PDA

View Full Version : நோய்களிலிருந்து காப்பாற்றும் Green Tea!அமீனுதீன்
03-09-2012, 05:16 AM
https://lh4.googleusercontent.com/-z7S7v9nHM6Q/UEHvN18DzdI/AAAAAAAAcJ8/QxXBpkqK9ns/s500/Healthy_Living_green_tea.jpg


க்ரீன் டீ இப்போது அனைத்து தரப்பினரும் பருகும் டீ. இந்த கிரீன் டீ மகத்துவம் பற்றிக் கூறுகிறார் சித்தவைத்திய நிபுணர் அரவிந்த் ரங்கன்.
"பொதுவாகவே டீ வகைகளில் க்ரீன் டீ, ctc டீ என்று இருவகை உண்டு. ctc டீ தான் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானது. ஆனால் சீன மக்களிடையே தொன்று தொட்டு பாரம்பரியமாக தொடர்ந்து வருவது க்ரீன் டீ. அதன் மருத்துவ குணத்தால், இப்போது நம்மிடையேயும் பிரசித்தி பெற்றுவருகிறது" என அவர் கூறுகிறார்.

இதோ மேலும் க்ரீன் டீ பற்றி மேலும் விளக்கிக் கூறுகிறார்.

C.T.C Tea

(Cut turn and crush tea ஐ தான் CTC Tea என்கிறார்கள். இது பதப்படுத்தப் பட்ட டீ. இதுதான் நாம் அன்றாடம் குடித்து பழகி வரும் டீ.

க்ரீன் டீ என்றால்?

பயோகெமிக்கல் முறையில் நிழலில் உலர்த்தி பதப் படுத்தப் படும் தேயிலைதான் க்ரீன் டீ.

க்ரீன் டீக்கு எதனால் இந்த மகத்துவம்?

கேட்சின் கொலிபெனல்ஸ் (Catechin Colyphenols ) தான் க்ரீன் டீயில் பிரதான விஷயம். அதாவது பவர்புல் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் மிகச் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்!

கேன்சருக்கு மிக நல்லது

பொதுவாகவே கேன்சர் ட்ரீட்மென்ட் என்றால் ரேடியேசன் தெரபிதான் மெயின். இந்த ரேடியேசன் கதிர்வீச்சு கேன்சர் செல்களை மட்டுமின்றி கூடவே நல்ல செல்களையும் கொல்கிறது. ஆனால் இந்த க்ரீன் கேன்சர் செல்களை மட்டுமே கொல்கிறது. காரணம் இதன் கேட்சின் கொலிபெனல்ஸ் தான். என்றாலும் கேன்சருக்கான உடனடி ட்ரீட்மென்ட் ஆக மருத்துவர்கள் க்ரீன் டீயைப் பரிந்துரைப்பதில்லை. காரணம் கேன்சரின் ஆரம்ப அறிகுறியிலிருந்து நீண்ட நெடும் காலம் தொடரவேண்டிய வழிமுறை இது என்பதால்தான்.

சீன மக்களின் ஸ்லிம் ரகசியம்!

காலம் காலமாக சீன மக்கள் விரும்பி குடிக்கும் டீ இந்த க்ரீன் டீ. சீனர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். கொசுறு கொசுறாக சாப்பாட்டை அடிக்கடி சாப்பிடுபவர்கள். எனவே இவர்கள் உணவு முறையில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் சீனர்கள் தினமும் அடிக்கடி க்ரீன் டீ பருகும் பழக்கம் இருப்பதால் இந்த க்ரீன் டீ கெட்ட கொழுப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.

ரத்த நாளங்களின் அடைப்பை நீக்கும்

பொதுவாகவே நாம் சாப்பிடும் சமோசா, பீட்சா, வடை, சிக்கன் 65 போன்ற எண்ணெய் பலகாரங்களாலும், அதிக ஸ்வீட் சாப்பிடுவதனாலும் உண்டாகும் கெட்ட கொழுப்பினால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இது மாரடைப்பு (Heart Attack) வரை கூட கொண்டு போய் விட்டுவிடும். இப்படிப்பட்ட ரத்த நாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்கு கொண்டுவரும் பணியை செய்கிறது இந்த க்ரீன் டீ.

தொடர்ந்து க்ரீன் டீ பருகி வந்தால் மூட்டு பிரச்சனைகள், ரத்தகொதிப்பு, இதய நோய்கள் போன்ற நோய்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகின்றன.

சளி, ஜுரம் வராது

அன்றாடம் காற்றில் நிறைந்துள்ள சின்ன சின்ன தொற்றுக் கிருமிகளால் நமக்கு சளி ஜுரம் உண்டாகிறது. இந்த நோய்களைத் தோற்றுவிக்கும் கிருமிகளைக் கூடக் கொல்கிறது க்ரீன் டீ தரும் எதிர்ப்பு சக்தி.

உடல் நடுக்கம்

சிலருக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து போவதால் உடல்நடுக்கம் இருக்கும். நல்ல செல்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் உடல் நடுக்கத்தைப் போக்குகிறது க்ரீன் டீ.

எடை குறைக்க விரும்புகிறீர்களா?

க்ரீன் டீயைப் பருகுவதால் Fat Oxddations Themnogenesis எனும் குறிப்பிட்ட சிஸ்டம் மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப் படுகிறது. எனவேதான் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி க்ரீன் டீ சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சீன மக்களின் உணவுப் பழக்கப் படி அவர்கள் உடல் எடை அதிகமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஸ்லிமாக இருப்பதற்கு அவர்கள் அடிக்கடிப் பருகும் க்ரீன் டீ தான் காரணம்.

சர்க்கரை நோயாளியா நீங்கள்?

நல்ல டயட், உடற்பயிற்சி, மன அழுத்தமின்மை போன்றவற்றோடு, அன்றாடம் க்ரீன் டீ பருகி வந்தால் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். காரணம் எந்த உணவும் செரிமானத்துக்குப் பின் குளுகோஸ் ஆக மாறி ரத்தத்தில் சேராத படி க்ரீன் டீ தடுக்கிறது.

க்ரீன் டீக்கு நிகரில்லை!

என்னதான் சாப்பாட்டில் மசாலா, அஜினமோட்டோ, போன்ற ஜீரண சக்தி பொருட்களை சேர்த்திருந்தாலும் உணவுக்கு பின் க்ரீன் டீ பருகுவதற்கு நிகர் வேறெதுவும் இல்லை. ஜீரண சக்தியை அந்த அளவுக்கு தூண்டிவிடும், மேலும் உடனடியாக கெட்ட கொழுப்பையும் நீக்கும் என்று முடிக்கிறார் சித்த வைத்திய நிபுணர் அரவிந்த் ரங்கன்.

- தொகுப்பு: எழில்செல்வி


நன்றி: http://www.4tamilmedia.com/all/tips/7899-c-t-c-tea#at_pco=cfd-1.0

நாஞ்சில் த.க.ஜெய்
03-09-2012, 05:32 AM
முன்பொரு முறை படித்திருந்தாலும் தங்கள் பகிர்வுக்கு நன்றி தோழர்...

alaguraj
03-09-2012, 08:40 AM
நல்ல பதிவு. இனிமேல் ட்ரை பண்ணலாம் ...நன்றி

கீதம்
04-09-2012, 09:55 AM
பச்சைத் தேயிலையின் மகத்துவம் குறித்தப் பகிர்வுக்கு மிகவும் நன்றி அமீனுதீன்.

A Thainis
04-09-2012, 11:38 AM
கிரீன் டீ, சோர்வை அகற்ற கூடிய சுறுசுறுப்பு தரக்கூடிய தேநீர், நான் பல முறை அருந்திருக்கிறேன், இப்போதும் பயன்படுத்துகிறேன், இங்கே தரப்பட்டுள்ள கருத்துக்கள் உண்மையானவை, ஏற்க்கதக்கவையே. பயன்படுத்துங்கள், நலமான வாழ்வை பெறுங்கள்.

jayanth
05-09-2012, 05:16 AM
பயனுள்ள தகவல் பகிர்விற்க்கு நன்றி அமீன்...