PDA

View Full Version : ஏற்ற இறக்கம்



kulakkottan
31-08-2012, 04:55 PM
ஏசியில் ஆப்பிள் உறைகிறது -ஆனால்
ஏழை வயிறு கரைகிறது பசியில்

குவளையில் குடிக்காமல் அந்தஸ்த்துக்கு மிச்சம்
குற்றுயிராய் குழந்தைகள் குடிக்க கஞ்சி கூட இன்றி

காருக்கு கலக்கும் கண்ணாடி கவர்
கதவு கூட இல்லை முன்னாடி குடிலில்

பொமேரியனுக்கு பொடுகு சம்போ
பொடியன் சட்டை கந்தலாய் கிழிந்து கிடக்குதே !

A Thainis
31-08-2012, 09:15 PM
ஏற்ற இறக்கத்தின் இடைவெளியில் மனிதம் மரணிக்கப்படுவதை இக்கவிதை உரக்க கூவி நம் உணர்வுகளை தட்டி எழுப்புகின்றது.[/COLOR]

கீதம்
01-09-2012, 12:25 PM
நிதர்சனம் உரைக்கும் கவி வரிகள் குளக்கோட்டன். நம் இயலாமையை நினைத்து ஆதங்கப்படத்தான் இயல்கிறது.

Sasi Dharan
01-09-2012, 12:29 PM
சேர்த்துவைக்க இடம் இல்லாமல் பணக்காரன் பணம் பொதிந்து கிடக்கிறது சுவிஸ் வங்கியில்
வாழ்வாதாரமே இல்லாமல் எத்தனை வறியவர்கள் வாழ்க்கை இந்த நாட்டில்.
ஒளிமயமான இந்தியா எங்கே ஒளிர்கிறது.... பணக்காரன் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறது

குருதவசி
01-09-2012, 03:50 PM
நிதர்சன உண்மை நிலை கூறும் கவிதை...

kulakkottan
01-09-2012, 04:16 PM
A Thainis, கீதம், Sasi Dharan,குருதவசி அனைவரதும் வாழ்த்துக்கு நன்றி !உங்கள் பாராட்டின் ஊக்கம் தான் என் கவிதைக்கு உயிர்கொடுகின்றன

அமரன்
01-09-2012, 05:07 PM
சமநிலை சாத்தியப்பாடு சரியான குறைவே..

ஆனாலும் ஏற்றத்திற்கும் தாழ்வுக்கும் அதிக தூரமில்லாமல் பேணலாம்.

பச்சாபப்படவே முடிகிறது.