹீரோ காரெக்டர் முகபாவத்துலேயே காதல் வருதுன்னு காட்டியிருக்கீங்க. ஒரே மாதிரி ஷாட்ஸ்லேயே அந்த எஸ்பிரஷன் சேஞ்ச் நல்லா இருந்துச்சு. அதுக்கு தகுந்த மாதிரி பேக்ரவுண்ட் ம்யூசிக். ஆனாலும் பாத்தீங்கன்னா கதை அந்த அளவுக்கு கனமா இல்லே. இன்டெர்நெட் காதல்ங்கறது கொஞ்சம் பழைய கான்செப்ட். அதுல சில யுத்திகள புகுத்தியிருக்கீங்க. ஒரு சஜஷன். கதையை திரைக்கதையா மாத்தும் போது கொஞ்சம் கவனம் எடுத்து பண்ணனும். அவன் நெனைக்கிறது எல்லாம் பேக்ரவுண்ட் வாய்ஸாவே வருது. வேற மாதிரி காமிச்சிருக்கலாம். ஏற்கனவே அத யூஸ் பண்ணி அலுத்தாச்சு.

ஒரு இடம் நல்லா இருந்தது என்னன்னா. அது கதைன்னும் அத நீங்க அந்த எடிட்டர்கிட்ட காமிக்கறீங்கனு இருக்கற சீன். இல்லாட்டி போரா இருக்கற படமாயிருக்கும். எப்படா முடியும்னு நெனைக்கும் போது அந்த ட்விஸ்ட் நல்லா இருந்துச்சு. ஆரம்பிச்ச இடமே முடியற மாதிரி. அதிலேயும் உங்க காதல் ஜெயிச்சுதானு சொல்லல. என்னை பொறுத்த வரை படம் ஓக்கே. ஆனா இன்னும் பெட்டரா பண்ணலாம்."

பாராட்டினாரா திட்டினாரா. பதட்டத்தில் சுத்தமாய் புரியவில்லை. தலையாட்டி மட்டும் வைத்தேன்.

அடுத்து அமர்ந்திருந்த இன்னொரு பிரபல இயக்குநர் பேச ஆரம்பித்தார்.

"சார் சொன்ன பாயிண்ட்ஸ் தான். இன்னும் என்னன்னா ஏதோ சீரியஸா போயிட்டு இருக்கற கதையில காமெடிய சொருகின மாதிரி அந்த கவிதை. யாரு எழுதினா?"

"நான் தான் சார்."

"கவிதைனும் சொல்ல முடியாது. ஆனா அந்த எடத்துக்கு பொருத்தமா இருந்தது. அதிலேயும் அதுக்கு நீங்க கொடுத்த விளக்கம். லாஜிக்கா நிறைய விஷயங்க இருக்கு. போகப்போக கத்துக்குவீங்க. சிறப்பா இருந்துச்சுன்னும் சொல்ல முடியாது. ஆனா அவ்வளவு மோசமுமில்ல. பாக்கலாம் கடைசியில"

தொகுப்பாளினி பேச ஆரம்பித்தாள்.

"ஓக்கே ராஜேஷ். உங்க படத்த பத்தி ஜட்ஜஸ் மிக்ஸட் கமெண்ட்ஸ் குடுத்திருக்காங்க. மத்த படங்களையும் பாத்துட்டு ரிசல்ட் சொல்லுவாங்க. நீங்க உங்க இடத்துல உட்காருங்க".

மௌனமாய் தலையாட்டிவிட்டு இருக்கைக்கு வந்தேன். வட்டமான ஒளி என்னை பின்தொடர்ந்தது. சந்தோஷமா பரிதவிப்பா என்னதென்று தெரியவில்லை. முடிவுக்காக இறுதிவரை காத்திருக்க வேண்டும். எப்படியும் அடுத்த கட்டத்துக்கு போகலாமென்ற நம்பிக்கை இருக்கிறது. சிந்தனைகள் பலப்பட முன்னாடி இருந்த மேடையிலிருந்த தொகுப்பாளினி பேச ஆரம்பித்திருந்தாள்.

"வாங்க. சுரேஷ்.. நீங்க என்ன ஜானர்ல படம் எடுத்திருக்கீங்க.."

கேட்டுக்கொண்டே மொபைலை ஆன் செய்தேன். உயிர்பெற்றதும் அந்த ஆண்ட்ராய்ட் போனிலிருந்த வாட்ஸாப் அப்ளிகேஷன் ஒளிர்ந்தது.

"எனக்கு நல்லாவே கேட்டது. எப்போ மீட் பண்ணலாம்?"

"இந்த படம் லவ் ஜானர்.. படத்துல....." மேடையில் சுரேஷ் பேசிக்கொண்டிருந்தது எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து பேசுவது போலிருந்தது.....

(தயவு செஞ்சு அடிக்க ஆள கூட்டிட்டு வந்துடாதீங்க. சத்தியமா இதுக்கப்புறம் இனி இக்கதை தொடராது :))

கலைவேந்தன்
05-09-2012, 02:58 PM
ட்விஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட்டா.. அடேங்கப்பா... பாலச்சந்தர் தோத்துட்டாரு போங்க.. ஆனா அருமையா இருந்திச்சு. ஒரு வழியா அவகிட்ட இருந்து கால் வந்திச்சே. இனி நிம்மதியாக நாங்க தூங்கலாம்.. பாராட்டுகள் மதி.

நாஞ்சில் த.க.ஜெய்
05-09-2012, 03:18 PM
எங்க பிரார்த்தனை வீணாகல வந்தது அழைப்பு எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் மட்டும் தீரல உண்மையில அது ஒரு பொண்ணா இல்ல பெண் குரலில் பேசுபவனா ? ..திருப்பமாக முடிவிலிருந்து துவக்கம் அருமை மதி அவர்களே ...

மதி
05-09-2012, 03:42 PM
ட்விஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட்டா.. அடேங்கப்பா... பாலச்சந்தர் தோத்துட்டாரு போங்க.. ஆனா அருமையா இருந்திச்சு. ஒரு வழியா அவகிட்ட இருந்து கால் வந்திச்சே. இனி நிம்மதியாக நாங்க தூங்கலாம்.. பாராட்டுகள் மதி.
படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி கலைவேந்தரே. இது சில படங்களோட இன்ஸ்பிரேஷன் தான். இது தான் முடிவுனு நினைக்காம ஆரம்பிச்சதால எத்தனையோ முடிவு இருக்கலாம்னு தோணுச்சு. :)

இனி எனக்கும் நிம்மதியா தூக்கம் வரும். முடிச்சுட்டேன்ல.


எங்க பிரார்த்தனை வீணாகல வந்தது அழைப்பு எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் மட்டும் தீரல உண்மையில அது ஒரு பொண்ணா இல்ல பெண் குரலில் பேசுபவனா ? ..திருப்பமாக முடிவிலிருந்து துவக்கம் அருமை மதி அவர்களே ...

ஆணோ பெண்ணோ. அந்த விளையாட்டுக்கே நான் வரல. :) பின்னூட்டத்திற்கு நன்றி ஜெய்

கீதம்
05-09-2012, 11:53 PM
என்ன மதி, குறும்படத்தோடு நிறுத்திட்டீங்க? திரைப்படமாக்கி வெள்ளிவிழாவெல்லாம் கொண்டாட வேண்டாமா?

இன்னும் என்னன்னா ஏதோ சீரியஸா போயிட்டு இருக்கற கதையில காமெடிய சொருகின மாதிரி அந்த கவிதை. யாரு எழுதினா?"

இந்த இடம் செம காமெடி. இப்பவும் சிரிப்பு வருது எனக்கு.

சிறப்பா இருந்துச்சுன்னும் சொல்ல முடியாது. ஆனா அவ்வளவு மோசமுமில்ல. போகப்போக கத்துக்குவீங்க.

இப்படி நான் சொன்னா நீங்க அடிக்கவரமாட்டீங்களே.... :)

மதி
06-09-2012, 12:21 AM
என்ன மதி, குறும்படத்தோடு நிறுத்திட்டீங்க? திரைப்படமாக்கி வெள்ளிவிழாவெல்லாம் கொண்டாட வேண்டாமா?

இன்னும் என்னன்னா ஏதோ சீரியஸா போயிட்டு இருக்கற கதையில காமெடிய சொருகின மாதிரி அந்த கவிதை. யாரு எழுதினா?"

இந்த இடம் செம காமெடி. இப்பவும் சிரிப்பு வருது எனக்கு.

சிறப்பா இருந்துச்சுன்னும் சொல்ல முடியாது. ஆனா அவ்வளவு மோசமுமில்ல. போகப்போக கத்துக்குவீங்க.

இப்படி நான் சொன்னா நீங்க அடிக்கவரமாட்டீங்களே.... :)

ஹாஹா. அக்கா. என்னோட கருத்தும் அதான். :)

கீதம்
06-09-2012, 12:33 AM
அய்யோ... அது சும்மா கலாய்க்கிறதுக்காக எழுதினேன். உண்மையில் இந்தக் கதையின் அமைப்பு எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது மதி. வித்தியாசமான முடிவு. அதுவும் சோர்வில்லாத எழுத்தோட்டம். மிகவும் ரசித்தேன்.

மதி
06-09-2012, 12:42 AM
அய்யோ... அது சும்மா கலாய்க்கிறதுக்காக எழுதினேன். உண்மையில் இந்தக் கதையின் அமைப்பு எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது மதி. வித்தியாசமான முடிவு. அதுவும் சோர்வில்லாத எழுத்தோட்டம். மிகவும் ரசித்தேன்.

நீங்க கலாய்ச்சாலும் அது தான். :) பாதி கதை வரைக்கும் எதுவும் தோணல என்ன முடிவுனு. ஆன இது கண்டிப்பா "விண்ணைத் தாண்டி வருவாயா" மற்றும் "Inception" இன்ஸ்பிரேஷன். அந்த அளவுக்கு இல்லேனாலும் இப்படி யோசிக்க வச்சது அந்த படங்கள் தான்.

செல்வா
06-09-2012, 04:07 AM
பிரமிக்க வைக்கிறீங்க மதி.

அருமையா எழுதியிருக்கீங்க...

வாழ்த்துக்கள்.

(மற்றவை நேரில்..)

மதி
06-09-2012, 04:15 AM
பிரமிக்க வைக்கிறீங்க மதி.

அருமையா எழுதியிருக்கீங்க...

வாழ்த்துக்கள்.

(மற்றவை நேரில்..)
ஓக்கே.. ஓக்கே..

த.ஜார்ஜ்
06-09-2012, 04:22 PM
நாங்கள் கேட்க வேண்டியதையெல்லாம் இயக்குனர் இமயம் மூலம் நீங்களே கேட்டுக்கொண்டதால்தான் தலைப்பு நீங்கள் கேட்டவையா..?

[இப்பொதெல்லாம் பார்ட் 2 என்றெல்லாம் வருகிறதே.அதைப் பற்றியும் நீங்கள் யோசிக்கலாம்.]

மதி
06-09-2012, 06:07 PM
நாங்கள் கேட்க வேண்டியதையெல்லாம் இயக்குனர் இமயம் மூலம் நீங்களே கேட்டுக்கொண்டதால்தான் தலைப்பு நீங்கள் கேட்டவையா..?

[இப்பொதெல்லாம் பார்ட் 2 என்றெல்லாம் வருகிறதே.அதைப் பற்றியும் நீங்கள் யோசிக்கலாம்.]
அண்ணே அது இயக்குநர் திலகம் :)

சத்தியமா பார்ட் 2 எழுதற ஐடியால்லாம் இல்லே.

அமரன்
06-09-2012, 09:28 PM
கலக்கல்...

நாங்கள் கேட்டவைதான்..

jayanth
07-09-2012, 03:24 AM
சூப்பருங்க மதி...

மதி
07-09-2012, 04:43 AM
நன்றி அமரன் & ஜெயந்த்

சுகந்தப்ரீதன்
07-09-2012, 08:20 AM
மதி கவிதை எழுத ஆரம்பிச்சப்பவே ‘மைண்டுல பல்பு’ எரிஞ்சுது... இப்படியொரு மொக்கைபதிவு மதிகிட்டயிருந்து வரும்ன்னு...:)

இதுவரை போட்ட மொக்கையிலேயே சிறந்ததும் சிறப்பானதும் நாங்க கேட்டு இலக்கியதரத்தில், அதிவேகத்தில் நீங்க தந்த இந்த அடிபுலி மொக்கைதான்..!!:mini023:

தொடர்ந்து கலக்குங்க மதியண்ணே..!!:icon_b:

மதி
07-09-2012, 08:26 AM
ஹேஹ்ஹே... நன்றி சுபி. :D

கலைவேந்தன்
07-09-2012, 02:15 PM
நாம் இதுவரை திலகம் என்ற பெயரில் இயக்குனரைப் பார்த்தது இல்லையே.. யாருங்க அந்த திலகம்..? :icon_rollout:

மதி
07-09-2012, 04:05 PM
கற்பனைங்கறதால தான் புதுசா திலகம் வந்தாரு.. :)

Keelai Naadaan
09-09-2012, 12:30 PM
விமர்சனம் / பின்னூட்டம் சொல்ல நினைத்தால் அதையும் நீங்களே உங்கள் கதாபாத்திரங்கள் வார ஆசிரியர், இயக்குனர் திலகம் மூலமாக நீங்களே மிக சிறப்பாக சொல்லி விட்டீர்கள்.
நல்ல எழுத்து திறன். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

மதி
10-09-2012, 01:34 AM
நன்றி கீழைநாடன்.