PDA

View Full Version : ஆசை ஓர் புல்வெளி..மதி
28-08-2012, 05:30 AM
http://4.bp.blogspot.com/-u2WJzDz0fHo/UCyrrmxRyFI/AAAAAAAAA5Y/BTjm7d678gQ/s1600/big_Attakathi_showcases_Chennais_other_side-f6a674e9018deee48ae7d60fe7ed876c.jpg


மனிதனோட மூளையே ஒரு அதிசயம். எத்தனை எத்தனை விஷயங்களைத் தான் தனக்குள்ள வச்சுக்கிட்டு அமைதியா இருக்கு. என்னடா.. தலையும் புரியாம வாலும் புரியாம இந்த வயசுலேயே தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டான்னு பயப்படாதீங்க. இது தொத்து நோயல்ல. சொல்ல வந்த்து மனித மூளைக்குள்ள பலவகையா படிஞ்சி இருக்குற நினைவுகளை. எங்கேயோ எப்போதோ நடந்த சம்பவங்கள் அடிமனசுல ஆழத்துல புதைஞ்சி இருக்கு. சில நேரம் எத்தனை தான் யோசிச்சாலும் ஞாபகத்துக்கு வராது. ஆனா சில நேரங்கள்ல அதைப் பத்தி யோசிக்காமலேயே தண்ணீல போடப்பட்ட பந்து மாதிரி மேலெழும்பி வரும். இது கூட அந்த மாதிரி தான். என் வாழ்க்கையில் ஒரு நாள்.

கிட்டத்தட்ட நாலு வருஷம் இருக்கலாம். பெங்களூரில் வேலை பார்த்திட்டு இருந்த காலம். அப்போல்லாம் எங்க அலுவலகத்துல வாரயிறுதில மருத்துவ முகாம் நடத்துவோம். நானும் போவேன். நான் இந்த மாதிரி முகாம்ல கலந்துக்க ஆரம்பிச்சது ஒரு சுயநலத்துக்காக. என் நெருங்கிய நண்பர் செந்தில் தான் மருத்துவ முகாம்களுக்கு ஒருங்கிணைப்பாளர். வேலைக்கு சேர்ந்த காலகட்ட்த்துல ஒருதடவை இந்த முகாம்கள பத்தி சொன்னார். முகாம் ஒரு நாள் நடக்கும். பெங்களூரை சுத்தியுள்ள ஏதாச்சும் ஒரு கிராமத்துல இருக்கற பள்ளியில நடக்கும். மருத்துவர்கள் மற்றும் மருந்துகளை நாங்களே கொண்டு போயிடுவோம். என்னை ஈர்த்த ஒரு விஷயம் என்னன்னா. மதிய சாப்பாடு ஊர்காரங்களே ஏற்பாடு பண்ணிவாங்க. அது சர்க்கரை போட்ட சாம்பார சாப்பிட்டு மனசும் வாயும் வெறுத்திருந்த காலம். நல்ல சாப்பாடு கிராமத்து சாப்பாடு கிடைக்கும்ங்கற ஒரே காரணத்துக்காக போக ஆரம்பிச்சேன். இப்படியே ரெண்டு மூணு வருஷத்துல எங்க டிபார்ட்மெண்ட் ஒருங்கிணைப்பாளரா ஆனேன்.

எப்போதும் சனிக்கிழமை தான் முகாமுக்கு போவோம். அந்த முறை எங்க டிபார்ட்மெண்ட் ஆட்களை கூட்டிக்கிட்டு போகணும். சிலர் ஆர்வமா வந்து கலந்துப்பாங்க. சிலர் மேனேஜர் வர்றார்ங்கற காரணத்துனால வருவாங்க. சிலர நாம தான் பேசி சரிகட்டி கூட்டிட்டு போகணும். ஒருவழியா பேசி சமாளிச்சு கிளம்பியாச்சு. நாங்க போன ஊர் கோலார் பக்கத்துல இருக்கற ஒசூர்ங்கற ஊர். கிருஷ்ணகிரி பக்கத்துல இருக்கிற ஊருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லே.


காலையில் பஸ்ஸில் போகும் வழியிலே சாப்பிட்டு ஊருக்கு போய் சேரும் போது மணி பத்தை நெருங்கிக்கிட்டு இருந்த்து. அது கொஞ்சம் பெரிய பள்ளிக்கூடம். வழக்கமா எல்லா படங்கள்லேயும் வர்ற மாதிரி ஏரிக்கரை, ஆலமரம் அது இதுனு கண்ணுக்கு விருந்தா காட்சிகள் இருந்த்து. போனதும் மருந்து மாத்திரைகளை எடுத்து வைப்பதும் மருத்துவர்களுக்கு இடங்களை தயார்படுத்துவதுமா பரபரப்பா போயிட்டு இருந்த்து. ஒவ்வொருத்தரா கூப்பிட்டு அவங்க என்ன செய்யணும்னு நானும் செந்திலும் சொல்லிக்கிட்டு இருந்தோம். சில மருத்துவர்களுக்கு உதவியாக, சிலர் மருந்துகளை கொடுப்பதற்கும், வேறுசிலர் மருந்துகளை எப்போது சாப்பிடணும்னு மக்களுக்கு விளக்குவதற்கும். கூட்டம் அதிகமா இருந்த்தால எல்லோருக்கும் நிறைய வேலை. நான் அங்க இங்கன்னு ஓடிக்கிட்டு இருந்தேன்.

மணி பன்னிரண்டை நெருங்கிகிட்டு இருந்தது. மருந்து கொடுக்கும் இடத்தில் கூட்டம். உள்ளே போய் உதவலாம் என்று போனேன். அப்போது தான் அந்த பெண்ணைப் பார்த்தேன். இப்போ தெரிஞ்சிருக்குமே. எப்போது இந்த சம்பவம் நினைவுக்கு வந்ததுனு. அந்த படம் பார்க்கும் போது தான். க்ரே கலர் புடவையில் ஒரு ஐந்தரை அடி உயரம், ஒல்லியான உருவம், முகம் ‘அட்டகத்தி’ பூர்ணிமா சாயலில் இருந்தது. ஒரு நிமிஷம் அசந்து நின்னேன். திடீர்னு வேறு சில விஷயங்கள் மனத்திரையில் ஓட ஆரம்பிச்சது. ‘கிராமம், பஞ்சாயத்து, அரச மரமோ ஆலமரமோ அதுல என்னை கட்டிவச்சு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க’. மனம் திக்குனு ஆக திரும்பி வேலையில கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். மருந்து சீட்டுகளை வாங்கி அதை மருந்து எடுத்து தருபவர்களிடம் கொடுத்து மறுபடியும் மருந்தையும் சீட்டையும் மக்களிடம் கொடுக்க வேண்டும். இந்தப் பெண் எங்களுக்கு உதவி பண்ணிட்டு இருந்தாள். அவளிடம் இரண்டு முறை சீட்டை வாங்கி மருந்து எடுத்து கொடுத்தேன். கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிஞ்சுது. அந்தப் பெண் சீட்டையெல்லாம் வாங்கி வேறு யாரிடமும் கொடுக்காமல் நான் வரும் வரை காத்திருந்து என்னிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று. அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இருந்தது. பின்னெ கொஞ்சமா ரொமாண்டிக் ஃபீலிங்கோட நடக்க ஆரம்பிச்சேன்.

மதியம் சாப்பிடறப்போ செந்திலிடம்,

“செந்தில். அந்த பொண்ணு எப்படி? என்னைய பாத்துட்டு இருக்கு”

பார்த்த செந்தில்,

“தம்பி, ஒழுங்கா இருக்கணும்னு ஆச இல்லியா. அது ஊர் பெரியவரோட பேத்தி. மைசூர்ல வேலை பாக்குது லீவுக்கு வந்திருக்கு.”

செந்திலுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருந்தது. அவர் தொடர்புகள் அப்படி. ‘கொஞ்சம் கொஞ்சமா அதே ஏரிக்கரை, அரசமரம், கட்டிவைக்கறது எல்லாம் ஞாபகம் வந்தது.’ சிந்தனையை உதறி தள்ளினேன். வேலைக்காவாது.

“எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ. காவேரி பிரச்சனை, இதுல இதையும் சேர்த்துவிட்டுடாதெ”. பீதியை கிளப்பினார்.

சாப்பிட்டு முடித்ததும் கருமமே கண்ணாயினார்னு வேலைய பார்க்க ஆரம்பிச்சேன். மதியம் மூணரை வாக்கில் முகாம் முடிந்த்து. அந்த பொண்ணு இருக்கற பக்கம் வேணும் என்றே போவதை தவிர்த்தேன். அடுத்து டீ குடிச்சிட்டு கிளம்ப வேண்டியது தான். அந்த பள்ளிக்கூடத்துல ‘சயின்ஸ் லேப்’ இருக்குதுனு எல்லோரும் பார்க்கப் போனோம். நன்றாகவே வைத்திருந்தார்கள். எல்லாவற்றையும் சுத்தி பார்த்துட்டு வெளியே வந்தேன். லேப் வாசலில் வரிசையாய் எல்லோரும் உட்கார சேர் போட்டிருந்தார்கள். எங்க மக்கள் டீ குடிக்க போய்விட நான் பின்தொடரும் போது பார்த்தேன். அந்த பொண்ணும் இன்னும் இரு பெண்களும். தோழிகள் போல. இந்த பெண்ணைப் பார்த்த போது திடுக்கிடும் உணர்வு. இதுவரை அப்படி ஒரு உணர்ச்சி வந்ததில்லை. அந்த சம்பவத்துக்கு அப்புறமும் வந்ததில்லை. இந்த ரொமாண்டிக் லுக் ரொமாண்ட்டிக் லுக்னு சொல்லுறாங்களே. அதை அந்தப் பெண் கண்களில் பார்த்தேன். கண்களில் இருந்தது கிறக்கமா மயக்கமானு தெரியல. அதீத காதலோட பார்த்த மாதிரி இருந்த்து. காதலான கண்களை பார்த்ததும் முதலில் வந்தது பயம். ‘முதல்ல இந்த இடத்தை காலி பண்ணனும்.’

வேகமாய் டீ குடிக்க சென்றேன். பஸ் ஏறுவதற்கு அவர்களைத் தாண்டி தான் போக வேண்டும். நடந்ததை செந்திலிடம் சொன்னால் நம்பவில்லை.

“போப்பா. நீ பாட்டுக்கு கத வுடாத.”

அவர்களை கடந்து நடந்து பத்தடி தூரம் போனதும் திரும்பி பார்த்தேன். மூவரும் என் பின்னாலேயே வந்துக்கிட்டு இருந்தார்கள். ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருவம்’ பந்தாடிக்கிட்டு இருந்த்து. வேகவேகமாக நடையைக்கூட்டினேன். பஸ்ஸில் ஏறினால் உட்கார இடமில்லை. படியிலேயே உட்கார்ந்துகிட்டு போகவேண்டியது தான். வியர்த்து போன என் முகத்தையும் பின்னால வந்த பெண்களையும் செந்தில் ஆச்சர்யமா பார்க்க ஆரம்பிச்சார். ‘அப்பாடா. கொஞ்சமாச்சும் நம்பறாரே.’

பெண்கள் மூவரும் பஸ்ஸுக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். திக்திக்கென்று அடிச்சது மனது. ‘ஆண்டவா. நல்லபடியா பெங்களூருக்கு போய் சேர்த்துடுப்பா.’ அப்போது தான் கவனித்தேன். அந்த பெண்ணின் தாத்தா, ஊர் பெரியவர் பஸ் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தார். வழியில் எங்கேயோ இறங்கணுமாம். பெண்கள், படிக்கட்டில் நான், பெரியவர் மூவரும் ஒரே நேர்கோட்டில். செந்தில் எல்லாவற்றையும் பார்த்துக்கிட்டு இருந்தார். அந்தப் பெண் கன்னடத்துல அவங்க தாத்தாக்கிட்ட ஏதோ பேசினாள். இதழின் ஓரம் அன்று முழுக்க பார்த்த அதே ஈரமான புன்னகை. மறைக்கக்கூடாதென்று சற்று நகர்ந்தேன். வண்டியும் கிளம்ப ஆயத்தமானது. ஓட்டுநர் வண்டியை கிளப்ப அப்பெண் டாட்டா காண்பித்தாள். தாத்தாவிற்கு தான் டாட்டா என திரும்பிப் பார்த்தால் அவர் வேற எங்கேயோ பார்த்திட்டு இருந்தார். ‘எனக்குத் தான் அந்த டாட்டாவா’. பயம் இருந்தாலும் தலை தன்னிச்சையா அசைந்தது. கூட இருந்த தோழிகள் அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். வண்டி வேகமெடுக்க ஆரம்பிக்கும் போது மனம் அன்று முழுக்க நடந்ததை அசை போட ஆரம்பித்தது.

போகும் வழியில் பெரியவர் இறங்கிக் கொள்ள செந்தில் என்னிடம்,

“நீ சொன்னது உண்மை தாம்பா. உன்னைய வச்ச கண் வாங்காம பாத்துச்சு.” மனதில் ஒரு சின்ன பெருமிதம். நம்மையும் ஒரு பொண்ணு பார்க்குதுங்கற கர்வம். நாட்கள் அப்படியே ஓடியது.

அடுத்த வருஷமும் அந்த ஊருக்கு போனார்கள். வேறொரு வேலை இருந்ததால போக முடியல. போயிட்டு வந்த செந்தில் சொன்னார்.

“தம்பி. அந்த பொண்ணு எல்லா மூஞ்சியையும் பாத்துச்சு. உன்னத் தான் தேடுச்சுன்னு நினைக்கிறேன். கடைசியில் சோகமா இருந்துச்சு”

“இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்ப ரணகளமாக்கறீங்க.” சொன்னாலும் கேட்கும் போது நல்லாவே இருந்த்து. அவ்வளவு தான் நாலு வருஷம் இருக்கும். அந்த ஊருக்குப் போனதே சுத்தமா மறந்து போயிருந்த நிலையில் ‘அட்டகத்தி’ படமும் பூர்ணிமாவும் பழைய நினைவுகளை கிளறிவிட்டுவிட்டார்கள். சில வருஷம் கழிச்சு நானும் இவ்வளவு எழுத காரணமா இருந்துட்டாங்க.

அடுத்ததா அந்த ஊருக்கு ஒரு ட்ரிப் போடலாம்னு இருக்கேன். யார் கண்டா அந்த பெண் எனக்காக இன்னும் காத்துக்கிட்டு இருந்தா….https://www.youtube.com/watch?v=YsMoZ5XO2xU

jayanth
28-08-2012, 06:11 AM
காதலுக்கு இனம்,மொழி,மதம் மற்றும் இத்யாதி,இத்யாதி சமாச்சாரங்களெதுவும் இல்லை. சீக்கிரமே சென்று ஆக வேண்டியதைக் கவனியுங்கள் மதி....

மதி
28-08-2012, 06:21 AM
நன்றி ஜெயந்த். குழப்பமே இது தான் காதலா??? :)

jayanth
28-08-2012, 06:28 AM
நன்றி ஜெயந்த். குழப்பமே இது தான் காதலா??? :)


கண்டிப்பாக காதல்தான். இல்லையென்றால் கிராம பஞ்சாயத்து, குளம்,அரசமரமோ அல்லது ஆலமரமோ முன்கூட்டியே உங்கள் கனவில் வந்திருப்பதேனோ...!!!
.
.
.
அந்தப் பெண்ணும் சேர்ந்துதான்...!!!

ஆதவா
28-08-2012, 06:37 AM
ரொம்ப நாளா மன்றத்தில “நான் சைட் அடிச்ச பெண்கள்” என்ற பெயர்ல பதிவு எழுதலாம்னு இருந்தேன். நீங்க தொடங்கிட்டீங்க...

அப்பறமென்ன.... கிளம்புவோமா ஓசூருக்கு??

ஆதி
28-08-2012, 06:42 AM
போய்வாங்க மதி நல்லதே நடக்கும்

மதி
28-08-2012, 07:08 AM
ஆதவா.. ஆதன்...

போகலாம்.. கையில ஒரு குழந்தையோட அந்த பொண்ணு நின்னுக்கிட்டு இருந்தா ஆட்டோகிராஃப் மறுபடியும் பாத்த மாதிரி இருக்கும். :D

ஆதி
28-08-2012, 07:13 AM
அது அவங்க அக்கா குழந்தையாகவும் இருக்கலாம் இல்ல

மதி
28-08-2012, 07:17 AM
உங்க நல்ல எண்ணத்த நான் பாராட்டுறேன் :)

அன்புரசிகன்
28-08-2012, 07:22 AM
அந்த ஊரில இருந்து வாற புகையிரதங்களின் பெட்டிகளை பாருங்கள். PM ஏதாச்சும் இருக்கும். :D

மதி
28-08-2012, 07:33 AM
ரசிகரே.. கிழக்கே போகும் ரயிலா?? சென்னை கிழக்கே தானே இருக்கு. :icon_ush:

ஆதவா
28-08-2012, 07:42 AM
உங்க நல்ல எண்ணத்த நான் பாராட்டுறேன் :)


அது அவங்க அக்கா குழந்தையாகவும் இருக்கலாம் இல்ல

உங்க மைண்ட் வாய்ஸ கேட்ச் பண்ணீட்டேன்.;)

அன்புரசிகன்
28-08-2012, 08:37 AM
அதனால தானோ என்னமோ... இன்னமும் உங்களுக்கு ஆகல... உங்க வெற்றிக்கு பின்னால இருக்கப்போறவங்களோ?

மதி
28-08-2012, 08:40 AM
இருக்கலாமோ?? :aktion033::angel-smiley-010::love-smiley-008::medium-smiley-075:

செல்வா
28-08-2012, 08:57 AM
இன்னும் சென்னைல என்னப் பண்ணிட்டுருக்கீங்க...?

மதி
28-08-2012, 08:59 AM
இன்னும் சென்னைல என்னப் பண்ணிட்டுருக்கீங்க...?
அடுத்து யாரோட கதைய எழுதலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.. :D

ஜானகி
28-08-2012, 09:10 AM
இந்தக் காலத்துப் பசங்க....சரடு திரிக்கிறார்களா....உண்மைதான் பேசுகிறார்களா...ஒன்றுமே புரியவில்லை....
எது எப்படியோ சுகமாக முடிந்தால் சரி....நான் கையில் அட்சதையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்...!

மதி
28-08-2012, 09:22 AM
ஜானகிம்மா உங்ககிட்டேர்ந்து ஆசிர்வாதம் வாங்க நானும் பொண்ணு தேடிக்கிட்டு இருக்கேன் :)

கீதம்
28-08-2012, 09:49 AM
அட்டகத்திக்கு அப்படியொரு விமர்சனம் உங்களிடமிருந்து வரும்போதே நினைத்தேன், அதற்குப் பின்னால் இப்படி ஏதாவது கதைகள் இருக்குமென்று.

மன்றத்தின் பக்கங்களில் பதியுமுன், எதிர்காலத்தை மனதில் வைத்து கொஞ்சம் எச்சரிக்கையாகவே பதிக்கவும். இது அக்காவின் ஃப்ரீ அட்வைஸ். ;)

மதி
28-08-2012, 09:54 AM
:icon_b: நன்றிக்கா. நாலு வருஷத்துக்கு முன்னாடியே இதை பதியாத காரணமும் அதே தான். :)

தத்துவார்த்தமா சொல்லணும்னா காலம் போகும் போது பார்க்கும் பார்வைகளும் மாறுங்கற மாதிரி தான் இதுவும். வயது ஆக ஆக சமாளிக்கமுடியும்ங்கற தைரியம் வந்ததால தான் பதிச்சேன். :) :)

அன்புரசிகன்
28-08-2012, 10:35 AM
:icon_b: நன்றிக்கா. நாலு வருஷத்துக்கு முன்னாடியே இதை பதியாத காரணமும் அதே தான். :)

தத்துவார்த்தமா சொல்லணும்னா காலம் போகும் போது பார்க்கும் பார்வைகளும் மாறுங்கற மாதிரி தான் இதுவும். வயது ஆக ஆக சமாளிக்கமுடியும்ங்கற தைரியம் வந்ததால தான் பதிச்சேன். :) :)
இதுகள சமாளிக்கத்தான் 6 மாசத்துக்கு மன்றப்பக்கம் ஆட்க்கள் வாறதில்லையோ?

த.ஜார்ஜ்
28-08-2012, 10:42 AM
அன்னைக்கே தைரியமா ஒரு நல்ல முடிவ எடுத்திருக்கலாம்!!!!
பாழாய் போன அதே சினிமாதான், ஆலமரம் பஞ்சாயத்து என்று இளைஞர்களை ரொம்பவே பயமுறுத்தி வைத்திருக்கிறது.

அன்புரசிகன்
28-08-2012, 12:26 PM
10 நாள் லீவு போடுறீங்க. டம்மி காம்ப் போடுறீங்க. அசத்துறீங்க. ஆலமர பிர்ச்சனை ஏதும் வந்தா ஆதவாவோட கவிதை ஒன்றுக்கு விளக்கம் கேளுங்க... :D

கலைவேந்தன்
29-08-2012, 04:41 AM
ஆகா.. ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டுட்டீங்களோன்னு நினைக்கிறேன் மதி.

பெண்கள் தங்கள் காதலை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். ஏன் குறிப்பாகக்காட்டிக்கொள்ளக் கூட தயங்குவார்கள்.

அந்த பெண் குறிப்பாவும் காட்டி இருக்கு. கொஞ்சம் வெளிப்படையாவும் காட்டி இருக்கு.

ஒருவேளை விதி உங்களைச் சேர்த்துவைக்கத்தான் 4 வருடமா நீங்களும் காத்துக்கிட்டிருக்கீங்களோ என்னமோ..?

ஒருமுறை போய் பாருங்க. இல்லைன்னா வாழ் நாள் முழுக்க இந்த ’ஆலமரம்’ ’பஞ்சாயத்து’ ’பஸ் படிக்கட்டு’ நினைவுக்கு வந்து வருத்திக்கிட்டு இருக்கும்.

ஆதவா
29-08-2012, 06:26 AM
ஆகா.. ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டுட்டீங்களோன்னு நினைக்கிறேன் மதி.

பெண்கள் தங்கள் காதலை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். ஏன் குறிப்பாகக்காட்டிக்கொள்ளக் கூட தயங்குவார்கள்.

அந்த பெண் குறிப்பாவும் காட்டி இருக்கு. கொஞ்சம் வெளிப்படையாவும் காட்டி இருக்கு.

ஒருவேளை விதி உங்களைச் சேர்த்துவைக்கத்தான் 4 வருடமா நீங்களும் காத்துக்கிட்டிருக்கீங்களோ என்னமோ..?

ஒருமுறை போய் பாருங்க. இல்லைன்னா வாழ் நாள் முழுக்க இந்த ’ஆலமரம்’ ’பஞ்சாயத்து’ ’பஸ் படிக்கட்டு’ நினைவுக்கு வந்து வருத்திக்கிட்டு இருக்கும்.

எப்படியெல்லாம் கோர்த்துவிடறாங்கய்யா.....

ஆல் த பெஸ்ட் மதி

மதி
29-08-2012, 06:29 AM
எவ்ளோ உசுப்பேத்துனாலும் சரி. சிக்கிடுவோமா?? மீசைல மண் ஒட்டலேல.. என்ன ஆதவா1! சரியா?

அன்புரசிகன்
29-08-2012, 06:45 AM
எவ்ளோ உசுப்பேத்துனாலும் சரி. சிக்கிடுவோமா?? மீசைல மண் ஒட்டலேல.. என்ன ஆதவா1! சரியா?

சிக்கிட்டாலும். .............................................. :lachen001:

ஆதவா
29-08-2012, 06:46 AM
எவ்ளோ உசுப்பேத்துனாலும் சரி. சிக்கிடுவோமா?? மீசைல மண் ஒட்டலேல.. என்ன ஆதவா1! சரியா?

எதுக்கும் நீங்க மீசை மழிச்சிடுங்க,
குப்புற விழுந்தாலும் விழுகலாம்.:icon_b:

மதி
29-08-2012, 07:25 AM
இனிமேலா..?:confused:

அன்புரசிகன்
29-08-2012, 07:46 AM
தல தளபதி சிகை அலங்கார நிலையத்துக்கு போய் சீவி சிங்காரித்துவிட்டு ஓசூருக்கு போங்க... :D

jayanth
29-08-2012, 11:41 AM
மதி,...பொண்ணு அட்டக் கத்தி கதாநாயகி மாதிரி இருப்பாங்கன்னு சொன்னீங்களே...இன்னைக்கு நீங்க பதிவை எடிட் பண்ணி பதித்த படத்திலுள்ளவங்க மாதிரி இருந்தா கண்டிப்பா ஓசூருக்கு ஒரு ட்ரிப் போய் வாங்க...!!!

மதி
29-08-2012, 11:44 AM
ரைட்டோ. செய்துடலாம் ஜெயந்த். இந்த வார இறுதி கூட பெங்களூருக்கு தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன். அப்படியே ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம்.:icon_rollout:

ஆதவா
29-08-2012, 12:38 PM
ரைட்டோ. செய்துடலாம் ஜெயந்த். இந்த வார இறுதி கூட பெங்களூருக்கு தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன். அப்படியே ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம்.:icon_rollout:

இந்த வார இறுதியில நானும் பெண்களூரில்தாங்க இருப்பேன்.. முடிஞ்சா சந்திப்போம். (பெண்ணையில்ல.)

த.ஜார்ஜ்
29-08-2012, 01:49 PM
போய் அந்த ஊரில் இறங்குகிறீர்கள். அவளை பார்க்க முடிந்ததா.என்ன சொல்வாள். நீங்கள் எப்படி எதிர் கொள்வீர்கள். அல்லது வராமல் போய் விடுகிறாளா. ஏன்.என்னாயிற்று.. என்று விறுவிறுவென்று கொஞசம் கற்பனை பண்ணுங்கள். குறைந்தபட்சம் ஒரு கதையாவது தேறும்.

மதி
29-08-2012, 02:33 PM
சனிக்கிழமை மதியம் இருப்பேன் ஆதவா. அன்றிரவே திரும்பி விடலாம். கூப்பிடறேன்.

ஆதவா
29-08-2012, 03:44 PM
சனிக்கிழமை மதியம் இருப்பேன் ஆதவா. அன்றிரவே திரும்பி விடலாம். கூப்பிடறேன்.

அப்படியே ஈரோடு திரும்பிவிடலாமா?

அப்படின்னு கேட்கச் சொன்னது செல்வா!

செல்வா
30-08-2012, 05:05 AM
அப்படியே ஈரோடு திரும்பிவிடலாமா?

அப்படின்னு கேட்கச் சொன்னது செல்வா!

ஞாயிறு மதியம் திருப்பூரில் கோழியடித்து விருந்து.
அப்படி நு சொன்னது (இங்கே சொல்ல மறந்தது) ஆதவா ! :)

மதி
30-08-2012, 05:06 AM
தெரியல. ஆதவா மற்றும் செல்வா. நண்பனின் திருமண வரவேற்புக்கு வரேன். அப்படியே கூட்டத்தோடு கூட்டமா திரும்பிடலாம். :)

சுகந்தப்ரீதன்
30-08-2012, 02:08 PM
எவ்ளோ உசுப்பேத்துனாலும் சரி. சிக்கிடுவோமா?? மீசைல மண் ஒட்டலேல.. என்ன ஆதவா1! சரியா? யோவ் மதி... மண்ணுல மீசை ஒட்டுன ஆளுதான நீங்க... அப்புறம் எதுக்கு மீசை முளைக்காத பயகிட்டல்லாம் சரியா தப்பான்னு கேட்டுக்கிட்டு இருக்கீங்க...!!:icon_rollout:

எட்டுபட்டி ராசா கணக்கா வளந்துருக்க நீ போயி ஆலமர கான்சப்டுக்கு பயப்புடலாமா... சீக்கிரம் சட்டையை மாட்டிகிட்டு வேட்டி மடிச்சி கட்டிகிட்டு வாய்யா...ஒருகை பார்த்துடலாம்.!!:fragend005:

(உனக்கேன் இம்புட்டு அக்கறைன்னு கேட்குற சித்தப்புக்கு எங்க புரியபோகுது... மதிக்கு ஒரு மச்சினிச்சி இருக்கும்கிற என்னோட ஆழ்ந்த நம்பிக்கை..)

மதி
30-08-2012, 02:17 PM
ஆச தோச அப்பளம் வட.. எதுவானாலும் நான் தனியாவே பாத்துக்கறேன் சுபி. :icon_b:

சுகந்தப்ரீதன்
30-08-2012, 02:40 PM
ஆச தோச அப்பளம் வட.. எதுவானாலும் நான் தனியாவே பாத்துக்கறேன் சுபி. :icon_b: மதி ஏற்கனவே வருசம் நாலாயிடுச்சி... கடைசியில ஆச தோச அப்பளம் வடன்னு ஆயிடும்... அப்புறம் உங்க விருப்பம்..:) (ஊர்ல இருக்குற பயலுக உஷாராத்தான் இருக்கானுங்க சித்தப்பு..)

மதி
30-08-2012, 02:43 PM
நாப்பதானாலும் பரவாலீங்ண்ணே. எதுவானாலும் நானே ஹேண்டில் பண்ணிக்கறேன்.. :D

சுகந்தப்ரீதன்
30-08-2012, 02:56 PM
நாப்பதானாலும் பரவாலீங்ண்ணே. எதுவானாலும் நானே ஹேண்டில் பண்ணிக்கறேன்.. :D
சரி..சரி.. உன்னோட தன்னம்பிக்கையை மதிச்சி நாளைக்கு பெங்களூருக்கு பஸ் ஏத்திவிடுறேன்.. நீ திரும்பி வரும்போது ஒன்னா வருவியோ ரெண்டா வருவியோ தெரியாது... ஆனா அந்த பொண்ணோட வரனும் அம்புட்டுதேன்..!!:icon_b:

நாஞ்சில் த.க.ஜெய்
30-08-2012, 05:19 PM
அட்டகத்தி கதைய விட இந்த கதை ரொம்ப நல்லாருக்கே ...பரபரப்பை தூண்டுது அட்டகத்தி கதாநாயகன் போல பல்பு வாங்குவாரா இல்லை தன் கனவை நனவாக்குவாரா ?

அன்புரசிகன்
31-08-2012, 02:33 AM
அட்டகத்தி கதாநாயகன் போல பல்பு வாங்குவாரா இல்லை தன் கனவை நனவாக்குவாரா ?

watch after the break......

(இடைவேளைக்கு பிறகு தொடரும் என்றால் ஒரு கெத்து இருக்காது என்பதால் ஆங்கிலத்தில் பதிந்தேன். )

alaguraj
31-08-2012, 03:51 AM
"உன்னோடு பயணிக்க எத்தனித்த
கால்கள்..
இன்று
பயணிக்கின்றன..
உன்னோடு அல்ல
உன்.
நினைவுகளோடு...

எங்கோ படித்தது....

மதி
31-08-2012, 03:53 AM
அழகான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி அழகு

கலைவேந்தன்
31-08-2012, 03:55 AM
இந்த வார இறுதியில நானும் பெண்களூரில்தாங்க இருப்பேன்.. முடிஞ்சா சந்திப்போம். (பெண்ணையில்ல.)

கொடுமையா இருக்கே.. நாங்கள் எல்லாம் ஆண்களூரில் இருந்து தவிச்சுண்டு இருக்கோம்.. :icon_rollout:

ஆதவா
31-08-2012, 04:48 AM
watch after the break......

(இடைவேளைக்கு பிறகு தொடரும் என்றால் ஒரு கெத்து இருக்காது என்பதால் ஆங்கிலத்தில் பதிந்தேன். )

in the hospital நு ஒரு வரியை விட்டுட்டீங்க??


கொடுமையா இருக்கே..

என்னங்கண்ணா... நாங்க பெண்களூர் போறது உங்களுக்கு கொடுமையா இருக்கா???!!! நீங்கள் ஜென்மத்திற்கும் பெண்களூர் வரக்கூடாது என்பது எங்களது சாபம்!!!


நாங்கள் எல்லாம் ஆண்களூரில் இருந்து தவிச்சுண்டு இருக்கோம்.. :icon_rollout:

அது!! (அஜித் ஸ்டைலில் படிக்கவும்)

சுகந்தப்ரீதன்
31-08-2012, 08:45 AM
watch after the break......

(இடைவேளைக்கு பிறகு தொடரும் என்றால் ஒரு கெத்து இருக்காது என்பதால் ஆங்கிலத்தில் பதிந்தேன். )அப்ப முழுக்கதையும் உங்களுக்கு தெரியுமா அன்பு..?!:icon_ush:

அன்புரசிகன்
31-08-2012, 11:20 AM
அப்ப முழுக்கதையும் உங்களுக்கு தெரியுமா அன்பு..?!:icon_ush:
அது பழசு... இப்ப லேட்டஸ்ட்டா ஒரு மெகா சீரியல் ஓடிக்கிட்டிருக்கு.


அத அவர் விளக்கமா விளக்குவாரா இல்லை விலக்குவாரா..?

அது மன்ற மக்களின் கைகளில்

ஆதவா
31-08-2012, 11:38 AM
அது பழசு... இப்ப லேட்டஸ்ட்டா ஒரு மெகா சீரியல் ஓடிக்கிட்டிருக்கு.


அத அவர் விளக்கமா விளக்குவாரா இல்லை விலக்குவாரா..?

அது மன்ற மக்களின் கைகளில்

அடடே.... அதென்ன அது?
தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.

மதி
31-08-2012, 11:52 AM
அது மகா மெகா சீரியல். :D

சுகந்தப்ரீதன்
01-09-2012, 05:33 PM
அது மகா மெகா சீரியல். :D அப்படின்னா கன்னிதீவு கதையா?!:fragend005:

அன்புரசிகன்
01-09-2012, 11:20 PM
அடடே.... அதென்ன அது?
தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.


அப்படின்னா கன்னிதீவு கதையா?!:fragend005:
பத்தல.. இது பத்தல....


இன்னும் இன்னும் ஆசையோட அவர தொல்லை பண்ணவேணும்.

உங்க எல்லார்க்கிட்டயிருந்தும் ரொம்ப எதிர்பார்க்கிறேன்.