PDA

View Full Version : பௌர்ணமியோரம்



kulakkottan
31-08-2012, 05:09 PM
அலை கூட நரைத்து கொண்டது
உன் பார்வை பட்டு
அழகான பௌர்ணமியன்று -நிலா
நீ கடல் மேல் புன்னகைத்த போது

மணல் மேல் மலை செய்து கொண்டே
மேடு பள்ளம் ரசிக்கிறேன் வதனத்தில்
மணல் கூட நறு மணக்குதே -மண்மீது
நீ மோகப்புன்னகை காட்டியதால்

என்ன கோபம் மறைந்து கொள்கிறாய்
கருந்திரை பின்னே திடீரென
என்ன தொரு வெண்மை என -நான்
மயங்க மறுத்ததை மதியிட்கு சொல்லவோ

பேசி கொண்டேயிருகிறேன் -உன்னோடு நான்
என்னையும் பொழுதையும் மறந்து
போய்கொண்டே இருகிறாய் உச்சிக்கே
கண்ணயர மறுக்கிறது -இம்மாதமும்
எனை ஏமாற்றி போவதை எண்ணி !

A Thainis
31-08-2012, 09:09 PM
மணல் மேல் மலை செய்து கொண்டே
மேடு பள்ளம் ரசிக்கிறேன் வதனத்தில்
மணல் கூட நறு மணக்குதே -மண்மீது
நீ மோகப்புன்னகை காட்டியதால்

!

பவர்ணமி மின்னுகிறது உங்கள் கவிதையில் குலகோட்டன்.

கீதம்
01-09-2012, 12:16 PM
விண்ணைத் தாண்டி வர மறுக்கும் வெண்ணிலவைப் பார்த்துப் பாடும் கவியின் ஏக்கம் அழகிய வரிகளில் தெரிகிறது.

இப்படி ஏராளமான ஏக்கப்பார்வைகளைத் தன்னுள் தேக்கி ஒயிலாய் உலா வரும் நிலாவின் அழகும் ரசிக்கிறது.

பாராட்டுகள் குளக்கோட்டன்.

நாஞ்சில் த.க.ஜெய்
01-09-2012, 03:52 PM
விண்ணில் உலவும் நிலவின் ஒளி வீசும் கவிதை ...

குருதவசி
01-09-2012, 03:54 PM
விண்ணில் உலவும் நிலவுடன் உறவாடும் கவிதை வரிகள் அருமை ...

kulakkottan
01-09-2012, 04:20 PM
நன்றி தைனிஸ்,கீதம்,நாஞ்சில் த.க.ஜெய்,குருதவசி

அமரன்
01-09-2012, 05:10 PM
நிலா ஒளியில் நானும் குளித்தேன்.

kulakkottan
01-09-2012, 05:28 PM
குளியலுக்கு நன்றி அமரன் !

தீபா
03-09-2012, 10:25 AM
அலை நுரையை பெளர்ணமியின் பார்வையில் நரைத்துப் போய்விட்டது என்பது என்னவொரு கற்பனை. அபாரம் குளக்கோட்டன்.

கருந்திரை பின்னே மறைந்து கண்ணாமுச்சியாடும் நிலவு,

சூப்பர்.

தீபா

ந.க
29-10-2012, 10:15 PM
நிலவை நீந்தவிடுங்கள்
நித்திரையை நீட்டிவிடுங்கள்........
கனவில் கையில் வரும்

உங்கள் கவிதையில்
நிலவுப்பெண்ணின்
தூரத்து உறவு துரத்துவது தெரிகிறது,
நிலவால் மகிழும் உங்கள் நிலை மிதக்கிறது -
பின்னர் அதன் பிரிவால் துயர்.....(கவிதையில்) கனக்கிறது.....நன்று, நன்றி..........